https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 17 மே, 2018

அடையாளமாதல் - 338

ஶ்ரீ:
பதிவு : 338 / 510 / தேதி :- 17 மே  2018

* தீரா வஞ்சம்*நெருக்கத்தின் விழைவு ” - 32
விபரீதக் கூட்டு -04.

முடிவெடுகப்பட்டு ஆட்சிலிருந்து வெளியேறுவது என்கிற தீர்மாணத்திற்கு வந்த பிறகு சண்முகத்திற்கு சவால்கள் துவங்கின , தில்லிக்கு புதுவைக்குமான இடைவெளி ,மற்றும் பல காரணங்களினால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என யாருக்கும் புரியவில்லை . அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தகவல்கள் சொல்லப்பட்டன . பொதுவில் அனைவருக்குமான, தகவல் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க போகிறது என்பதாக இருந்தது 

கட்சிக்குள் திரைமறைவில் சணமுகத்திற்கு எதிராக நடந்த சில விஷயங்களை கருதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அவர் நம்பியிராது திமுக மற்றும் பல கட்சியிலிருந்து ஆதரவு திரட்டப்பட்டது . எந்த வகையிலும் இதிலிருந்து தப்பிக்காத முறையில் திமுக பலவீனபடுத்த அவை தெளிவாக திட்டமிடப்பட்டிருந்தது . ஜோசப் மரியதாஸ் , சுப்ராய கவுண்டர், பழனி ராஜா ,சாலி மரைக்காயர் , யாணம் காமிச்செட்டி ,போன்ற ஆறுக்கும் அதிகமான முதல்வர் ராமச்சந்திரனுக்கு எதிரானவர்கள் அனைவரும் பல முனைகளால் குவிக்க பட்டார்கள் . குறித்த நாளில் ஆளுநரை சந்தித்து ஆதரவு வாபஸ் பெறப்பட்டு கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்தது

இன்று வரையில் புரிந்து கொள்ள முடியாத சர்ச்சைக் குறிய கோணம் , ஆட்சி மாற்ற முயற்சி வெற்றியடையாமல் போனதால் கவிழ்ந்ததா? அல்லது முதலில் இருந்தே சண்முகத்திற்கு ஆட்சி கலப்பை  மட்டும்தான் நோக்கமா கொண்டிருந்தாரா ? என்பதற்கு சாட்சி இல்லை . நான் அவரிடம், அது பற்றிய உரையாடலில் தனக்கு ஆட்சியை கலைப்பு மட்டுமே நோக்கம் என்றும் தன்னை இந்த இடத்திற்கு நகர்த்திய விசை ராஜ்யசபை தேர்தல் மட்டுமே என சொல்லியிருந்தார் . அரசியலாளர்கள் கூற்றை அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் , ஆனால்  டாக்டர் ஆனந்தவேலுவின் பெயர் அரசாங்க அதிகாரப்பூர்வ இதழில் வெளியிட்டதை தில்லியிலிருந்து கொண்டு ரத்து செய்த வேகம் போன்றவை அது உண்மையாக இருக்கும் வாய்ப்பையும் சொல்லுபவையே  . ஆனால் அதன் தொடர்ச்சியாக பின்னாளில்  நிகழ்ந்த சில விஷயங்களையும் கருத்தில் எடுத்து பார்த்தால் மட்டுமே அன்றைய உண்மைநிலையை மேலும் விரிவாக காட்டுபவை.

சண்முகத்தின் திட்டத்தை பிசிறில்லாமல் செய்து முடித்த துணை சபாநாயகர் ஜோசப் மரியதாஸ் , மற்றும் சுப்ராய கவுன்டர் முக்கிய பங்கு வகித்ததால் , அவர்களுக்கு 1985 தேர்தலி,காங்கிரஸ் சார்பில் சீட்டு கொடுக்கப்பட்டு அதில் ஜோசப் மரியதாஸ் அமைச்சராக பதவியில் அமர்ந்தார் . ரேணுகா அப்பாதுரை தில்லியில் தனக்கான லாபி உருவாக்க முயற்சித்தமையால் , அவரால் கட்சி ரீதியில் பெரிய சிக்கலை சந்தித்ததால் சண்முகம் ,ரேணுகா அப்பாதுரையை பின் ஒருபோதும் அரசியல் வேலிக்குள் அனுமதிக்கவில்லை

பின் அவர் அரசியலில் இருந்து நிரந்தரமாக காணாமலானார். சண்முகம் கோபம் அப்படிப்பட்டது . சுப்ராய கவுண்டர் சிக்கல் ஆனந்த பாஸ்கரன் விஷயத்தில் வெளிப்பட்ட காரணத்தை அவருக்கு விவரிக்கப்பட்டதை , நான் இதில் பிறிதொரு கோணத்தில் அவருக்கு சொல்ல முயற்சித்தேன் . சண்முகத்தை நம்பி வெளியேறி ஆடசியை கவிழக்க ஒத்துழைத்த அனைவரும் பின்னாளில் பதவிகளால் கௌரவிக்கப்பட்டனர் . சண்முகம் அவர்களுக்கு சொன்ன சொல்லிருக்காக ஆனந்த பாஸ்கர் கழட்டி விடப்பட்டு சுப்ராய கவுண்டர் சீட்டு பெற்று வெற்றி பெற்று சட்டசபைக்கு நுழைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக