https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 16 மே, 2018

அடையாளமாதல் - 337 * மாறுபாடுகள் *

ஶ்ரீ:




பதிவு : 337 / 509 / தேதி :- 16 மே  2018

* மாறுபாடுகள்  *


நெருக்கத்தின் விழைவு ” - 31
விபரீதக் கூட்டு -04.




1980ல் அமைந்த திமுக , காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கலைக்கப்பட வெளிப்படையான காரணம் ராஜ்யசபை உறுப்பினர் வேட்பாளர் தேர்வு தன்னை கலந்தாலோசித்து நடைபெறவில்லை என சொல்லப்பட்டாலும் . அதில் லாட்டரி சீட்டு ஊழல் பிரதான காரணமாக இருந்து அதுவே எங்கும் பிரதானமாக பேசப்பட்டது. ரேணுகா அப்பாத்துரை போன்றவரகள் , தில்லியின் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் இடத்திற்கு வந்து சேர்வார்கள் என சண்முகம் எதிர்பார்க்கவில்லை . திமுக கூட்டணி உறவு தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தேறியதால் அவர்கள் அணைவரும் சண்முகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

மூப்பனார் , வாழைப்பாடி போன்றவர்கள் புதுவை காங்கிரஸில் தனக்கென இருந்த குறுங்குழுக்களை இன்னும் வலுவான உருவாக்கிக் கொண்டார்கள் , மூப்பனார் அணியில் கண்ணன் பிரதானமாக அதில் தன்னை மையப்படுத்தி அபரிதமான வளர்ச்சி அடைந்தது இந்தக் காலகட்டத்தில் . காங்கிரஸ் அரசியல் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படும்  அமைப்பாக இருந்தது . அதாவது அதன் தொண்டர் அமைப்பு . அது ஏதாவாதொரு தலவரை பற்றியே தனது அரசியலை வளர்த்தெடுத்துக் கொள்ளும் . தமிழகம் மற்றும் புதுவைக்கு தில்லி அரசியல் மூன்று காரணத்தினால் , யாராவது அண்டி இருக்க காரணம்  பயணதூரம் , மொழி , பொருளியல். திராவிட கட்சிகளின் மையம் சென்னை. அவர்களால் தங்கள் மேலிடத் தலைவர்களை சந்திப்பதைப்போல காங்கிரஸின் ஒரு சாதாரண தொண்டனுக்கு தில்லி அரசியல் களத்தில் தன்னை வைத்து நினைத்து பார்க்க முடியாது . தலைவர்களுக்கு தங்கள் தொண்டர்களை தங்களை மட்டுமே சார்ந்து இருக்க இந்த சூழல் பெரிதும் உதவியது.

புதுவை மாநில அமைப்பிற்கு புதியதாக வந்த அமைச்சர்களுக்கு இந்த இடைவெளி ஒரு தடையாக இல்லை . கட்சியின் தலைமையை கடந்து தங்களை தில்லியில் நிலைபடுத்திக் கொள்ள ஆரம்பித்தது இந்த காலகட்டத்தில். சண்முகம் எதிர்பார்க்காது இந்த மாற்றத்தை . போதிய கல்வி பிண்ணியில்லாது அனுபவம் சார்ந்து தன்னை முன்னெடுத்துக் கொண்ட தலைவர்களுக்கு , புதிய அல்லது நவீன சிந்தனையுள்ள தொண்டனை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல . காமராஜர் போன்ற சிலர் இதை சிறப்புற நிர்வகித்தாலும் , கால மாற்றத்திற்கு ஏற்ப அவராலும் அதை தொடர இயலாது போனது . பல நுண்ணிய காரணிகள் அவரது தலைமைக்கு சவாலாக எழுந்திருக்க துவங்கியிருந்தது. ஆட்சி கவிழ்ப்பிற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...