https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 6 அக்டோபர், 2016

தந்தையின் முதல் தொடுல் -1

ஶ்ரீ:

தந்தையின் முதல் தொடுல் -1
"உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்" என்ற அப்பா வித்யாசாமாகத் தெரிந்தார், அவருடனான அந்த நெருக்கம் புது உணர்வாக இருந்தது

அது 1990 களின் தொடக்கம் இன்றைய அப்பா பிள்ளை உறவு போலன்றி எதிரில் உட்கார்ந்து பேசுவதெல்லாம் கிடையாது.ஆறு பெண்களுக்கு மத்தியில் பிறந்தவன் மிகவும் கண்டிப்புடன் வளர்கப்பட்டேன் . எனது இல்லம்.அது ஒரு வியாட்நாம் வீடு எப்போது வந்தாலும் என் மூத்த தமக்கைகள் இருவரின் சண்டை ,அதகளம் சில சமயம் ரத்தகளறியாவதும் உண்டு இதற்கு அதற்கென அல்லாது எதற்கும் சமயம் கிடைக்கும் போதெல்லாம்,இதில் இழவு MGR சிவாஜி நடிப்பு பற்றி கூட ,இவர்களுக்கு நடுவே அம்மா "பாவம் " இவர்களை அப்பாவிடம் காட்டிகொடுக்க இயலாமல் தடுக்கவும் முடியாது இவர்களின் சண்டையில் ஏதாவதொரு வகையில் தன்னை தண்டித்து கொள்வார் அடிக்கடி அம்மாவின் மூக்குத்தி உடைந்துவிடும்.இறுதியில் அப்பாவிற்கு தகவல் அனுப்பி.......அன்று அப்பா புது செருப்பு வாங்கவேண்டியிருக்கும் .இறுதியில் அம்மா தன் வயிரெரிய பெற்ற மக்களின் வாழ்கையை சீரழிக்கும்   வசவுகளை கூவி அதை முடித்து வைப்பார். விதி அம்மா யார் யார் எப்படி போவார் என ஏசினாரோ அதுவே தீச்சொலாகி அவர்களின் பிற்கால வாழ்கையில் ஊழ் என விளையாடியது . பாவம் அம்மா பிள்ளைகள்  கஷ்டப்படுவதற்காக நிகழ்காலத்தில் அழுது முந்தானையில் மூக்கை பிழிந்தது ஒரு முரண்நகை.

இதை தவிர்பற்கு வீட்டிற்கு மிக தாமதமாக வருவேன். வீட்டிற்கு வெளியே வெகு நேரம் செலவிடுவதால் நான்  அவ்வப்போது விதிகளை மீறுபனாகவும் அதற்காக கண்டிக்கபடுவதுமாக என் பதின் பருவம் கடந்ததால் அப்பா என்னைப்பற்றி " இது உருப்படாது " என்றே பொதுவில் கருத்து கொண்டிருந்தார்,ஆகவே எப்பொழுதுமே எங்களுக்குள் ஒரு இடைவெளி இருக்கும்.

தந்தைக்கு உதவியாக வியாபாரத்தில் முழுமையாக ஈடுபட்ட பிறகு என் பதின் வயது தவறுகள் எல்லாம் சிறு வயதுக் குறும்புகள் என்ற புரிதல் ஏறப்பட்டிருகலாம்.பின் எங்களிருவருக்குமான இடைவெளி மரியாதை நிமித்தமாக மிக மெல்லியதாக இருந்தது.

எனக்கும் அவருக்குமான புரிதல் வேறொரு தளத்திற்கு இட்டு சென்ற சந்தர்ப்பம் வந்தது. தந்தை மரணத்தின் வாயிலிருந்து தப்பிப்பிழைத்து உடல் தேறி வந்துகொண்டிருந்த நேரம் அது

உடல்நிலை உண்மைநிலை என்னவென்று அறியாது சென்னை ஆயிஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் . நோய்கண்டறியப்பட்டு டாக்டர் என்னிடம் விளக்குவார் என காத்திருந்த போது பாதி சிகிச்சையில் தந்தையை ஊருக்கு கூட்டிச் செல்லலாம் என்று அவர் கூறிய பிறகுதான் சூழ்நிலையின் கடுமை உறைத்தது , அவரை பாண்டிக்கு அழைத்து செல்ல மனமில்லை

எனக்குள் ஓடியது "ஒருவன் தன்னை குற்றவாளி அல்லது முட்டாள்" என ஒருபொழுதும் எண்ணலாகாது,அதைவிட தற்கொலைக்கு ஒப்பான கீழ்மை பிறிதொன்றில்லை. நம்மாலான அனைத்து முயற்சிகளையும் சரியாக செய்வது அதன் விளைவுகள் நம் கையில் இல்லை, இதுவே இன்றுவரையிலான என் கோட்பாடு . இருதய மருத்துவத்தில் சிறந்தவர் டாக்டர் சீனியர்.செரியன் அவரை சந்திப்ப்பது சுலபமல்ல பிரபலங்கள் பலருடைய சிபாரிசினால் வாய்ப்பு கிட்டியது .

மலர் மருத்துவமனை லாபியில் என்னை எதிர்பார்த்திருந்த டாக்டர் சீனியர் செரியனிடம் அப்பாவின் கோப்பைக்கொடுத்ததும் அதை நீண்ட நேரம் பரிசீலித்து பின் என்னிடம் சொன்னது அப்பாவின் நிலை சரியில்லை, நவீன மருத்துவ முயற்சியால் அவரின் காலத்தைக் கடத்தலாம் ஆனால் அது மிகவும் செலவேறிது என்பதே.

ஒருவருடம் அவர் ஆயுளை நீட்டிக்க முடியுமானால் என் இரண்டு தங்கைகள் திருமணங்களயும் அவரே முன்னின்று செய்ததாகும் எனக்கது போதுமானது. செலவைப்பற்றி கவலையில்லை என்றேன்.

சிரித்தபடி உனக்கு திருமணமாகிவிட்டதா என்றார் நான் தங்கைகளுக்கு முன் திருமணம் செய்து கொள்வதாக இல்லை என்றேன். அத்தனை காரியத்தையும் ஒரு வருடத்தில் செய்து விடுவாயா ?என்று முதுகில் தட்டிவிட்டு சிரித்தபடி சென்றுவிட்டார்.

அடுத்த நிமிடம் அப்பாவை மலர் மருத்துவமனைக்கு மாற்ற அனைத்தையும் செய்யலானேன் .மாற்றும் போது இரவு ஒரு மணிக்கு இருக்கும். டாக்டர் செரியனால் அப்பாவை எந்தெந்த மருத்துவர் பார்க்க வேண்டும் மற்றும் சிகிழ்ச்சை முறைகள் என மருந்துவ குறிப்புகள் மிக சரியாக அறிதியிட்டிருந்தார் அதன்படி அப்பா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதும் நேரே ஐசீயூவில் அனுமதிக்கப்பட்டார். பலமணிநேரம் கழித்து ஐசீயூவில் இருந்து வெளிவந்த நர்ஸ் என்னிடம் தந்தை என்னை பார்க விரும்புவதாக சொல்லிவிட்டு, பின் உன் தந்தை மிகவும் உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளார் , அவர் இருதயம் சிறு ரத்த அழுத்தத்தையும் தாங்கும் நிலையில் இல்லை பெரிதாக எதுவும் பேசாதீர்கள் என எச்சரித்து உள்ள அனுப்பினார்.

என்ன செய்வதென்று முதலில் புரியவில்லை மிகவும் குழம்பி இருந்த நாட்கள் அவை. பொதுவாக நானும் அவரும் பெரிதாக பேசிக்கொண்டதில்லை வியாபார நிமித்தமாக பேசுவது வழக்கம் அதைத்தாண்டி ஏதுமில்லை பெரும்பாலும் நான் சாப்பிட்டும் போது அவர் வந்தால் உணவுமேஜையில் அபூர்வமாக சந்தித்துக் கொள்வோம்.
நான் அவர் உணவுண்ணும் நேரத்திற்கு வராதபடி பாரத்துக் கொள்வேன் ஒரு ஆசானுக்குறிய மரியாதை சில சமயம் என் சிறு பிராய தவறுகளுக்கான கூச்சம் அல்லது குற்றவுணர்வு ஏதாகிலும் இருக்கலாம். மனித மனம் மற்றவர்களை ஏமாற்றுமுன் அது தனக்கே நடிக்கத் துவங்கிவிடும் இயல்பிலானது.அவரிடம் உடல்நலத்தை பார்த்துக்கொள்ளும்படியும் சென்னைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் ஊரில் போட்டது போட்டபடி இருப்தால் ஊருக்கு ஓரிரு நாள் சென்று வருவதைப்பற்றி பேசிவிட்டு வெளியில் வந்துவிடலாம் என ஏதேதோ முடிவு செய்தேன்.எக்காரணம் கொண்டும் தன் உடல்நிலை அவருக்குத் தெரியக்கூடாது என்பதால் என்குழப்பத்தை மறைத்து சகஜமாக உள்ளே சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் அளவிற்கு அதிகமான ஏசி முகத்தை அறைந்தது உள்ளே அவர் எப்படிபட்ட சூழலில் இருப்பார் என்கிற சிந்தனை சிறிதும் இன்றி உள்ளே சென்றதால் அவரை சுற்றியிருந்த மருத்துவ உபகரனங்களின் மிக மெல்லிய ரீங்காரமும் ஆழ்ந்த அமைதியும் என்னை தடுமாற்றமடையச் செய்துவிட்டது. அங்கு ஐந்து அல்லது ஆறு நோயளிகளுக்கான படுக்கைகள் இருந்தன ஒவ்வொன்றும் தனித்தனி பிலாஸ்டிக் திரைசீலை தடுப்புகளின் மத்தியில் நோயாளிகளின் முச்சொளி தவிர எந்தப் பேச்சும் இல்லாத்தால் அதுவே கேள்விப்பதிலென்று அவர்களுக்குள் இல்லாது யாரிடமோ ஒரு உரையாடல் போல ஒரு மன்றாடல் போல இருந்தது அழுத்தமான பலவிதமான மருந்து கலவையின் நெடி துர்நாற்றமென எதும்மில்லாது ஆரோக்கியமாகவே இருந்தது யாரோ தொடர்ந்து இருமினார் சளிக்காய்ச்சலுக்கு ஏசி எப்படி ஒத்துக்கொள்ளும் ....? சே எங்கு வந்து என்ன யோசனை நான் எப்பொழுதும் இப்படித்தான் கட்டுப்பாடில்லாது சிந்தனை ஆற்றுப்பெருக்கென ஒழுகியபடியே இருக்கும் . உடன் வந்த நர்ஸ் திரைச்சீலையை விலக்கி உள்ளே அழைத்து போனார் முகத்தை மூடிய பிராணவாயு மாஸ்க் சந்தனநிற மிருதுவான கம்புளி அடியில் அது உருத்தாதபடி தூய வெள்ளை காட்டன் துணி கழுத்து வரை போத்ப்பட்டு அப்பாவா இது?அடையாளம் காண வினாடி ஆனது.அவரைக் கண்டதும் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் . நர்ஸ் அப்பாவின் அருகில் சென்று நான் வந்திருப்பதைச் சொன்னார்.மெல்லக் கண்திறந்து என்னைப்பார்ததும், நான் எண்ணிவந்த எதையும் சொல்லும் மனநிலையில் இல்லை .இயல்பாக அவர் அருகனைந்ததும் மெல்ல மிக மெல்ல என் கரங்களை தொட்டார் , குளிர் நீரிலிருந்து எடுத்து போல் அவர் கைகள் நம்பமுடியாத அளவு சில்லிட்டிருந்தது என் உடலில் அது பரவ ஒருவித நடுக்கத்தை என் உடலில் உணர்ந்தேன் .
அந்த சிலிற்பிற்கு குளிரல்ல காரணம் என்கிற நினைவே முதலில் எழுந்தது . ஆம் என் நினைவு தெரிந்த நாளாக அப்பா என்னை தொட்டதே இல்லை என்கிற நினைவெழுந்தது . அவர் தொடுதலில் இருந்த ஒரு செய்தி சகல புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிலிர்பு வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு தந்தையின் தொடல். அந்த முதல் தொடலை உலகின் வேறு எந்த "முதலுடனும்" ஒப்பிட இயலாது.

அவருக்கும் என் நினைவு தகவல் உறுவெடுத்து அவருள் பரவியிருக்க வேண்டும் . ஆம் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் அவர் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் என் மார்பில் வழிந்து கொண்டிருந்தது அங்கு ஒரு சொல் எழவில்லை.அவர் கண்ணீரை நான் கண்டதில்லை,நானும் உணர்வின் மிகுதியால் அழுததாக நினைவில்லை, சிறிது நேரம் கழித்து தான் அந்த விபரீதமான பீப் சப்தத்தை உணர்ந்தேன் அப்பா எங்கோ மூழ்கிக்கொண்டிருப்து புரிந்தது.நரஸ் என்னிடம் கடுமையாக ஏதோ கூறி என்னை வெளியில் கொண்டுவிட்டார்.

நான் சமநிலை அடைய சிறிது நேரம் ஆனது.எங்கிருந்தோ ஒரு அசைக்க முடியாத ஒரு எடைமிகுந்த அமைதியால் சூழப்பட்டிருந்தேன்.என்னால் யோசிக்க முடிந்த அந்தத் "தெளிவு" ஆச்சர்யமயமானதாக இருந்தது.அவர் உடல்நிலை தேறி வெளிவருவார் என்கிற அழுத்தமான நம்பிக்கையை எங்கிருந்துப் கிடைக்கப் பெற்றேன் எனத் தெரியவில்லை.என் நினைவுகளின் அடுக்குகளிலும் அதன் ஒவ்வொரு செதில்களிலும் படிந்திருந்தது "அந்த தந்தையின் தொடுதல்" பற்றிய பிரக்ஞை ஒன்றே.

புரிதலின் தகவல் மொழி வடிவியல் கொண்டதல்ல ,அரூபமாக உணர்வினால் வெளிப்படுக்கையில் அது ஆழ்மனத்தில் படிமங்களென படர்வது அத்துடன் உரையாடும் சக்தி கொண்டது. மொழிக்கும் மொழிதலுக்கும் அப்பாற்பட்ட உணருதல் என்றிருப்பது ,பிரபஞ்சத்தையே சிறு செய்திக் குறியீட்டினென கடத்தக்கூடியது காலப்பரிமாணத்திற்கு உட்படாதது , அப்பாற்பட்டது.

நாயின் புரிதல் தன்னை கண்ட ஒருவன் கீழே குனிந்ததும் ஓடத்துவங்குவது "இவன் தன் மீது கல்லெறிவான்" என்று எந்த மொழியில் சிந்தித்து தன் செயலை முன்னெடுக்கிறது.

சட்டென அம்மாவை பற்றிய சிந்தனை வந்தது மிக எளியவர் அந்த மருத்துவமனையின் வராண்டாவின் இறுதியில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தார் அப்பாவின் நிலையை அவரிடம் கூறமுடியாது இனி அப்பாவிற்கான பணிவிடைகளை நர்ஸே பார்துக்கொள்வார்கள் இனி உள்ளே செல்வதென்பது நடவாது என எவ்வளவு சொல்லியும் அவர் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.ஒருவாறு சாமாதானப்படுத்தி ராயபுரத்தில் உள்ள என் நண்பன் கணேசன் வீட்டிற்கு வரும் போது பொழுத புலரும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

மனதில் இனம்புரியாத ஓர் மகிழ்வு ,துடைத்து விட்டது போன்ற மனது நிகழ்காலத்தின் யதார்த்தத்திற்கு சற்றும் பொருந்தி வாராது தனித்த தாளகதிக்கு சென்று கொண்டிருந்தது. மிச்சமிருந்த இரவு தூக்கமில்லாது கழிந்தது.

எங்களுக்குள் பொதுவான பேச்சோ அரட்டைகளோ இருந்ததில்லை,அவர் மேல் எனக்கு பெரும் மதிப்பு இருந்தது ஆனால் சந்தர்ப்பங்களில் அவை வெளிப்படுகின்றன.என்னைப் பற்றிய அவர் அபிப்பிராயங்களை அம்மாவிடம் சொல்லுவார்.அதை ஏன் அவனிடம் சொல்லமாட்டேன் என்கிறீர்கள் என அம்மா கேட்டதற்கு , விருந்தினரை வந்து சென்றபிறகும் ஆச்சார்யனை நேரிலும் கொண்டாடு.பிள்ளையை ஒருநாளும் கொண்டாடாதே இது சஸ்த்திரம் என்பார்.

பழக்க வசத்தால் இரவு முழுவதும் அம்மா பால், நொய்கஞ்சி பிளாஸ்க் என ஏதெதையோ உருட்டிக்கொண்டிருந்தார் அவருக்கு மறுபடி புரியவைக்க முயற்சிக்கும் வேலை நமக்கே விபரீதமாக முடியலாம்.அவரை அவர் உலகில் விடுவதே இப்போதைக்கு செய்யக்கூடியது

காலை மீண்டும் மலர் மருத்துவமனை.அருகில் நெருங்கும்போது முதல் நாள் தெளிவு காணாமல் ஆகிவிட்டுருந்தது,மறுபடியும் பதற்றம் எழத் தொடங்கி இருந்தது.நாடகத்தனமாக ஏதாவது சொல்லி விடுவார்கள் என ஏதோ ஒன்று உள்ளே எதையோ உடைத்துக்கொண்டே இருந்தது.மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருந்தது.மன அழுத்தத்தை வாயால் பெருமூச்சாக விட்டுக்கொண்டு இருந்தேன்.

நான் அடையாள அட்டையை காட்டி லிப்டு வழியாக மேலே சென்று கொண்டிருந்தேன்.பக்கத்தில் சிறு சப்தம் வந்ததும் சிந்தனையிலிருந்து விடுபட்டு அம்மாவைப் பார்த்தேன் சூழ்நிலையை புரியாது கட்டைப்பையில் கொண்டு வந்திருந்த பொருட்களை சரிபார்துக்கொண்டிருந்தார் லிப்டின் கதவுகள் திறக்கும் வரை எந்த சிந்தனையும் எழாதே அம்மாவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன்.

லிப்ட் திறந்ததும் உள்ளே நுழைய இருந்த டாக்டர் செரியனைத்தான் முதலில் பார்த்தேன்.நட்புடன் சிரித்தார்,தோளில் தட்டி ஊருக்கு சென்று ஆகவேண்டிய வேளைகளைப் பார் உன் அப்பா தப்பிவிட்டார், ஆச்சர்யம்தான் எனக்கூறிவிட்டு சென்றார்.ஆழ்மனத்தில் இதை எதிர்பார்த்திருந்தேன் மகிழ்வாக இருந்தது ஆனால் அதிக நேரம் அது சிந்தனையில் நிற்கவில்லை அடுத்து என்ன யோசிக்க ஆரம்பித்தேன்.

இரண்டு நாள் கழித்து வார்டுக்கு மாற்றிவிட்டனர் என புதுவையில் இருந்த எனக்கு தகவல் வந்தவுடன் சென்னைக்கு புறப்பட்டேன்.

வார்டில் பார்த்த அப்பா வேறுமாதிரி இருந்தார் மிக கணிவானவராக தெரிந்தார் சிரிப்பு மாறியிருப்பது உணரமுடிந்தது.எல்லாம் சரியானது போல் இருந்தது ஆனால் அந்த மாற்றத்தை கூச்சத்துடனே என்னால் அனுக முடிந்தது,எந்த மாற்றமும் இல்லாத பழைய வாழ்கைக்கே சென்றால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.அம்மா வழக்கம்போல் சாத்துக்குடிப் பிழிந்துகொண்டிருந்தார்.மருத்துவமனைகள் நட்சத்திர அந்தஸ்திற்கு மாறிக்கொண்டிருந்த காலம். எங்கும் எல்லாம் சுத்தமாக இருந்தது மருத்துவமனைகளுக்குறிய சிடுசிடுப்பின்மை அனைவரிடமும் பொருமையான பதில்,அம்மா ஏதேதோ வியப்பாக பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு எல்லாவற்றையும் பிரமாதமானதாகச் சொல்லி கொண்டே இருத்தல் சுபாவம்.

மாலை திரும்பவும் மலர் மருத்துவமனைகள் வந்தபோது முதல்நாள் இருந்த பரபரப்பு இல்லாமையால் மனம் சலனமற்று இருந்தது மருத்துவமனையை சுற்றிலும் நோட்டமிட்டபோது.மருத்துவத்துறை சேவைமுறை வெகுவாக மாறிவருவது தெரிந்தது.ஆனால் பெரிதும் வித்தியாசமாகத் தெரிந்தது வரவேற்பு நுழைவாயிலில் இருந்த அந்த பிரமாண்டமான விநாயகர் சிலை.அந்த காலகட்டத்தில் கிருத்துவ மருத்துவமனைகள் தான், அரசாங்க மருத்துவமனைகளுக்கு மாற்று ஆனால் இந்து விநாயகர் தனித்து தெரிந்தார்.கிருத்துவ மருத்துவமனைகளில் ஒருவித பள்ளி ஒழுங்கியல் கட்டுபாடு தெரியும் வெள்ளையும் அடர் நீலமும் பட்டை பட்டையான சுவர்களுக்கு பதிலாக நவீன டையிலஸ் ஒட்டப்பட்டிருந்தது எங்கும் கண்ணாடிக்கதவுகள் கண்டிபில்லாத சேவை கால மாற்றம் பெரிதாக தெரிந்தது.

நான்காம் மாடியில் தனி அறைக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.உள்ளே அறையில் அப்பா தனியே இருந்தார்.அம்மாவை கேட்டேன் வெளியே பஜாருக்கு சென்றிருப்பதாக கூறிச் சிரித்தார் சென்னை வாழ்கை அவருக்கு களியாட்டமாக இருந்திருக்கும்.பிரச்சனைகளின் அழுத்தம் உணராது வாழ்வது என்பது ஒரு வரம்.அது அவருக்கு வாய்த்திருந்தது.

அப்பா தன் அண்ணன் தன்னை சந்திக்க விரும்புவதாக ஆள் மூலம் சொல்லி அனுப்பி இருப்பதாக சொல்லி அம்மா வாயிக்கு பயந்து மறுத்துவிட்டதை சொன்ன போது கண்களில் அடிபட்ட வலி இருந்தது.

எனக்கு சொல்லி அனுப்பி இருக்கலாமே அம்மாவை நான் பார்துக்கொள்கிறேன் நீங்கள் பெரியப்பாவை வரச்சொல்லுங்கள் என்று சொன்னதறகுதான் அப்பா மெல்ல இப்படி சொன்னார்.

"உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன் என்று"

உலகின் நிகழ்வுகள் அனைத்தும் ஊடுபாவுகளாக கொண்டு நெய்யப்பட்ட வலையை போல என்னிலடங்கா முடிச்சுக்களின் தொகுதி.ஒங்வொரு நிகழ்வும் ஒரு கண்ணிகளாக்கப்பட்டு மனித வாழ்கையின் போக்கை முடிவுசெய்வதாக, ஊழென இக்கண்ணிகள் முடியப்படுகிறது . அது மனித தவறென்ற புரிதல் சிடுக்குகளால் உறவுகளின் மத்தில் விழும் முடிச்சுக்களை மனித முயற்சி கொண்டு வாழ்நாளில் சரிசெய்து விட முடிகிறது.ஆனால் ஊழின் கைகளால் இடப்படுகிறது சில முடிச்சுக்கள் அது பெருவிசும்பின் ஆடல்களமென்றாகிறது அங்கு எந்த தீர்வுகளுக்கும் தர்மத்திற்கும் நியாயத்திற்கும் சட்டத்திற்கும் யாதொரு நெகிழ்வையும் அது காட்டுவதில்லை.எளிய மனித மனம் அக்கண்ணியில் சிக்குண்டு காலமெல்லாம் இங்கு மண்டியிட்டு கரைந்து போகின்றது.பகவத் சங்கல்பமாக சிலர் அந்த கண்ணியை கடந்து அதற்கான தீர்வையும் வெகுமதியையும் வேறொரு கண்ணியில் கிடைக்கப்பெறுகின்றனர் ஊழ் நமக்கு சொல்வது எதையும் கடந்து செல் என்பதே.பயணம் தொடரட்டும் என்பதே.

அப்பா முகக்குறிப்பிலிருந்து என்னவோ சொல்ல விழைகிறார் எனத் தெரிந்தது.பொருத்திருந்தேன் மெல்லப்பேசத் துவங்கினார்.

அப்பா தன் அண்ணன் தன்னை சந்திக்க விரும்புவதாக ஆள் மூலம் சொல்லி அனுப்பி இருப்பதாக சொன்னார்.

சுமார் இருபது ஆண்டுக்கு முன் சிதைந்த உறவு பெரியப்பாவிற்கு எப்படியும் எண்பது வயதை ஒட்டி முன் பின் இருக்கக் கூடும்.இருவருமே மரபான தந்தையால் வளர்கப்பட்டவர்கள் இன்னதென்று சொல்ல இயலாத ஓர் கசப்பு பொருளியல் சார்ந்து எழுந்து வந்தது, அப்பாவின் அண்ணன் பள்ளி வாத்தியாராக இருந்தவர்.வியாபாரத்தில் நாட்டமில்லாதவர்.அப்பா அவர் தந்தையின் பாரம்பரிய வியாபாரத்தை செய்ததுடன் புதிய முயற்சியாக பலவற்றை இனைத்து குடும்பத்திலும் சமூகத்திலும் தனித்து அறியப்பட்டார்.பெரியப்பாவின் கசப்பின் வேர் பொருளியல்  மற்றும் சமூகம் சார்ந்ததாக இருந்திருக்கலாம்.

சிறுசிறு சச்சரவுகள் எனத்தொடங்கி இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்க்க வீட்டு பெண்கள் முனுமுனுப்பின் மூலம் அது பிள்ளைகள்வரை நின்று விளையாடியது. இனி சேருவறென்பது இல்லை என்ற நிலையை அடைந்த பிறகுதான் அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் பிரிவின் கடுமை புரிந்திருக்கலாம் . அவர்கள் இருவருக்கும் இடையே மனப்புரிதல் இருந்திருக்கலாம்.அப்பா பெரியப்பாவின் கிடங்கில் வாடகைக்கு இருந்தார் அதை காலி செய்யக்கூறி அப்பாவிடம் பெரியப்பாவின் பிள்ளைகள் நடந்து கொண்ட முறை இருவருக்குமான இடைவெளியை பள்ளத்தாக்கென விரித்துவிட்டது.

என் அம்மா அனைவருக்கும் ஏதாவொரு வசைச் சொல்லை குறியீட்டு பெயாராக இட்டுவதில் நிபுனர் பின் அதுவே அவரகளின் இயற்ப்பெயராகிப்போகும்.

காலம் ஓடிவிட்டது வயோதிகத்தில் அவர்களின் இருண்ட பகுதிகள் நிழலென அவர் கால்களில் ஒட்டிக்கொண்டு ஓயாது தொடர்ந்த வண்ணம் இருந்தன.

அப்பாவிறகு பெரியப்பா மீது பெரும் மரியாதை இருந்தது அக்காலத்தில் வீட்டுக்கு மூத்தப்பிள்ளை தந்தை ஸ்தானம் என அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் வயோதிகமும் நோயும் பெரியப்பாவை கனிவுகொள்ள வைத்துவிட்டது.

பெரியப்பாவின் சந்திக்கும் விருப்பத்திற்கு என்ன சொன்னீர்கள் என்று கேட்டதற்கு கண்களில் நீர் திறள உன் அம்மாவை யார் சமாளிப்பது மருத்துவமனையில் ரகளை செய்து உண்டுயில்லை என்றாக்கி விடுவார் உனக்கு தெரியாதா? என்றார். நானும் அதை அறிந்தே இருந்தேன், இருப்பினும் அவரின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது.

எனக்கு சொல்லி அனுப்பி இருக்கலாமே அம்மாவை நான் பார்துக்கொள்கிறேன் நீங்கள் பெரியப்பாவை வரச்சொல்லுங்கள் என்றேன்.

உன் அம்மாவை பற்றி உனக்கு என்ன தெரியும் நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன் என்றார்.

என்னுடைய பதின் பருவத்தில் அப்பாவிற்கிடையான என் உறவு சுமூகமானதாக இருந்ததற்கு அம்மாதான் காரணம்.எங்களிடையே அவர்தான் தூதுவர்.எனக்காக வசைகளை அவர் பெற்றுக்கொண்டு என் காரியங்களை சாதித்துக் கொடுப்பார்.

அம்மாவை பற்றிய அப்பாவின் இந்த அபிப்பிராயத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.நான் முதல் முறையாக அப்பாவை மறுதலித்தேன்.

அந்த காலகட்டத்தில் அம்மா செயல்பாட்டில் எப்பொழுதுமே பதட்டமான ஒரு மிகை உணர்வு கொப்பளிக்கும் நான் அவருக்கு இஸ்டீரியா போல ஏதோ ஒன்று என நினைத்திருந்தேன்.அதற்கு அப்பாதான் காரணம் என்ற முடிவிலிருந்தேன்.அதைத்தான் அப்போது அவரிடம் சொன்னேன்.

அம்மாவின் மனவழுதத்திற்கு அப்பாதான் காரணம் என்றேன் அம்மாவின் கருதுக்களுகோ அபிப்பிராயத்திற்கோ எந்த முக்கியத்துவம் கொடுத்ததிலை ஹிட்லர் போலத்தான் நடந்து கொள்வார்.ஆனால் அனைத்தையும் மீறி அவர் ஒரு அற்புதமான ஆளுமை என்கிற கருத்துரு எனக்கு ஏற்படாத காலம்.

மெல்லச் சிரித்துக்கொண்டார் உன் அம்மாவை பற்றி உனக்குத் தெரிந்ததை விட எனக்குத்தெரியும் என்றார்.இது ஒரு அசட்டுத்தனமான பேச்சி நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அம்மாவை அவருக்கு தெரியும்தான் யார் இல்லையென்றார்கள்.இப்பொழுது அதுவா பிரச்சனை என நினைத்தேன்

ஆனால்  இப்படி தட்டையாக தன் வாதத்தை வைப்பவர் அல்ல அவர். எனக்குத் தெரிந்த முதல் சிறந்த இலக்கியவாதி அவருடைய புத்தக அலமாரி எனக்கு புரியாத புதிராக இருந்த காலம் உண்டு. ஆனால் இலக்கியத்தில் அது இன்தென்று அறியாது கதையாக பார்த்த காலம் அது இலக்கியமென பரிணமித்தது பிறகுதான்.

திரு.ஜெயகாந்தனின் சிறு வயது தோழர் அவருடைய இலக்கிய தொடர்புகள் நா.பார்தசாரதி, இந்தரா பார்த்தசாரதி தகழி கி.ரா,பிரபஞ்சன் லா.சா.ரா தி.ஜானகிராமன் கோர்கி போன்றவர்களின்  ரஷய்பொழிபெயர்பு நூல்கள் நியு சென்சுரி நிருவனம் சாகித்ய அக்கெடெமியின் புத்தகங்கள் உளவியில் புத்தகங்கள் இப்படி என் சிறுவயது ஞயாபகம்.

எனக்கு தெரிந்து அப்பா திரவிடக் கழக அபிமானி.தாத்தா நேரெதிர் தாத்தா செய்து வைத்த மணக்குள விநாயகர் விக்ரகம் வருட மாசி மகத்தன்று வீட்டிற்குள் வரும் அய்யர விபூதி தரும்போது கைபடாமல் எடுத்து நெற்றிபடாமல் இட்டுக்கொள்வார்.

தாத்தா பெரிதா திருமண் இட்டிரிப்பார் சைவ வைஷ்ணவ அபேதமாக இருப்பார்.

அப்பாவிற்கு வைஷ்ணவத்தில் ஈடுபாடு ஏற்பட்டதில் அலமாரி வைஷ்ணவ சாஸ்த்ர புத்தகஙளாக நிறைந்து வழிந்தது மணிப்பிரவாள எழுத்துக்களுடன் ஏதோ கல்வெட்டு ஆரய்ச்சி மாதிரி இருக்கும் . சிகப்பு மையில் நிறைந்த அடிக்கோடிட்டு வரிக்குதிரை மாதிரி இருக்கும்.

நிறைய வைஷ்ணவ தர்க புத்தகம் சாஸ்திரம் என நிறைய எழுதியிருந்தார்

அவரிடமிருந்த ரசிப்புத் தன்மையானது அவரை தனித்துக் காட்டியது அதுவே அவரது வாழ்கைமுறையானதாக அப்பழுக்கில்லாதாக இருந்தது அதுவே அவர் ஆளுமையின் காரணம் என நினைக்கிறேன்.

அம்மாவை பற்றிய அவரது கருத்து எனக்கு ஏறபுடையதாக இருக்கப்போவதில்லை இருந்தும் அவர் என்ன நினைக்கிறார் என அறிய விரும்பினேன்.அவருடன் அமர்ந்து பேசுவது இனிதானதாக இருந்தது

உன் அம்மா இஸ்டீரியா நோயாளி அல்ல.ஆனால் தான் நினப்பதை மற்றவர்கள் செய்யவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.நினைத்ததை பேசக்கூடியவர் மற்றவர் மனவருத்தத்தை பற்றிய கவலை அற்றவர் என்று கூறினார்  இது சாதாரணமானவை என நான் கூறியதற்கு.ஆம் அனால் நீ கற்பனை செய்ய இயலாதது அதன் பரிமாணமும் வீரியமும்.அது சற்று சரியாக நிர்வகிக்கவில்லை எனில் அது வாழ்வியலை வேரொரு தளத்திற்கு கொண்டு சென்று விடும்.

யாரைப்பற்றியும் நல்ல அபிப்ராயங்களை அவர் வளர்த்து கொள்வதில்லை.சில பேரிடம் அவருக்கு இருக்கும் தொடர்புகள் கூட நீண்ட ஆயுள் கொண்டதல்ல என ஏதேதோ கூறிக்கொண்டேயிருந்தார் நிறைய தர்க்க சாஸ்திரத்திலிருந்தும் சிகமென்ட் பிராயடு உளவியல் குறித்து நிறைய பேசினார்.எனக்கு அவை எளிதில் புரியாததாகவும் குழப்பமாகவும் ஜீரணிக்க முடியாத்தாகவும் இருந்ததால் ஒரு வித மனவழுத்தத்திறகு ஆளனேன்.

நெடுநேரம் ஆகி விட்டிருந்தது அவர் பேசி முடித்ததும் நான் கேட்டேன் நீங்கள் அம்மாவை வெறுக்கிறீர்களா என்று.

மென்மையாக சிரித்தபடி நீ இப்படித்தான் கேட்பாய எனத் தெரியும் காரணம் உனது இளமனது அது குழம்பிப் போனால் இத்தகைய எளிய கேள்விகள் மூலமாக தன்னை தொகுத்து கொண்டு எதிர் கேள்வி மூலம் எதிரியின் அடிபடையை தார்மீகத்தை அசைக்கும் கேள்வியைத்தான் அது முன்னெடுக்கும் என்று கூறிவிட்டு பிராய்டில் இருந்த ஒரு கோட்பாட்டை சொன்னார்.எனக்கு சத்தியமாக புரியவில்லை.

ஆனால் அவர் சொன்னதை இப்படித் தொகுத்துக் கொண்டேன். அப்பா சொன்னார் நான் சரியாகத்தான் வாழ்ந்தேன் மனிதர்கள் குணங்களின் தொகுப்பு நேர்மறை எதிர்மறை சமநிலை எனப்பிரித்து கொள்ளாம். அம்மா எதிர்மறை பிரிவு ஆனால் நான் என் மனைவியை ஆரம்ப காலத்திலேயே மிகச்சரியாக புரிந்து கொண்டதால் எனக்கு உளவியல் சிக்கல்கள் எழவில்லை, ஆகவே நான் நேர்மறையாக என் செயல்களைத் தொகுத்துக்கொண்டேன் அது ஏறக்குறைய குழந்தையிடம் தந்தை நடந்து கொள்வதைப்போல எளிய உத்தரவுகள் வழியாக நடத்திச்செல்வது,மீறமுடியாது என்கிற ஓர் எண்ணத்தை உருவாக்கி விடுவது மீறினால் என்ன நடக்கும் என்பதை அவரின் கற்பனைக்கு விட்டுவிடுவது.நமது நேர்மறையான குணங்களைக் கண்டபின் தண்டனை வகைகளை அதுவே வகுத்துக் கொள்ளும்.அவர் வரம்பு மீறிவிட்டால் இது அத்தனையும் வெறும் பாவனை எனப் புரிந்துவிடும்.அது குடுவையை திறந்து வெளிவந்த பூதம் கதைதான்.சமாளிக்க முடியாது என்றார்.

மிகைப்படுத்துகிறார் என நினைத்தேன்.அப்பா புரிந்து கொண்டார்.உனக்கு உன் அம்மா திருவண்ணாமலை அக்கா வீட்டில் அடித்த கூத்து ஞாபகம் இருக்கிறதா என்றார்.

எனக்கு உள்ளுக்குள் ஏதோ நடுங்கியது.

வீட்டில் என் தங்கைகள் சிறுமிகளா இருந்தனர்.திருவண்ணமலை அக்கா குடும்ப சிக்கல், என்அக்கா எதற்கும் ஒத்து வராத பிறவி சிடுக்குகளிக்கு பஞ்சமில்லை மூத்த மாப்பிள்ளை மீது அப்பாவிற்கு பிரியம் அதிகம்.எதாவதொரு காரணம் சொல்லி வீட்டுக்கு வரும் அக்காவை அப்பா பிடித்து தள்ளாத குறையாக அனுப்பினாலொழிய புகுந்த வீட்டிற்கு புறப்படாள். தனியாக பஸ்சில்  செல்வதற்கு பயம். நான்தான் பலியாடு.ஒவ்வொரு முறையும் அந்த வீட்டில் நுழையும் போது மிகவும் திகிலடைந்து இருப்பேன்.அது மிக சாதாரணமான விவசாயக் குடும்பமும் எளிமையானவர்கள்.அக்கா அங்கு சும்மா இருந்தால்தான் உலக அதிசயம்.முட்டாள் முரடு நாளை எழும் சிக்கல் உணராது வாழ்வு இன்றே முடிவுறும் என பேசி விடுவார்.அவள் என் வீட்டிற்கே அடங்கியதில்லை.அப்பாவிற்கு தெரிந்த எந்த வித்த்தையும் அக்காவிடம் எடுபட்டதில்லை.

பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்தால் அதகளம்.அழுது வீங்கின முகமாக அம்மாவை பார்பது வலிமிகுந்ததாக இருக்கும்.வயதில் சிரியவன் இதில் ஊடுபாவ முடியாது.மோதல் என்வரையில் வராதிருக்க ஒரு முகத்தை வைத்துக்கொள்வேன்.

இதில் பொறுக்க முடியாதது எழவு அக்காவின் தன் புகுந்த வீட்டு பற்றிய குறை.அக்காவிடம் எதை எதிர்பார்த்து மாமா கல்யாணம் செய்து கொண்டார், புதிர்தான்.அதன் பிறகு அவர் வாழ்கை இன்றுவரை நரகம்.

திருவண்ணமலை சிக்கல் எனக்கு புதிதல்ல எனினும் அம்மாவின் பதட்டமும் அழுகையும் இன்று விபரீதமாக இருந்தது.தன்னை பஸ் ஏற்றிவிடும மன்றாடினார்.தகவல் எனக்கு தெரியாது. அப்பா ஏற்கனவே திருவண்ணமலை சென்றிருபதால்.இது வீரியம் கூட்டியதால் எனக்கு திகிலாக இருந்தது.ஒன்றும் சொல்ல முடியாமல் அவரை பஸ் ஏற்றிவிட்டேன்.இதைவிட மடத்தனமானது பிரிதில்லை என பிறகுதான் உணர்ந்தேன்.

அம்மா ஊர்திரும்பிது அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும் என்று என் தங்கை சொன்னால் சொன்னாள்.விபரீதமாக ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது என மனது பதைக்கத் தொடங்கியது.

இரண்டாவது தங்கைதான் சமையல் அறையில் இருந்தாள் முதலில் அவளை கேட்டதற்கு இந்த பைத்தியம் அங்கு சென்று என்ன செய்துவிட்டு வந்திருக்கிறது என்று அப்பா வந்தால்தான் தெரியும் என்றாள் நான் வயிற்றில் கலவரமாக உணர்ந்தேன். அம்மா முன் அறையில் உட்கார்ந்து தனக்குத்தானே பேசிக்கொள்வதும் அழுது சிவந்த முகமுமாக இருந்துந்தார்

அது அவரது இயல்பு,எதையுமே மிகை படுத்துவதும் அதையே பேசுவதுமாக இருப்பார்.கிட்டே நெருங்கியதும் பெரிதாக குரலெடுத்து அழ ஆரம்பித்தார் எனக்கு அனுதாபத்தை காட்டிலும் வெறுப்பு பற்றிக்கொண்டு வந்ததுடன் அப்பா வந்தால் இவரை பஸ் ஏற்றி விட்டதற்கு தனியாக வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டும் என்கிற பயமுமாக அவர்மேல் எரிந்து விழுந்தேன்.

அழுகையினூடே அவர் சொன்னது முதலில் எனக்கு புரியவில்லை.என்குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்துவதாக இருந்து.செய்தி திருவண்ணாமலை அக்காவை மாமாவீட்டார் கொலைசெய்து புதைத்து விட்டனர் என்றும் அதை தான் தேடிப்பார்த்து விட்டு திருப்பி வந்துவிட்டதாகவும் சொன்னார்.எனக்கு அடிவயிறு பகீரென்றது சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. நான் அம்மாவிடம் அப்பாவையும் மாமாவையும் பற்றிக் கேட்ட பொழுது அவர்களை தான் பார்க்கவில்லை என்றார்.அம்மா அங்கு சென்ற போது அப்பா ஏன் அங்கு இல்லை என்பதும் அம்மா மறுபடியும் பஸ் படிக்க மணி ஒன்று ரெண்டாயிருக்கும் அதுவரை அப்பா அக்கா மாமா எங்கு சென்றிருபாரகள்.தலை வெடித்துவிடும் போலிருந்தது.

தங்கை சொன்னது சரிதான் பைத்தியம் இது என்ன செய்து தொலைத்திருக்கும்? பகாவானுக்கே வெளிச்சம்.

இன்றும் எனக்கு ஆச்சரயமாக இருப்பது அப்பாவின் அந்த ஆத்ம பலம் அது கடும் கோபமென வெளிப்படுக்கையில் வீட்டின் ஒவ்வொரு செங்கள்லும் தகிக்கும் அதுவே குடும்பத்தை திரும்பவும் நெறிப்படுத்தும்.கடும் சொற்கள் செய்ய இயலாத விளைவுகள் அவர் ஆழ்ந்த மௌனம் சாதிக்கும்.

ஆனால் இது அதைவிட அனலென அப்பா தகித்துக்கொண்டிருந்தார் யாரும் அருகில் செல்லத் துணியவில்லை.அம்மா வேரொரு முனையில் பித்துப்படித்தாற் போலிருந்தார்.இதுபோன்றதொரு அசாதாரமாண சூழல் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அறியாதது ஏறக்குறைய மனப்பிழைவு நிலையின் அருகில் நின்றிருந்தார்.

இது உடன் முடிவுக்கு வாராது போனால் என்ன நிகழும் என யூகிக்க இயலவில்லை.ஒருவாறு தேற்றிக்கொண்டு அப்பாவின் அருகனைந்ததும் என்னை கண்டு சிறிது கனிந்தாற் போலிருந்தார்.

அம்மா திருவண்ணமலைக்கு சென்றது அங்கு சொற்களுக்குள் அடங்கா அநர்த்தம் நிகழ்ந்துள்ளது எனப் புரிந்துள்ளது.கவலை என்னவெனில் ? நான் தான் அம்மாவை திருவண்ணமலைக்கு பஸ்சில் ஏற்றியது.முதல்
செருப்படி எனக்குதான் விழும் என்பதற்கு யூகம் தேவையற்றது.

இருந்தும் யாராவது அதை வாங்கித்தானாக வேண்டும் எனக்கு புதிதல்ல செய்த செய்யாத தவறரென அனைத்திற்கும் வாங்கி இருக்கிறேன்.ஆனால் இன்று அப்படி அல்ல எங்களூடேயான பழைய இடைவெளி பெரிதன்று,எனவே பேசத்தொடங்குமுன் என்னை உட்காரச் சொன்னார்.

மிகவும் பண்பட்டவர், எனக்கு அவர்தான் "ரோல்மாடல்" பல சந்தர்பங்களில் யாரும் எதிர்பாரத வகையில் அவரின் கண்ணியமும் நேர்மையும் பார்தது நான் வியந்து போனதுண்டு.

எந்த சபையிலும் கம்பீரமாக அமர்ந்திருப்பார்,யாரும் அவரிடம் மிக மரியாதையாக நடந்து கொள்வர்.இது என் தாத்தா காலம் முதற்கொண்டு நான் பார்த்து வருவது அரும் சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் இருந்தவர்  பாண்டிச்சேரியை சுற்றி நூறு மைலுக்கு தாத்தா பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் அறிது .இன்றும் அப்படித்தான்.

அப்பா உன் அம்மா நம் குடியையும் என்மானத்தையும் கெடுத்தாள் என்றார்.

2 கருத்துகள்:

  1. Have seen and known Thatha only from a kid's view until all these years. For the first time, this gives me a chance to know him as a grown up man :)

    பதிலளிநீக்கு
  2. You don't know that you are the first man registering views , and you are the first man to see my original script of my first article , which was uploaded in Singapore almost a year back .

    பதிலளிநீக்கு