https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 391 *சப்தமின்மையின் அரங்கு *

ஶ்ரீ:




பதிவு : 391 / 562 / தேதி : 20 ஆகஸ்ட்   2018

*சப்தமின்மையின் அரங்கு 



நெருக்கத்தின் விழைவு ” - 86
விபரீதக் கூட்டு -05 .




செயற்குழுவில் கலகம் விளைவிக்க சுகுமாரனை கிருஷ்ணமூர்த்தி தேர்ந்திருந்தார் . அது சரியான  முடிவல்ல என்பதை கூடுகையின் முடிவில் அவர் உணரக்கூடும் . அவனால் தான் நின்றிருக்கும் அந்த ஒருநிமிடம் கடந்து அடுத்து என்ன நிகழக்கூடும் என்பதை பார்கக்கூடிய சக்தியற்றவன், நுண்ணிய நோக்கு கொண்ட அரசியல் சூழ்தலுக்கு எக்காலுமும் பொருத்தமில்லாத , கூச்சலும் வன்முறை போன்றதொரு செயலை, ஒரு எல்லைவரை கொண்டு செல்ல முயற்சிப்பதும், பின் அதிலிருந்து மெல்ல கழலுபவனாகவே அவன் எப்போதும் இருந்திருக்கிறான் .

இது பொதுக்கூட்டமில்லை . மேடையை அல்லது கூடிய திரளைக் கலைத்தால் அது முடிந்து போக , நடப்பது செயற்குழு கூடுகை , அற்கென சில முறைமைகள் உள்ளதை அவர்கள் அரிய வாய்ப்பில்லை . அங்கு அனைத்தும் பதிவு செய்யப்படும் . கருத்தால் ஒருவரை ஒருவர் அங்கு வெல்லப்படுகிறார்கள் . கலகத்தினால் அல்ல . அவர்களுக்கு கலகம் இயல்வது எளிது  ,  தெரியாதது கூடுகையில் எப்படி சொல்லெடுத்து எதிர்பை வெல்வது என்பதுதான் . அந்த வழியிலேயே அவர்களை எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என முடிவிற்கு வந்த பிறகு, எப்போதென்று அறியாது இரவு உறங்கிப்போனேன்

இரவு எடுத்த முடிவு மனதில் ஏதோ ஒரு மூலையில் தங்கியிருக்க, காலை எழுந்து குளித்து பூஜை முடிக்கும் வரை எந்த இறுதி முடிவும் இல்லாதது போல சிந்தனையின் கடைசி அடுக்கில் ஒரு தீர்மானமும் இல்லை. அதை ஆகாயம் போன்று நிர்மலமாக  வைத்துக் கொண்டேன் . அது முடிவிலிக்கு மிக அருகில் இருப்பது, நிகழும் அந்த நிமிடம்வரை அதன் உட்பொருள் புரியாதது . ஊழின் கனிவிருந்தால் அந்த இறுதி கணத்தில் அதை பார்க்கும் வாய்ப்பை அது எனக்கு அருளலாம்.

பூஜை முடித்து நேராக வீட்டின் வரவேற்பு அறைக்குள் நுழைந்ததும், எனது அனுக்கர்களில் சிலர் மட்டும் என் வீட்டு வரவேற்பறையில் எனக்காக காத்திருப்பது பார்க்க முடிந்தது.. அந்த அறைக்குள் நான் நுழைந்த போது என் முயற்சியின்றி எனது அகம் இயல்பாக சில தீர்மானங்களுக்கு செயல் வடிவங்களை எடுத்துக்கொடுத்தது

மீளவும் இந்த கூடுகையை ஆலோசனை போலல்லாது அதை ஒரு செயல்திட்டம் போல , நாடககீய தருணம் போல என்னால் நடிக்கப்பட்டதாக இப்போது உணர்கிறேன். வழமையாக செய்யும் எதையும் செய்யாது தவிர்த்தேன் , அமர்ந்திருந்த அனைவரின் எழுந்து கொண்டு செய்த முறைமைகளுக்கு பதில் முறைமைகளை செய்யாது எனக்கு ஒருங்கியிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டதும் அதுவரை இருந்த கார்வை முற்றாக அடங்கியது .

கூட்டம் என்னை வேறுவிதமாக பார்பதை அவர்களின் உடல்மொழியிலிருந்து அறிய முடிந்து. தலைவர்கள் கூட்டத்தை தன்னிருப்பில் வைத்துக் கொள்வது இப்படித்தான் போலும். களைந்து கிடந்த மனதை மெல்ல தொகுத்துக் கொண்டேன் .அந்த தருணத்தில் தோன்றியதை ஒரு சிறிய உரை போல நிகழ்த்த முடிவு செய்தேன் . என்ன நிகழவேண்டும் என்கிற எனது எண்ணத்தை நான் வெளிப்படுத்த முடிவு செய்த அந்த நிமிடம் அங்கு எழுந்த நிசப்தம் என்னை அந்த முடிவிற்கு என்னை வரவைத்திருக்கலாம் . அமர்ந்து பேசாது எழுந்து நின்றதும் , கூட்டம் மேலும் கூர்க்கொண்டது
நண்பர்களே , நான் பலமுறை எனது எண்ணத்தில் மட்டுமே  கண்ட சில இப்போது நிகழும் வாய்ப்பிற்கு அருகில் நிற்கிறது. பாலன் தலைமையில் கட்சியின் பிரதான அமைப்பிற்குள் செல்லும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக இளைஞர் காங்கிரஸ் இழந்து போனது . அதன் பிறகு இளைஞர் காங்கிரஸின் சகாப்தம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக நான் முடிவுசெய்திருந்தேன். காரணம் நம்மை முன்னிறுத்தும் வாய்ப்பை நாம் முற்றாக இழந்து போனோம் , ஆகவே இனி அது நிகழாது என்றே நினைத்தேன் . ஆனால் காலம் மேலும் ஒரு வாய்ப்பை தந்திருக்கின்றது . இப்படி நிகழும் என நான் நினைக்கவில்லை

என்ன நடந்து நாம் இங்குவந்து நிற்கின்றோம் என்பதை பற்றி பேச இது நேரமில்லை . இன்று நடக்க இருக்கும் செயற்குழுவில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி மட்டுமே இங்கு பேச நினைக்கிறன். துரதிஷ்டவசமாக எவ்வளவு பெரிய வரலாற்று தருணத்தில்  நாம் நின்று கொண்டிருக்கிறோம் எனபதை உணரக்கூடிய என்னுடன் தோள் இணைந்து செய்யப்பட்ட யாரும் இந்த கூட்டத்தில் இல்லை எனபதைத் தவிர வருத்தம் தரக்கூடியது எனக்கு பிறிதொன்றில்லை . அவர்கள் இங்கு இல்லாததால்தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது

அவர்கள் இல்லாத குறை என் மகிழ்வை பூர்ணமாக அவர்களும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து போயிருக்கிறேன் அதைவிட , அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதால்தான் இந்த கூட்டமே இன்று நிகழ இருக்கிறது என்பது நகைமுரண் . காலமும் அரசியலும் எவ்வளவு கொடூரமானது என்பதை இத்தருணத்தில் உணர்கிறேன் . அதன் முன் நாம் ஒன்றுமில்லை . நமக்கும் வித்திட்டத்தை நாம் செய்யப்போகிறோம் . நான் தலைவரை இந்த கூட்டத்திற்கு அழைக்கவில்லை . அழைத்தாலும் அவர் வருகிற மனநிலையில் இல்லை

ஆக்கப்பூர்வமான திட்டமில்லாது குழு ஒன்று நம்மை எதிர்ப்பதை மட்டுமே அரசியலாக செய்து , தங்கள் இருப்பையும் வெளிக்காண்பிக்கிறார்கள் , அதனால் விளையும் பலன்களையும் உதிரிகளாக இருந்து கொண்டே அடைய நினைக்கிறார்கள் . அதுதான் நம் மீதான தாக்குதலாக நினைக்கிறன் . இந்த செயற்குழு கூட்டத்தினால் என்ன நன்மை விளையப்போகிறது எனபதை என்ன உங்களுக்கு சொல்லப்போவதில்லை, காரணம் அதைக் காணும் கண்களும் அனுபவமும் உங்களுக்கு இல்லை .

ஆனால் இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின்னல் நடக்க இருப்பது நமது கனவு அதை மட்டும் நினைவில் கொண்டு, அவரவர்களுக்கு கொடுத்த வேலைகளை ஒருங்கிணைத்து செய்யுங்கள் , என்ன செய்ய வேண்டும் என்பது ஏற்கனவே பலமுறை உங்களுக்கு சொல்லாப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து கேள்விகளை கேட்க நினைப்பவர்கள் தயவு செய்து இதிலிருந்து வெளியேறுங்கள் .கூட்டம் முடிந்தது . என சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறினேன்.

கூட்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏதும் பேசாது களைந்து சென்றனர் . காலை மணி 8:00 . இன்னும் இரண்டு மணி நேரத்தில் கூட்டம் நிகழ இருக்கிறது , மெல்ல ஒரு பதட்டம் எழுவதை தவிர்க்க இயவில்லை .என்னவெல்லாம் நடக்கூடும் என்பதைவிட அதை தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்கிற  ஆர்வம் அதில் மிகுந்திருந்ததை அறிய முடிந்தது.அதை கடந்து செல்வதே என் வரையிலான இலக்காக இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக