https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 7 ஜூலை, 2018

அடையாளமாதல் - 362 * கலைந்த கருத்தியல் *

ஶ்ரீ:




பதிவு : 362 / 543 / தேதி :- 07 ஜூலை  2018


* கலைந்த கருத்தியல்  *



நெருக்கத்தின் விழைவு ” - 56
விபரீதக் கூட்டு -04.





கண்ணன் தனக்கான இடத்தையும், மதிப்பையும் அதற்கான விலையையும் தெரிந்து வைத்திருந்ததால்  . தன்னை மிக சிறந்த அரசியல் முதலீடுகளுக்கு உட்படுத்திக்கொண்டார் . அவரை பயன்படுத்த நினைத்தவர்களை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் வினோதம். தன்னை யாரும் பயன்படுத்திக்கொள்ள அவர் அனுமதிக்காது ஒரு முழுமையான அரசியலனாக அவர் முழு பரிமாணத்தை அடைந்தார்.அவரின் அரசியல் என்பது பலரின் விழைவில் இருந்து எழுந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்கொண்டது மட்டுமே

அவரது அரசியல் யுக்தியை புரிந்துகொள்ளாத பல மூத்த தலைவர்கள் அவரது அரசியலுக்கு படிக்கற்கலாயினர் . அவர்களில் ஒருவர் சபாபதி . அன்று தொடங்கிய ஆட்டத்தை அவர் இன்று வரை விடவில்லை போலும் .கண்ணனை வளர்த்து அதற்கு விலையாக அமைச்சராகும் தனதுவாழ்நாள் விழைவை  கண்ணனிடம் பிறகு பாலனை வளர்க்கிறேன் என்று மீளவும் தனித்து கனவை  பறிகொடுத்தார் . இப்போது வையத்தரசு அளவிற்கு இறங்கி வந்திருக்கிறார் . நான் இதை சபாபதியை அரசியல் வீழ்ச்சியாக பார்க்கிறேன்

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி மூத்தவர்கள் கருத்தியல் ரீதியான உரையாடல்கள் வழியாக அவர்கள் அனைவரும்  ஒன்றினைத்திருந்தார்கள் . அவர்களுக்கு எதிர்காலம் குறித்து பெரிய கனவும் அதில் நம்பிக்கையும் இருந்தது . நாங்கள் அவர்களை அன்னார்ந்து பார்த்த காலம் அது . நாங்கள் விவாதமும் , உரையாடல்களுமாக இரவு பகலாக அவர்கள் வளர்த்தெடுத்ததை பார்த்து அரசியலை புரிந்து கொண்டவர்கள் . அவர்களை அனைவரும் வளர்ந்து வந்தது அந்த சூழலை ஒட்டி எங்களை முறைமை படுத்திக் கொண்டோம் . ஆனால்  கண்ணனின் அமைச்சரவை நுழைவுஅவர்களின் கருத்தியல் ஒரு கனவு மட்டுமே என்றும்  அங்கிருந்து எதற்கும் பாதைகள் இல்லை என்கிற உண்மை அவர்கள் அனைவருக்கும் ஒரு திடுக்கிடலை கொடுத்திருக்க வேண்டும்.

 பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை கருத்தியல் ரீதியாக உரையாடி வளர்ந்த  குழுவின் உறுப்பினர்கள் அமைச்சரான பிறகு கண்ணனின் செயலபாடு மாற்றத்தினால் மன வருத்தமுற்று பிரியத்தொடங்கினர் . அந்த குழுவில் ஒருவர் சபாபதி . ஆனால் அவரை கருத்தியலின் தாக்கம் கொண்டவராக நான் பார்த்ததில்லை . அந்தக் குழுவில் அவர் ஒரு மௌன பார்வையாளர் மட்டுமே . அனைத்து கருத்துக்களும் தன்னுடைய சிந்தனை ஒத்தது என்கிற புரிதலை அடைந்தாலும் , புதிதாக ஒன்றை கண்டடைவதோ , அல்லது கருத்துகளை தனக்குகந்ததாக மாற்றம் செய்து கொள்வது அவரால் இயலாதது  . கிடைத்த பழைய கருத்தியலை இன்னும் உயிர்போடு வைத்திருப்பதை தவிர அவரால் இயன்றது பிறிதொன்றில்லை. அன்று அந்த கருத்தியல் அவருக்கு கற்பித்தார்கள் இன்று அதை நம்புவதில்லை என்கிற உண்மையை அவர் ஒரு நாளும் அடையப்போவதில்ல.

இந்த மனோபாவம் இளைஞர் காங்கிரசின் மீது அவருக்கிருந்து காதலிருந்து விலக்களிக்வில்லை ,அல்லது எனது மீதிருந்த பழைய காழ்ப்பு அவருக்கு இன்மும் ஒரு முள்ளென உறுத்திக்கொண்டிருக்கிறது . இந்த இரண்டில் ஒன்று என நினைக்கிறேன்.

இப்போது வையத்தரசுடன் வந்திருக்கும் அவர் , என்னை பற்றிய ஏதாவது ஒரு குற்றச்சாட்டை எப்போதும் சண்முகத்திடம் முன்வைப்பவர் . இப்போது  கட்சியைவிட்டு ஓடிப்போனவர்களின் செய்கைக்கு என்னை என்ன காரணம் சொல்லி பழிக்கப்போகிறார் என காத்திருந்தேன் . சூர்யநாராயணன் சொன்னது போல இதை எனது கோணத்திலிருந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும் , என்ன நிகழ்ந்தாலும் பொறுமையை இழப்பதில்லை என்கிற தீர்மானத்தை சொல்லிக்கொண்டேன். சபாபதி அல்லது வையத்தரசு ஏதாவது பேசும் வரை நான் ஏதும் சொல்லுவதில்லை என்கிற உறுதியுடன்  அன்றைய பேப்பரை பார்த்துக்கொண்டிருந்தேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்