https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 21 செப்டம்பர், 2016

வாழ்வெனும் நதி

வாழ்வெனும் நதி 



மழை - அது துளித் துளியாய் பொழிவதற்கு கடலும் கருமேகமும் தொடக்கம் என்றபோதும் , அது மீண்டு கடலை சரண் புகுமுன் பூமியை நனைத்து நதியென பிரவகித்து மனல் அரித்து சென்றாலும், சில கூழாங்கற்களை விட்டுத்தான் செல்கிறது.அவை தான் சொல்ல விழையும் பொருளை நம் வாழ்வின் தருணத்திற்கேற்ப நமக்கு ஓர் புதிய புரிதலை கொடுக்கிறது.

வாழ்வின் தொடர் நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்றை பொருத்தி பார்க்கும் போது சில சமயங்களில் அதற்கு ஒரு அதீத அர்த்தம் புலப்படுகிறது.

அம்மா சொல்வார் தன் மாமனாரின் ஆசியே தன் வாழ்வியலில் நலத்திற்கு காரணம் என. ஆனால் அதை தன் வாழ்வில் எப்படி கையாண்டார் என்பது விவாதத்திற்குறியது. எப்படி எனினும் அவர் சொன்னது சத்தியம்.பெரியவர்களுக்கு அவர்களின் வயோதிகத்தில் அவர்தம்பிள்ளைகள் செய்யும் உதவிகளுக்கு, அவர்கள்  தரும் ஆசி மிக சக்தி வாய்ந்தது,

தீச்சொல்லும் அவ்விதமே.


வாழ்கையில் பெரிதும் குழப்பிக்கொண்டது இது பற்றிதான், அது என்னை தடுமாற்றமடையச் செய்தது. ஆனால் சில கோட்பாடுகளின் அடிப்படையில் அதைக் கடந்து தாண்டினேன்.

அப்பாவின் ஆசி எனக்கானது, ஆனால் அம்மாவிடம் அது எவ்வகையிலும் கிடைக்கப்போவதில்லை அது என் ஊழ்.
என் தந்தை எனை பற்றிய புரிதல் தவறானதென தன் இறுதிக்காலத்தில் சொன்னார் என நான் கேட்டதுண்டு,
அவ்வாறு என் தாய் சொல்லப்போவதில்லை.

உலகம் தாய்க்கு கொடுக்கும் அங்கீகாரம் அபரிதமானது ,அதை எக்காலத்திற்கும் எவறாலும், அத் தொகுப்பிலிருந்து ஒருவரைக்கூட விலக்க முடியாது . அப்படியானால் நான்  என் தாயுடனான விலக்கலை எங்கனம் புரிந்துகொள்வது.
அவர் குண இயல்புகள், பொதுவானதா அல்லது தனிப்பட்டதா.


தந்தைக்கு தன் மகனின் மரணம் அவனது தாயைவிட ஆகப் பெரியது என்பர் .தாய்க்கு மகன் உறவைப் போன்றதல்ல தாய் மகள் உறவு அது இன்னும் விவரிக்க இயலாதது , மிக நுண்ணிய பல மடிப்புக்களால் ஆனது .
மிக ஆழமானது.

மகள்களின் உலகில் மருமகள் எனப்படுபவள் எப்படி புரிந்து கொள்ளப்டுகிறாள் . தாய் மகன் நிலையை பாதிக்கும் உறவு என்றா ?

அப்படியானால் அனைத்து மகள்களும் யாருக்கோ மருமகளெனில் அங்கும் அவர்கள் தாய் மகனை பிறிக்கிறார்களா? எனில்
அவர்கள் எப்படி நியாயத் தராசின் முள்ளாக  முடியும்.
அவர்கள் தன் தாய்க்கு எப்படி சரியான புரிதலை கொடுக்க இயலும்.
ஆகவே தான், அவர்கள் அனுகூல பரதிகூலங்கள் வழியாக தாய்களின் வயோதிகத்தை நெருப்பால் நிறைக்கிறார்கள். நிலையின்மையில் அவர்களை பதறவைக்கிறார்கள். அவர்களுக்கு வருத்தமும் , வெறுப்பும் வாழ்வில் எங்கும் எவர்பேரிலும் நிறைந்து கிடக்கிறது.

மகள்கள் - அவர்கள் இருநிலைப்பாட்டாளர்கள் தங்களுக்கெனவும் பிறர்கெனவும் தனிவழி திறந்து வைத்துள்ளார்கள் ,ஆகவே இரு பக்கமும் தாய் மகன் உறவைகளைப் பாதிக்கிறார்கள்.
எனில், இதில் பெருவிசும்மென கரந்துரையும் ஊழின் தர்மம் எனப்படுவது யாது?.

அவர்கள் தன் விதியை எழுதிக்கொள்கிறார்கள்.
இது உலக வழக்காரு.
ஆனால் பாவம் அத்தகையர்.
அவர்கள் சின்னஞ்சிறு உயிரத்தொகைகள்.
அப்பெரும் விசும்பின் நிர்வாகத்தை முன்னெடுப்பவர்கள்.

ஆகவே தாயின் வயோதிகத்தில் உதவ மறுகப்பட்ட மகன்களுக்கு,அவர்களின் ஆசி கிடைக்க வாய்ப்பில்லையா?
இயற்கை எவ்வகையாகிலும் இதை சமன்பாடு செய்திருக்கலாம். நம் புரிதலுக்கு காலம் தேவைப்படுகிறது,
...........நாம் சரியாக இருப்பின்.

...........தான் சரியாக இருப்தென்பதென்ன? தாய்ககு எதிர் நிற்றலை விடுத்து விலகியிருத்தல். பின் யார் எதிர் நிற்பது ?

மகள்களின் உலகில் மருவும் மருமகள்தான். !!

அவளே இவ்வூழின் சங்கிலித்தொடரை அறுக்கவல்லாள்.
............தான் சரியாக இருப்பின். அவள் தான் சரியாக இருப்பது என்பது யாது?

அவள் தனக்கான கூடாததும் கூடலும் அறிந்து ஒழுகுதல்..........அதை அவன் அங்கீகரித்தல் என முடிந்தால்.

அவனுக்கு இப்பெருவிசும்பு மருமகளை மகள் என மருவித்தந்து
தன் ஊழின் கரவுகளைத் கலைந்து கொடுக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்