https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அடையாளமாதல் - 437 *நவீன அரசியல் *

ஶ்ரீ:





பதிவு : 437 / 611 / தேதி 02 ஏப்ரல்   2019

*நவீன அரசியல் 


எழுச்சியின் விலை ” - 38
முரண்களின் தொகை -03 .




இந்தியாவின் ஆற்றலே பொது சமூகமும் அதன் எண்ணிக்கை பெருக்கும்  . துரதிஷ்டவசமாக அது அரசியலை முற்றும் அறியாததாக தனக்கென ஒரு அடையாளமில்லாததாகவே இருந்து வந்திருக்கிறது . காங்கிரஸ் இயக்கத்தை பொது சமூகத்தின் மத்தியில் கொண்டு வைத்தவர்  காந்தி . அது அவருக்கு அரசியல் ரீதியான இருப்பை ஏற்படுத்திக் கொடுத்தது , அவரது வழிமுறைகளை   ஒப்புக் கொள்ளாதவர்களும் அவர் தலைமையை ஏற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்தது என்பதில் .
அந்த பலத்தை கொண்டு தலைவர்களையும் , அரசியலை அறியாத பொது சமூகத்திற்கு இணைப்பாக காந்தி உருவாகிவந்தார் .இரு தரப்பினருக்கும் அரசியலை புரியவைக்கும் நிலைப்பாடும் , அதற்கு தடையாக இருந்த சமூக , கலாச்சார பண்பாட்டை பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்றதன் ஊடாக  ,அவர்களை அமைப்பாக திரட்டியது போன்றவை அவரது அரசியல் பாதையில் முக்கிய பங்கு வகித்தது   .அதிலிருந்து திரண்ட திரட்சியே சுதந்திரத்திற்கான வழிமுறைகளை உருவாக்கி  அனைத்து அலகுகளையும் சமரச புள்ளிக்கும் இட்டுச் சென்றது .

அது நிச்சயம் அவருடன் இயைந்து அரசியலை பிற தலைவர்கள்  முன்னெடுக்காது போனாலும் அது அனைவரையும் அவர் பின்னால் அணிவகுக்க செய்த அதே நேரம், அவருக்கு எதிரான மனநிலையில் இருந்து அவர்களை  மாற்றவில்லை என்பதை பின்நாளின் நிகழ்வுகள் சொல்கின்றன . முக்கிய தலைவர்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில்  அவரை ஏற்றாலும் அவரை வெறுத்த அதே சமயம் அவருடன்  முரண்பட முடியாதபடி அவருக்கு உடன்பட வேண்டிய நிர்பந்தம் இருந்தது.அவரை புறந்தள்ளும் வாய்பபை எண்ணி காத்திருந்தே அவரை பின் தொடர்ந்தனர்.   அதை காந்தியும் அறிந்திருந்தார். சுதந்திரத்திற்கு பிறகு  ஒரு புள்ளியில் அவரை புறக்கணிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அதை செய்ய அவர்கள் தயங்கவில்லை . அங்கு அதுவரை இருந்த  சமநிலை குலைந்து , அனைவரும் எதிர்நோக்கிய அந்த இடம் வந்ததும் , காந்தி புறக்கணிக்கப்பட்டார்.

பின் தொடரும் நிழலின் குரல்” நாவலின் அளவிற்கு அரசியலின் இந்த எதார்த்தம் பேசப்படுகிறது . அது எனக்குள்   அதிர்வை உருவிக்கியது .ஒரு அரசியல் களப்பணியாளன் என்கிற அடிப்படையில் , என்னை ரொம்பவே பாதித்த நூல் அது  .அதில் காந்திக்கும் அய்யன்காளிக்கும் நிகழும் உரையாடலில்  , காந்தியை ஏற்று தனது வன்முறை   நிலைப்பாட்டை கைவிடும் அந்த தருணம் , அவருக்குள் நிகழும் மனமாற்றம் இதற்கு ஒரு உதாரணம் . அதுநாள் வரை நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த அடிப்படையை அய்யன் காறி கைவிடுகிறார் . அவர் முற்றும் காந்தியின் , வழிமுறையை ஒப்புக் கொண்டாலும் . அவருள் எழும் யதார்த்தம் , அனைவரையும் போல காந்தியின் நிலைபாடு ஒரு அரசியல் யுக்தி மட்டுமே , அது அவரது குணாதிசியமாக இருக்க முடியாது என்கிற கணிப்பிறகுள்  வருகிறார்.அதை பற்றிய நேரடியான உரையாடலுக்குள் வராமல்  காந்திக்கு பிறிதொன்றை அறிமுகம் செய்கிறார் 

இது காந்தியை ஏற்ற பிற தலைவர்களின் மனநிலையை மிகச் சரியாக முன்வைப்பது.ஒரு புள்ளியில் காந்தியின் வழிமுறையை ஏற்கும் அய்யன்காளி  காந்தியிடம்    இந்த மனநிலை உங்களின் வெற்றியில் , தோல்வியில் , புறக்கணிப்பின் போதும் உங்களுக்கு துணைக்க வேண்டும்”  என சொல்லும்  இடம் காந்திக்கு  அதிர்சசியை கொடுத்து , அது ஒரு தீச் சொல் போல ஒலிக்கிறது . அதுவே அவரை மறுத்தாலும் அவரை ஏற்றுகும் ஒவ்வொரு அரசியலாளனின் குரல் . அது அவரை ஏற்கும் எவருக்குமான ஆழ்மனநிலை .அத்தீச் சொல்லே அவரின் இறுதிக்காலத்தில் உடன் நிற்கிறது என நினைக்கிறேன் . யேசு தனது சிலுவையை சும்ப்பது போல காந்த இருந்தார் என்பது இன்றைய காந்தி” நூலில் சொல்லும் தன் சிலுவையை தான் சுமக்கும் நிலை என்கிற சொல் நிரூபிக்கிறது .

இந்திய அரசியலை காந்தி அளவில் புரிந்து கொண்டோர் இன்றும் இல்லை என்றே நினைக்கிறேன் . அவரது வழிமுறைகளில் நம்பிக்கை இழந்தது போனதற்கு  அன்று உலகமே ரஷ்ய புரட்சியில் மயங்கி இருந்தது முக்கிய காரணியாக இருந்தது .புரட்சி என்கிற சொல்லிற்கு இன்றளவிற்கும் ஒரு மவுசு இருப்பதை மறுப்பதற்கில்லை . சுப்பையா கால அரசியலில் அதற்கு பெரும் மதிப்பிருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்