https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 ஜூலை, 2018

அடையாளமாதல் - 375 * இணையாக் கோட்பாடு *

ஶ்ரீ:




பதிவு : 375 / 556 / தேதி :- 20 ஜூலை  2018


* இணையாக்  கோட்பாடு 


நெருக்கத்தின் விழைவு ” - 70
விபரீதக் கூட்டு -05 .




கமலக்கண்ணன் குழுவுடன் ஒரு நீண்ட உரையாடலுக்கு பின் அவர்களின் செயல்பாடு  யாரின் அரசியலுக்கு உகந்ததில்லை என்பதை உணர்த்து வருத்தமடைந்தவர்களைப் போலானார்கள். அன்று சிலர் எடுத்த முயற்சியின்  பலனாக எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது . நாங்கள் நல்ல நண்பர்களாகவே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாலும் , நெடிய இடைவெளிக்கு பிறகு அந்த சந்திப்பு நிகழ்ந்த போதுமுதலில் முறைமைகளுக்கு உட்பட்டதாக, விலகிய மனப்போக்குடன் துவங்கியது . எங்கள் இருவருக்குமே இயல்பில்  அது வழமையில்லை என்பதால் ஒரு கட்டத்தில் அனைத்து இறுக்கங்களும் கழன்று போனது. மாலை முதல் இரவுவரை நெடுநேரம் நீடித்த அந்த உரையாடலில் பல பழைய கதைகளில் திளைத்தோம். ஒருவரை ஒருவர் பகடி செய்து சிரித்துக் கொண்டோம் . இறுக்கமான உறவு நெகிழ்ந்தது, அடுத்த சந்திப்பு மறுநாள் காலை என்றும், அப்போது அடுத்து ஆகவேண்டியதை திட்டமிடலாம் என்கிற முடிவோடு விடைபெற்றோம் . நான் நெடுநேரம் கடற்கரையில் அமர்ந்திருந்து பின்னிரவு வீடு திருப்பினேன்

அன்று இரவு முழுவதும் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாக நம்பினேன் . அடுத்தடுத்து நிகழவேண்டியதை குறித்த உற்சாக மனநிலைமறுநாள் அவர்களிடம்  எந்த மாற்றமும் நிகழவில்லை என அறிந்தபோது நொருங்கியது. மறுநாள் காலை கடற்கரை விடுதியில் சந்திப்பதாக  சொல்லி சென்றவர்கள்  , யாரும் திரும்பவில்லை . நம்பமுடியாத, ஏமாற்றம் மிகுந்ததாக ,நினைவெழும் போதெல்லாம்  மனவழுத்தம் கொடுப்பதாக , நீண்ட நாட்கள் மனதை உறுத்தி உறுத்தி ஒரு ரணம் போல ஆறாமல் அது இருந்தது கொண்டிருந்தது . அப்போது என்னால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மனத மனமும் அதன் உட்கூறுகளில் உள்ள உளவியல் ரீதியான சிக்கல்கள் குறித்த புரிதல்கள் , பின்னாளில் பெற்ற அனுபவம் எனக்கு கற்றுக்கொடுத்தது

அன்று பின்னிரவில் அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலில், அவர்களை காட்டி சண்முகத்திடம் நான் வளரப் பார்பதாகவும், நான் அவர்களை எக்காரணம் கொண்டும்  ஏமாற்ற முடியாது என பேசிக் கொண்டதாக , சில நாள் கழித்து அறிந்து கொள்ள நேர்ந்தது  . முதலில் அது திகைப்பைத் தந்தாலும் பிறகு என்னால் சிரிப்பதைத் தவிர செய்யக்கூடியது பிறிதொன்றில்லை . அது ஒரு முற்றிய உளச்சிக்கல் அதிலிருந்து அவர்களுக்கு ஒருநாளும் மீட்சியில்லை . என்னைவிடம் தலைவர் அவர்களை மிகச்சரியாக தெரிந்து வைத்திருந்தார்  என்பது  எனக்கு இப்போதும் ஆசார்யமளிப்பது .

அதன் பிறகு காலத்தால் மிகவும் மாற்றமடைந்திருந்த பல அரசியல்  சூழலில் ,  இருவருக்கும் பொதுவான நண்பர்கள் சிலர் தொடர்ந்து எங்கள் பேச்சு வார்த்தை குறித்து ஆரம்பிக்கும் போதெல்லாம்நான் அதற்கு தடையாக இருந்ததில்லை. அரசியலில் உரையாடும் வாய்ப்பை எப்போதும் கைவிடலாகாது என்பது தலைவர் எனக்கு கற்றுக்கொடுத்தது. அவர்கள் முயற்சிகளில் , பல அர்த்தமற்ற கேள்விகளும் , நிகழ்த்தவே முடியாத பல யோசனைகளயும் பெற்றுத்திரும்பிய அனைவரும் அதில் வெறுப்புற்று அல்லது தோல்வியடைந்து திரும்பினார்கள்.கமலக்கண்ணனின் செயல்பாடுகள் ஏன் இப்படி மாறிப்போயின என்பது குறித்து நான் நிறைய அவதானித்ததுண்டு   அவற்றில் நான்  கற்றுக்கொள்ள    ஏராளமாக இருப்பதை அறிந்திருக்கிறேன், அரசியல் கணக்குகளுக்கு அப்பால் கமலக்கண்ணன் என்மீது கொண்டிருந்த ஆசூயையே அனைத்திற்குமான காரணம்

தனக்கில்லாத பொருளியல் வசதி எனக்கிருப்பதால் மட்டுமே , என்னால் உயரமுடிகிறது என்கிற மாயையிலிருந்து அவரால் கடைசிவரை வெளிவர இயலவில்லை . அரசியலில் பொருளியல் வசதி மட்டுமே ஆகப்பெரும் சக்தி என்பது உண்மையல்ல என்பது அவருக்கும் தெரியும் . முதலில் நான் அவர்கள்  நினைக்கும் அளவிளான பொருளியல் பலம் உள்ளவனல்ல . இருந்தாலும் அதை அரசியலில் முதலீடு செய்யும் எண்ணமும் எனக்கில்லை. இவர்கள் கண்ணனை தலைமையாக க் கொண்டு அரசியலை துவங்கி யாரும் எதிர்நோக்காத வெற்றியை பெற யார் எவ்வளவு செலவழித்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் என்பது  எப்படி தெரியாமல் போனது    . குடிக்கும் டீ க்கு கூட சுற்றியிருந்த நண்பர்கள் உதவியது எப்படி மறந்து போனார்கள் .  

நான் கற்பனை செய்ய இயலாத பொருளியல் பலம் வாய்ந்த பலர் அரசியலில் எந்த இடத்தையும் அடையாது வீழ்ந்து போனதை நானும் அவர்களும் பார்த்திருக்கிறோமே  . அரசியலில் எனது உழைப்பும், அதன்பொருட்டு நான் அடைந்த அவமானங்களும், வீணாக்கிய என் இளமை காலம் என எதுவும்  , அவர் எண்ணத்தை சென்று தொடவில்லை. அதுவும்  புரிந்து கொள்ளக் கூடியதே. பேச்சும்  அதனால் ஏற்படும்  புரிதலும் நமது திறமைக்கு உட்பட்டதல்ல , அது காலத்திற்கு அதீனமானது . புரிதலும் , புரியவைப்பதும் என அனைத்தும் ஊழின் வசத்தால் நிகழ்வது . அங்கு மனிதன் ஆற்றக்கூடியது ஏதுமில்லை.

நல்ல நண்பர்களாக எந்த வேறுபாடுகளும் இல்லாது முதல் சந்திப்பின் போது துவங்கிய நட்பிற்கு இடையே அவர் இன்று தடையென  நினைக்கும் எதுவும் குறுக்கிடவில்லை. பின்னாளில் அவருள் விளைந்த அனைத்தும் அவர் தனது கற்பனையில் கண்டது மட்டுமே என்பதுதான் யதார்த்தம்

அரசியல் ஒரு போதையை போன்றது . அதற்கு புறவயமான போதையூட்டு பொருட்கள் தேவைபடுவதில்லை , அகவயமான நினைவு மட்டுமே அதை கொடுக்க வல்லது. நல்ல சிந்தனையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியலின்  உச்சியில் அமர்ந்த பலரை நாங்கள் பார்த்திருக்கிறேன்றோம். அது திரிந்து இழிநிலையை அடைந்த சிலரையும் பார்க்க நேர்ந்தது. ஒருவரின் அரசியல் வெற்றி, தோல்வி இந்தக்களத்தில் நிகழ்வதில்லை. அங்கு நிகழ்ந்தாலும் அதில் வென்றவர் தோற்றவர்களே. தோற்றவர்கள் செத்தவர்களுக்கு இணை.

நல்ல அரசியல் அதற்கு அப்பால் எங்கோ  நிற்கிறது என நம்புகிறேன். அந்த களத்தில் தோற்றவர்கள் , வென்றவர்களுக்கு இணையான மனநிறைவை அடைந்தார்கள். மனித மனங்களின் இணைப்பையும் அதில் நிறைவையும் பெற முயற்சித்தவர்களுக்கு வெற்றியும், தோல்வியும் எப்படி தனிப்பட்ட ஒருவருடையதாக பார்க்கப்படும்?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்