ஶ்ரீ:
பதிவு : 341 / 514 / தேதி :- 20 மே 2018
* நேரடித் தொடுகை *
“ நெருக்கத்தின் விழைவு ” - 35
அன்று முழுவதுமாக நான் இதைப்பற்றி நிறைய யோசித்தபிறகு. நான் ஆனந்த பாஸ்கரனுக்கு சொன்னது தகவல்கள். யாரின் வக்கீலாகவும் பேசி நான் எவரையும் நியாயப்படுத்த முயலவில்லை. அது எனது வேளையும் அல்ல . இந்த உண்மையை அவர் என்றாவது ஒருநாள் அறிந்து கொள்வார் . ஆனால் என்னை ஒரு அரசியல் மாணவன் என்கிற நிலையிலேயே அவரின் நட்பு இருந்ததால், உண்மையை உண்மையென சொல்லும் துணிவு வேண்டும் . அதை யாருக்காவும் மாற்றி பேசுவதல்ல என்பது எனது கொள்கையாக இருந்தது . எல்லா கோணத்தின் படி யோசித்ததில் என் தரப்பு சரி என்று தோன்றவே . அவருடன் மறுமுறை பேசும் பொருட்டு அன்று இரவு அவரை “சேர்கிள் தே பாண்டிச்சேரியில்” சந்தித்தேன்.
அது புதுவையின் உயர்குடி மக்கள் கூடும் கேளிக்கை விடுதி சீட்டாட்டம் , மது அருந்துமிடம் போன்ற பழைய பிரெஞ்சு நாகரிகம் கலந்து ஒரு காஸ்மாபாலிடன் கிளப் .இன்றும் பேணப்படும் சில இடங்களில் அதுவும் ஒன்று . என்ன காரணத்தினாலோ அந்த இடத்தை நான் வெறுத்தேன் . அவர் அங்கு செல்வது குறித்து நானும் வைத்யநாதனும் பலமுறை அவரை பகடி செய்ததுண்டு . நான் மெயின் ஹாலில் நுழைந்து ஆனந்த பாஸ்கரை சந்திக்க வந்திருப்பதைச் சொன்னதும் , அவர் ஆனந்த பாஸ்கரனை தேடிச் சென்றார். அந்த கிளப்பின் ஊழியர் என்னை அறிவார்.
நேரம் நீண்டு கொண்டிருந்தது . திடீரென என்னை அவர் பார்க்க மறுத்துவிட்டால் என்ன செய்வது? என தோன்றியதும் , அந்த எண்ணத்தை தள்ளி அவருக்காக காத்திருந்தேன் . கிளப் ஊழியர் திரும்ப வந்து என்னை அவர் உள்ளே அழைத்துவர சொன்னதாக சொல்லியதும் அவருடன் உள்ளே சென்றேன் . அது ஒரு வினோத உலகம். சற்று மங்கலான ஒளியில் , முகத்திலறையும் குளிரும் சிகரெடின் புகை , மதுவின் நெடி எங்கும் சூழ்ந்திருந்தது. ரவுண்டு டேபிள்கள் போடப்பட்ட ஹாலில் ஒரு மூலையில் ஐந்து பேருக்கு மத்தியில் ஆனந்த பாஸ்கரனை பார்த்தேன். எங்கும் நிசப்தமாக இருக்க குளிரூட்டும் இயந்திரம் மட்டும் சன்னமான ஒலியுடன் ஓடிக்கொண்டிருந்தது . அங்கு இருந்த அனைவரும் மிக மன ஒருமைப்பாடுடன் தியானம் போல அமர்ந்திருந்தார்கள். பெரும் பொருளியலில் திளைப்பவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல ஆனால் அவர்களுக்கு மத்தியில் , சில சமாண்யர்களை பார்த்த போது , ஒரு திடுக்கிடலை உணர்ந்தேன்.
ஆனந்த பாஸ்கருக்கு அருகில் சென்று நின்றதும் மிக தீவிரமாக அந்த பதிமூணு சீட்டை பார்த்துக் கொண்டிருந்தவர் , என்னை ஏறிட்டுப்பார்த்து , மீண்டும் சீட்டை பார்த்தவர் திடுக்கிட்டவராக திரும்பவும் பார்த்து “ஏது இந்தப்பக்கம் , இங்கெல்லாம் வரமாட்டாயே? என சகஜமாக கேட்டபடி கையிலிருந்த சீட்டை கீழே வைத்து , நண்பர்களிடம் ஒருசில வார்த்தை பேசி வெளி லாபியில் போடப்பட்டிருந்து தனி டேபிளிலில் சென்று அதர்ந்து கொண்டோம். அவர் மது அருந்தும் பழக்கமற்றவர் என தெரியும் . குடிப்பதற்கு எனக்கு காபி சொன்னவர் . சட்டென ஏதும் ஆரம்பிக்க வில்லை , எதையும் நேரடியாக சொல்வது அவரது பாணி . நான் அவராக துவங்கும்வரை காத்திருந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக