https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

அடையாளமாதல் - 440 *கணக்கின் பிழை *

ஶ்ரீ:

பதிவு : 440 / 614 / தேதி 14 மார்ச்  2019

*கணக்கின் பிழை 


எழுச்சியின் விலை ” - 42
முரண்களின் தொகை -03 .அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைப்பிற்குள்  தலைமையுடன் முரண்பட்டு பிளவுற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதுவை அமைப்பும் கிழிபட்டதுண்டு . ஆனால் அது அகில இந்திய அளவில் நீர்த்து போவதற்கு முன்னதாகவே இங்கு காணாமலாகியது . ஆட்சி அதிகாரம் மட்டுமே கட்சி அமைப்பை சிதையாது பாதுக்காக்க வல்லது . கட்சியை கைப்பற்ற அல்லது பிளவுபட்டு தனித்து செயல்பட முயன்று சில சமயம் வென்ற அமைப்புகள் கூட பல்வேறு முகங்களை கொண்ட  இந்திய நிலப்பரப்பில் தங்களை ஒருங்கிணைக்க முடியாது போனதால் இந்திய அளவில் ஒன்று பட்ட மாற்று அமைப்பாக செயல்பட அவர்களால் இயன்றதில்லை

பின்னர் அதை மாநில அளவில்  வெற்றிகரமாக சில தலைவர்கள்  உருவாக்கி வெற்றிகண்டார்கள் . அந்த மாநிலங்களில் காங்கிரஸ் முதன்மை அல்லது இரண்டாம் இடத்திக் வலுவாக இருந்திருக்கின்றன . அகில இந்திய கட்சி அமைப்பிலுருந்து தமிழகம் சில முறை தனித்து செயல்பட முயன்ற வரலாறுகள் உண்டு . காமராஜ் போன்றவர்கள் அதை முன்னெடுத்தும் வெற்றியடைய இயலவில்லை . அந்த காலகட்டத்தில் திராவிட பரப்பியல் அரசியல் ஓங்கி இருந்தது பிரதானமான காரணமாக அமைந்து விட்டது . புதுவையில் அதை ஒட்டிய அமைப்புகள் தோன்றி  நீர்த்து போவதும் பின்னர் காங்கிரஸ் அமைப்பிற்குள் ஐக்கியமாவதுமாக அவை முடிந்து போயின

அவை  எப்போதும் தேர்தல் வரை சென்றதில்லை . புதுவையில் முதல் முறையாக தேர்தல்வரை சென்றது மூப்பனார் தமிழகத்தில் தனிக்கட்சி அமைத்து திமுக கூட்டணி கண்டபோது , இங்கு புதுவையிலும் கண்ணன் தலைமையில் அதற்கான அணிப்பிரிந்து முதல்முறையாக தேர்தலை சந்தித்து , திமுக கூட்டணி அரசாங்கத்தை பகிர்ந்து கொண்டு அமைப்பதில் வெற்றி கண்டது .வெளிப்படையான பார்வைக்கு இது மூப்பனாரின் அணிபோல தென்பட்டாலும் , அது முழுக்க முழுக்க கண்ணனின் குறுங்குழு மட்டுமே . மூப்பனார் பிரிந்து தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே அதற்கான முன்முடிவுகள் கண்ணனால் புதுவையில் எடுக்கப்பட்டுவிட்டது . பின்னர் அதற்கு தமாக” என பெயர் சூட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு . ஒரு வகையில் அது உண்மையும் கூட  .திமுக வுடன் கண்ணன் முரண்பட்டு வெளியேற மூப்பனார் தடையாக இருந்தபோது , மூப்பனாரை ஒதுக்கி ஆட்சியிலிருந்து வெளியேறி பின்னர் காங்கிரஸுடன் இணைந்து மாற்று அரசாங்கம் கொடுத்தார்.

புதுவையில் திமுக , தமாக கூட்டணியிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்து இருப்பினும் காங்கிரஸ் மட்டுமே தனிப்பெரும் கட்சியாக நீடித்தது .வெற்றி பெற தேவைபடும் மேலதிக வாக்குகளை சேகரிக்கும் அமைப்பை அது இழந்திருந்ததும் , கௌரவமான வாக்குகளை பெறும் என்றாலும் வெற்றி நிச்சயமற்றிருந்தது  .1996 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியை அடைந்திருந்தது .அந்த நேரத்திலும் புதுவையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது .

1998 தேர்தல் சமயத்தில் அகில இந்திய அமைப்பில் மாற்றம் வரும் என்கிற சூசனை அனைவரும் அறிந்த ரகசியம். கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்து சோனியா காந்தி உரையாற்றி சென்ற பிறகு நடக்கூடியது என இருப்பது அது ஒன்றே.சோனியகாந்தி தலைமை பொறுப்பிற்கு வரக்கூடிய சூழலில்  கூட்டணியில்லாமல் காங்கிரஸ் பெறும் வாக்குகள் காங்கிரஸ் கட்சி சார்பாக யார் நின்று வென்றாலும் அது அவர்களின்  செல்வாக்காக பார்கப்படலாம் , மரைக்காயர் நின்றாரென்றால் அது தனக்கு அரசியல் நீதியான பெரும் பின்னடைவை கொடுத்து விடும் என கணக்கிட்டார். தன்னுடைய  இருப்பை பிறிதொருவழுக்கு தாரைவார்கக அவர் தயாரில்லை

கண்ணன் தனிக்கட்சி கண்டு விலகிய நிலையில் எப்போதும் போல மரைக்காயரை மட்டுமே  தனக்கு எதிர்நிலையில் வைத்திருந்தார் . ஆனால் காலம் புதிய சவால்களையும் அதற்குறிய சமன்பாடுகளையும் கண்டடைய  வேண்டி நிர்பந்தம் எழுந்திருப்பதை  சண்முகம் கணக்கிட்டிருக்கவில்லை என்றே நினைக்கிறேன்

சண்முகம் தில்லி கிளம்பும் பின்னிரவில் அவரை சந்தித்து எக்காரணம் கொண்டும் சீட்டை விட்டுத்தர வேண்டாம் என அமைப்பின் தீரமானத்தை அவருக்கு கொடுத்த போது, தில்லியில் ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு சரிவை ஈடுபட்ட நினைத்திருந்த அவர்   "புதுவையில் காங்கிரசின் தனிப்பட்ட ஓட்டு , பிறருடைய செல்வாக்கு என தில்லி மேலிடத்தால் தவறாக அர்த்தம் கொள்ளப்படுவது  தவிற்க்கப்பட வேண்டும்" என்றார் .சோனியா எந்நேமும் தலைமையை கைப்பற்ற கூடும் என்கிற அலர் பரவலாக இருந்த நேரம் அது என்பதால் . அது அவரின் தெளிவான அரசியல் மதிப்பீடு என்றே நினைத்தேன்  .அன்று தேர்தலை எதிர்கொள்ள சண்முகம் சொன்ன அதே  கோட்பாடு இன்று அவருக்கு சீட் மறுக்கப்படுவதற்கான  காரணமானது காலத்தின் விந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்