https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 4 ஜூலை, 2018

அடையாளமாதல் - 359 * உருவ அருவங்கள் *

ஶ்ரீ:




பதிவு : 359 / 540 / தேதி :- 04 ஜூலை  2018

* உருவ அருவங்கள் *


நெருக்கத்தின் விழைவு ” - 53
விபரீதக் கூட்டு -04.




நான் எனக்கான விழிப்பை முழுவதுமாக அடைந்து விட்டிருந்தேன் . மனம் நினைத்த மாத்திரத்தில் புதுவையில் இருந்தது . அதன்பிறகு ஒரு நிமிடம் கூட தில்லியில் இருப்பதை வெறுத்தேன் . உடன் புதுவையில் இருக்க வேண்டும் என்கிற ஏக்கம் மிகுந்ததும் , புதுவைக்கு நுழைந்த அடுத்த நொடி முதல்  என்னென்ன விஷங்கள் செய்வேண்டிய இருக்கும். யார்யாரை காரணம் காட்டி கைவிடப்பட்ட திட்டங்கள் அவற்றை மீளவும் கையிலெடுத்தால்அதன் பின்னர் எழ இருக்கும் எதிர்நிலைகள், என அனைத்தும் கண்முன் தோன்ற . ஒரு உக்கிரமான மனநிலையில் இருக்கையில் அவை ஒவ்வொரு துளியாக , அலகலகென விரியத்துவங்கினசெய்யவேண்டியது என்ன? என்கிற தெளிவான சிந்தனையோடே தூங்கிப்போனேன். அந்த கணம் எனது அரசியல் பயணத்தை முற்றாக மாற்றியிருந்தது. அந்த தருணத்தை உணராது வல்சராஜ் அமைதியா தூங்கிக் கொண்டிருந்தார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து மிக தாமதமாக கிளம்பி புதுவைக்கு திரும்பி இருந்தேன் . வல்சராஜ் வழக்கம்போல தில்லியிலிருந்து கொச்சின் சென்றுவிட்டார் . நான் அவரிடம் எதைப்பறியும் பேசமல் வழமைபோல அவரை வழியனுப்பி விட்டு , சென்னைக்கு கடைசி விமானஇரவு 8:40 தில்லியிலிருந்து புறப்பட்டேன்ஏதோ காரணத்தால் இரவு 9:20 மணிக்கு  மேல் தான் விமானம்  கிளம்பியது. மிக தாமதமாக  சென்னையிலிருந்து கிளம்ப இரவு  12:30 மணிக்கு மேல் ஆகி இருந்தது . காரில் தூக்கம் சுழற்றி அடித்தது . வீடு வரும் போது அதிகாலை 4:00 மணி . வண்டியில் வரும் போது  கண்ணை சுழற்றிய தூக்கம் படுக்கையில் படுத்த பிறகு காணாமலாகியது. மறுபடியும் ஏதேதோ சிந்தனை என மனம் பறக்க ஆரம்பித்து விட்டது

எப்போது தூங்கினேன் என தெரியாது , அலைபேசி அடித்ததும் தான் எழுந்தேன் . தலைவர் வீட்டிலிருந்து. ஒருகணம் எடுக்கலாமா என்கிற யோசனை . கண்களில் சொல்ல முடியாத எரிச்சல் . மணி காலை  6:30   சிறிய தாயகத்திற்கு பின் எடுத்தேன் . தலைவர்தான் அழைத்திருந்தார் . “என்ன பாண்டி  வந்தாச்ச்சா” ? என்றார் . காலை 4:00 மணிக்கு வந்ததை சொன்னேன் . சரியா 8:00 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்திற்கு வரச்சொன்னார் . பத்திரிக்கையாளர் கூட்டம் என்றது சட்டென தூக்கம் காணாமலானது

பத்திரிக்கையாளர் கூட்டம் கூட்டும் அளவிற்கு விஷயம் இருக்கும் என நான் நினைக்கவில்லை . அவசர அவசரமாக குளித்து தலைவர் வீட்டிற்கு சென்றேன் . தலைவர் அறைக்குள் சிறிய கூட்டம் ஒன்று நின்று கொண்டிருந்தது . நடு நாயகமாக முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சபாபதி இருந்தார் . முதலில் எழுந்த எரிச்சலை கடக்க நான் உள்ளே செல்லாமல் பின்கட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன் . சூர்யா நாராயணன் . நட்புடன் புன்னகைத்தார் . நான் மறு புன்னகைக்கு தயாரில்லை

நான் அவரிடம் உஷ்ணமாகஇவருக்கு  இதில் என்ன வேலை”? என்றேன் . அருகில் அவரது சிஷியன் வையத்தரசு அமர்ந்திருந்தது என்னை கடும் கோபமடைய வைத்தது . இளைஞர் காங்கிரஸ் விட்டு வெளியேறிய அனைவரும் முதலியார் பேட்டையை சேர்ந்தவர்கள் . தலைவர் அவரை அழைத்திருக்க வாய்ப்பில்லை . அவர் தானாக ஆஜராகி இருக்க வேண்டும்

சூர்யநாராயணன் , என்னிடம்எல்லாவற்றையும் உன் கோணத்தில் பார்ப்பதை நிறுத்து . இப்போது நேரம் உங்கள் சண்டைக்கானது அல்ல . பத்திரிக்கை கூட்டத்திற்கு முன்பாக இது பற்றி தலைவர் பேச நினைத்து இருக்கலாம்என்றார் . சிறிது அமைதிக்கு பிறகு எனக்கு அவர் சொல்வதில் இருந்த அர்த்தம் புரிந்தது . சற்று நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொண்டு தலைவர் அறைக்குள் நுழைந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்