https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 6 மே, 2018

அடையாளமாதல் - 327 * ஆணவம் என்கிற துளி விஷம் *


ஶ்ரீ:பதிவு : 327 / 499 / தேதி :- 06 மே  2018* ஆணவம் என்கிற துளி விஷம் *
நெருக்கத்தின் விழைவு ” - 22
விபரீதக் கூட்டு -04.

அவர் என்னை சரியாய் புரிந்திருந்தார் என்கிற நம்பிக்கை பொய்த்து போனது  . நான் பேசுவதற்கு முன்பாக என்னை முழுமையாக தொகுத்துக்கொண்டேன் . அவரிடம்இது விவாதம் யாருடைய வெற்றி தோல்வியை பற்றியதல்ல . உங்கள்  பேச்சு உங்களது எண்ணமல்ல . அதை யார் உங்களிடம் சொல்லியிருக்க கூடும் என்பதையும் என்னால் சொல்ல இயலும் . பிறிதெவரோ சொல்லுவதை அப்படியே நம்பி அதை சற்றும் யோசிக்காது முன்வைக்கிறீர்கள் . அதை நீங்கள்  புரிந்து கொள்ள வேண்டும் என நான் விழைகிறேன்மேலும் உங்களுடைய கூற்றை பலர் போலியாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள், அது  உண்மையில்லைஎன்றேன்யாராவது அவருக்கு அதை சொல்லியாக வேண்டும் என்கிற கணக்கில் நான் பேச விரும்பினேன்.  

இதை அவருக்கு சொல்லிய பிறகே எனது மறுப்பை சொன்னேன். மேலும் அவரிடம்இப்போது நான் வைத்தது என்கருத்தல்ல பலருடைய கருத்தின் தொகுப்பு மட்டுமே , இதை மறுத்து என்னிடம் விவாதிப்பதை விட நான் சொல்லும் நபர்களிடம் நீங்கள் அவற்றை மறுத்துப் பார்க்கலாம் . அவர்கள் அனைவரும் காங்கிரசின் மூத்த உறுப்பினர்கள். சிறந்த அரசியல் நோக்கர்கள் . யாரையும் புகழ்ந்து வாழ வேண்டிய தேவையற்றவர்கள். அவர்களை நீங்களும் அறிவீர்கள்என்றேன் . விவாதத்தின் அவர் பாதியில் எழுந்து சென்றதை எனக்கான அவமதிப்பாக கருதினேன் . ஒரு மாற்று தரப்பை முன் வைக்கப்படுகையால் அதை கேட்டுகும் பொறாமையற்ற  ஒருவர் எப்படிப்பட்ட அரசியல்வாதியாக தன்னை சொல்லிக் கொள்ள  முடியும்? என்கிற எண்ணத்தோடு நான் வீடு திருப்பினேன்

ஒருகட்டத்தில் அவர் சொன்னதை நான் புரிந்துகொள்ளாமல் எதிர்வாதம் வைக்கிறேன் என சொல்லி எழுந்து சென்று விட்டார் , நான் சண்முகத்துக்கு அடிமை போல இருப்பதாகவும்  , அதனாலேயே  நான் அவரை எப்போதும் நியாயப்படுத்தி பேசுகிறேன் , இது எனக்கு ஒருநாளும் உண்மையை உண்மையாக காட்டிக்கொடுக்காது என கோபப்பட்டார். அவரது வேகம் கண்ட பிறகு நானும் அவரும் இனி இயந்து அரசியல் பேசுவது நடவாது என்கிற முடிவிற்கு வந்தேன்.

சண்முகத்தின் அரசியல் அனைத்தையும் நியாயப் படுத்துவது எனது வேலை இல்லை , காங்கிரஸில் உள்ள தலைமைகளை விட , ஏன்? மாற்று காட்சிகளில் உள்ள தலைமைவிடவும் அவரை மேலான தலைமையாக பார்த்தேன் . ஆனந்த பாஸ்கரின் குற்றச்சாட்டு , வேட்பு மனு தாக்கல் செய்யும் அந்த கடைசீ நேரத்தில் தன்னை அவமானப்படுத்தி விட்டதற்காக கொந்தளித்தார் . இதற்கு அவர் நம்பி இருந்த தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் . அவர்கள் விட்டுக்கொடுத்ததினால் தான் கடைசீ நேரத்தில் சுப்ராய கவுண்டர் வேட்பாளராக மனு தாக்கல் செய்யதார் . இது நடந்தது 1985ல் . நான் சண்முகத்தை சந்தித்து, அவரது தலைமை ஏற்றது 1993ல் , அந்த காலகட்டம் வரை சண்முகத்துக்கு முற்றும் எதிரான இயக்கம் இளைஞர் கங்கிரஸ் . ஆகவே அன்றைய நிகழ்வுகளை நான் அறிந்திருக்க மாட்டேன் என அவர நினைத்திருக்கலாம்.

ஆனந்த பாஸ்கர் சொல்லும்  இந்த சிக்கலின் உண்மையான தொடக்கம் 1980 தேர்தல் சம்பந்தப்பட்டது . அது அவருக்கு தெரியாது . அதை சொல்லவே நான் விழைந்தேன் . திமுக காங்கிரஸ்  கூட்டணி அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவை சண்முகம் வாபஸ் பெற்றதன் மூலமாக ஆட்சியை கலைத்தார்

அதற்கு உள்ளும் புறமுமாக பல கேள்விகள் அரசியல் நோக்கர்களால் இன்றளவும் பேசப்படுகிறது . அரசியல் காரணமாக பல விஷயங்கள்  சொல்லப்பட்டாலும் , சண்முகத்தின் ஆணவம் முதல் காரணம் என்றும் சொல்லப்பட்டது . என்னை பொறுத்தவரைஆணவம் என்கிற துளி விஷம்தலைமைக்கு அணிசேர்ப்பது என்பேன். காரணம் அது தலையில் இல்லாது உட்கரும் பதவியின் கௌரவத்திற்கானது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக