https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 7 மே, 2018

அடையாளமாதல் - 328 * இயற்கையின் எதிர் விசை *

ஶ்ரீ:



பதிவு : 328 / 500 / தேதி :- 07 மே  2018

* இயற்கையின் எதிர் விசை *


நெருக்கத்தின் விழைவு ” - 23
விபரீதக் கூட்டு -04.




குடிமை சமூகமாக பிணைந்திருக்கும் கோடிக்கணக்கான மனிதர்களில் சிலர் தங்களின் தனித்தன்மையால் , ஊழால் அதிலிருந்து பிறித்து , பிறரிடமில்லாத துளி விஷம் என்னும் விசையால் , யாரும் நினையாத சில இலக்குகளை தங்களுக்கென கண்டடைகிறார்கள் . அந்த துளி விஷத்தாலே தங்களை பிரித்து அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள். இது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல , அனைத்து உயிர்களுக்கும் இது பொதுவில் வைக்கப்பட்டிருக்கிறது . ஒரு தாய் பண்றிக்கு பிறந்து பத்து குழவிகளுள் ஒன்று அடங்க மறுப்பது போல. பத்தில் ஒன்று முரண்படுவது இயற்கையின் நியதி போலும் . அது  விதையில் முளை துளி விஷயமாகவே இருக்கிறது , அதுவே முளைக்கும் விழைவை அந்த விதைக்கு கொடுக்கிறது . மனிதனுக்கு அந்த துளி விஷம் ஆணவம் என்கிற இருப்பை கொடுக்கிறது , அதன் பொருட்டே அவன் எல்லா உலக விஷயங்களிலும் முயங்குகிறான் . விசையின் அளவு நியதியை விஞ்சியதாக மாறும்போது விதை அழித்து விடுகிறது . சண்முகத்திற்கு 2001ல் நிகழ்ந்தது இதுதான் என நினைக்கிறேன் . அதன் பிறகு அவர் ஒருபோதும் தலைமை பொறுப்பிற்கு திரும்பவில்லை .

1981 தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தமிழகத்தை போலவே புதுவையிலும் செல்வாக்கிழந்து மரணித்துக் கொண்டிருந்தது . சட்டமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினர் என மிச்சப்பட்ட காலம் அது . 1970 களின் பிற்ப்பகுதியில் மத்தியில் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் நிர்வாக வசதிக்காக தமிழகத்துடன் புதுவையை இணைக்கலாம் என சொன்னபோது , அதை எதிர்த்து பெரிய கலவரமாக புதுவையில் வெடித்து . காங்கிரஸ் அதை பயன்படுத்திக்கொள்ள  மக்களை இணைத்து போரட்டம் நடத்தி இங்கு மீளவும் காங்கிரஸ் வேர்விட வைத்தது.

இணைப்பதில் என்ன தவறு என்ற அப்போதைய தமிழக முதல்வர் MG.ராமசந்திரன் கேட்ட குற்றத்திற்காக இருமுறை ஆட்சி அமைத்த அதிமுக , புதுவையிலிருந்து முற்றாக காணாமலாகியது . அதன் பின் இன்றளவும் சிறிய எண்ணிகையிலேதான் அவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்கள் . அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சண்முகத்தின் யுக்தி இங்கு காங்கிரஸிற்கு உயிர் நீர் வார்த்தது . 1981 பாரளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தபோது , புதுவை மட்டுமின்றி தமிழக கூட்டணிக்கும் சண்முகமே முழுமுதல் காரணமாக இருந்தார் என்பதை எனது முந்தய பதிவில் சொல்லி இருந்தேன்

கருணாநிதியுடனும் இந்திராகாந்தியுடனும் தொடர்ந்து பேசி அதை சாத்யமாக்கியவர் சண்முகம் . அந்த கூட்டணி அமையாது போனால் கருணாநிதிக்கு சாதகமான அரசியல் நிகழ்வுகள் அப்போது தமிழக்கத்தில் நிகழ்ந்திருக்காது . புதுவையில் சண்முகத்தின் நிலையும் அதுவே . 1983 இடையில் பல்வேறு  அரசியல் சிக்கல் தமிழகத்தை மையமாக கொண்ட வளர்ந்த போதுஅங்கே மின்னிய சிக்கல் புதுவையில் இடித்தது


ராஜ்யசபை தேர்தலுக்கு டாக்டர் ஆனந்தவேலுவை திமுக முன்னிலை படுத்தியதும் , தன்னை கலந்தாலோசித்து அது நடைபெறவில்லை என்கிற கோபத்தில் , தில்லி இந்திராகாந்தி ஒப்புதலுடன் கூட்டணிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியை கவிழ்த்தார் என்பதிலிருந்து இது புதுவையை கடந்து பிறிதேதோ சிக்கல் எழுந்திருக்க வேண்டும் என புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...