https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 ஜூலை, 2018

அடையாளமாதல் - 381 *அதிகார அடுக்குமுறை *

ஶ்ரீ:




பதிவு : 381 / 562 / தேதி : 29 ஜூலை  2018

*அதிகார அடுக்குமுறை 


நெருக்கத்தின் விழைவு ” - 76
விபரீதக் கூட்டு -05 .



தலைவரும் முதல் முறையாக என்னை நோக்கிஅதிகப்பிரசங்கிஎன்கிற வார்த்தையை உபயோகித்தபோதுதான் . அவர் யாரிடமிருந்து இந்த பிழை புரிதலை அடைந்தார் என்பதை அவதானித்துக் கொண்டேன் . என் பதிலில் நான் சீறுவது, வாய்ப்பை கெடுத்து விடும்மிக மிக ஆபத்தான புள்ளியில் நின்று கொண்டிருப்பதை முதல் முறை உணர்ந்ததும், இதை வேறு விதமாக கையாள நினைத்தேன் . தலைவர் கொட்ட வேண்டியதை அனைத்தும் கொட்டி முடிக்கும்வரை நிலையழிதலுடன் பொறுமை காத்தேன் . அது எனது வழமை அல்ல இருந்தும்  நான் அமைதியாக அவர் சொல்லுவதை உள்வாங்கத் துவங்கியதும் அவருக்கு மிச்சமில்லாது பேச வேண்டிய சூழல் எழுந்தது . நான் ஊடாக மறுப்போ விளக்கமோ கொடுக்கும் முயற்சி , விவாதம் என்கிற எல்லைக்குள் என்னை நுழைய வைத்து விடும் . அது தவிற்க பட வேண்டியது. அவர் பேசி முடித்தபிறகு . நான் சிறிது இடைவெளி விட்டு பேசத் துவங்கினேன்.

நான் எனது வாதத்தை ஒன்றன் பின் ஒன்றாக வைக்கத்துவங்கினேன், அது கற்றுக் கொடுத்த ஆசானிடம் நான் தேர்ச்சியடைந்து விட்டேன் என காட்டுகிற நேரம் . நான் முன்பே அனைத்தும் எப்படி எழுந்து வரும் என முன்னமே யோசித்து முடித்திருந்ததால் , அதை அடுக்கடுக்கான தர்க்க நியாயங்களுடன் , எதிர் வைக்க வாய்பபை கொடுத்து , பின் அதை ஆழமாக மறுக்கும் யுக்தி அதில் இருந்தது. அவற்றை இப்பொது மறுபடியும் மேல் கீழ் என தொகுத்துக்கொண்டேன் . நான் அவரிடம் , அவர் கோணத்தில் பேசத்துவங்கினேன் .

இளைஞர் காங்கிரஸ் நிர்வாக அமைப்பு மொத்தம் 27 உறுப்பினர்களைக் கொண்டது, பலர் அதில் செயல்பாட்டில் இல்லை. சிலர் கோஷ்டி சிக்கலால் அதுவரை நிகழ்ந்த பல கூடுகைகளுக்கு தலையைக்  கூட   காட்டாதவர்கள் , சிலர் கட்சியிலிருந்து முரண்பட்டு வெளியேற்றியவர்கள் . நான் கூட்டுகிற செயற்குழுவிற்கு எத்தனை பேர் வர போகிறார்கள் என்பது தெரியாத நிலையில் , என்னால் மெஜாரிட்டி காட்ட முடியாது போனால் முதலுக்கு மோசமாகி விடலாம் . அவர்கள் இதை பொதுவான சிக்கலாக இதை பார்க்க மாட்டர்கள். என்னை வீழ்த்த இதை ஒரு வாய்ப்பாக மட்டுமே அவர்களின் கண்களுக்கு இது தெரியும். இது இயக்கத்தை மீள எழ முடியாத பொதுச்சிக்கலில் கொண்டு விடுவதை பற்றி சற்றும் அக்கரையில்லாதவர்கள்.அதை மனதில் வைத்துக்கொண்டே உங்கள் பத்திரிக்கையாளர்கள்  கூட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன . அவை கேட்கப்பட்ட முறையிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும் , அந்த கேள்விகளை கேட்கச் சொன்னது யார் என்று

இரண்டு : செயற்குழு கூடுகையை முழு அளவில் கூட்டினால் , எந்த எதிர்ப்பும் வராது என்பதுமட்டுமல்ல, யாரும்  தனி ஆட்டம் ஆடமுடியாது எனபதை புரிந்து கொள்வார்கள்என்றேன் . அவர்அது எனக்கு தெரியாத? , எந்த அடிப்படியில் இவர்கள் உறுப்பினர் , எங்கே அதற்கான ஆதாரம் என்கிற கேள்வி எழுந்தால் , எதை காட்டுவாய்?” என பெரிதாக சபதம் எழுந்தது . மூன்று வருஷமாக என்ன பண்ணிக்கொண்டிருந்தீர்கள் . என்கிறார் நான் மௌனமாக சிரித்துக்கொண்டேன் . அது அவரை இன்னும் பற்றி எரியச்செய்யும் .

எத்தனை முறை பட்டியல் உங்களிடம் கொடுத்தேன் . நானாவது தில்லிக்கு சென்று வாங்கி வருகிறேன் என்றேன் என்னை எங்கே விட்டீர்கள்? , அதில் எனது ஆட்களை மட்டும் போட்டு விடுவேன் என நினைத்த்தீர்கள் . என்னை நம்பாததுதானே அதற்கு காரணம் '  இப்பொதுகமிட்டி நியமிக்கப்படாதது எனது தப்பு என்பதைப்போல ஆகியிருக்கிறது . நான் அங்கீகரிக்க பட்ட மாநில நிர்வாகிகளில் ஐந்து பொது செயலர்களில் ஒருவன் . இந்த கேள்வியை நீங்கள் ஒருமுறை கூட மற்ற பொதுச்செயளாரகளிடத்தோ அல்லது வல்சராஜிடம் ஏன் கேட்டதில்லை . ஐந்து பொதுச் செயளாலர்களிடம் ஒட்டு மொத்தாமாக, கேட்கவேண்டியதை என் ஒருவனிடம் மட்டும் ஏன் கேட்க்கிறீர்கள் ?”என்றேன் . இப்போதும் ஒன்றும்   குடி முழுகி போய்விடவில்லை , கூட்டத்தை தள்ளி வைத்துள்ளதாக அறிக்கை அனுப்பிவிடுகிறேன். நீங்கள் பிறதொரு பொதுச் செயளாலர் வையத்தரசை வைத்துக்கொண்டு கூட்டத்தை கூட்ட சொல்லுங்கள்என்று சொல்லிவிட்டு அவரது அறையைவிட்டு வெளியேறினேன்

பின்னல் என்னை தலைவர் கூப்பிடுவது கேட்டுக்கொண்டே இருந்தது. நான் ஏதும் காதில் வாங்கிக்கொள்ளாது  அவரது வீட்டை விட்டு வெளியேறினேன் , இது நான் திட்டமிடாதது , ஆனால் அவர் கேட்டது மிக தவறான கேள்வி , அது என்னை வெடிக்க செய்தது . நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் . இது விபரீதமான ஆட்டம் , தலைவர் என்னை மீளவும் அழைக்காது போனால் , என்கிற கேள்வி எழுந்தது . எவ்வளவோ பேர் தினமும் கட்சி அலுவலகத்திற்கு எந்த வேலையும் இல்லாது  வந்தனைகின்றனர் .அவர்களின் நானும் ஒருவன் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் . இந்த சந்தர்ப்பத்தில்தான் இதை என்னால் சரி செய்ய முடியும். அது இனி யாரும் என்னை கேள்வி கேட்க முடியாத இடம் கொண்டு விடும்.அது இன்று இல்லாமையால்தான் வலப்புறம் இடப்புறம் திரும்புவதற்கு  கூட யாரிடமாவது கேட்டுத்தான் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது  . 

நான் வீட்டிற்கு திரும்பி மறுநாள் காலை 5:00 மணிவரை நான் செய்தது முட்டாள் தனமானது என்று உள்மனம் குமைந்து கொண்டிருந்தது . அற்புதமான வாய்ப்பை கொட்டிக் கவிழ்த்துவிட்டதாக புழப்பிக்கொண்டு இருந்தது. தலைவர் சொன்னது போல நான்அதிகப்பிரசங்கித் தானோ”. இரவு முழுவதும் ஒரு குரல் மண்டைக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது . நான் இதோ அமைதியாக படுத்திருக்கிறேன் . இது யார் என்று தெரியவில்லை ஓயாது என்னை குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறது வாழ்நாள் முழுவதும் , நான் ஏன் இதனிடம் முரண்பட்டபடி இருக்கிறன் . அது சொன்னதைத் தான்  நான் வாழ் நாளெல்லாம் செய்து வந்திருக்கிறேன். சிறிதும் நன்றியில்லாதது , ஏதேதோ யோசித்திப்படியே தூங்கிப்போனேன்.

மறுநாள் காலை 5:00 மணிக்கு அலைபேசி அழைப்பு , தலைவர்தான் . எடுக்கலாமா வேண்டாமா என்கிற சிறு மனத்தடங்களை தள்ளிக்கொண்டு அதை எடுத்தேன் . தலைவர்தான் , வழைமை போலஉடனே இங்கே வாஎன்றவர் அலைபேசியை துண்டித்தார் . நான் என்ன நடந்தாலும் சரி செல்வதில்லை என முடிவு செய்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக