ஶ்ரீ:
பதிவு : 368 / 549 / தேதி :- 13 ஜூலை 2018
* பிழை *
“ நெருக்கத்தின் விழைவு ” - 62
விபரீதக் கூட்டு -04.
வாழ்கை ஒரு சுழல்பாதை , அதிலிருந்து எப்படி விலகினாலும் விட்ட அதே புள்ளியில. மீள மீள வந்து முடிந்து , நாம் விட்டதை தொடங்கச் சொல்கிறது. ஊழ் நமக்கு கையளிக்க வைத்திருப்பதை நாம் எப்படி வாங்க மறுத்தாலும் அதை நமக்கு கொடுக்காமல் ஓயாது போலும். நான் இங்கு திட்டமிட்டு வரவில்லை ஆனால் என்றோ விட்டு விலகிய அதே இடத்திற்கு வேரொரு பாதை மூலமாக வந்து சேர்ந்திருக்கிறேன் என உணர்கிறேன் . நான் செய்ய மறுத்து விட்டு வந்ததை , ஊழ் அதை மேலும் சிக்கலுள்ளதாக மாற்றித் தருகிறதோ? என திகைத்தேன்.
பரபரப்பான உலகியலில் இருந்து விலகி இருக்குமிடம் தெரியாது வாழ்க்கையை அமைதியாக கடந்து செல்ல விரும்பினேன் . அதன் முதன்மை காரணம், இளந் தலைவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல் சீட்டாத்தில் எனக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை . அமைப்பை சீர்த்திருத்தி அதன் ஸ்தானத்தில் நிலை நிறுத்த பாலனுடன் முரண்பட்டு தனிவழி காண முயன்றபோது பெற்ற கசப்பான் அனுபாவமும் ஒரு வாழ்நாளுக்கானது. அதை போல பிறிதொன்றை எக்காலத்தும் முயற்சிப்பதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன் .
நவீன மனம் கொண்ட வளரும் இளந் தலைவர்களின் மீது இருந்த நம்பிக்கையை முற்றாக இழந்து போயிருந்தேன் என்பது பிறிதொரு காரணம் . அவர்களின் விழைவிற்கு முன்னால் கருத்தியலுக்கும் , விழுமியதிற்கும் எந்த அர்த்தமும் இல்லை .அதன் தொடர்ச்சியாக அரசியலிலிருந்தே நான் வெளியேற வேண்டிய சூழல் எழுந்ததும் சற்றும் தயங்காது வெளியேறினேன் . இப்போது கால சூழல் என்னை மீளவும் அதே புள்ளியில் அதேவேலையை செய்ச்சோல்லி என்னை கொண்டுவந்து நிறுத்தும் என நான் அதுவரை கருதியிருக்கவில்லை . அன்று நான் செய்ய மறுத்து விலகியது ஒரு “பிழை” போலும்.
“அப்படியென்றால் பிழை என்றால் என்ன? இந்தப்பிரபஞ்சமே ஒரு பெரிய பிழைதான் என்று அறிவியல் சொல்லும். உயிரின் தோற்றமே ஒரு பிழைதான். பிழைகள் வழியாகத்தான் உச்சகட்டப் படைப்பு நிகழமுடியுமா? அப்படியென்றால் நாம் செய்யவேண்டியது என்ன? சரிகளை செய்துகொண்டே இருக்கவேண்டும். அசந்து மறந்து அதிலே பிழை நிகழவிடவேண்டும். தெரிந்துவிட்ட பிழை பிழைதான். நம்மை மீறி பிழை நிகழவேண்டும். அந்த உச்சகட்ட பிழை மட்டும் நிகழவேண்டும் என்றால் மற்ற பிழைகளை நாம் ஃபில்டர் செய்துவிடவேண்டும். அதற்குத்தான் நாம் பிழைகளைச் சரிபார்க்கிறோம்.பிழை நம்மைக் கடந்து செல்கிறது. அதைக்கொண்டுதான் அடுத்தகட்ட கிரியேட்டிவிட்டிக்கு நாம் செல்கிறோம்.
பிழைகளை நாம் கடவுள்செயலாக நினைக்கலாம். அல்லது நம் சப்கான்ஷியஸ் வெளிப்படுவதாக நினைக்கலாம். அல்லது ஏதோ ஒன்று தன்னை வெளிப்படுத்துவதாக நினைக்கலாம். ஆனால் அது வெளிப்படும்போது ஒன்று தெரிகிறது. அது வெளிப்பட்டே தீரும். நாம் அவ்வளவு காத்து ஃபில்டர் செய்தாலும் அது கடந்துவிடுகிறது. அதில் ஒரு hidden target ஒளிந்திருக்கிறது. அதை நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. உயிர் இங்கே பிழையால் உருவாகியிருக்கலாம். ஆனால் அது உருவாகியே தீரும். நான் இதையெல்லாம் உணர்ந்திருந்தேன். ஆனால் பிழை கதைதான் இவ்வளவு யோசிக்க வைத்தது” என்கிறது ஜெயமோகனின் “பிழை” சிறுகதயை படித்த வாசகர் எஸ். ஆர்.பார்த்திபன் அவர்கள் ஜெயமோகனுக்கு எழுதிய வாசகர் கடிதம்.
ஜெயமோகனின் “பிழை” சிறுகதையை வாசித்திருக்கிறேன் . மிக அற்புதமான வாசிப்பு தருணங்கள் அவை . அதிலிருந்து நான் அடைந்தது மூன்று கருத்துக்கள் ஒன்று “பிழை” அது தவிர்க்க இயலாதது. ஒரு படைப்பூக்கம் நிகழ அது காரணமாக இருக்கிறது என்கிற கருத்தியலை நான் வியந்து நோக்கிய பிறகு அதை எனது வலைபூ தளத்தில் பதிவு செய்ய முயன்றபடி இருக்கிறேன் , பிறிதொருவர் செய்கின்ற பிழை நமக்கு படைப்பூக்கத்தை தருகிறது . அதுபோல மிகை நம்பிக்கை ஒருவித தற்பிழையை போன்றதே . அது வாழ்க்கையை நம்பிக்கை கொள்ள வைக்கிறது . சில முட்டாள்தனமான பிழை என்னை எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அணுக வைத்திருப்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் . விழுமியம் கூட ஒரு வித தற்ப்பிழை தானோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக