ஶ்ரீ:
பதிவு : 392 / 563 / தேதி : 23 ஆகஸ்ட் 2018
* நோக்கின் கவனம் *
“ நெருக்கத்தின் விழைவு ” - 87
அரசியலில் எதிர்பின்மை ஆக்கபூர்வமாக செயல்பட விடாது . எதிர்ப்பும் அதை கடந்து செல்லும் உத்வேகமுமே எதையும் உயிர்ப்புடன் வைத்திருக்கவல்லது . தங்கள் இருப்பை வெளிக்காண்பித்துக் கொள்ள சிலர் செய்யும் சில்லரை அரசியலில் ஈடுபட்டு , அதனால் விளையும் பலன்களை தனித்து அடைய நினைக்கிறார்கள் . அது அரசியலின் ஆன்மாவின் மீதான தாக்குதலாக நினைக்கிறன் . அதை வெளிப்படையாக அறிவித்து எதிர் கொள்ள வாய்த்த இந்த சந்தர்ப்பத்தினால் என்ன நன்மை விளையும் என்பதை உணர அனுபவம் தேவையாகிறது. கேள்விகளை கேட்க நினைக்கும் அனுக்கர்களை இதிலிருந்து வெளியேற சொன்னது அவர்களுக்கு திடுக்கிடலை ஏற்படுத்தியது .
அவர்கள் இது நாள் வரை கொண்ட அனுக்கம் சிதைந்து போகலாம் ஆனால் அது பொதுவில் சொன்னது, தனிப்பட்ட ஒருவருக்கானதல்ல. அச்சொற்களினால் நான் அனைவரையும் சம தூரத்திற்கு தள்ளி வைத்தேன் . அவர்கள் தங்கள் முயற்சியால் மீளவும் என்னை புதிய கோணத்தில் என்னை அனுகி அனுக்கம் கொள்ள இது வழி வகுக்கும். பல காரணங்களை கொண்டு என்னால் சிறப்பாக இயங்க முடியாமை எனக்குள் அமைதியின்மை ஏற்படுத்தியிருந்தது. நீண்ட காலமாக செயல்படாத தன்மையால் எவருக்கும் தன் தலைமைமீது அலட்சியம் உருவாகியிருப்பதை தவிற்க இயலாது . இப்போது அது உடைந்து போகும். நான் மீளவும் என் பாணி செயல்முறைகளுக்குள் வந்து சேர்ந்துவிட்டேன் என்பதற்கான அறிவிப்பாக அதை சொன்னேன் . அரசியலை முதன்மையாக எண்ணுபவர்களுக்கு அதுவே அவர்களை பிறிதொரு தளத்திலிருந்து தங்கள் அரசியலை துவக்க வாய்ப்பளிக்கும் .
பேச்சொலி முற்றாக ஒழிந்ததை அடுத்து , என்னுடன் எப்போதும் இருக்கு சிலரைத் தவிர அனைவரும் கட்சி அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று விட்டார்கள் . கூட்டம் துவங்குவதக்கு முன்பாக தலைவரை சென்ற பார்க்கலாமா வேண்டமா என்கிற சிறு குழப்பம் எழுந்து, பின் அதிலிருந்து மீண்டு , அவரை பார்த்து பின் அலுவலகம் செல்வதுதான் இயல்பாக இருக்கும் . எனக்கு கிடைத்த செய்திகளை விட இன்னும் நுட்பமாக அவரிடம் செய்திகள் இருக்கும் .
அவர் ஏதும் அறியாதவர் போல இருப்பதும் ,சிக்கலான ஏதாவது ஒன்றை சொன்ன மறுகணம் அதற்கு தகுந்த பதிலை தயாராக வைத்திருப்பதுடன் , புதிய தகவல்களையும் கொடுப்பதையும் , பலமுறை அனுபவத்தில் கண்டதுதான் . எனக்கான வாய்ப்புகள் பெரிய வலைப்பின்னலை போன்றது. பலர் நிகழ்த்தும் செயல்களின் ்வநிலைப்பாட்டை அடைந்தவை அவற்றை நிகழ்வுகளாக, சாதகமாக வடித்துக்கொடுப்பது அது . குறுக்கும் நெடுக்குமாக பல ஊடுபாவுகளுடன் பல கண்ணிகளை உடையது , ஒருவன் அத்தனை வழிகளாக தனக்கான வாய்ப்புக்களை கண்டுகொள்வது மனிதனால் இயலாதது , அதை முன்வைத்தால் அவனது கண்ணுக்கு புலப்படாத வேறு சில வழிகளை அவர் சொல்ல பார்த்திருக்கிறேன் .
மேலும் இப்போதுதே எனது எல்லைகளை தாண்டிக் கொண்டிருக்கிறேன் என ஆழ்மனது எச்சரித்துக் கொண்டு இருக்கிறது . மேலதிகமாக ஏதும் செய்யதிருப்பதே இப்போதைய பலனை கெடுக்காதிருக்கும் . விஜயகுமார் மற்றும் பெருமாள் தவிர மற்ற அனைவரையும் கட்சி அலுவலகத்திற்கு போகாசிச்சொல்லி விட்டு நான் தலைவரை பார்க்க கிளம்பினேன்.
தன்னால் இயல்வதை எண்ணம்போல் நிகழ்த்திவிட்டு இயலாததை , விருப்பம் விரும்பாமையிலிருந்து வேறுபட்டதாக புரிந்து கொள்ள முயற்சிப்பது நம்மை நாமே ஏமாற்றுவது போல . ஒரு செய்கை மேலுள்ளதை விருப்பாக ஏற்கப்படுவது ஒன்றே நம்மால் எப்போதும் அதன் மீது தொடர்ச்சியாக ஈடுபடவைப்பது . அத்துடன் முரண்பட்டு ஓரிருமுறை செயலாற்றலாம் ஆனால் தொடர்ச்சியாக அதையே செய்ப்பவனை அது எப்போதும் புறந்தள்ளியுள்ளது.
காலை மணி 8:15 தலைவர் தனது அறையில் தனித்து அமர்ந்து அன்றைய நாளிதழிழ் பார்த்துக்கொண்டிருந்தார் , என்னைப பார்த்ததும் , அமைதியாக அருகிலிருந்த நாற்காலியை கைகாட்டினார் . நான் அமர்ந்ததும் , வல்சராஜ் புதுவைக்கு வராததைப்பற்றி ஏதாவது கேட்டால் என்ன சொல்வது என்கிற நினைவு எழுந்து சற்று பதட்டத்தை கொடுத்தாலும் ,பிறிதொன்று அது உன் பிரச்சனை இல்லை அமைதியாக இரு என்றது , ஆம் அது எனது சிக்கலல்ல .
எப்படியும் வல்சராஜ் தலைவருடன் தொலைபேசியில் தான் வராததற்கு ஏதாவது காரணம் சொல்லி இருப்பார். தலைவர் அதைப்பற்றிய ஏதும் கேட்காதது . வல்சராஜ் வராதது அவருக்கு முன்னமே தெரிந்திருந்ததைக் காட்டியது . தலைவரின் அமைதி வல்சராஜ் என்ன சொல்லியிருப்பார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை என்னுள் தூண்டியது . இங்கு வேண்டாம் , கூட்டம் முடிந்த பிறகு தானாக அது தெரிய வரும் . அவர் தனது விருப்பமின்மையை தலைவரிடம் வெளிப்படையாக வைத்திருந்தால் தலைவருக்கு அவரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது போயிடுக்கும் .
அநேகமா இதை செயற்குழு கூட்டத்திற்கான அழைப்பை என்னை விடுக்க சொல்லும் முன்னமே முடிவாகியிருக்க வேண்டும் . என்று தோன்றியதும் , “சே என்ன ஒரு மடத்தனம் , இதை எப்படி உணராது போனேன்” . என்னை நொந்து கொள்வதை தவிர இப்போது வேறு வழி இல்லை . இப்போதாவது புரிந்ததே என்கிற நிம்மதி மெல்ல இறங்க மனதை லகுவாக வைத்துக் கொண்டேன் , இனி வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக வைக்கவேண்டும் என எனக்குள் சொல்லிக்கொண்டேன் . தலைவர் “எல்லாருக்கும் அழைப்பு சென்று விட்டதா” என்றார் நான் மௌனமாக தலை அசைத்தேன். “கூடுகை முறைமையை எங்கும் மீறாதே . இந்த கட்டத்திற்கு எந்த நம்பிக்கையில் நீ வந்திருக்கிறாய் என்று தெரியவில்லை” என்று தனது வழமையான பேச்சை ஆரம்பித்ததும் நான் பொறுமையிழந்து கை கடிகாரத்தைப் பார்த்தேன் .
மணி காலை 9:45 , சட்டென அவர் எதிர்நோக்காத கணத்தில் அவர் பதம் தொட்டு சென்னி சூடினேன் , நான் அதை அவரிடம் அதுநாள் வரை செய்ததில்லை என்பதால் அவர் தனது சொல் நிறுத்தி திகைப்பது தெரிந்தது . அவர் மீளவும் சொல்கூட்டும் முன்பாக ,நான் நிலை மீண்டுவிட்டேன். பக்கத்தில் இருந்த சூர்யநாராயணன் “ஆசியளியுங்கள் தலைவரே” என்றார் , என் கரம் பற்றி “வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார் . நான் கட்சி அலுவலகத்திற்கு கிளம்பியதும் சூர்யநாராயனும் தலைவருடன் விடைபெற்று என்னுடன் காரில் ஏறிக்கொண்டார் . நான் தலைவர் முகத்தில் தெரிந்த திகைப்பை மட்டும் மீளமீள நினைத்தபடி இருந்தேன் . இது பனங்காட்டு நரி ஏன் சலசலப்பை யோசிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக