https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 15 மே, 2018

அடையாளமாதல் - 336 * பௌர்ஷம் *

ஶ்ரீ:




பதிவு : 336 / 508 / தேதி :- 15 மே  2018



பௌர்ஷம்  *




நெருக்கத்தின் விழைவு ” - 31
விபரீதக் கூட்டு -04.





வாழ்வியல் புரிதல்களினால் ஆனது , புரிதல்கள் காலத்தினால் விளங்குவது  , காலமோ தெய்வாதீனமானது. அதன் போக்கை யாராலும் கணிக்க இயலாது . தன்னால் முடியும் என்கிற பௌர்ஷம் உள்ளவன் பிறிதெவரையும்  கடந்து  முன்னே நிற்கிறான் , அதனால் பிறரால் தலைவன் என அறியப்படுகிறான் , காலம் அவனுக்கு அதீனப்பட்டது என ஒரு  நதியின் ஒழுக்கு போல அவன் வெட்டிய பாதைகள் தோரும் ஓடிவருவதும் , பின் தனக்கான வழியை தேடிக்கொள்வதுமாக இருக்கிறது. அந்த விலகல் புள்ளியை அறிந்து கொள்பவர் அமைதியால் நிறைவடைகிறான் .

நீண்ட இடைவெளிக்கு பின்னர் , கட்சியின் தொடர் தோலவியினால் , மாறிவிட்ட சூழலை கணிக்கத்த தவறியவர்கள் தேர்தலை சந்திக்க தயங்கினார்கள் அல்லது அதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருக்கவில்லை போன்ற காரணுங்களுக்காக . 1980 தேர்தல் பல புது முகங்களை அறிமுகம் செய்ய வேண்டிய நிர்பந்தம் சண்முகத்திற்கு ஏற்பட்டிருக்கலாம். கதிர்வேல் , ரேணுகா அப்பாத்துரை , சாலிமரைக்காயர் , சவரிராஜன் ,வைத்திலிங்கம் போன்ற பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதுமுகங்கள் மட்டுமின்றி, பொருளியல் நிலையிலும் வலுவான ,அதே சமயம் கட்சிக்கு அதிகமும் அறிமுகமில்லாதவர்கள். ஓரளவிற்கு தனியாளுமைகளாக இருந்தவர்கள்.ஜோசப் மரியதாஸ் , மூர்த்தி ராமலிங்கம் போன்று திமுக விலும் நிறைய புதுமுகங்களுக்கு பஞ்சமில்லை.

புதிய உறுப்பினர்கள் அதிகமும் இடம் பெறும் சட்டமன்றத்தின் ஆயுள் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை. காரணம் , அனைத்துவிதமான சிக்கலிலும் அவரகளுக்கு நிதர்சணமான புரிதல் ஏறபடாமையும் , கலகம் செயவதில் நாட்டமுள்ளவர்களாகவே அவர்கள் எப்போதும் இருந்தார்கள். சட்டமன்றம் பலவித சமன்பாடுகளை எதிர்நோக்கும் ஒரு இடம் அதற்கான , தனித்த சில தர்மங்கள் இருக்கின்றன . எனவே அவர்கள் கட்சித்தலைமை, அதற்கு உட்பட்ட அரசியலும் ,ஆடலும் நிகழவேண்டும் என்கிற நிர்பந்தமில்லாதவர்கள் . இந்த இரண்டின் கூட்டில் சண்முகம் தனக்கு புதிய சவாலகளை கொடுக்கக் கூடியவர்களாக  அவற்றை எண்ணியிருக்கலாம். இயல்பிலேயே இது பல காரணிகளால் பொருந்தாக் கூட்டணி . சிக்கலின் வேர் தமிழகத்திலும் தில்லியிலும் கூட விரிந்திருந்தது

1970 களின் இறுதியில் மதுரையில் திமுக இந்திரா காந்தியை தாக்க முயன்றதும் , அதை தடுத்த பழ நெடுமாறன் , இந்திராகாந்தியால் மூன்றாவது மகனாக பார்க்கப்பட்டதும் . அதன் அடிப்படையில் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அதுவரை இல்லாத பின் ஒருபோதும் ஏற்படுத்தாத “செக்ரட்டரி ஜெனரல்” என்கிற பதவியும் , அதை தொடர்ந்து பழ நெடுமாறன் கட்சியிலிருந்து வெளயேறியதும் இன்னதென புரிந்து கொள்ள முடியாத பல குழப்ப சூழலில் உருவாக்கி வந்தது இந்த கூட்டணி . அது மூன்று வருடம் நீடித்ததே ஒரு சாதனை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்