https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 5 ஜூலை, 2018

அடையாளமாதல் - 360 * நிழலின் பிரமை *

ஶ்ரீ:




பதிவு : 360 / 541 / தேதி :- 05 ஜூலை  2018

* நிழலின் பிரமை *


நெருக்கத்தின் விழைவு ” - 54
விபரீதக் கூட்டு -04.



நான் என்ன செய்யவேண்டும் என்கிற முடிவை எட்டிவிட்டேன் என புரிந்து கொண்ட சூர்யணராயணன் என்னை பார்த்து சிரித்தது முதுகில் தட்டிபோய்வாஎன்றார். நான் தலைவர் அறையில் நுழைந்து அவரை பார்த்து முறைமைகள் செய்து வையத்தரசுக்கு அருகில் காலியாக இருந்த நாற்காலிக்கு சென்று அமைந்து ,சிரித்தபடி அவனுடன் கைகுலுக்கினேன் . நான் இயல்பாக இருப்பதை கண்டு அவன் திகைப்பது  தெரிந்ததும் மனம் சற்று ஆசுவாசமடைந்தது . தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த தலைவரின் கண்கள்  ஒரு இமைப் பொழுது எங்களை தொட்டுச் சென்றது . அவர் இப்போது என்ன நினைக்கிறார் என தெரிந்ததும் சிரித்துக்கொண்டேன் . அதன்பின் அவரது முகம் இயல்பாக மாறிப்போனது.

வையத்தரசு , முதலியார்பேட்டையை சேர்ந்தவன் . உருவத்திற்கும் , எண்ணத்திற்கும் , தகுதிக்கும் ஏற்புடைய சிந்தனை கொண்டவனாக நான் அவனை எப்போதும் பார்த்தத்தில்லை. சண்முகம் அணியில் நான் வருவதற்கு முன்பிருந்தே இருப்பவன்  . எனது உள்நுழைவு அவனது இடத்தை பின்னடையச் செய்து விட்டதாக என்மீது கசப்பு கொன்ணிருப்பவன் . ஆனால் எனது நுழைவுதான் அவனுக்கான இடத்தை உருவாக்கி கொடுத்தும் , அதே கணம் அவனது உடல் போலவே சிறுத்த அகம் , உருவான அந்த இடத்தில் அவனை செயல்பட முடியாதபடியும் செய்துவிட்டது

எப்போதும் நட்புடன் சிரிக்கும் முகத்திற்கு  பின்னால் குயுக்தியினால் தன்னை முன்னிலை படுத்தும் செயல்களுக்கு எந்த எல்லைக்கும் போகும் குணம் உள்ளவன் . குள்ளமான ஒத்தை நாடி உருவம் . உடன் மிக அரிதாக யாரையாவது அழைத்து வந்தாலும் . மெரும்பாலும் தனி ஆளாக வருவதும் போவதுமாக இருப்பவன்  . எனது முயற்சிகளுக்கு  தலைவரிடம் எனது கால்களை இடறும் தடைகளாக ஏதாவது ஒன்றை ஏற்படுத்துவதை தனக்கான அரசியல் என்கிற பிழை புரிதலை கொண்டிருந்தார்  . 

பெரிய சிக்கல்களை கொடுக்க இயலாதவரன்  . சிறு சிறு இடைஞ்சல் வழியாக எரிச்சலை உருவாக்கி என்னை தடுமாற்ற மடைய செய்வதன்றி பெரிதாக ஏதும் செய்யும் சக்தி இல்லாதவன்அதற்கு பெரும்பாலும் சபாபதியை உபயோகப் படுத்துவான் . இன்று என்ன திட்டம் என தெரியவில்லை?. நான் செய்யும் பிழையை பெருக்கி சிக்கலுக்கு கொண்டு செல்ல காத்து இருப்பவர் சபாபதி . இது பாலன் காலம் தொடக்கி என்மீது அவருக்கிருக்கும் கசப்பினால் எழுவது  . நான் பலமுறை என்னை சமாதானம் செய்துகொண்டு அமைதி காத்த போதும் . ஏதாவதொரு புள்ளியில் என்னை கோபப்படவிப்பதில் சில சமயங்களில்  வெற்றியடைபவன் .

இளைஞர் காங்கிரஸ் கண்ணன் தலைமையில் வளர்ந்ததற்கு சண்முகம்எதிர்ப்பு  என்கிற ஒற்றை கோட்பாடு இயக்கத்தை பெரிதாக வளர்த்தெடுத்தது . எந்த தலைவரையும் சாராது கண்ணன் தன்னை தனி ஆளுமையாக முன்னிறுத்திக்கொண்டார் . அவரின் ஆரம்ப காலத்தில் அதற்கு சபாபதியை போன்ற காங்கிரஸின் முன்னணி தலைவர்கள் கொடுத்த ஆதரவு முக்கியமான ஒன்று

காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த குழுக்கள் அப்போது காங்கிரஸில் அதிகம்  . காமராஜர் காங்கிரஸ்ஸை விட்டு விலக்கியபோது கண்ணன் உள்பட அவர்கள் அனைவரும் ,  காமராஜருக்கு பின்னல் சென்றவர்கள் . ஆனால் தமிழக அரசியலில் காமராஜரால் தன்னை நிலை நிடுத்திக்கொள்ள முடியது போனது . அதற்கு அங்கு நிலவிய பல உள்ளூழல்கள் காரணமாக  சொல்லப்பட்டாலும் , புதுவையை அதிலிருந்து தனியாக பிரிந்து , அதில் தனக்கான பாதையை உருவாக்கி எடுத்து சண்முகத்தின் தனிப்பட்ட ஆளுமையும்அதற்கு ஏற்ற சூழல் அப்போது அமைந்திருந்தது முக்கிய காரணம் . இந்திரா காந்தியை விட்டு காமராஜ் பிரிந்தபோதும் , ஜனதா ஆட்சி காலத்தில் இந்திரா காந்தி தனிமை படுத்தப்பட்ட போதும் , அசையாத ஆதரவை கொடுத்து தனக்கான இடத்தை சண்முகம் பிடித்திருந்தார் . அகில இந்திய அரசியலில் காங்கிரஸ் ஒரு பெரும் நிலை சக்தியாக இருப்பதற்கு நேரு குடும்பம் அடித்தளம் என்கிற அசைக்க முடியாத கோட்பாடை அவர் எப்போது கொண்டிருந்தார் . அது மிக சரியான அணுகுமுறை என்பதை காலம் அவருக்கு பலனை கொடுத்துக் கொண்டிருந்ததிலிருந்து அனைவரும் புரிந்து கொண்டனர் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்