https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 27 மே, 2018

அடையாளமாதல் - 344 * பௌர்ஷம் *

ஶ்ரீ:




பதிவு : 344 / 522 / தேதி :- 27 மே  2018

* பௌர்ஷம் *



நெருக்கத்தின் விழைவு ” - 38
விபரீதக் கூட்டு -04.




1983 ஆட்சி கவிழ்ப்பு தலைவரை ஒரு பெரும் ஆளுமையாக வெளிக்காட்டினாலும் , அது அவரை பிறிதொரு காலத்தில் வீழ்த்தும் காரணிக்கான முளையை வித்திட்டது. அதில் வீழ்ந்த தலைவர் பிறிதெப்போதும் அரசியலில் மீண்டு வரவில்லை. சண்முகத்துக்கு கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பது அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை. என்பது முதல் நிலையில் விளங்கி இருக்கவேண்டும் . முக்கிய இலக்காக்களை கையில்வைத்திருக்கும் அமைச்சர்களின் கையெழுத்தை விலகல் கடிதத்ததில் பெறுவது சாத்தியமில்லை என்பதால் அனைத்துவிதமான எதிர்வினைகளை முன்கூட்டி யாருடனும் விவாதிக்க இயலாமல் தனி ஒருவராக திட்டமிடலும், அதன் சாதக பாதகங்களும் , பின்விளைவுகளும் முதலிலே அவதானிப்பதும் மூளையை முடிச்சிடக் கூடியது

நான் சண்முகத்தை பேருருவாக கண்டது இந்த சந்தர்ப்பத்தில் . நாங்கள் கண்ணன் தலைமையில் அவருக்கு மிக கடுமையான சவாலாக உருவாகி வந்த காலம் அது . அவர் இதை போன்ற திட்டங்களை யாருடனும் கலந்து ஆலோசிக்க இயலாது . ஆகவே பல நூறு அலகாக பிரிந்திருக்கும் ஒன்றின்  ஒரு இழை பிறழும் போது மாற்று நடவடிக்கை திட்டம் தயாராக இருக்கவேண்டும் . பலர் கொண்டு நிகழ்த்தப்பட்ட இதன் கதை வசனம் இயக்கம் பிசிறில்லாதவை , அரசியல் என்பது மனிதர்களின் மனம் சம்மந்தப்பட்டது . அது எந்த திசையில் எப்படி பயணப்படும் என எவரும் கணிக்க இயலாது

பலர் சேர்ந்து முயங்குவதால் நிமிடம் நிமிடம் அது மாறுபாடுகளை அடைந்தபடியே பயணப்படும் ஒரு முனையில் , அது மாறுபாட்டை அடைந்தால் மொத்த திட்டமும் அந்த முனையில் இருந்து மீளவும் மாற்றி வடிவமைக்கப்பட வேண்டும் . இது பலமுறை பல நாள் நடக்கும் ஒரு சலியாத வேலை . வாழ்க்கையை முழுவதுமாக அரசியலுக்கு அர்ப்பணித்த ஒருவரை தவிர இதை இப்படி சிந்திக்க முபையது .

தனது திட்டத்திற்கு  உதவியவர்களுக்கு கொடுத்த வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்கிற அடிப்படையில்தான் சுப்ராய கவுண்டருக்கு சீட்டு கொடுக்கப்பட்டது . தன்னிடம் விவாதிக்காமல் ராஜ்யசபை உறுப்பினராக டாக்டர் ஆனந்தவேலை முன்னிறுத்தியதில் இருந்து இந்த குழப்பம் துவங்குகிறது

ஒரு விவாதத்தை எந்த தளத்தில் நின்று நிகழ்த்துகிறோம் என்பது முக்கியமானது . தலைவரின் மொத்த முடிவும் அவரது ஆணவத்தால் விளைந்தது என்றார்கள்  , அவரில் முரண்பட்டோர் . ஆனால் ஆணவம் என்கிற சொல்லிற்கு அரசியலில்  எவ்வித பொருளும் இல்லை . இங்கு ஆணவம் பௌர்ஷமாக கொள்ளப்படுவதுஅது தலைமையின் குணமா எடுத்துக்கொள்ள வேண்டியது என்பதால் அதை ஆணவமாக முன்வைக்க முடியாது .ஜனநாயகமென்பது பலர் கூடி விவாதிப்பது , ஆனால் முடிவை ஒருவர் மட்டுமே எடுக்க முடியும் . அவர் எப்படிபட்டவராக தனது வாழ்கையில் வெளிப்பட்டருக்கிறார் , என்பது மட்டுமே அவர் முடிவெடுக்கும் அருகதை உள்ளவராக பார்க்கப்பட வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்