https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 383 * குறுக்கீடு *

ஶ்ரீ:




பதிவு : 383 / 564 / தேதி : 01 ஆகஸ்ட்   2018

குறுக்கீடு 


நெருக்கத்தின் விழைவு ” - 78
விபரீதக் கூட்டு -05 .




என்னை சமாதானம் செய்து அழைத்துவர சொல்லி வண்டியுடன் பாஸ்கரை தலைவர் அனுப்பியதும் மேற் கொண்டு அடம்பிடிப்பதில் அர்த்தமில்லாது போனது , ஏதாவது ஒரு காரணம் பற்றி நான் இறங்கி வந்துதான் ஆகவேண்டும் , இதை விட்டால் பிறிதொரு சந்தர்ப்பம் வாய்க்காது . நான் தலைவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றேன் . தலைவர் நான் நேற்றைய உரையாடலில் பாதியில் வெளியேறியது பெரிதாக நினைக்கவில்லை என்பதை அவர்  இன்று காலை  என்னிடம் பேசாத துவங்கிய முறையில் தெரிந்தது , எனக்குத்தான் எப்படி துவங்க வேண்டும் என புரியாது , அவர் பேச காத்திருந்தேன் .

தலைவர் தனது பாணியில்வல்சராஜை நியமித்தபோது நான் உன்னிடம் என்ன சொன்னேன் ,உள்ளூர் விவகாரங்கள் அவனுக்கு தெரியாது .சிக்கல்கள் ஏதாவது எழுந்தால் அதை சரி செய்வது உனது வேலை என்றேன்  . இப்போது நீ ஐந்து பொது செயலாராகக் இருப்பதாக எனக்கே சொல்கிறாய் . அமைப்பின் வழி முறை அது என்பதும் ,மூத்த பொதுச் செயளாலருக்கே அனைத்து அதிகாரமும், பதில் சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது . பொறுப்பிற்கு வரும் அனைவருக்கும் எந்த மாதிரியான சிக்கல்கள் வருமோ அது உனக்குமானது . அதில் வருத்தமடைவதும் , கோபம் கொள்வதில் வழியாக , அதை ஏற்படுத்துபவர்கள் வெற்றி பெற்று மேலும் ஊக்கமடைகிறார்கள் . அதைத்தான் நீ செய்ய முயலுகிறாய் , அது தெரியாதா உனக்கு" என்றார்

அவர் சொல்லத் துவங்கியதும் நான் மிக எச்சரிக்கையாக வார்த்தைகளை அடுக்க முயன்றேன் . “நான் செயல்பட முடியாதபடி கடந்த மூன்று வருடங்களாக ஏற்படுத்தப்பட்ட தடைகள் என்னை முற்றாக முடக்கி விட்டன . நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் யாரும் என்னுடன் தொடர்பற்றவர்கள், அவர்கள் உங்கள் கமிட்டியில் இடம்பெற்றவர்களின் சிபாரிசால் பதவிக்கு வந்தவர்கள் . அவர்கள் யாருக்கும் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிர்பந்தமில்லைஒரு தலைவருக்கு கீழ் இயங்குகிறோம் அதன் அடிப்படையிலாவது ஒருங்கிணையும் எண்ணமும் அற்றவர்கள் . பதவியை அலங்காரமாக நினைக்கிறார்கள் . அவர்களைக் கொண்டு என்னால் எந்தவித பணியையும் செய்ய இயலவில்லை . நான்  தனிப்பட்டு செயல்படுவது  இன்னும் சிக்கலை அதிகப்படுத்தும் . அமைப்பை விஸ்தரிப்பதுதான் இதற்கான தீர்வு. நான் வல்சராஜிடம்  இதுபற்றி பேசிவிட்டேன். அவர் எந்த முடிவும் எடுக்கும் நிலையில் இல்லை. நீங்கள் கூட நான் கேட்ட ஏதையும் செய்யவில்லை”.

இப்போது எழுந்துள்ள சிக்கலுக்கு நான் மட்டுமே காரணம் என்றால் இப்போது உங்களுக்கு ஒரு பலியாடு வேண்டும் , சரி அது நானாக இருந்து விட்டு போகிறேன்என்றதும் ,தலைவர் அமைதியாக என்னை உறுத்துப் பார்த்தார் . “தேவை இல்லாத வார்த்தைகளை சொல்லுகிறாய் , நான் இதற்கு பதில் சொல்லப்போவதில்லை . அமைப்பு முழுமையாக செயல்பட நியமிக்கப்படாத சம்பந்தமில்லாதவர்களை கூட்டினால் அது சரியாக வராது எனபது மட்டுமல்ல , நமக்கே விபரீதமாக முடியும் என்பது உனக்கு தெரியாதா? . சரி நீ முடிவெடுத்துவிட்டாய் , இனி அதைப்பற்றி பேச ஒன்றுமில்லைஎன்றார்

நான் அவரிடம்நான் அமைப்பின் விதிக்கு முரணாக எதுவும் செய்யவில்லை . நீங்கள் சொல்லும் அனைத்து சிக்கலையும் புரிந்து கொண்டுதான் நான் இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன் எனது எண்ணம் என்ன நான் இதை எப்படி செய்யப்போகிறேன் என்பது பற்றி கேட்காமல்  நீங்கள் பேசிக்கொண்டே சென்றால் நான் என்னதான் செய்வதுஎன்றதும் ,சரி சொல் என்பதுபோல அவர் அமைதியானார். சிலருக்கு பாலன் நிமித்தமாக ஏற்பட்ட கசப்பு அவர் வெளியேறிய பிறகும் என்மீது நீடிக்கிறது .

பாலன் வெளியேறிய பின்பு மாநில கமிட்டி மாற்றி அமைக்கப்பட்டாலும்தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பு இன்னும் மாற்றமடையவில்லை . அவர்கள் இன்னும் அந்த பதவிகளில் நீடிக்கிறார்கள் , பாலனுடன் வெளியேராமல் இன்னுமும் காங்கிரஸுக்குள்ளேதான் இருக்கிறார்கள். என்பது உங்களுக்கு மட்டுமன்றி பத்திரிக்கைக்கும் அதுதான் பதில் . இப்போது பாலன் மட்டுமே தனித்து சென்றிருக்கிறார் , ஆனால் அமைப்பு இன்னும் உங்கள் பின்னால்தான் இருக்கிறது என காட்டுவதறகு இதைவிட நமக்கு நல்ல சந்தர்ப்பமில்லை. அவர்களை வைத்து இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என நான் மூன்று வருடமாக முயற்சித்தேன் .அனைத்து தரப்பும் அதை நடத்தக்கூடாது என்கிற எண்ணத்தில்  ஒன்றாக செயல்படுகிறார்கள். இளைஞர் அமைப்பை சேராத பலர் அதன் விவகாரங்களை தலையிடுகிறார்கள் . அவர்கள் யார் என நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிதில்லை 

என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கையில்லை, அல்லது வேறு ஏதோ காரணம், அவர்களுக்கான களத்தை என்னால் உருவாக்கிக் கொடுக்க முடியவில்லை , நீங்கள் எனக்கான அங்கீகாரத்தை கொடுக்காத காரணத்தால் தான் இவ்வளவு சிக்கலும் . நீங்கள் இதுவரை கட்சி ரீதியாக சில போராட்டங்களை நடத்த சொன்னபோது அவற்றை நீங்கள் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக நடத்தமுடிந்தது , அதற்கு வந்தவர்கள் காசு கொடுத்து அழைத்து வந்தவர்கள் இல்லை எனபது உங்களுக்கே தெரியும் .

அவர்கள்  யார் என்று நீங்கள் என்னிடம் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. இப்போது சொல்லுகிறேன் அவர்கள் மாவட்ட , தொகுதி மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் , இன்று வரை அமைப்பிலிருக்கும் நிர்வாகிகள். பாலன் அமைத்த அந்த கமிட்டி  இன்றுவரை நீடிக்கிறது. அதை சொல்ல எனக்கு சந்தர்ப்பமில்லை . காரணம் பாலன் என்கிற சொல்லே உங்களுக்கு கெட்டவார்த்தை

இப்போது இந்த செயற்குழு  கூட்டத்தை  நீங்கள் அங்கீகரித்தால் அதுவே அனைத்து நிர்வாகமாக  மாறிவிடும்என்றேன் . “அவர்கள் பாலன் ஆட்கள் கட்சிக்கு  கட்டுப்பட்டு  செயல்படுவார்கள்  என்பதற்கு   என்ன உத்தரவாதம் ?” என்றார் . நான்தலைவரே அரசியல்  உத்ரவாதத்தின் அடிப்படையில் செய்படுவதல்ல , கிடைக்கும் இடைவெளியில் ஒருவன் அதில் தன்னை நிறுவிக்கொள்ளும் போதே அடுத்த இலக்க்கையும் கண்டைந்து விட வேண்டும்இது நீங்கள் சொல்லிக்கொடுத்தது தான் என்றேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்