https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

அடையாளமாதல் - 384 * கடைசீ வாய்ப்பு *

ஶ்ரீ:




பதிவு : 384 / 565 / தேதி : 02 ஆகஸ்ட்   2018

* கடைசீ வாய்ப்பு  * 


நெருக்கத்தின் விழைவு ” - 80
விபரீதக் கூட்டு -05 .




கோபம் எவரையும் நிதானிக்க செய்வதில்லை . அரசியல் உத்தரவாதம் ஒரு சாதாரண தொண்டனிடம் யார் கேட்க இயலும் . அவன் திரள்களில் ஒரு துளி தனித்த அடையாளமில்லை ஆனால் அவனை மையம் கொண்டே அனைத்தும் இயங்குகிறது  .  “நான் அமைப்பை தயார் செய்து பல வருடங்கள் ஆகிறது , ஒரு சூழலுக்கு காத்திருந்தேன் அது இது தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை . நான் இதை எந்த சிக்கலும் இன்றி செய்து முடிப்பேன்என்றதும் , தலைவர் எங்கு நடத்த போகிறாய் என்றார் . “காங்கிரஸ் அலுவலகத்தில்தான்என்றேன் . தலைவர் சட்டென உஷ்ணமானார். “அது முடியாது நீஏதாவதொரு கல்யாண மண்டபத்தில் நிகழ்த்திக்கொள் . சிறு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதுவே எல்லாருக்கும் வினையாக  முடியும்என்றார்நான் அமைதியாகஇது நடப்போவதாக இருந்தால் கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில்தான் நிகழும் , வேறு எங்கு நிகழ்ந்தாலும் நான் நினைக்கும் கட்டுப்பாடும் அதில் கலந்து கொள்பவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காது . நீங்கள் தலைமை ஏற்கும் போது இது அனைத்தும் நடந்துவிடும் என்றேன்

தலைவர் கடும் கோபத்தில் ஏதும் பேசாது சமைந்திருந்தார். அப்போது உள்நுழைந்த  பாஸ்கர்அரி இது விபரீதமான விளையாட்டுஎன்று எதோ சொல்லவர , நான் கடுமையாக அவரிடம்நீங்க பேசவேண்டாம் , இது  முதலில் என்னை பலிகொண்ட பிறகே பிறர்நோக்கி நகரும் , உங்களுக்கு என்னால் புரியவைக்க முடியாது , தலைவருக்கு புரியும் , அவர் சொல்லட்டும்என்றதும் பாஸ்கர் அமைதியானார் . எனது கடுமையான நிலைப்பாடு, தலைவருக்கு நான் இதில் என்ன செய்ய நினைக்கிறேன் எனபது புரிந்து போனது .இருப்பினும் நான் நிர்பந்த அரசியலில் அவரை கொண்டுவந்து நிற்கவைத்து விட்டேன் என்கிற கோபம் அவரை சில நிமிடம் அமைதி கொள்ள வைத்தது என நினைக்கிறேன் . நான்  எந்த வகையிலும் எனது முடிவை மாற்றும் மனநிலையில் இல்லை எனபதை தெளிவாக புரிந்து கொண்டதும் , அவரது மனம் வேறு கணக்குகளை போடத்துவங்கியது அதன் வழியாக என்னை பின்வாங்க வைக்க முயறசித்தார்

சரி நீ சொன்ன அந்த திட்டம் எனக்கு சரி என்றாலும் காங்கிரெஸ் அலுவலகம் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்து, கட்சி அலுவலகத்தில் நடத்துவதன் மூலம் எல்லாருக்கும் நீ ஒரு செய்தி சொல்ல நினைக்கிறாய் , சரி நடத்திக்கொள் . இது உன் ஆட்டமாக மட்டுமே இருக்கும் நான் கலந்துகொள்வதாக இல்லை . அதற்கு அவசியமும் இல்லை என்பது உனக்கே தெரியும் என்றார் . ஒருகணம் நான் திகைத்துப்போனேன் ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது "சரி" என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன். இனி அங்கு நின்றுகொண்டு அவரையும் அதில் நுழைக்க முயற்சிக்கையில் அனைத்தும் தகர்ந்து போகும் .  நான் பாதியில் விலக முடியாது , தலைவருகும் அதுதான் நிலை , பின் ஏன் இந்த முடிவிற்கு வந்தார் என தெரியவில்லை . தலைவர் கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற செய்தி இன்று மாலைக்குள் அனைவருக்கும் தெரிந்து விடும்.

அவர் நினைத்ததை செய்ய நிர்பந்திக்க , என்னை பணியவைக்க அவர் ஆடும் ஆட்டமாக இதுவாக  இருக்கலாம் . ஆனால் அது சாதாரண கணக்கு , அதைத்தான் தலைவர் செய்ய நினைப்பதாக நான் எண்ணவில்லை . அதைத் தாண்டி வேறேதோ நினைக்கிறார் . என்னால் அதை இப்போது நினைத்துப் பார்கக முடியவில்லை . நான் இதை கடந்தாக வேண்டும் . எனக்கு இதுவாராது வந்த சந்தர்பம்இதை எக்காரணம் கொண்டும் நழுவி செல்ல அனுமதிக்க முடியாது  . இரண்டாவது தலைவரை வைத்துதான் நான் பலம் பெற முடியும் என்கிற நிலையிலிருந்து இப்போது நான் வெளிவருகிற பிறிதொரு சந்தர்ப்பம்  . 

பாலன் காலம் கொண்டே இளைஞர் அமைப்பில் நிர்வாக சமன்பாடுகளை மிக சரியாக கையாண்டிருக்கிறேன் . நான் நிகழ்த்திய சிறு கூடுகைகள் மற்றும் பழைய நிர்வாகிகளுக்குபிரதேச காங்கிரஸில் நாமும் ஒரு அங்கம் அதில் திறமை இருந்தால் வளர இயலும்என பல கூட்டத்தின் வழியாக நான் சொன்ன அந்த தன்னம்பிக்கை வார்த்தைகளை இப்போது நானே அதை  நிரூபிக்கும் சந்தர்ப்பம் . அமைப்பு இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது என்பதையும் ,அதை மாநில அளவில் என்னால் இயக்க இயலும் என்பதை வெளிக்காட்ட ஒரு அற்புதமான வாய்ப்பு   . இந்தப் பயணம் பற்றிய தெளிவான தீர்க்கமான முடிவை நான் தில்லியில் அந்த இரவே எடுத்துவிட்டேன் . ஆனால் பாதை புரியாமலிருந்தது , இப்போது அது தெளிந்து விட்டதால் நான் குழப்பமில்லாது வீடு வந்து சேர்ந்தேன்

இனி தலைவர் நினைத்தாலும் கூட்டம் நடைபெறுவதை தடுக்க முடியாது . ஆனால் அவர் இதை நான் அழைப்பிதழில் கட்சி அலுவலகத்தில் நடத்த இருப்பதாக வெளியிட்ட போதே தடுத்தருக்க முடியும் , ஏன் செய்யவில்லை என தெரியவில்லை ,  ஆனால் தலைவர் கலந்துகொண்டால் இந்த ஒரே கூட்டம் போதும் , நான் நினைத்ததை அத்தனையும் செய்து முடித்து விடுவேன் , ஆனால் அது இனி நடவாது என்பது  வருத்தம் தருவதாக இருந்தது.

இன்னும் இரண்டு நாளில் நிகழவிருக்கிற மாநில செயற்குழு கூடுகை பற்றிய திட்டமிடலுக்கு எனது அணுக்கர்களை அழைத்திருந்தேன் . அன்று மாலை வந்த அனைவரிடமும்நான் சொல்லவேண்டியதை பற்றி முன்பே முடிவுசெய்ததுதான் , இது அவர்களுடன்  நான் கலந்துரையாடுவதற்கல்ல , தெளிவாக திட்டமிட்டதை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் வகுப்பது. யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியதாக அது இருக்க வேண்டும் . அன்று மாலை எனது வீட்டில் கூடிய கூட்டத்தில்  அனைவருடனும் அடுத்து நிகழ வேண்டியதை சொன்னேன் . பழைய ஆவணங்களில் இருந்த மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டேன் , பெரும்பாலும் அனைத்து இடத்திலிருந்தும் ஒரே கேள்வியைத்தான் எதிர் கொண்டேன்.

ஏன் இவ்வளவு நாள் கூட்டவில்லை? இப்போது ஏன்? . சண்முகத்தை நம்பி அரசியல் செய்வது வீண் என்கிற கோபமும் ,நம்பிக்கையின்மையும் மட்டுமே அந்த கேள்விகளில்  இருந்து , இன்னும் எத்தனையோ வைகையில் என் முன் கேட்கப்பட்ட கேள்விகளிலும் அனைத்திற்குமான எனது ஒரே பதில்எதையும் இப்போதுபேசுவதற்கில்லை . இது ஒரு வாய்ப்பு அவ்வளவு மட்டுமே . இந்த கூடுகைக்கு பிறகு அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் தருகிறேன் . நம்பிக்கை உள்ளவர்கள் என்னை பின் தொடருங்கள்என்பதாக இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்