https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 24 ஜூலை, 2018

அடையாளமாதல் - 378 * இறுதி ஸம்ஸ்காரம் *


ஶ்ரீ:





பதிவு : 378 / 559 / தேதி : 24 ஜூலை  2018

* இறுதி ஸம்ஸ்காரம்


நெருக்கத்தின் விழைவு ” - 73
விபரீதக் கூட்டு -05 .




நான்  தில்லியில் தங்கியிருந்த போது , அங்கிருந்த முதல்வர் வைத்திலிங்கத்தை சந்திக்க நேரம் ஒருங்கும்படி நான் கேட்டுக் கொண்டதாகவும் , பாலனை தவிற்த்து விட்டு என்னை அடுத்த தலைவராக நியமிக்கபடி முதல்வரை நான்  வலியுறுத்த முயற்ச்சித்ததாகவும்  ஒரு குற்றச்சாட்டை பூங்காவனத்திடம் பாலன் சொன்னார்இதில் வேடிக்கை, தில்லியில் தங்கியிருந்த அந்த ஒரு வாரகாலம் நான் அவர் தங்கியிருந்த அதே புதுவை விடுதியில்உள்ள முதல்வரின் தனிச் செயளாலர் பாஸ்கரன் அறையில் தான் நானும்  தங்கியிருந்தேன்

பாஸ்கர் முதல்வருக்கு நெருக்கமான உறவினர் மட்டுமின்றி அரசியல் ரீதியான எல்லா முடிவுகளும் அவரால் எடுக்கப்படுவது. முதல்வரிடம் பேசுவதைவிட அவரது செயளாலரிடம் பேசுவதுதான் சரியானது என அரசியலில் உள்ள அனைவருக்கும் தெரியும்தில்லியிலிருந்த நாட்கள் முழுவதும் நான் முதல்வரை தினமும் சந்தித்தபடிதான் இருந்தேன் . அனேகமாக மூன்று வேளை உணவு அவருடன்தான்  , இதில் தனிப்பட்ட பேச்சிற்கு நேரம் ஒருங்கும்படி கேடக்க வேண்டிய தேவை எழ அவசியமில்லை

இதே குற்றச்சாட்டை  அவர் கமலக்கண்ணன் மற்றும் தாமோதரனிடம் சொன்னபோது , அகில இந்தியத் தலைமை புதுவைக்கு வர இருக்கும் சந்தர்ப்பத்தில் விழா சிறப்பாக இருக்க தனது வழமையான அரசியலை செய்கிறார் . அதன் மூலம் அவர்களை அவர்களை விழாப் பணியில்  உற்சாகப்படுத்துவதற்கு இருக்கலாம் என நினைத்தேன்பூங்காவனமும் அதையே பாலன் தன்னிடமும் சொன்னதாக என்னிடம் சொல்லும்வரை நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . பூங்காவனம் வயதால் எங்கள் எல்லோரையும் விட வயதில் மூத்தவர்

எனக்கும் பாலனுக்கு , சுப்புராயனைத் தவிர பூங்காவனம்தான் பாலமாக இருந்தார். அவர்மீது எனக்கும் பாலனுக்கும் மரியாதையிருந்தது. அவர் இந்த குற்றச்சாட்டை பாலன் ஏன் தன்னிடம் சொன்னார் என தெரியவில்லை என்று கூறி வருத்தப்பட்ட போதுதான் , பாலன் எனக்கெதிராக ஏதோ செய்ய முயற்சிக்கிறார் என மனவருத்தமடைந்தேன். இந்த பொய்குற்றச்சாட்டு ஏன் என்மீது வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. அதை கொண்டு என்ன திட்டமிடுகிறார் என விசாரிக்கத் துவங்கினேன்

மிக சமீபத்தில் நிகழ இருக்கும் பிரமாண்ட விழவிற்கு மத்தியில் இது பற்றிய விசாரனை தேவையற்ற சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதால் நான் அதற்கு இடம் தரவில்லை . விழா முடிந்ததும் அதைப்பற்றி பாலனிடம் கேட்டுக் கொள்ளலாம் என பூங்காவனம் சொன்னதும்  எனக்கும் சரியாகப் பட்டது . எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்து முடித்தேன் . இதை பற்றிய விரிவாக முன்பே சொல்லியிருக்கிறேன்.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டம் பெரிய  வெற்றியை அடைந்த பிறகு . பாலனின் போக்கு மாற்றம் கண்டது. மாநில அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவு , அகில இந்தியத் தலைமை விழாவினால் மனமகிழ்ந்தது போன்றவை காரணமாக , அமைப்பு தன்கீழ் வலுவாக தொகுக்கப்பட்டுவிடும் என்கிற மிகை நம்பிக்கை அவரது போக்கை மாற்றியிருக்க வேண்டும். அமைப்பினரை அவர் நேரடியாக சந்திப்பது நின்று பல வருடங்கள் ஆகியிருந்தது . ஆகையால் உண்மையில் அமைப்பிற்குள்  என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை . அமைப்பு மரணத்தை நோக்கி நகர்கிறது என்பது என்னால் அவதானிக்க முடிந்தது.

கடந்த காலத்தில் அமைப்பு சிதைந்து போனதற்கு பாலனின் செயலின்மையே பிரதான காரணமாக இருந்தது. நாங்கள் அமைப்பை தொகுக்க முயற்சிக்கையில் எதிர் கொண்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பாலனை எதிர்த்துத்தான் வைக்கப்பட்டன. அதற்கு இனி தான் பொறுப்பேற்பதாக அடுத்த தலைமைக்கு முன் மொழியப்பட்ட கமலக்கண்ணன் சொல்லியிருக்க வேண்டும் , ஆனால் பாலனுக்கு இணையாக கமலக்கண்ணன் மீதும் அவர்கள் கடும் கோபத்திலிருந்தார்கள் . அதனால் என்னை முன்னிறுத்தி சமாதனத்தை  துவங்கினார்கள் என்பதும், இது சுப்பராயனின் திட்டமென பின்னாளில் அவர் சொல்ல தெரிந்து கொண்டேன்

பாலன் என்னை அரசியல் ரீதியாக ஒதுக்குவது அவருக்கும் நல்லதல்ல என்பது சுப்புராயனின் எண்ணமாக இருந்தது. என்னை இறுதியாக சந்தித்த சுப்பராயனிடம்  எனது அவதானிப்பை சொன்னபோது அதிர்ந்தார். கடைசி முயற்சியாக சுப்புராயன் ஏதாவது செய்யக் கூடும் என்கிற சிறு நம்பிக்கை இருந்தது ஆகையால் பாலன் தனது பிழையை சரிசெய்து கொள்வார் என்றே நானும் நினைத்தேன். பாலனின் செயல்பாடுகளில் சுப்புராயனுக்கு முக்கிய பங்குண்டு. என்ன காரணத்தினாலோ சுபராயனால் இதில் ஒன்றும் செய்ய இயலவில்லை என நினைக்கிறேன் .

பாலன் சார்பாக நான் என்னை முன்னிறுத்துவதில் உள்ள சவால்களையும் அதனால் எழுக்கூடிய எதிர்கால சிக்கல் குறித்தும் அப்போது அறிந்திருக்கவில்லை . தலைமைக்கு சிக்கல் ,சிலருடன் சென்று அதை சரி செய்கிறோம் என்கிற அளவில்தான் நான் அதை புரிந்து கொண்டேன். ஆனால் ஒவ்வொருவராக கமிட்டி முன்பாக என்னை மட்டுமே முன்னிறுத்துவதை எதிர்கொள்ளும் போதுதான் அதன் தீவிரம் புரியத் துவங்கியது

பாலனுடன் நல்லுறவு எனக்கிருப்பதாக நான் நம்பியதால் அங்கு என்னை முன்னிறுத்தியது குறித்து எந்த அச்சமுமோ , சந்தேகமோ அடையவில்லை. மெல்ல அனைத்தும் சகஜநிலைக்கு திரும்பியது .அதன் வெளிப்பாடே அந்த பிரமாண்ட விழாவின் மாபெரும் வெற்றி . அந்த வெற்றி  அமைப்பின் இறுதித்துளி சக்தியையும் உறிஞ்சிக்கொண்டது . அந்த விழாவிற்கு பிறகு அமைப்பில் அனைவரும் அதற்கான பலன் எங்கேஎன உயிர் நீருக்காக  கூவிய போது பதில் சொல்லும் இடத்தில் ஒருவரும் இல்லை

அதன் பிறகு அமைப்பு முற்றாக உயிரிழந்து போனது. பாலன் முதல்வருடன் தனக்குள்ள நெருக்கத்தை கொண்டு மேல்மட்ட அரசியல் மும்முரமாக இருந்ததால் அமைப்பின் மரணத்தை அவர்   அறிந்திருக்கவில்லை . அல்லது தெரிந்திருந்தும் கவலையில்லை. இனி அதைவைத்து எதையும் அடைய வேண்டியதில்லை என்கிற விபரீதமான முடிவிற்கு வந்திருக்கலாம் . அமைப்பிற்கு இறுதி ஸம்ஸ்காரம் மட்டுமே பாக்கி இருந்தது அதன் மூலம் ஒரு தலைமை தன்னால்  ஒருபோதும் வெளிவர இயலாத முற்றிருளில் தன்னை செலுத்திக் கொண்டது. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்