https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 1 மே, 2018

அடையாளமாதல் - 323 * மாறுபடும் பார்வைகள் *

ஶ்ரீ:




பதிவு : 323 / 493 / தேதி :- 01 மே  2018


* மாறுபடும் பார்வைகள் *


நெருக்கத்தின் விழைவு ” - 18
விபரீதக் கூட்டு -04.





சண்முகம் தனது செயல்பட்டால் காங்கிரஸ் கட்சி தலைமை பதவி பஞ்சப் பராரிகளுக்கு ஏற்பது என்கிற ஒரு தோற்றத்தை தனது பாணியாக வைத்திருந்தார் , அதன் மீது ஒவ்வாமை கொண்ட மேல்மட்ட அரசியளாலர்கள் அனைவருக்கும் சண்முகம் என்றாலேயே ஒரு மனவிலக்கம் கொண்டனர் . ஆனால் 2001ல் சண்முகம் முதல்வராக அமர்ந்த போது , இந்த எளிமையான அனுகுமுறையை தொடர்புறுத்தும் அமைப்பு சிதைந்து போனதாலோ, அல்லது அது அவரது இயல்பாக இல்லாததாலோ , அப்போது அவர் அடைந்த அரசியல் வீழ்ச்சியிலிருந்து பின் ஒருபோதும் மீள இயலாது போனது. வளர்ந்து விட்ட ஒருவரின் அரசியல் பலம் எப்போதும் கைநழுவ கூடியது மட்டுமன்றி, அனுபவம் என்பது வீழ்ச்சியிலிருந்து ஒருவரை காப்பாற்றும் காரணியன்று என்கிற புரிதலை அடைந்தேன். ஊழ் அனைத்தையும் மாற்றி அமைத்து நகைக்கக்கூடியது .

சமூக அந்தஸ்துள்ளவர்கள் . பொருளியல் பின்புலத்தினால் கட்சிக்குள் நுழைந்து சட்டமன்றத்திற்கு செல்பவர்கள் , தங்கள் தொகுதியை சார்ந்தவர்களை தவிர்த்து பிறருக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டியதில்லை என்கிற மனப்பான்மை ஒரு  நோயை போல அடைபவர்கள் . இது கட்சியின் அடித்தளத்தை சீரழிப்பது . ஒருவரின் வெற்றி மட்டுமே  கட்சியை ஆட்சியில் அமர்த்துவதில்லை , அதற்கு  பதினைந்து உறுப்பினர் தேவைப்படுகிறார்கள் .இந்த மனநிலையைத்தான் கட்நிக்கு பினபுறமாக நுழைந்த வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினர்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன்

இதுவே அமைப்பை சட்டமன்றக் கட்சி மற்றும் தொகுதி அமைப்புக்களாக பிரித்து ஒன்றுடன் ஒன்று எப்போதும் முரண்பாட்டு நிற்க வைத்துவிடுகிறது . மோசமான உரசல்கள் ஏற்பட்டாது மாநில தலைமை இவற்றில் எப்போதும் எண்ணெய் இட்டு , தன்னையும் கட்சியையும் காப்பாற்றி உரசல்களை தவிர்த்தாலும் , ஒரு கட்டத்தில் அனைத்து தரப்பிற்கும் கட்சித்தலைமையின் மீது அவநம்பிக்கையை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க இயலாது , தலைமை அதற்கு பலியாகிறது

ஒவ்வொரு தரப்பிறகும் தாங்கள் கட்சி தலைமையால் ஏமாற்றப்பட்டதாக ஒரு குற்றசாட்டு எப்போதும் கைவசம் இருக்கும். ஆனந்த பாஸ்கருக்கும் அப்படி ஒன்று 1989 தேர்தலின் போது நிகழ்ந்தது , ஒரு புள்ளியில் மரைக்காயரை வெறுத்து சண்முகம் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாலும் , அவருக்கு சண்முகத்தின் மீதுள்ள அதிருப்தி எப்போதும் கசப்பாக வெளிப்பட்டு விடும்

ஆனந்த பாஸ்கரும் தனது பொருளியில் பலத்தால் திடீரென கட்சியில் இணைந்தவர் , அதன் பின் தனக்கான தொண்டர் அமைப்பை உருவாக்கிக் கொண்டார் .  கட்சிக்குள்நுழைந்ததும் சண்முகம் அவருக்கு இயல்பில் அந்நியமாய் தெரிந்ததில் வியப்பில்லை , அதனாலேயே சண்முகத்தை வெறுத்தார் . பிறிதெல்லாரையும் போலமரைக்காயரையே தனக்கு உகந்த தலைமையாக புரிந்திருந்தார் . 1989 சட்டமன்ற தேர்தலின் போது , பல்வேறு அரசியல் காரணங்களுக்காக , சில பேரங்களின் அடிப்படையில் மரைக்காயர் ஆனந்த பாஸ்கரனின் பெயரை தனது பரிந்துரை கடிதத்தில் சேர்த்தும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்  கடைசீ நேரத்தில்  கழற்றி விடப்பட்டு சுப்ராய கவுனடர் வேட்பாளராக தலைமையால் அறிவிக்கப்பட்டார். அதிர்ந்து போன ஆனந்த பாஸ்கர் தேர்தல் அரசியலின் பிறிதொரு முகத்தையும் , அரசியல் என்பது ஒருவருக்கு கௌரவத்தை மட்டுமின்றி , தனது அனுக்கர்கள் மத்தியில் இளிவரலை ஏற்படுத்த வல்லது என்பதை புரிந்த போது சண்முகம் மீது கட்டுப்படுத்த முடியாத காழ்பபை அடைந்தார்.

பின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சென்னையிலிருந்து புதுவை திரும்பிக் கொண்டிருந்த ஆனந்த பாஸ்கரன் , வழியில் பழுதாகி நிற்கும் கர்ருக்கு அருகில் நின்றிருக்கும் சண்முகத்தை கண்டு , தனது காரில் அவரை புதுவையில் கொண்டு விட, இதிலிருந்து மரைகாயருக்கும் ஆனந்த பாஸ்கருக்கும் உருவான பூசல் , இறுதியில் அவரை சண்முகம் தரப்பெடுக்க வைத்தது ,ஊழின் வினோதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்