https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 24 டிசம்பர், 2022

மணிவிழா - 41

 




ஶ்ரீ:


மணிவிழா - 41


24.12.2022







ஆயிரம் ஆண்டு கொண்டாட்டமாக நிகழும் போது அதில் பொதுமக்கள் லட்சம் பேர் பங்கு கொள்ளும் விழாவாக இருக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கிய பயணமாக அதை நினைத்தேன். அனைத்து திட்ட வரைவுகளும் அதை ஒட்டியே வடிவமைக்கப் பட்டிருந்தன. அதற்கு தடையாக நினைத்த அத்தனையும் களையப்பட்டன. அதை ஒட்டி எழும் அலரை எதிர் கொள்ள தயாராக இருந்தேன். அது எனது எல்லைக்கு உட்பட்டது என்பதாக எனது எண்ணமாக இருந்தது. ஆனால் விழா குழு துவக்க விழா பிரதான பங்கேற்பாளரான வேளுக்குடி ஸ்வாமி புதுவை வந்து இறங்கிய நொடி அதற்கு என்னிடம் எதிர்வினை ஆற்றுவார் என நான் ஊகித்திருக்கவில்லை


மக்களுக்கு மத்தியில் ஒரு பெரு விழவை கொண்டு செல்ல இயலவில்லை என்றால் இந்த இயக்கத்தினால் ஆவது ஒன்றில்லை. எல்லோரும் நினைத்தது போல பொருளியல் பலத்தை இலக்காக வைத்து இதை உருவாக்க நினைக்கவில்லை. ஆனால் பொருளாதார பலமில்லாமல் எதுவும் நீண்ட காலம் திகழ முடியாது. அதே சமயம் திரளான பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமலும் ஒரு பெரிய விழா வெற்றியடைந்ததாக கருத முடியது. அதற்கான பொருளியல் குறித்த திட்டத்தை யாரிடமும் முன்வைக்க முடியவில்லை. திருப்பதி பெருமாள் திருக்கல்யாண உற்சவம் புதுவையில் மிக பிரமாண்டமாக சில வருடங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கப் படுகிறது. அதில் புதுவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வந்து குவிகிறார்கள். எண்ணிக்கை இருபத்து ஐயாயிரத்தை கடந்து விடும். இலவச பேருந்து வசதிகள் செய்து அந்த இலக்கை அடைகிறார்கள். எனக்கு நம்பிக்கை தரும் நிகழ்வாக அதை பார்த்தேன். அதன் மிகப் பெரிய வெற்றிக்கு நான் கருதிய இரண்டு காரணிகள் அங்கு மிகச் சரியாக அமைந்திருந்தது. சிறந்த நிர்வாகத்தை தரக்கூடியவர்கள் அதில் இருந்தனர். அவர்கள் பொருளியல் பலமும் கொண்டிருந்தனர். தனிப்பட்ட பொருளியல் பலமல்லாத சிலரும் கூட அதை திரட்டத் தரும் வல்லமை பெற்றவர்களாக இருந்தனர்


அதை முன் மாதிரியாக எடுத்து நான் புதுவையில் இரண்டு பெரிய நிகழ்வுகளை திட்டமிட்டிருந்தேன். ஒன்று  மாபெரும் யக்ஞ வேள்வி. அது எனக்கு இரண்டு வித பலனை கொடுக்கும் ஒன்று பொருளியல் இரண்டு முக்கிய ஆளுமைகளின் பங்கு அவர்கள் வழியாக நிகழும் பொது ஜெனத் தொடர்பு. இரண்டாவது அதன் பிரமாண்டம் மீள மீள நிறுவப்படும். இரண்டாவது பெரிய மற்றும் விழாக் குழுவின் நிறைவு நிகழ்வு. அது அனைத்து வைணவ மற்றும் பிற சம்பிரதாய மடாதிபதிகள் மாநாடு. அதில் பாரதப் பிரதமரை கலந்து கொள்ள அழைக்கும் முயற்சிகள் நடை பெறத் துவங்கி இருந்தது. பிரதமர் அந்த சூழலில் கலந்து கொண்மிருந்தால் தென்னிந்தியாவில் அவர் கலந்து கொள்ளம் முதல் விழாக அது இருந்திருக்கும். பிரதமர் பங்கேற்கும் அகில இந்திய மடாதிபதிகள் பஙகேற்கும் மாநாட்டில் இந்து அறநிலையத் துறையின் கோவிலின் ஆகம மீறல் மற்றும் நிர்வாக முற்றதிகாரத்தை மறு வரைமுறை படுத்தும் தீர்மானம் ஒன்று அந்த மாநாட்டில் கொண்டு வர திட்டமிட்டிருந்தேன்


புதுவையில் அப்போது ரங்கசாமி முதல்வராக இருந்தார். அவரிடம் அந்த தீர்மானத்தின் நகலை கொடுக்க முடியும். அவரிடம் அது குறித்து பேசி போது தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியிருந்தார். தீர்மானம் ஏற்கப்பட்டு ஒரு மாநிலத்தில் செயல்முறை படுத்தப்பட்டால் அது அகில இந்திய கவனத்தை பெற்றிருக்கும். அதை ஒட்டி அரசின் கோவில் நிலைப்பாடு குறித்து அந்த அகில இந்திய மாநாட்டில் சில் முக்கிய தீர்மானங்களை அரசிற்கு அளிக்கும் நிகழ்வை ஒருங்கிணைக்க திட்டிமிட்டிருந்தேன். அதுவரை இருந்த தயக்கம் விலகி பெரும் இயக்கமாக அதை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர்தான் முதலில் ஏற்படுத்தினார். ஆடிட்டர் கணேசன் எண்பது வயதை கடந்தவர். பிராமனர். புதுவையில் மிகுந்த செல்வாக்குள்ளவர்களில் முதன்மையானவர். சிலர் ஒரு இயக்கத்திற்குள் இருப்பது அதன் உயர்வை சொல்வது. பிறர் அதில் வந்திணைய வேண்டும் என்கிற உந்துதலை கொடுப்பது


அவர் கணேசன் & கோ என்கிற பிரபல ஆடிட் நிறுவனத்தின் ஸ்தாபகர் . புதுவையின் அத்தனை பெரிய வியாபார நிறுவனங்களின் கணக்கையும் அவரின் நிறுவனம் தான் தணிக்கை செய்கிறது. அந்த நிறுவனம் ஒரு குடும்ப அமைப்பு. அதன் பங்குதாரர்கள் அவரின் உடன் பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள், மருமகன்கள். அவர்களுள் பிரதானம் அவரது தம்பிரகுஅந்த நிறுவனத்தின் முகம் போன்றிருந்தவர் . பல அமைப்புகளின் உறுப்பினர். அவரது வழியாக அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடைந்தது. கணேசனும் ரகுவும் நிறுவனத்தின் அகமும் புறமும் போல. கணேசன் ஆரம்பம் முதலே உலகியலுக்கு வெளியில் நிற்பவராக தோன்றியதால் அவருடன் உரையாடுவது எளிதல்ல. ரகு மிக இயல்பானவர். அரிமா சங்கம் போன்ற பல சமூக இயக்கதில் தீவிர பங்கு கொண்டதால் அனைவருக்கும் இனியவர். உரையாடலுக்கு எளிவர். அது ஒரு நிறுவனம் வெற்றி கொள்ள தேவையானஇருவித முகங்கள்”. ஒரு நிர்வாகத்திற்கு மிக முக்கியமானதாக நினைக்கிறேன்.


முக்கிய முடிவெடுக்கும் சமரசமில்லாதகறார்முகமும் அதை வெற்றிகரமாக செயல் படுத்தும் பிறிதொருஇனியமுகமுமாக இருந்தனர். “ரகுவின் திடீர் மறைவு கணேசனை நிலைகுலைய செய்து விட்டது. துவக்கம் முதலே உலகியலுக்கும் விரக்திக்குமான நிலைக்களுக்கு இடையே ஊடாடிக் கொண்டிருந்தார்


வயோதிகத்தை சரியாக திட்டமிடாதவர்களின் வாழ்கை தனக்கும் பிறருக்குமான வதை. அவர்களில் இரண்டு வகையானவர்களை சந்தித்திருக்கிறேன்முதல் வகை ஆயுள் நீடிப்பால் கிடைத்த காலத்தை வைத்து என்ன செய்வது என தெரியாது திகைத்தவர்கள். அன்றாடங்களுக்கும் விரக்திக்கும் இடையே இருபவர்கள். இரண்டாவது வகை ஆயுள் நீட்டிப்பை கொண்டாடுபவர்கள். புதிதாக பிறந்தவர்கள் போல நடந்து கொள்வார்கள். அனைத்திலும் தேவையற்று நுழைத்து கருத்து சொல்வார்கள். மரபைப் பற்றயோ நவீனம் பற்றிய புரிதலோ இருப்பதில்லை. இதில் கணேசன் முதல் வகையை சேர்ந்தவர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்