https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 25 ஜூலை, 2018

அடையாளமாதல் - 379 *சிதைந்த முடிவுகள் *

ஶ்ரீ:




பதிவு : 379 / 560 / தேதி : 25 ஜூலை  2018

*சிதைந்த முடிவுகள் 


நெருக்கத்தின் விழைவு ” - 74
விபரீதக் கூட்டு -05 .



1991 ல் இருந்து ஏதாவது ஒரு வகையில் பாலன்  அதிகாரத்தின் பக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறார் . பிறிதெல்லாருக்கும் அவரது அரசியல் வெற்றியாக அது பார்க்கப்பட்டாலும் . நான் அப்படி  நினைக்கவில்லை . அவருடன் கணக்கில்லாத தனிப்பட்ட உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறேன் . அவரின் அகம் அறிந்தவன் என்கிற கோணத்தில் அவர் தனது வாழ்நாள் முழுவதுமாக தனது மன நிகர்நிலை பேணும் இயல்பான எண்ணத்தினால் எப்போதும்  சீண்டப்பட்டுக்கொண்டே இருந்திருக்க வேண்டும் அதனினும் ஒரு நரகம் மனிதனுக்கு வாய்க்காது . ஒரு பெரும் திரளின் தலைமையாக அமர்ந்த ஒருவர் அதற்கிணையல்லாத வேறு எந்த இடத்திலும் பொருந்தியிருக்க முடியாது . தலைக்குள் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் தன் இடத்திற்கான கோரலை புறந்தள்ளி , பொய்முகம் சூடி காண்பிக்கப்படும் இடத்தில் எப்படி சென்று அமர இயலும்.

என்னுடைய பதிவுகள் குற்றம் காண வந்ததில்லை . சூழலும் சிந்தனையும்  மனிதர்களை எப்படி ஆள்கின்றன அது மீள மீள எப்பாடி அதை நிகழ்த்தியவர்களை அது எப்படி பாதிக்கிறது என்பதை எனது வாழ்விலிருந்தே நிறைய ஆதங்கங்களை உதாகரிக்க முடியும் . ஒரு தலைமையின் வீழ்ச்சி இது .மரணத்தை விட வலிமிகுந்தது.

1996  தேர்தலில் தனக்குசீட்டு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை பாலன் இழந்திருந்தாலும் , முதல்வர் தரப்பிலிருந்து  சமாதானம் செய்யப்படுவோம்  என்கிற குறைந்தபட்ச  நம்பிக்கை போதும் , தன்னிடமிருந்து தன்னை மீட்க . ஆனால் அது பொய்த்து  போனது. அதுவே அவர் இதுநாள்வரை அமர்ந்திருந்து ஒரு பொய் நாற்காலி. அவருக்கு , அங்கு மரியாதையில்லை என உணர்ந்ததும்  , அதன்பின் தனக்கான இடம் என கண்ணனைத்தான் நினைத்தார் . கண்ணன் எப்படி அவரை ஏற்பார் ? .   கோபத்தால் கட்சியிலிருந்து வெளியேறி , தனிக்கட்சி கண்ட கண்ணனுடன் கைகோர்த்துக்கொண்டார்என்ன ஒரு துரதிஷ்டம் . பாலன் எடுத்திருக்க கூடாது முடிவு அது

மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து நினைக்க முடியாத உயர்த்தை எட்டியவர் , புதுவையில் வேறு எந்த அரசியல் அமைப்பிறகும் இல்லாத ஒரு குரு சிஷ்ய பரம்பரையின் அவர்தான் கடைசி மிச்சம்தனது அமைப்பு முற்றாக உயிரிழந்து போனபிறகு . பாலன் முதல்வருடன் தனக்குள்ள நெருக்கம் தன்னை அடுத்து நிலைக்கு நகர்த்தும் என்பது நடவாது போனது . கண்ணனிடமிருந்து துவங்கிய அவரது பயணம் இன்றுவரையில் மிக நீண்டது .

தன்னுடைய அரசியல் விளையாட்டிற்கான காயாக என்னை அவர் பயன்படுத்தியது என்னுடைய ஒப்புதலோடுதான். ஆனால் என்னை அமைப்பிற்குள் யாருக்கும் எதிராக பயண்படுத்த மாட்டார் என நம்பினேன். அமைப்பை தன்னுடைய ஆளுகைக்குள்  பத்திரமாக வைத்துக்கொள்ள விபரீதமான சில முடிவுகளை பாலன் எடுக்க. அது அவரை மட்டுமின்றி என்னையும் பாதித்தது. இருவருடைய அரசியலும் வெவ்வேறாக பிறிந்து இரண்டு முடிவுகளை எட்ட வைத்தது 

தனக்கு உதவ அமைப்பை கையலெடுக்கச் சொன்ன பாலனின்  அரசியல் புரியாது , நான் செயல்பட்ட முறை , சிதற இருந்த இயக்கத்தை குறுகிய காலத்தில் ஒருங்கிணைத்தது. அனைத்து தொகுதி நிர்வாகிகளின்  ஆதரவைப் பெற்று பாலனின் தலைமையின் கீழ் அவற்றை பலமாக தொகுத்தேன். ஒரு கட்டத்தில் அது எனக்கான ஆதரவாக மாறியதுமுதலில் கமலக்கண்ணனும் பின்னர் பாலனையுமே அதனால் அச்சமடைந்தார்கள் என்பதுதான் அரசியல்  வினோதம்

எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது , ஆனால் நெடுநாள் அரசியலில் உழன்று பின் பெற்ற அனுபவத்தில் அதற்கென்ன அர்த்தம் என்கிற புரிதலைக் அடைந்தேன் . இது ஒருவித உளச்சிக்கல் , தாழ்வு மனப்பான்மையின் பிறிதொரு வடிவம். அரசியல் விழுமியமின்மை, தலைமைக்கு இருக்கக்கூடாத குறுகிய மனப்பான்மை . பக்கத்தில் நிற்கும் அனைவரையும் தனக்கு போட்டியாக நினைக்கும் தடுமாற்றம் . அவை ஒருவரை கொண்டு சேர்ககுமிடம் முற்றிருள். அங்கிருந்து அவர்களுக்கு ஒருநாளில் மீட்சியில்லை .

நாம் வளர்க்க நினைக்கும் ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் அதனுடனான தங்களது வளர்ச்சியை தரும் வாய்பபை உருவாக்கிக் கொடுப்பது ஆரோக்கியமான அரசியல் என நினைக்கிறேன் . ஆனால் அதை  தடுத்து ஒரு கட்டுக்குள் அணைத்தையும் வைத்துக்கொள்ள நினைப்பது அரசியலில் ஒரு அங்கம் என்பது பிழைப் புரிதல் என அவதானிக்கிறேன் .

வளர்வதன் ஊடக தன்னையும் வளர்த்தெடுக்கும் முயற்சியற்றவன் , அந்த நிமிடம் முதல் தனது வளர்ச்சியை இழக்கிறான். தலைமை பண்பு எனபதை இதையும் இணைத்தே இப்போதும் பார்க்கிறேன் பாலன் தலைமையில் இயங்கிய அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு அறிமுகமானார்கள்  அல்லர். என்னை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களில் மாவட்ட பொறுப்பிலிருந்தவர்கள் சிரைத் தவிரபிறரை நான் கூடுகையில் மட்டுமே சந்திருந்திருந்தேன் அதே நிர்வாகிகள் இப்போது என்னால் மீளவும் முன்னிறுத்தப்படுவதனூடாக நான் முக்கியத்தும் பெற்று விடுவேன் என்கிற எண்ணமே எதிர் நிலையிலுள்ள அனைவரையும் ஒன்றிணைந்து

தங்களின் தவறான நிலைப்பட்டால் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் கமலக்கண்ணுக்கு ஏற்பட்டது . அவர்கள் நம்பியிருந்தவர்கள் , அவர்களை இந்த இக்கட்டத்தில் மீட்டிருக்க வேண்டும் அதை செய்யாததிலிருந்து , அவர்கள் சார்ந்திருந்த இடத்தில் அவர்களுக்கு யாதொரு முக்கியத்துவமும் இல்லை என்பது வெளிப்படையானது .

அதை அவர்களிடம் நான் சந்தித்த சூழலில் சொல்லியிருந்தேன் . ஆனால் அவர்களின் உள்ளாழத்தில் என்னால் எந்த மாற்றமும் நிகழ்த் இயாலாததால், மனவெறுப்புற்று எனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டேன். இப்போது மாறிய சூழலில் இதை சரிசெய்யும் வாய்ப்பை  இம்முறை இழக்க விரும்பவில்லை . அதன் பலன் பற்றியும் எனக்கு அக்கறையில்லை. இன்று நான் ஒருங்கிணைக்கும் இந்த குழு கூட அரசியலில் நாளை விலை போகலாம்

அவர்களுக்கு நான்ஏற்படுத்திக் கொடுக்க விழையும் இந்த அங்கீகாரத்தை கொண்டே எனது அரசியல் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என தலைவர் என்னை எச்சரித்தார் . இதில் வேடிக்கை அவரது தீர்க்கதரிசனம் ஒரு காலத்தில் உண்மையானது . அதன் பொருட்டே நான் அரசியலில்லிருந்தே வெளியேற வேண்டிய சூழல் உருவானது . ஆனால் என்னால் சில செயல்பாடுகளை விட்டு விலகமுடியாது . தலைவர் சொன்ன அந்த கோட்பாட்டின் நிஜத்தை நான் உணர்ந்திருந்தேன் , அது எனக்கு மனதை மருக்கவைக்கும் மருந்து போலானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்