https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 31 ஜூலை, 2018

அடையாளமாதல் - 382 * மனம் *

ஶ்ரீ:




பதிவு : 382 / 563 / தேதி : 31 ஜூலை  2018

* மனம் 


நெருக்கத்தின் விழைவு ” - 77
விபரீதக் கூட்டு -05 .




படுக்கச் செல்லும்முன் ஓயாது  புலம்பிக்கொண்டிருந்த  மனதை அமைதிப்படுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கையுடன் படுத்தப்  பிறகும் ,  அமைதியாகத்தான் இருந்தது. பின் எந்த முனையைத் தொட்டு என் கட்டுப்பாட்டை இழந்தது எனத் தெரியாமல், பின் என்னால் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களுக்கு சென்றதும்,  மனம் பலவாறு என்னுடன் தர்கிக்கத் துவங்கிவிட்டது.இனி தூங்க முடியாது . இரவு முழுவதும் ஒரு போராட்டம் போலானது. அரை உறக்கத்தில் கட்டுப்படாத சிந்தனை  ஒரு நதியின் ஒழுக்கு போல சலசலத்து கொண்டே  இருந்தது . காலை 5:00 மணிக்கு அலைபேசி ஒலித்தபோதுதான் எழுந்தேன். கடும் தலைவலி , மனம் மட்டும்  பறந்து கொண்டிருப்பதை எழுந்த அந்த நொடி அறிய முடிந்தது . அலைபேசியை எடுக்கும் முன்பே தெரிந்துவிட்டது , அது தலைவர்தான். எடுக்கலாமா என்கிற சிறு தயக்கத்தை , அவர் இருக்கும் இப்போதைய இருப்பை அவரது குரல் கொண்டு கணிக்க எடுத்துப் பேசித்தான் ஆகவேண்டும் .

தலைவர் என்னை உடனே அவரது வீட்டிற்கு வரச்சொன்னார். குரலிலிருந்து எதையும் அவதானிக்க முடியவில்லை . எனக்கு அவரை சந்திக்க தயக்கம் இருந்தது.அவர் எதிர்பார்க்காத  சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்தால்தான் என் தரப்பை சிறிதளவாவது பேச சந்தர்ப்பம் கிடைக்கும் . இல்லாது போனால், நேற்று விட்ட இடத்தில் துவங்கி நான் அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதைப்பற்றி உத்தரவு போன்ற தொணியில் ஏதாவது சொல்லிவிட்டால் பின் எக்காரணம் கொண்டும் அதை மீற இயலாது.

சற்று நேரம் மாடியில் அர்த்மில்லாது உலாவிவிட்டு 6:30 மணிக்கு குளித்து ,வழமையான எனது  பூஜைக்கு சென்று விட்டேன்அவரை சந்திப்பதை சற்றுத் தள்ளிவைப்பது நல்லது எனப்பட்டது. பூஜையில் முதலில் நிலை கொள்ளாத மனது பிறகு மெல்ல அதிலிருந்து மீண்டு அமைதியானது . பூஜை முடியும் தருணம் எனது மனைவி வந்து பாஸ்கர் வந்திருப்பதை சொன்னாள் . சற்று நேரம் என்ன செய்வது என சிறிய தயக்கம் . பாஸ்கர் பிறப்பால் மலையாளி , மஹே பகுதியை சேர்ந்தவர் . புதுவை டவுன் பிளானிங்கில் வேலை செய்கிறார் தலைவரின் அணுக்கத் தொண்டர் . எப்படி அவருக்கு அணுக்கமானார் என சூர்யநாராயணன் சொன்ன தகவல் இந்தபதிவுகளுக்கு சம்பந்தமில்லாதது . பாஸ்கர்  தமிழை மலையாளம் கலந்து கொச்சையாக பேசுபவர். கொஞ்சம் விஷமி , தலைவரின் மனநிலைகளை சில சமயங்களில் எக்குத்தப்பாக மாற்றக்கூடியவர்.

யாரையும் காக்கவைத்துவிட்டு ஒரு வேளையில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது . பூஜை  இன்னும் சற்று நாழியாகும் . தாமதித்து சென்றால் வேண்டுமென்ற தாமதிப்பதாகப் படும் . சந்திக்க மறுப்பதாக தோன்றினால் சிக்கல் வேறு ரூபம் எடுத்துவிடும். பூஜையை பாதியில் விட்டுத்தான் சென்றாக வேண்டும். தலைவர் பாஸ்கரை அனுப்பியதிலிருந்து, நான் மனவருத்தத்தில் இருப்தாக நினைத்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் , முரண்டுபிடித்தால் , நிலைமை விபரீதமாகும். அதை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க  முடியாது .ஒரு கட்டத்தில் இறங்கித்தான் சென்றாக வேண்டும்

பூஜையை பாதியில் முடித்துக்கொண்டு வந்தபோது பாஸ்கர் ஹாலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தார் நான் சென்று அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டேன் ,
பக்கத்தில் வந்தமர்ந்த என்னிடம்என்ன ஆச்சி தலைவரிடம் கோபமா ? உன்னை கையேடு கொண்டுவச்சொல்லி வண்டி அனுப்பி இருக்கிறார்என்றார் . வண்டி அனுப்புவதாவது? இது வேண்டாத வேலை . நான் அவரிடம்நீங்கள் செல்லுங்கள் நான் காலை உணவு முடித்து அரை மணியில் வந்து விடுகிறேன்என்றேன் . “எப்பா உங்க சண்டையில் என்னை சிக்க வைக்காதே . நீ இல்லாமல் நான் போனால் அவ்வளவுதான்என்றார் . “நீ சாப்பிட்டுவிட்டு வா நான் காத்திருக்கிறேன்என்றார்

மணி காலை 7:30 தலைவர் வீடு இன்றைய  பரபரப்பை இன்னும் அடைந்திருக்காது இப்போது சென்று வந்துவிடுவது நல்லது ,கூட்டம் கூடிவிட்டால் அவர் தலைவராக உருக்கொண்டு அதற்கென உரித்தான தனித்த குரலில் பேசத்துவங்கி விடுவார் . இப்போது போனால் குருவாக உபதேசத்தை மழையாக வர்ஷிப்பார் . ஆனால்  கேட்கத்தான் முடியாது . சாப்பிட உட்கார்ந்தால் நேரமாகவிடும் , காலை உணவை ஒதுக்கி ஆடை மாற்றி கீழே வந்ததும் , பாஸ்கர் சற்று பதறிநீ சாப்பிட்டு விட்டு வா. நான் காத்திருக்கிறேன்”  என்றார். நான் அவர் கையை பற்றி இழுத்துகொண்டு புறப்பட்டேன்

தலைவர் வீடு அமைதியாக இருந்தது அவரது அறைக்குள் எட்டிப்பார்த்த போது அவர் அமரும் நாற்காலி காலியாக இருந்தது .அறையின் பின்பக்கம் ஏதோ  செய்கிறார் என முதலில் நினைத்தேன் . தலைவரின் உதவியாளர் தலைவர் இடப்புறம் உள்ள அலுவலக அறையில் இருப்பதாக மெல்ல கிசுகிசுத்தார் . பாஸ்கர் நேராக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தார் . தலைவர் மிக அரிதாகவே அந்த அறையை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன் . அந்த அறையை அணுகும்போது தலைவர் பாஸ்கருடன் பேசுவது எங்கோ தூரத்தில் கேட்டதுபோல இருந்தது , பழைய வலுவான மரக்கதவு சாத்தியருந்தது . நான் ஸ்வாதீனமாக கதவை தள்ளிக்கொண்டு உள்நுழைந்தேன்

மனதிற்குள் சகஜமாக இருக்க திடப்படுத்திக்கொண்டேன்என்னை பார்த்ததும்ஐயா என்ன சொல்றார்என்றார் , அவர் அதைப்போல என்னை விளித்ததில்லை , அப்போது ஏற்ப்பட்ட ஒரு சிறு திகைப்பு மெல்ல பதட்டத்தை கொடுத்தது . நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவருக்கு முன்னிருந்த பழைய பாரம்பரியமிக்க நாற்காலிகளின் நிரை ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டேன் , பாஸ்கர்தலைவரே வீண் பேச்சேல்லம்  வேண்டாம் சொல்ல வேண்டிய சங்கதியை நேரடியாக சொல்லுங்கள் , அழைத்துவந்து விட்டேன் என்வேலை முடிந்ததுஎன புறப்பட்டுச் சென்றுவிட்டார் . . தலைவர் நேற்று ஒன்றும்  நடவாதது என்ன எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாஎன்றார் . நான் என்ன சொல்லி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் எனது மௌனத்திலிருந்து மீளவில்லை.