https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 21 செப்டம்பர், 2016

இறந்தகாலத்துடன் பேசுதல்

19 செப்டம்பர் 2016

இறந்த காலத்துடன் பேசுதல்
காலம் புரிதல்களால் ஆனது , நிகழ்வுகள் கால பரிமாணங்களில் பரிணமிக்கிறது.கடந்த காலத்திலிருந்து வெளியேறி நிகழ்காலத்தில் வாழ்வதும் ,எதிர்காலத்தை நோக்கி  நகர்வதும் மானஸ வியாபாரமே .ஏனெனில் இறந்தகாலம் இருந்ததற்கான தரவுகளை நம் எதிர்காலத் தேவைக்கென அது நம் நினைவுகளில் மட்டுமே அதை விட்டுச்செல்கிறது.

நினைவுகள்  புரிதல்களால் அறுதியிடப்பட்டால்தான். அது ஆழ்மனதில் படிமங்களென படர்கிறது.இதில்தான்  காலமெனும் துளாவின் முள் நிகர்நிலை கொள்கிறது.

நம்மை கடந்து சென்ற நிகழ்வுகள் நம் ஆழ்மனதில் படிமங்களாகி, நம் எதிர்காலத்திற்கான புரிதல்களை அதில் கரவுகளாக வைத்து விடுகிறது. ஆழ்மனத்துடன் உரையாடுகையில் அவை எழந்துவந்து நம் எதிர்காலம்குறித்த தெளிவுகளை பிரகாசமாக்குகிறது.

ஆழ்மனம் படிமங்களினால் ஆனது. அதில் எக்காலத்திற்குமான கேள்விகளுக்கு பதில் உண்டு, அவற்றுடன்  உரையாடுகையில் அது அனுபவஅறிவென மிளிர்கிறது ,நம் தேவைக்கேற்ப அனுபவங்களாக வெளிப்பட்டு நம்மை இயங்கவைக்கிறது. மற்றவர்களிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

காலங்களுக்கு இடையேயான மெல்லிய கோடு நம் புரிதல்களால் பகுத்து கொள்ள முடியாதபடி கலங்கிவிடின், அது நம் கடந்த காலநிகழ்வுகளின் நினைவு மையத்தில் ஓயாது அலைக்கழித்து ,துரதிஸ்டவசமாக மனதை இறந்தகாலத்தை நோக்கி நிலைநிறுத்துகிறது.

நாம் இறந்த காலத்தை நோக்கி பேசத்தொடங்குகிறோம்.

கடந்த காலத்தில் நடந்தவைகளில் இருந்து எழும் கேள்விகளுக்கு பதில் உரைக்கத்தொடங்கினால் அது மற்றொரு கேள்வி எழுதலில் கொண்டு விடும்.பின் அது முடிவிலி. ஏனெனில் தற்பெருமை,தன்நேர்மை,தான்சரி என்கிற இடத்திலிருந்து புறப்படுபவை.அவை பிரச்சனையின் ஆழத்தில் இறங்கி விவாதிக்காது ,தன்னையும் சிக்கலையும் சேர்துக் குழப்பிக்கொள்ளும் ,தன்னில் முற்றி வீங்கிய அகங்காரத்தால் எவரையும் சந்தேகிக்கும், எவ்விளக்கத்தையும் ஏற்காது.அது தான்விழையும் பதிலை அடுத்தவர் வாயால் சொல்லப்படும் எனக்காத்திருக்கும் அவ்விதம் என அது சொல்லப்பட்டால் உளம் பதறி செயலொழிந்து நிற்கும்.

எதிர்காலம் நிகழ்காலமாகும் பொழுது அதை நித்யமென எழும் சூரியோதயம் வகுப்தில்லை.புரிதலில் எழும் மானஸசிருஷ்டியே அதை வகுக்கிறது. அந்த சிருஷ்டி நிலைகொண்டுள்ள ஸ்தானத்திற்கான பாதையின் பயண ஊடகமே சூரியோதயமென பரிணமிக்கிறது.

அதைநோக்கிய பயணம் தொடங்கி நெடுநாட்களாகிறது. கடந்த காலத்திலிருந்து கற்ற பாடங்கள் அனுபவத்தில் வரவில்லை எனில் அவற்றில் இருந்து எனக்கு கிடைக்கப்போவது மனதை வருத்தி எடுக்கும் நிகழ்வுகளே.
அவை ஏன்? எதற்கு? என ஓயாத கேள்விகள் புல்லென உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது இதற்கு பதில் இறுத்து மாளாது .

ஏதோ ஒருவகையில் என்னைப் பொருட்படுத்துகிற, என்னிடம் சொல்லவும் நான் சொல்வதைக் கேட்கவும் நினைக்கிறவர்களிடம் மட்டுமே நான் பேசுகிறேன்.அந்த உரையாடலில் கூடுமானவரை உண்மையைப் பேசவே முயல்வேன். தெளிவாக நேரடியாக. என்னிடம் ஒளிக்கவோ, பூடகமாகச் சொல்லவோ ஏதுமில்லை. என்னுடைய தனிப்பட்ட நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் என்னுடன் பேசுபவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புவேன். அவர்கள் நம்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் பேசுவேன். அப்படி நம்பி என்னுடன் விவாதிப்பவர்களை மட்டுமே எனக்குறியவர்களாக நினைப்பேன். அவர்களுடன் உரையாடும் பொழுது வாழ்கையைப்பற்றிய சில புதிய புரிதல்கள கிடைக்கலாம் .மற்றவர்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவேன்.

தன் வாழ்வனுபவங்களைக்கொண்டு, தன்னுள் தன் பண்பாடு தேக்கிய படிமங்களைக்கொண்டு ஆழ்மனத்துடன் பேசுகையில் அது அவனுன் உரையாடுகிறது.

மற்றவர்களுக்கு அது நாய்பெற்ற தேங்காய்தான். உருட்டிப்பார்க்கிறார்கள். புண்படுபவர்கள். அவர்கள் வழிதவறி வந்து விழிக்கிறார்கள்.பணிவுடன் அவர்களுக்கு திரும்பிச்செல்லும் வழியைக் காட்டுவதே நல்லது

எதிர் காலத்தை நோக்கிய பயணத்தின் படிகளில் என்றாவது அவர்களை சந்திக்க நேரின் இன்று கடலளவு கொட்டி புரியவைக்க முடியாதது அன்று ஒரு அத்மார்தமான சிரிப்பில் புரியலாம்.

- கிருபாநிதி அரிக்கிருஷணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...