https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 12 ஜூலை, 2018

அடையாளமாதல் - 367 * நம்பிக்கையின்மை *

ஶ்ரீ:




பதிவு : 367 / 548 / தேதி :- 12 ஜூலை  2018

* நம்பிக்கையின்மை


நெருக்கத்தின் விழைவு ” - 61
விபரீதக் கூட்டு -04.



பாலன் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் இளைஞர் அமைப்பில் ஏற்பட்ட வெற்றிடமும் அதை  தொடர்ந்து நிகழ இருக்கும் பின்விளைவுகளையும் பற்றி யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை . காரணம் பலவித பொறுப்புகளுக்கு  வந்திருப்பவர்கள் அனைவரும் உதிரிகள் . யாருடனும் தங்களை இணைத்துக்கொள்ளாதவர்கள். எவ்வித கருத்தியலும் இல்லாதவர்கள் . தன்னை பற்றிய சிந்தனையைத் தாண்டி , வேறு ஒரு உலகம் இருப்பதை அறியாதவர்கள் . அமைப்பை சரி செய்யக்கூடிய கடைசி வாய்ப்பு , சண்முகம் தலைவராக இருக்கும் வரை மட்டுமே . அது இப்போது செயலிழந்து போனால் பின் எப்போதும் இயலாது என்பது மட்டுமின்றி . அது உருவாக்கி எடுக்கும் மேல் கீழ் என்கிற கட்டுப்பாடு மிக்க அடுக்கு எழுந்து வராமலேயே போய்விடும் . அரசியலில் வளர்ந்து விட்டவர்களுக்கு அதைப்பற்றிய அக்கரை இல்லாமல் இருக்கலாம், ஆனால் இது எங்களின் அரசியல் வாழ்வின் கதவுகளை முற்றாக மூடுவது. அந்த சிஷ்ய பரம்பரை அழிந்து போனால் மாநில அமைப்பு வெகு விரைவில் அழிவை சந்திக்கும் என்பது யதார்த்தம் .

பாலன் வெளியேறி சுமார் ஒரு வருடத்திற்கு பிறகே வல்சராஜ்  தலைவராக நியமிக்கப்பட்டார். இளைஞர் கங்கிரஸ் இயக்கம் அதன் அன்னையான பிரதேச காங்கிரஸிற்கு நாற்றங்கால் போலே , அனைத்து கட்ட தலைவர்களுக்கு தலைமைப் பயிற்சி கொடுக்க உருவாக்கப்பட்ட களம் . உட்கட்சி சிக்கலை உருவாக்கிய கண்ணனின் அதிதீவீர எதிர்நிலை செயல்பாடுகள் , மற்றும் பாலன் தனது அரசியல் போதாமையல் மைய இடத்திற்கு வர இயலாமல் விலகிப் போனது போன்றவை , அமைப்பை தவறான திசைக்கு அழைத்துச் செல்ல வைத்துவிட்டது  . அவரது செயல்பாடுகள் பிரதேச கங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டு பிறரின் தூண்டதலின் பொருட்டு தலைகைக்கு குடைச்சல் கொடுப்பது மட்டுமே என தாழ்ந்து போனது .

சண்முகத்திற்கு அது ஒரு கட்சியின் உடலில் தேவையற்று ஒட்டிக்கொண்டிருக்கும் உருப்பு , அதை வெட்டி எறிய முடியாது ஆனால்  செயலிழக்கச் செய்வது அவரால் இயல்வதுமாணவர் அமைப்பு அதுபோல செயல்பட முடியாத உறைநிலைக்கு அவரால் கொண்டுபோகப்பட்டது . இதில் திருப்பம் எனது திடீர் நுழைவு

தலைவருக்கு எனது செயல்பாடுககள் மீது நம்பிக்கை கொள்ளச்செய்யும் அதே நேரம் , அமைப்பு வளர்ந்தால் அதை என்னால் கையாள முடியுமாஎன்கிற சந்தேகம் எழுந்திருக்கலாம் . அல்லது நானே அவருக்கு கட்டுபடாத தலைமையாக உருவெடுக்கலாம் என நினைத்திருக்கலாம். எனவே அது ஒரு கட்டுக்குள் இயங்கினால் போதும் என்கிற நிலைப்பாடு அவருக்கு கடந்த கால அனுபவத்தினால் கிடைத்திருந்தது  . மிகை வளர்ச்சி வேண்டாம் என்பதில் தலைமை தெளிவாக இருந்திருக்க வேண்டும்  . அதன் விளைவாகவே எனது ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன . தலைமையின் பாரமுகமோ அல்லது மறைமுகமான ஆதரவோஏதோ ஒன்று எனது எதிர்ப்பாளர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

மாநில அமைப்பு ஓர் அணியாக திரளாததற்கு அவரின் இந்த மனநிலை காரணமாக இருந்ததிருக்கலாம் . இது பிற மாநில நிர்வாகிகளுக்கு நான் தலைவருடைய விருப்பம் மற்றும் அனுமதி இல்லாமலேயே என்னை வளர்த்தெடுக்க முயலுவதாக பிழைபுரிதலை அடைந்தனர் . ஆனால் நான் எனது ஒவ்வொரு செயலையும் தலைமையின் அனுமதியுடன்தான் நிகழ்த்திக்கொண்டிருந்தேன் என்பதுதான் வினோதம் .

அவரின், அரசியல் சமன்பாடுகள் நான் அங்கீகரிக்கப் பட்ட தலைவராக பார்க்கப்படுவதை தலைமை அதுவரை நேரடியாக யாருக்கும் தெளிவு படுத் வில்லை , இவ்வளவு சிக்கலுக்கும் இதுவே முதல்மையான காரணம் . இது எல்லா தலைமையும் செய்யும் அரசியல் கோட்பாடுதான் , யாரையும் அது முயன்று பெரிதாக வளர்த்தெடுக்காது .  

இது சுழல் , இதிலிருந்து சுய முயற்சியில் வெளிவராது போனால் நான் தலையெடுக்கவே முடியாது . இன்று நான் இங்கு வந்து சேர்ந்ததற்கு எனது திட்டமிடல் காரணமில்லை . நான் இருக்குமிடம் தெரியாது இருக்கவே விரும்பினேன்  . காரணம் இளந் தலைவர்களை கட்டுக்குள் வைக்கும் அரசியல் ஆட்டத்தில்  எனக்கு விருப்பமில்லை என்பது முதன்மையான காரணம் . பாலனுடன் முரண்பட்டு தனிவழி காண முயன்றபோது கிடைத்த அனுபாவமும் ஒரு வாழ்நாளுக்கு போதுமானது . அதை போல ஒன்றை எக்காலத்தும் முயற்சிப்பதில்லை  என்பதில் நான் உறுதியாக இருந்தேன் .   வளரும் இளந் தலைவர்களின்  மீது இருந்த  நம்பிக்கையை முற்றாக இழந்து போயிருந்தேன் . அதன் விளைவாக ஒரு கட்டத்தில் அரசியலிலிருந்தே வெளியேறினேன் . கால சூழல் என்னை மீளவும் அதே புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தும் என நான் அதுவரை கருதியிருக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்