https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 8 மே, 2018

அடையாளமாதல் - 329 *வதந்திகளின் அரசியல் *

ஶ்ரீ:



பதிவு : 329 / 501 / தேதி :- 08 மே  2018



*வதந்திகளின் அரசியல்  *





நெருக்கத்தின் விழைவு ” - 24
விபரீதக் கூட்டு -04.




தனித்த அரசுகளையே கொடுத்து வந்த காங்கிசிற்கு 1980ல் கூட்டணி அரசாங்கம் நடத்துவது புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும்  . அதற்கு முன்பாக 1974 முதல் 1980 வரையிலான காலத்தில் புதுவையில் ஸ்திரமான ஆட்சி உருவாகாதவாறு காங்கிரஸ் பார்த்துக்கொண்டதாக எங்கும் பேச்சாக இருந்தது . அதிமுக இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தும் , அதனால் ஆட்சியை முழு ஆயுளுக்கும் தொடர முடியவில்லை . முதல்முறை ஆட்சி 22 நாட்களும்இரண்டாவது முறை ஒன்றரை வருடகாலம் மட்டுமே அதன் ஆயுட்காலம் நீடித்தது . மீதி காலம் முழுவதும் முன்னும் பின்னுமாக ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுதுணைநிலை ஆளுநரால் கீழ் ஆளப்பட்டது . .துணைநிலை ஆளுநருக்கு பின்னால் இருந்து மாநில கங்கிரஸின் தலைமைதான் மறைமுகமாக ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டும்  இருந்தது. செய்திகளும் அதற்கு  இணையான வதந்திகளே அரசியலின் களப்போக்கை எப்போதும் நிர்ணயிப்பவைகள்

1974- 80 வரையிலான ஆட்சி கவிழ்ப்புகளின் பின்னால் சண்முகம் செயல்பட்டதாக அலர் புதுவை முழுவதும் இருந்தது . அது ஓரளவிற்கு உண்மையும் கூட . அந்த நிகழ்வுகளினால் சண்முகத்திற்குகிங் மேக்கர்என்கிற அந்தஸ்தும், அனைத்து கட்சி தலைவர்கள் மத்தியில்அவர் மீது ஒரு அச்சம் ஏற்படவும் காரணமாக இருந்தது . அதை தனது இறுதி காலம் வரை தக்கவைத்துக் கொண்டு , புதுவை அரசியலை தன்னை மையப்படுத்தியே எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் . அது  அவரை பெரும் ஆளுமையாக வெளிப்படுத்தியது . மேலும் இந்திராகாந்தியுடன் அவருடைய  அணுக்கமான தொடர்பு தென்னக காங்கிரஸின் செயல்பாடுகளில் அசைக்க முடியாத தலைவராக உருவெடுக்க வைத்தது

ஒரு கட்சியின் மாநில தலைமை பதவி தொடர்ந்து ஒருவரிடம் நீடித்ததால், அது கட்சிக்கு ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறதுபுதுவையில் காங்கிரஸ் இன்னுமும் கூட முதல் நிலை கட்சியாக இருப்பதற்கு அது அடிப்படை காரணியாக  இருக்கலாம் . ஸ்திரமான தலைமையை கொடுக்கும்சூழலும் தனது அதிகாரத்தின் கீழ் பல ஆண்டுகள் கட்சியும் , ஆட்சியும் இருக்கும்  போது அதை இயக்கும் சக்திக்கு , மாநில அரசியல் தன்னை சார்ந்து இருக்கும்படியான ஒரு பிண்ணலை உருவாக்கிக் கொள்ள நினைப்பது இயல்பானதே.

கூட்டணி அரசாங்கத்தில் அதன் உறுப்பினர்களுக்குள் சிக்கலுக்கு எப்போதும் பஞ்சம் இருக்கப்போவதில்லை . அதற்கான முதல் விதையை ஊன்றுபவர்கள் அரசாங்க அதிகாரிகள் . காரணம்   அமைச்சர்களின் நியமனம் அதுவரை இருந்த தொடர் நடைமுறைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் செயல்பாடுகளை முடக்கியும், ஊடுறுவியும் அமைவதால், அவர்கள் அதை தங்களின் தடையாக பார்ப்பார்கள் . அதில் தொடங்கும் உள்ளூழல் ,அமைச்சர்களுக்குள் சிண்டு முடிவதும் , அதிகரிகளிடையே நிகழும் கோப்பு பரிவர்த்தனைகளை மேல் , கீழ் அடுக்குமுறையில் செய்யப்படும் மாற்றம் மூலமாக தங்கள் அரசியலை நிகழ்த்திக்கொள்வதில் சமர்த்தர்களாக இருப்பதால்  . அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அதிகாரிகள்  செய்யும் அரசியலில் சிக்காது வெளிவர முடியும் . அதிகாரிகள் நிகழ்த்தும் அரசியலும் , அதிலிருந்து வெளிவருதலே அமைச்சர்களின் முதல்நிலை சவால்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்