https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 ஜூலை, 2018

அடையாளமாதல் - 380 * நெருக்கடி *


ஶ்ரீ:




பதிவு : 380 / 561 / தேதி : 27 ஜூலை  2018

* நெருக்கடி 


நெருக்கத்தின் விழைவு ” - 75
விபரீதக் கூட்டு -05 .



வல்சராஜ் தலைமையில் இயங்கிய அமைப்பின் மாநில செயற்குழு என்பது மாநில நிர்வாகிகளை கொண்ட அமைப்பு மட்டுமே. அதற்கு மாநில அளவிலான பிரதிநிதித்துவம் இல்லாதது பெருங்குறை. மாநில காங்கிரஸ் தலைவர் சண்முகத்திற்கு கண்ணன் காலத்திலிருந்தே இளைஞர் காங்கிரசின் மீது எந்த கட்டுப்பாடும்  இல்லாததால், அதில் ஈடுபட்ட யாரையும் அவர் அறிந்திருக்கவில்லை . வல்சராஜை தலைவராக நியமித்த போது அவருடன் செயல்படக் கூடிய நிர்வாகிகளாக  யாரை நியமிப்பபது என்பது தெரியாமல் , தனது அமைப்பின் நிர்வாகிகளிடமிருந்து  சிபாரிசு மூலம் அவர்கள் நியமிக்கப்பட்டாரகள் . மாநில அளவில் இளைஞர் காங்கிரஸ் தன்னை பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு மாற்று என்கிற எண்ணத்தில் செயல்பட்டதால் தொகுதி வாரியான எதிரிகளை அது வஞ்சனையில்லாமல் சம்பாதித்து வைத்திருந்தது .

தலைவரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட பெரும்பான்மையான தொகுதிகளுக்கு பிரதிநிகள் இல்லை என்பதால்தான் ,அதன் செயல்பாடுகள் இவ்வளவு காலம் முடக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து அமைப்பு வெளியேற வேண்டுமானால் . அனைத்து தொகுதிகளையும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையில் முழுமையான செயற்குழு கூட்டப்பட வேண்டும். என்பது எனது நீண்டகால எண்ணமாக இருந்ததால் , அதற்கான முன்தயாரிப்பில் நான் எப்போதும் இருந்தேன் . அதற்கான தொடர்புறுத்தலை பல காலமாக சரிசெய்து வைத்திருந்ததால் , அவர்களைக்கொண்டு ,அன்று இரவுக்குள் மாநிலம் முழுவதும் கண்ணன் , பாலன்  காலத்திலிருந்து செயல்பட்ட அனைவருக்கும் அழைப்பு அனுப்பபட்டது. செய்தி அன்று இரவே அது பற்றிக்கொண்டது.

அழைப்பு வெளியான அன்று இரவு  தலைவர் உடனே தன்னை வந்து சந்திக்க சொன்னார் . பெரு தயக்கத்தில் அவரை சந்தித்தேன் . அவர் கடும் கோபத்திலிருந்தார். இரவு என்பதால் அவர் தனித்திருந்தார் . என்னை தனக்கு அருகிலிருந்த நாற்காலியை காட்டியதும் , நான் மெளனமாக அமர்ந்துகொண்டேன் , சற்று நேர அமைதிக்குப் பிறகு ஆவேசமாக "எந்த அடிப்படையில் எல்லாருக்கும் அழைப்பு செல்லுகிறது . மாநில கமிட்டியை வைத்து மட்டும் இதை செய்து முடி என்று உனக்கு சொன்னால் நீ வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்கப்பார்க்கிறாய் என்றார் . வழமையாக அவரது சொல்லுக்கு கட்டுப்படுபவன் இப்போது அதை கடந்து வெளியேறிவிட்ட நிலையில் மிக ஜாக்ரதையாக அவரிடம் பேசத்துவங்கினேன்

சண்முகத்துக்கு என்மீது தனிப்பட்ட பிரியும் இருப்பினும் அவர்  ஜனநாயக மரபில் வந்தவர் முறைமைகள் மீறுதல் அவருக்கு எப்போதும் உடன்பாடில்லை . எந்த அரசியில் சூழதலும், அதன்  நகர்வும் முறைமைகளை உட்பட்டே நிகழ்த்த வேண்டும் என்பதில்  கறாராக இருப்பவர் . எப்போதும் அந்த இரு கோட்டின் நடுவே மட்டுமே பயணப்படுவது எவராலும் இயல்வதில்லை. துவக்கமும் அதன் முடிவும் முறைமைக்கு உட்பட்டிருந்தாலே  அது முறைமை சார்ந்ததேஎன்னை அந்த தடத்தில் வளர்த்தேடுத்தவர் அவர் என்பதால்  . நான் மிக நிதானமாக எனது தரப்பை எடுத்து வைக்க துவங்கினேன் .

சண்முகம் ஒரு அரசியல் பேய் அத்துடன் விளையாடும்போது சர்வ ஜாக்ரதையாக பேச வேண்டும் , ஒரு சிறிய தவறும் , இந்த அறிய வாய்ப்பை கெடுக்க கூடியது . எனக்கு மூன்று முக்கிய விஷயங்க நடந்தேற வேண்டும் , அதற்கு முதன்மையாக அவரது முழு அனுமதி தேவை , எங்காவது நான் விளையாடும் களம் அவர் கண்ணுக்கு தெரியுமானால் மொத்த  வாய்ப்பும் கை நழுவிப்போகும் . 

இந்த செயற்குழு கூடுகை இப்போது நடத்த அவருக்கு விருப்பமே இல்லை . அந்த கூட்டத்தின் முடிவில் கட்சிக்குள் பெரும் புகைச்சல் எழும்ப வாய்ப்பே அவருக்கு அனைத்து திசைகளிலும் தெரிந்தது , இதுவே பிறிதொரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் , இதை முற்றாக தவிர்த்திருப்பார் . பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு பிறகு , அங்கு அவரை நோக்கி கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் இந்த செயற்குழுதான் பதிலாக இருக்கும் .

அது முழு கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக நடந்தேறினால் மட்டுமே சத்திய, ஆகவே அதை தவிர்க்க இயலாது . நடத்தியே தீர வேண்டிய நிர்பந்தம் .  தில்லிருந்தும் அவருக்கும் வல்சராஜுக்கும் கடிதம் வந்திருப்பது எனக்கு தெரியும் . ஒரு செயற்குழு நடந்தது போல ஒரு பாசாங்கு வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்திருக்கலாம் . இப்போது உறுப்பினர் என்கிற பெயரில் ஊர் முழுவதும் அழைப்பிதழ் அனுப்பட்டிருப்பது அவருக்கு திகைப்பை உருவாக்கி இருந்தது , நான் அதிகப்ரசங்கியாக செயல் படுவதாக யாரோ அவருக்கு  சொல்லி இருக்க வேண்டும் அதன் கொந்தளிப்பைத்தான் நான் அவரிடம்  பார்த்தேன்.

இளைஞர் காங்கிரஸ் செயற்குழு  என்று இன்று இருப்பது தில்லி அங்கீகாரம் அளித்த மாநில நிர்வாகிகள் பட்டியல் மட்டுமே , அதன் பிறகு மூன்று வருடமாக மாவட்ட , மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் கமிட்டி நியமிக்கப்படவே இல்லை , இந்த சூழலில் இரண்டு விதமான சிக்கலை செயற்குழு கூட்டம்  எதிர்நோக்கும் ஆபத்திருக்கிறது . ஒன்று அங்கீகாரமில்லாதவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தியதாக தில்லிக்கு புகார் போகும் . அது மேலிடப்பாரவையாளர்கள் புதுவைக்கு வரவழைத்து கூடும் .

மேலிடப்பார்வையாளர்கள் புதுவைக்கு  வரும்போது மட்டும் வெத்து லெட்டர் பேடு தலைவர்களின் ராஜ்யம் கையோங்கி விடும் , மீண்டும் அந்த பரபரப்பு ஓய நீண்ட காலம் பிடிக்கும் . சில முறை அது எழுந்து விட்டால் பின் அனைப்பது கடினம் . தமிழக காங்கிரஸ் சீரழிந்ததற்கு இத்தகைய கட்டுப்படுத்த முடியாத வெத்து அறிக்கை தலைவர்களே காரணம் . சண்முகத்தால் அது முற்றிலுமாக புதுவையில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது . இந்த சந்தர்ப்பம் அதை துவங்கி வைக்கும்  விபரீதம் நிகழ்ந்து விடலாம் . இரண்டு ,பட்டியலில் இல்லாத அழைப்பாளர்களுடன் சம்பந்தில்லாதவர்களின் உள்நுழைவு கைகலப்பில் கூட முடிந்து பின் ஒருபோதும் கூட்ட முடியாதபடி கமிட்டி முடக்கி வைக்கப்படும்  ஆபத்தும் எழலாம். . இது ஒருநாள் மாநில தலைவர் என்கிற முறையில் சண்முகத்தை நேராடிய குறி வைத்துவிடும் . நான் திட்டமிட்டு இதை செய்திருப்பது அவரை நிலையிழியச்செய்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்