https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 2 மே, 2018

அடையாளமாதல் - 324 * எளிய சடங்கு *

ஶ்ரீ:


பதிவு : 324 / 494 / தேதி :- 02 மே  2018



* எளிய சடங்கு *





நெருக்கத்தின் விழைவு ” - 19
விபரீதக் கூட்டு -04.






கார் இன்ஜினில் பழுது ஏற்பட்டு சென்னை  திண்டிவனம் சாலையில் நின்று கொண்டிருந்த சண்முகத்தை சென்னையிலிருந்து புதுவை திரும்பிக்கொண்டிருந்த ஆனந்த பாஸ்கர்  கண்டது ஒரு தற்செயல் நிகழ்வு . ஆனால் அரசியலில் தற்செயல்என்கிற ஒன்று இருப்பதாக நம்பப்படுவதில்லை. அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்றும் , அதற்கு காரியத்தை கர்ப்பிப்பது , பல அடிப்படை கோட்பாடு . ஆனந்த பாஸ்கரன் அரசியலாளர் இல்லை எனவே அவருக்கு இத்தகைய கோட்பாடுகள் இருப்பதை யாரும் சொல்லியிருக்கவில்லை . சொல்லியிருந்தாலும் அவர் அதை ஏற்றுக்கொள்பவரல்லர் என்பது வேறு விஷயம் .

தனது ஆளுமையால் ஒரு ஸ்தானத்தை அடைந்து அங்கிருந்து பிறிதொரு விழைவின் பொருட்டு அரசியலுக்கு வந்தவர் . அவர்களை போன்றவர்களுக்கு நடைமுறை அரசியலை ஒருபோதும் கற்றுக்கொடுத்து விட முடியாது . அதற்கு முயற்சிப்பவன் வலிந்து ஆபத்தை வரவழைத்துக்கொள்பவன் . அவர்கள் நிகழ் அரசியலில் பெறும்பாலும் வெற்றி பெறுவதில்லை, அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ,நான் பிரதானமாக நினைப்பது , தங்களுக்கு மேம்பட்டு ஒருவரை அவர்களால் ஒருகாலமும் தங்கள் தலையால் சுமக்க இயலாது . அதனால் தங்களுக்கு தலைமை என்கிற ஒன்றை அவர்களால் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது

ஒரு கட்சி தலைமைக்கு நான் இதை கொடுத்தேன்  அது அதைக் கொடுத்தது என்கிற வர்த்தகத்தை தாண்டி, அவர்களால் யோசிக்க இயலுவதில்லை . தனக்கு மேலான ஒரு தலையையை கற்பித்துக்கொள்ளவே  அவர்களால் இயலாத போது , “தலைமை என்று ஒன்று உண்டு அதற்கு தலையை வைத்து கட்டுப்படவேண்டும்போன்ற கருதுகோள்கள் அவர்களுக்கு இளிவரலை ஏற்படுத்துபவை .

தங்களுக்கு உள்ள இயல்பான குணத்தை அல்லது தான் இப்படித்தான் என பிறிதெவரிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டி அதைத் தனது தனித்தன்மையாக தருக்கிக்கொள்ளும் வாய்ப்பை அவர்களால் தவிர்க்க இயலுவதில்லை . அப்படித்தான் சண்முகம் ரோட்டில் நின்று கொண்டிடுந்த போது, அவரை பார்த்தும் பார்க்காத்து போல கடந்து செல்ல இயலவில்லை

தான் ஒரு அணியில் இருப்பதும், அதன் எதிரணித் தலைமையுடன் இணைத்து பார்ககும் பிறிதெவருக்கும் ஒரு திடுக்கிடலை அது  ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை . உட்கட்சி அரசியலில் மாற்றுத் தரப்புடன் தொடர்பை பேணுவது தற்கொலைக்கு சமமானது என்கிற கருதுகோளை அவர் அறியாதது வியப்பில்லை . அப்படியே அறிந்திருந்தாலும் அது தன்னை போன்றவர்க்களுக்கானது அல்ல என்கிற எண்ணம் ஓங்கி நிற்பதை மாற்றிக்கொள்ள முடியாது

பிறர் அதை எடுத்து சொன்னாலும்  தங்களது இயல்பான ஆணவத்தால் அதற்கு கட்டுப்படாது அதை மீறத் தயங்க மாட்டார்கள் . சண்முகத்தை அவரது வீட்டில் கொண்டு தனது காரில் இறக்கி விடுவதை பார்க்கும் பலரும் , பலவிதமான யூகங்களை உருவாக்கி கொள்வார்கள் என்பதை பற்றி அவர் கவலைப்படவில்லை . அவரை பொருத்தவரை. யாராவது கேட்டால் அதற்கான பதிலை சொல்லிவிட்டால் போகிறது என்கிற எளிய கோட்பாட்டை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அரசியலில் எளிய பதிலை தரக்கூடிய எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை . “புரிந்து கொள்ள  படுகிறது”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்