https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 ஏப்ரல், 2019

அடையாளமாதல் - 438 *சொல்லில் அகப்படுத்தல் *

ஶ்ரீ:





பதிவு : 438 / 612 / தேதி 03 மார்ச்  2019

*சொல்லில் அகப்படுத்தல் 


எழுச்சியின் விலை ” - 40
முரண்களின் தொகை -03 .




தலைவர் சண்முகத்தை  நுண்ணிய அரசியல் புரிதலும் , விழுமியமும்  உள்ளவராக அறிந்திருக்கிறேன் . எப்போதும் பிறிதெவரையும் விடவும்  ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையுடைவராக முழுநேர அரசியல்வாதியாக இருந்தார்.உரையாடலின் மூலம் அனைவரும் வந்து தொடும் நெகிழ்வான போக்குடையவராக , அனைத்திலிருந்தும் தனக்குறிய எல்லைகளை , நிலைபாடுகளை சட்டென வகுக்கக் கூடியவராக , அதே சமயம் மாறாத போக்கு கொண்டவராகவும்  இருந்தார்சரியான  மாற்றுக் கோட்பாடு தர்கத்தால் நிரூவப்படும் போது அவற்றை ஏற்கக் கூடியவராகவும் தன்னை சம தூரத்தில் வைத்திருந்தார் .அதுவே அவரை அனைவருக்கும் பொதுவில் வைத்திருந்தது  . அவரது வழிமுறைகளில் குறை காணுபவர்கள் கூட அதை அவரின் முதுகிற்கு பின்னால் பேசாது ,நேரடியாக அவரிடமே சொல்லும் சூழல் உருவாகி இருந்தது.

அவரது அரசியல் வழிமுறைகளை எதிர்க்கும் அவரது எதிர் நிலைபாட்டாளர்கள்  சிக்கலான சமயங்களில் அவரின் இந்த யுக்தியை அவருக்கு எதிராக பயன்படுத்தி  அவரை நிலைகுலையச் செய்ய  முயற்சிப்பதும்   , பெரும்பாலும் நேரங்களில் அவை  பயனளிக்காமல் போயிருக்கின்றன..வெகு அறிதாக அவர் அதில் நிலையழிந்து போவதையும் பார்த்திருக்கிறேன் . ஆகவே இது அவரது இயல்பல்ல . அவற்றை எண்ணி எண்ணி பெருக்கி தனது கோட்பாடாக உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் .அது அவரது வழிமுறையாக   தொடர்ந்து இருந்தது.

ஒரு சிக்கலில் அவரிடம் வெளிப்படையாக மோதும் ஒருவர் தனக்கேற்படும் பிறிதொரு சிக்கலுக்கு அவரிடமே உதவி கோரி பெற்றதை பார்த்திருக்கிறேன் .அது நல்ல அரசியல் வழிமுறை என எனக்கு சொல்லப்பட்டிருந்தது . அந்த வழிமுறை வழக்கொழிந்து விட்டதாக நினைக்கிறேன்.

அரசியலில் தன்பார்வை , பொதுப்பார்வை என இரண்டை தனித்தனியாக கொண்டிருந்தார் . அவற்றை குழப்பிக் கொள்ளதில்லை .தன்னுடைய சுயமரியாதை அல்லது ஒரு தலைவனின் இருப்பு இன்னது என்பது குறித்து அவருக்கு இரண்டு விதமான புரிதல் இருந்திருக்க வேண்டும் .ஒன்று பிறரை ஒதுக்குவதில் இல்லை தனக்கான வெற்றி என்பதையும், அவர்களை ஒதுக்குவதன் மூலம் தனது வெற்றியும் கை நழுவும் என அவர் புரிந்திருந்தார் .இரண்டு அவர்களை அவர்களின் இருப்பில் இருக்க விட்டு தனக்கான வெற்றியின் பலனை குறைத்துக் கொள்வதனூடாக , தனக்கான வெற்றியை எப்போதுமாக தக்கவைத்துக் கொண்டார் .

அமைப்பை அல்லது அதை நிர்வகிக்கும் தன்னுடைய இருப்பை கேள்விக் குறியாக்கக் கூடியவர்களிடம் , இந்த சமரச போக்கிலிருந்து மாறுபட்டு முற்றாக அவர்களை ஒதுக்குவதில் அவர் தயங்கியதில்லை என்பதை அறிந்திருக்கிறேன் . தன்னறம் என்கிற சில விழுமியங்களின் வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதால் , தன் அரசியல் வழிமுறைகளுக்கான அதிகாரத்தை தனக்கு அது வழங்கி இருப்பதாக அவர் நினைத்திருக்கலாம்.

 அவற்றை சரி என்பதோ , விதந்தோதுவதோ இந்தப் பதிவுகளின் நோக்கமல்ல . அவற்றை காலத்தில் பிற எல்லா அரசியல் தலைமையுடன் போட்டுப் பார்த்து எனக்கான புரிதலை அடைய முயன்றிருக்கிறேன் . இந்தப் பதிவுகளின் வழியாக அவற்றை தொகுத்துக் கொள்ள முயல்கிறேன் .

எனது துறையாக அரசியலை எனக்கு மிக அனுக்கமாக உணர்கிறேன். எனக்கான அடையாளத்தையும் பார்வையையும் என் வாழ்வியலின் தரிசனத்தையும் அது கொடுக்கவல்லதாக உணர்ந்திருக்கிறேன்.இலக்கிய வாசிப்பு அதற்கு இணையான நிகர் வாழ்வியலையும் தரிசனத்தையும் தரவல்லது என்பதாலேயே என்னை அதன் பக்கம் ஈர்த்து , இந்தப் பதிவுகளை எழுத்தத் தூண்டுகின்றன.

சண்முகம் அரசியலை ஒரு சமன் பாட்டுடன் அனுகிறானார். கட்சியின் பலனுக்கு பின்னரே தனக்கானது என அவர் தனது விழைவுகளை முன்பின் என வகுத்திருக்க வேண்டும். அவரின் அந்த கோட்பாட்டை நேரில் பார்க்கும் சந்தர்பம் ஒரு முறை கிடைத்தது . 1999 பாராளுமன்ற தேர்தலுக்கு சீட் கேட்டு மறுக்கப்பட்டு பரூக் மரைக்காயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளைஞர்  அமைப்பை ஒருமுகப்படுத்தும் சந்தர்பத்திற்கு காத்திருந்த எனக்கு , தலைவர் சண்முகம் பாராளுமன்ற தேர்தலில் நிற்பது அனைத்து அமைப்பையும் ஒருங்கு திரட்டும் வாய்ப்பையும் ,அத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி எனக்கான இடத்திற்கு காத்த இருந்தேன் . ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டு பரூக் மரைக்காயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைவரின் சீட்டுக்கு சிபார்சு செய்யும்  மாநில தலைவருக்கு வாய்பபு மறுக்கபடுவது அவரது இருப்பை நிலைகுலையச் செய்வது . ஒருவகையில் சண்முகத்தின் அரசியல் இறங்குமுகத்தின் பிறிதொரு எல்லையை தொடங்கி வைத்த நிகழ்வாக அதைப் பார்கிறேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்