https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 26 மே, 2018

வெண்புமுரசு துவை கூடுகை 15 . பால்வழி, மொழியாச்சொல்



ஶ்ரீ:




பதிவு : 521 / தேதி :- 26 மே  2018






புதுவை
வெண்முரசின் 15 வது கலந்துரையாடல் 
தேதி 24-05-2018 
வியாழக்கிழமை
மே மாத கூடுகையின் தலைப்பு 
பகுதி 8 : பால்வழி 
மற்றும்
பகுதி 9 : மொழியாச்சொல் 
39 முதல் 47 வரை



அன்புள்ள நண்பர்களே ,

பிரம்மா தொடக்கமாக அனைத்தும் மானச சிருஷ்டி என்கிறது புராணம். பிறப்பையும் அதன் வளர்பபைப் பற்றியும் அது பலவாறு பேசுகிறது . உத்பித்ஜம் , ஆண்டஜம், ஸ்வேதஜம். ஜராயஜம்.... என பலவாறாக , கருப்பையிலிருந்து, முட்டையிலிருந்து, மண்ணிலிருந்து , வியர்வையிலிருந்து உயிர்கள்  உற்பத்தியாவதை சொல்கிறது . எல்லாவிதமான சேர்கைகளும் உடல்களை கொடுப்பதேயன்றி உயிர்களைக் கொடுப்பதில்லை எனகிறார்கள் . அது இயற்கையின் பேரிருப்பின் விதிக்கு உடபட்டது .பார்த்திவ பரமாணுக்கள் புஞ்சங்களாக எங்கும் வியாபித்திருக்கையில் அது பிரகடனமாவதற்கு ஒரு உடல் தேவையாகிறது . பிறந்த பின் வளர்வது தாயின் லாலனையில் என்றாலும் , அனைத்தும் தொடுகையால் அவற்றை வளர்ப்பதிலில்லை , மீன் பார்வையாலும் , எங்கோ இட்ட முட்டைகளை ஆமை தனது நினைவாலேயே தனது வளர்க்கிறது என்கிறது இந்திய சிந்தனை மரபு .

பிள்ளைகள் பிறக்கும் தோரும் தந்தையில் இருந்து அனைத்தையும் கூர்கவண்டும் தனக்கென சில தனித்தவைகளுடன்தான் தனது பிறப்பை கண்டடைகிறது. நினைவு ஒன்றினாலேயே தன்னை பிரதிபிம்பிக்க முடியும் என்கிற விளக்க முடியாத உண்மையை  காரிய காரணங்களை யாரும் கூறிவிட இயலாது. இங்கு வெண்முரசு அதை மிக லாவகமாக கையாள்வதை பிரமிப்புடன் பார்க்கிறேன் .

பிரம்மனின் நான்கு தலை சிவனின் ஐந்து தலை , முருகனின் ஆறு தலைகளை கொண்டவர்களாக புராணம் பேசுகிறது . பெரும் விழைவு எச்சமென மிச்சப்படுகிற போது படைப்பு அந்த விழைவுகளைக் கொண்டு திகழ்கிறது. உடல் அதை கொடுக்க இயலாது என்ற போதும் மனம் அதில் வாழும் விழைவுகளை இந்தப் புடவியில் நிகழ்த்தி விடுகிறது. என்பதாக வெண்முரசு சொல்ல விழைகிறது . கந்தனின் புராணத்தை இதில் கொண்டு வந்து அதன் தொடர்ச்சியாக சொல்லுகிறது , இதை ஒரு அற்புதமான இணைவாக பார்க்கிறேன் .

ஆம், அதில் வியப்புற ஏதுமில்லை" என்றாள் குந்தி. "ஏன்...? நான் அழகற்றவன், ஆண்மையும் அற்றவன்" என்றான் பாண்டு. "உடலைச்சார்ந்தா உள்ளம் இயங்குகிறது?" என்று பிருதை சொன்னாள். பாண்டு துள்ளி எழுந்து மஞ்சத்தில் கால்மடித்து அமர்ந்துகொண்டான். "முற்றிலும் உண்மை... இந்த நொய்ந்த வெள்ளுடல் நானல்ல. இது எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் இதுவல்ல. நான் உள்ளே வேறு... வேறு யார்யாரோ..."

எங்கும் நிறைந்துள்ள பார்திவ பரமாணு பிரகடனமாக ஒரு சரீரம் தேவை படுகிறது என சொல்லப்பட்டது போல . ஜீவனும்ஜீவனற்றதும் கூட  சரீரத்தையே உற்பத்தி செய்கிறது . உருட்டி வைக்கப்பட்ட சாணத்திலிருந்து புழுக்கள் உற்பத்தியாவதைப் போல. ஆத்மாவின் பிறப்பு ஊழின் கணத்தில் நிகழ்கிறது. தனது விழைவை அழுத்தமாக ஒரு ஆத்மா முன்வைக்கிற போது அதுவும் நிகழத்தான் செய்கிறது. தன்னை ஆறாக பிரித்து கொள்ளும் பாண்டு , தன் நினைவினாலேயே தனக்கான புத்திரர்களை அடைகிறான் என கவித்துவமாக சொல்கிறது வெண்முரசு.

"யார்?"என்றாள் பிருதை. "எப்படிச் சொல்வேன்?" என பாண்டு கணநேரம் திகைத்தான். துள்ளி எழுந்து நின்று உளவிரைவால் கைகளை விரித்தான். "நானென்பது ஆறுபேர். ஆறு பாண்டுக்கள். ஒருவன் அளவில்லாத கொடையும் பெருந்தன்மையும் கொண்டவன். எச்சிறுமைக்கும் அப்பால் தலைதூக்கி நிற்கும் ஆண்மகன். அவனாக நான் ஆயிரம் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். இன்னொருவன் அறமே உருவானவன். ஒவ்வொன்றிலும் என்றுமுள நெறியைத்தேடி அவ்வண்ணம் வாழ்பவன். அவனாகவும் நான் ஆயிரம் முறை வாழ்ந்திருக்கிறேன்."

"இன்னும் நால்வர்..." என்றான் பாண்டு. அன்னையிடம் தன் வீரவிளையாட்டுக்களைச் சொல்லும் சிறுவன் போல சற்றே மோவாயைத் தூக்கி திக்கித் திணறிய சொற்களுடன் "மூன்றாமவன் நிகரற்ற உடலாற்றல் கொண்டவன். மரங்களை நாற்றுக்களைப்போலப் பிடுங்குபவன். பாறைகளை வெறும் கைகளால் உடைப்பவன். கட்டற்ற காட்டுமனிதன். சூதும் சூழ்தலும் அறியாதவன். நான்காமவன்..." அவன்

முகம் சிவந்தது. பிருதை புன்னகைசெய்தாள்.

"நான்காமவன் இந்திரனுக்கு நிகரான காமம் கொண்டவன். என்றுமிறங்காததது அவன் கொடி. இந்த பாரதவர்ஷமெங்கும் அலைந்து அவன் மகளிரை அடைகிறான். காந்தாரத்தில் காமரூபத்தில் இமயத்தில் தெற்கே பாண்டியத்தில்... பலவகையான பேரழகியர். மஞ்சள்வண்ணத்தவர். செம்பொன்னிறத்தவர். மாந்தளிர் நிறத்தவர். நாகப்பழத்தின் நிறத்தவர்... அவனுக்கு காமம் நிறைவடைவதேயில்லை."

பிருதை வாய்பொத்திச் சிரித்தபோது அவள் முகமும் கழுத்தும் சிவந்தன. "என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றான் பாண்டு. "இயல்பான கனவுகள்தானே என்றுதான்" என்றாள் பிருதை. "ஆம், அவை இயல்பானவை. ஆனால் அவையும் எனக்குப் போதவில்லை. பெரும்புரவியறிஞனாக ஆகவேண்டும். மண்ணிலுள்ள அனைத்துப்புரவிகளையும் அறிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவேன். முக்காலத்தையும் அறியும் நூலறிஞனாக ஆகி பாரதவர்ஷத்தின் ஒவ்வொருவருக்கும் சென்றதும் வருவதும் பார்த்துக்குறிக்கவேண்டும் என நினைப்பேன்...”

ஆறுமுகம்" என்று பிருதை சிரித்தாள். "ஆம், என் இறைவடிவம் ஆறுமுகவேலனேதான். அஸ்தினபுரியில் என் அரண்மனைக்குள் எனக்காக சுப்ரமணியனின் சிறிய ஆலயமொன்றை அமைத்திருக்கிறேன்." பிருதை "சுப்ரமணியனுக்கு தேவியர் இருவர்" என்றாள். "ஆம், அதுவும்தான்" என்றான் பாண்டு. "காட்டுமகள் ஒருத்தி, அரசமகள் ஒருத்தி." பிருதை சிரித்துக்கொண்டு "இதையெல்லாம் உங்கள் அன்னையிடம் சொல்வீர்களா என்ன?" என்றாள்.”

இயற்கையின் ஐஸ்வர்யங்கள் பிரகடன படுவதால் மட்டுமே பயனுள்ளது என நினைப்பது போல மடமை பிறிதில்லை. உலக சிருஷ்டி வகைகள் என்பது லட்சம் என ஒரு புராண கணக்கு சொல்கிறது . அதில் மனிதனும் ஒன்று . அனைத்தையும் அவனது பார்வையில் வைக்க வேண்டிய நிர்பந்தம் பேரியிற்கைக்கு இல்லை . என்பதை மிக அற்புதமாக இரண்டு மூன்று விஷங்களாக சொல்கிறது.

ஆம்... பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் அவளும் ஒருத்தி என்கிறார்கள். வெண்பளிங்கு நிறம் கொண்டவள். அவள் கண்கள் மீன்கொத்தியின் குஞ்சுகள் போல மின்னும் நீலநிறம் கொண்டவை என்கிறார்கள்" என்றான் பாண்டு. ‘விழியிழந்தவருக்கு பேரழகி ஒருத்தி மனைவியாக வருவதில் ஒரு அழகிய நீதி உள்ளதென்று எனக்குப்படுகிறது."

"என்ன?" என்றாள் பிருதை. அவள் தன்னுள் சொற்களை தெரிவுசெய்யத்தொடங்கினாள். "அழகென்பது பார்க்கப்படுவதற்காக மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு மடமை. அது தன்னளவில் ஒரு முற்றிருப்பு அல்லவா? நான் ஓவியங்களை வரைந்ததும் என் அன்னை கேட்பாள், அவற்றை மனிதர்கள் பார்க்கவேண்டுமல்லவா என. ஏன் பார்க்கவேண்டும்? பார்ப்பதன் மூலம் ஓவியம் வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. சுவைகள் மண்ணில் முடிவில்லாது கிடக்கின்றன.”

கடலின் உப்பை நாக்கு உருவாக்கவில்லை. நாக்கால் அறியப்படாவிட்டாலும் உப்பின் முடிவின்மை அங்குதான் இருக்கும்.” “அவன் நிறுத்திக்கொண்டு "என்ன சொல்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஒரு பேரழகு கண்களால் தீண்டப்படவில்லை என்பதில் மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்று எனக்குத் தோன்றியது


-கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...