https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 8 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 386 * விழைவு, உதவி, ஆபத்து *

ஶ்ரீ:
பதிவு : 386 / 567 / தேதி : 08 ஆகஸ்ட்   2018

* விழைவு, உதவி, ஆபத்து 


நெருக்கத்தின் விழைவு ” - 81
விபரீதக் கூட்டு -05 .

பாலனுடன் இளைஞர் கங்கிரசை நிர்வகித்தவர்களில் பெரும்பாலானவர்கள் சண்முகத்திற்கு எதிரான மனநிலையில் இருந்தவர்கள் , இப்போது  அதே மனப்பான்மை எனக்குமானது . இப்போது ஆட்டத்தை நிறுத்தி விளையாட அனுமதிப்பதிப்பதால் நான் அவர்களுடன் தனிப்பட்ட எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ள விழையவில்லை.ஒரு சில இடத்தில் எனது அணுக்கர்கள் எனது தெரியாமல் அவர்கள் ஆதரவு வேண்டி தொடர்பு கொண்டனர் . அது எனக்கு தெரியவந்த போது நான் அவர்களை கடிந்து கொண்டேன் . அவர்கள் இயற்றுவதன் பின் விளைவுகளை அறியாத எளியவர்கள் , எனது கடுமையா சொற்களால் மானவருத்தமுற்றார்கள்

நான் யாரையும் எக்காரணம் கொண்டும் சமாதானம் செய்வதில் காலத்தை கடத்த விரும்பவில்லை , ஓரிரு இடங்களில் எனது அனுக்கர்கள் செய்த பிறழ்வு ,எனது எதிர்நிலையாளர்களை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது .முதலில் இவை சிக்கலை அதிகப்படுத்துவதாக இருந்தாலும் அதுவும் ஒருவகையில் நன்மைக்கு என்றே நினைத்தேன் . பழைய நிர்வாகிகள் தங்களின் லாபம் கருதி அவர்களுடன் பேரத்தில் ஈடுபட முயற்சிப்பார்கள் . அதுபற்றி ஒரு சில தூது எனக்கும் வந்தபொழுதுதான் , பழைய நிர்வாகிகளை ஒழுங்கு செய்ய எதிர்நிலையாளர்கள் சிலர் தீவிரமாக முயற்சிப்பதை அறிந்து கொள்ள முடிந்தது . நான் அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டேன் . அவர்களை அந்த தளத்தில் தொடர்ந்து கட்டுண்டு கிடக்க, மேலும் சில விஷயங்களை ஊக்கப்படுத்தி விட்டு ,அதற்கு முற்றும் புதிதான வேறு ஒரு தளத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்

பாலன் அமைத்த கமிட்டியின்  உறுப்பினர்கள் சிலர் நேரடியாக ஆதரவு தெரிவித்தபோதும் , நிலைமை நம்பமுடியாமையை காட்டியது. எனக்கு முற்றும் புதுமுகங்களை இந்த நேரத்தில் உட்கொண்டுவருவது நல்ல வழிமுறையாகத் தோன்றியது. ஆனால் எந்த அடிப்படையில் அவர்களை உள்ளே கொண்டுவருவது என்கிற சிக்கல் எழுந்தது. தொகுதிக் கமிட்டி அமைக்க அவர்கள் தேவை என்பதால்விசேஷ அழைப்பார்கள்என அவர்களை கொண்டுவர இயலும் . அவர்களால் தீரமாணங்களின் மீது நடைபெரும் விவாதங்களில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் அது நுட்பமான சிக்கல் அதை குரலுயர்த்தி பேசுபவர்களின் கவனத்தை ஈர்க்காது. அவர்கள் யாரும் எனது ஆதரவாளர்கள் அல்ல . அவர்கள் யாவரும் அந்தந்த தொகுதியில் கடந்த தேர்தலின் போது பல காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வேலை செய்தவர்கள் . அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேற்ற யாரும் துணியமட்டர்கள். கட்சி நிகழ்த்திய பல செயல்பாடுகளுக்கு அவர்கள் தங்கள் பங்களிப்பை பல முறை தந்தவர்கள் , அவர்களை ஒருங்கிணைத்ததால் கிடைத்த அங்கீகாரத்தினால் என்மீது மரியாதை கொண்டிருந்தார்கள். அந்த  இளைஞர்களை இப்போது தொட துவங்கினேன் , தொகுதி ஒன்றுக்கு ஐவர் என்பது கணக்கு

அவர்களில் பெரும்பான்மையோர் அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்கள் . கட்சி ரீதியில் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டவர்கள் . ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு சேகரிப்பதை தாண்டி கட்சிக்குள் அவர் இயலாதவர்கள் .மிக சிறிய எண்ணிக்கை இருப்பவர்கள் அவர்களுக்கு அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்  வெற்றி பெற்றாலே கூட சிறு குறுங்குழுவாக தேங்கி விடுபவர்கள் . தங்களின் அங்கீகரத்திற்கு ஏங்குபவர்கள். ஆனால் வேட்பாளர்களை அல்லது தேர்தலில்  வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களை தண்டி கட்சிக்குள் வர முடியாதவர்கள் , எனெனில் அவர்களுக்கு இங்கு இடமில்லை.

இது நீண்டகாலமாக இருக்கும் நடைமுறைச் சிக்கல். அவர்களால் கட்சியை விட்டு வெளியேற முடியது . வெளியேறி சென்ற சிலர் பிறிதெப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கட்சிக்கு திரும்புபவர்களாகவே இருந்தார்கள் . இவர்கள் மிக சிறிய குழு என்பதால் . எங்கும் கவனிக்கப்படாதவர்கள் . நான் பல வருடங்களாக அவர்களை அறிவேன் சிலருக்கு அவர்களை நான் அறிவேன் என்பது கூட தெரியாது . மிக எளியவர்கள் பரிதாபத்திறகு உரியவர்கள் . நான் பலமுறை நிகழ்த்திய சிறு சிறு கூடுகைகளுக்கு வந்ததால், அவர்களை மையப்படுத்துயே எனது கூடுகைகளை முன்னெடுத்தேன். அப்போது அது நல்ல பலன்களையே தந்தது . அவர்களை இப்போது கட்சியின் நிர்வாகப் பொறுப்பில் கொண்டுவர  திட்டமிட்டேன்

அதற்கு எதிர்பு முதலில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து  கிளம்பும் என்பதுதான் வினோதம் . அவர்கள் கட்சிக்குள் பொறுப்புப்பில் வருவது தங்களுக்கு ஆபத்தானதாக நினைப்பார்கள் . காரணம் பதவிக்கு வந்துவிட்ட பிறகு அவர்களை கட்டுப்படுத்துவது நடவாது . அவர்களை உதிரிகளாக வைத்திருப்பது தங்கள் அரசியலுக்கு உகந்தது என நினைப்பதால் அவர்களுக்கு இதுநாள் வரை எந்த அங்கீகாரமும் கிடைக்காது பார்த்துக்கொண்டார்கள் . இப்பொது அவர்களை கட்சி பொறுப்பில் நான் கொண்டுவர முயற்சித்தால் எனது நடவடிக்கைகளை அவரகளால் வெளிப்படையாக எதிர்க முடியாது என்பதால் கட்சிக்குள் எனது எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை  கூடிவிடும் . மேலும் ஒரு வகையில் அவர்கள் நினைப்பது சரியானதும் கூட , அங்கீகரிக்கப்பட்டவர்ள் கிடைத்த பதவிகளை கொண்டு வேறு தொடர்புகளை உருவாக்கி கொண்டு முன்னகர்ந்து சென்று விட்டால் . அவர்களின் இடத்திற்கு பிறிதொருவரை தயாரித்து கொண்டு வருவது என்பது நடவாது . நான் இந்த சிக்கலின் உட்கூற்றை மிகத்தெளிவாக புரிந்திருந்தேன். இது ஒருநாள் எனக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் . ஆனால் இப்போது எனக்கு வேறு வழிகளில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...