https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

அடையாளமாதல் * சிக்கலான கணக்கு *

 


ஶ்ரீ:



பதிவு : 609  / 799 / தேதி 27 பிப்ரவரி  2022


* சிக்கலான கணக்கு



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 07.





காங்கிரஸில் கட்சி அரசியல் எப்போதும் புரிந்து கொள்ள கடினமானதும் விசித்திரமானதுமாக உணர்ந்திருக்கிறேன். தலைவர்கள் தொண்டர்கள் இணைவு அனுக்கம் என எதுவும் இங்கு நிகழ்வதில்லை . அதை ஓராளவிற்கு முயற்சித்தவர்கள்மாநில அரசியலை ஒட்டி செய்தவர்களே. அவர்களே அதை வெற்றிகரமாகவும் நிர்வகித்தவர்கள் . அதை செய்ததினால் அதற்கான விலையை கொடுத்தார்கள். அவர்களுக்கு நிகழும் ஒரு சீண்டல் அவர்களை அதை நோக்கி செலுத்துகிறது .அரசியல் சூழ்தலில் மிக ஆபத்தான இடமாக தலைவர்களால் கருதப்படுகிறது.தலைவர்களின் தலைவர்கள் தங்களை எண்ணி பிரமிக்கும் சிலர் தில்லி மேலிடத்திற்கு அணுக்கமானவர்களாக அறியப்பட்டவர்கள். மிகப் பெரும்பாலும் மக்கள் செல்வாக்கில்லாதவர்கள். ராஜ்யசபை உறுப்பினர்களாகி பின்னால் இருந்து கொண்டு ஒரு செயல் எத்திசை நோக்கி செல்லவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். துரதிஷ்டவசமாக காங்கிரஸை இவர்களே ஆள்கிறார்கள். அவர்கள் இயங்கும் விதம் வேறுவகையான அலகில் இருந்து உருவாகின்றனகுறைவாக அறிந்திருப்பதனால் பலருக்கு புரியும் எளிய உண்மை என்பதுடன் சாமானியன் ஒருவனுக்கு இருக்கும் தெளிவு இவர்களுக்கு இருப்பதில்லை. அரசியலில் உள்ளுணர்விற்குத் தான் எப்போதும் தனித்த இடமுண்டு . அதுவே அனைத்தையும் கொண்டு செல்லும் மைய விசை. ஆனால் அவற்றை ஒருங்கிணைக்கும் மையத் தலைமை அனைத்தையும் தரவுகளில் இருந்தே முடிவு செய்கிறது . ஊகங்களில் செயல்பட முடியாது என்பது புரிந்து கொள்ளக் கூடியது . ஆனால் யதார்தத்த நிலை , ஊகம், உள்ளுணர்வு இவற்றை இணைக்கும் ஒரு மெல்லிய சரடைப்பற்றி ஒன்றுடன் ஒன்றை தொடர்புறுத்கிற இடத்தில் சொந்த கணக்குடன் வந்து அமர்பவர்கள் முழு கவனத்தையும் மிக துல்லியமாக திசை திருப்ப இயலும்


தங்களது நேரத்தை மற்றும் பொருளியல் பலத்தால் ஒரு கட்டத்தில் தொண்டர் திரள் பலமுள்ளவர்களை நெட்டி வெளியே தள்ளி விடுகிறார்கள். இதில் வினோதம் கட்சி கட்டுப்பாடென உரத்த குரலில் பேசும் அவர்கள் சற்றும் கூச்சமில்லாமல் தங்களின் அரசியல் லாபத்திற்காக ஒரு கட்டத்தில் கட்சியை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். மக்கள் செல்வாகுள்ள அனைவரையும் இவர்களைப் போன்றவர்கள்  சிதைப்பதால் கடசி கானாமலாகிறது . காங்கிரஸில் தலைவர்கள் பதவி பெற மட்டுமே கடுமையாக உழைக்கிறார்கள் , ஆட்சிக்கே வாய்ப்பில்லாத தமிழகத்திலும் அதுவே நிலை. பதவி அனைவரையும் ஒருங்கிணைத்து தன் பின்னால் கொண்டு நிறுத்திவிடும் என நம்புகிறார்கள் . ஒருவகையில் ஒரு சிறு பகுதி உண்மை . பதவி அடைந்தவர்களை முதல் நிலை மற்றும் குழுத் தலைவர்கள் வந்து சந்தித்து தங்கள் இடங்களை உறுதி செய்து கொண்டு போவதால் பதவி தங்களுக்கான முற்றதிகாரத்தை வழங்கி விடுகிறது என்கிற நிறைவு கொள்கிறார்கள் . ஆனால் தலைவர்களை சந்திப்பவர்கள் ஒருபோதும் தொண்டர் நிரைக்கு சென்று சேர்வதில்லை அவர்களைப் பிரதிநிதிப் படுத்துவதுமல்லை . அவர்களுக்கு மத்தியில் இவர்கள் இளிவரல் மனிதர்கள். அது ஒரு பிளவு அந்த இடைவெளியை கள செயல்பாடால் தவிற பிற எதனாலும் நிரப்ப முடியாது . தங்களை ஒருபோதும் யாரும் கட்சி அரசியலுக்குள் கொண்டு வைப்போவதல்லை என்கிற உண்மை அவர்களுக்கும் தெரிந்தே இருக்கிறது . கட்சி செயல்பாடு என்பது தொண்டர்களையும் கட்சியையும் எந்த வகையிலும் ஒருங்கமைக்காத தலைவர்களின் பிறந்த, இறந்த நாளைக் கடந்து எவையும் நிகழ்ந்ததில்லை . அவை பறவை கூட்டம் போல கூடிக் கலைபவைகள். எந்த தடயத்தையும் அவை விட்டுச் செல்வதில்லை. துரதிஷ்ட வசமாக இந்தியா முழுவதிலும் இதுவே நிலை. எனக்கு அவற்றைக் கடந்த ஒரு கனவிருந்தது . அனைவரையும் தொடர்புறுத்துவது அவர்களுக்குள் தொடர்ந்து நிகழ வேண்டிய உரையாடல் குறித்தும் பெரிய திட்டமிருந்தது . கூட்டுறவு சங்கம் பற்றிய முழுப் புரிதல் அடைந்தது மஹே சென்று வந்த பிறகு . அங்கிருந்து சென்னை நபார்டு வங்கி மேலாளரை சந்தித்து வந்தது பெரிய திறப்பைக் கொடுத்திருந்தது . தெளிவான திட்டமும் அதைவிட அனைத்தையும் உடனே துவங்க வேண்டுய அவசரமும் இருந்தது . எந்த நிமிடமும் ஆளும் திமுக அரசு கலைந்து விடும் அல்லது ஆட்சி மாற்றம் மிக அருகில் நின்றுப்பதாக அஞ்சினேன் . இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்ப்பு ஒன்றுமில்லாது அதைவிட சிக்கல் மிகுந்தது ஆட்சி மாற்றம் . அது மட்டுமே இதுவரை நான் கட்டமைத்தவற்றை துளி மிச்சமால்லாமல் கலைத்து வீசக் கூடியது


திமுக தலைமையில் அமைந்த ஆட்சியில் உள்துறை அமைச்சர் கண்ணன் மனதளவில் அரசை விட்டு முழுமையாக வெளிவந்துவிட்டருந்தார். மூப்பனாரின் தமாக வின் புதுவை கிளையாக தன்னை அறிவித்துக் கொண்டதால் அவரது வெளிப்படையான ஆதரவு கண்ணனுக்கு தேவையாயிற்று . அவர் தன்னை முதன்னிறுத்தி தேர்தலை சந்திக்காதது முதன்மைக் காரணம் . அவர் தன்னை முன்னிறுத்தி இருந்தால் திமுக கூட்டணி சாத்தியமில்லை . கூட்டணி சார்பாக புதுவைக்கு வந்த கருணாநிதி கண்ணனை பற்றிநக்கலடித்துவிட்டு போனார். கண்ணன் எப்போதும் திரண்டெழுந்த தலைவர்களுக்கான தலைமை ஏற்றதில்லை . அது அவருக்கு தெரியாதது. அவரது அரசியல் பாணியும் அதுவல்ல . ஒரு முற்றதிகாரம் இல்லாது வேறு எதிலும் சென்று அமையாதவர் . ஒரு வகை சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் . இருந்தும் இப்போது வெற்றி அடையப்பட வேண்டியது . அந்த சூழலிலை மிக நுண்மையாக பிண்ணியிருந்தார். அதனடிப்படையில் பல ஆளுமைகள் அவருடன் கட்சியல் இணைந்தார்கள் ஆனால் அவர்களின் மேல் கண்ணனுக்கு முற்றதிகாரமில்லை என்பது அதன் நிழல் செய்தி . கண்ணன் சுயேட்சையாக அறிவிக்கப்பட்தின் பின்னணி என்னவாக இருந்தாலும் அரசியல் ரீதியில் அது ஒரு நுட்பமான ஆடலாகவே அனைவராலும் பார்க்கப்பட்டது . அன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது


தேர்தல் ஆனையம் அனைத்து அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு நேரம் ஒதுக்கித் தந்து கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்தியது . தொகுதி எண்களின்படி காசுக்கடைக்கு அடுத்ததாக காந்திராஜின் ராஜ்பவன் தொகுதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது . இறுதிநாள் மதியம் 3:00 மணி என்பதால் நகரப் பகுதியை சேர்ந்த 6 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமாக கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முட்டித்ததும்பிக் கொண்டிருந்தது . காசுகடை சார்பாக கண்ணனின் இரண்டாம் அணித் தலைவர்களின் நிரை பதட்டத்துடன் தேர்தல் வாசல் அருகில் நின்று கொண்டிருந்தது  . காங்கிரஸ் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்யவேண்டிய அலுவலகத்தின் மைக் வழியாக பலமுறை அழைக்கப்பட்டும் ஜோதி நாராயணசாமி அங்கில்லாதவராக தோன்றினார். அவரை சுற்றி அவரது ஆதரவாளர்கள் சிறிய குழு நின்றிருந்தனர் . நானும் காந்திராஜும் தேர்தல் அலுவலகத்திற்கு சற்று முன்னதாக வந்திவிட்டிருந்தோம். எங்களுக்கான அழைப்பு இன்னும் வரவில்லை

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

அடையாளமாதல் * எதற்கும் உத்திரவாதமில்லை *

 



ஶ்ரீ:



பதிவு : 608  / 798 / தேதி 22 பிப்ரவரி  2022


* எதற்கும் உத்திரவாதமில்லை



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 06.



தலைவர் சண்முகம் தனக்கிருக்கும் ஜனநாயக நம்பிக்கையை உறுதியாக எப்போதும் முன்வைப்பவராக பாரத்திருக்கிறேன் . ஆனால் அதில் அவர் மிக ஆழமான சிக்கலான அனுகுமுறையாக அதை வைத்திருந்தார் . அவரது பாணியாக இருக்கலாம் அல்லது நீண்டகாலம் ஒரு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்ததனால் அடைந்த புரிதலினால் இருக்கலாம் , அவர் தனது வெளிபடுத்துதலை அப்படி அமைத்துக் கொண்டிருக்கலாம். அதற்கு பின்னால் இருப்பது  எச்சரிக்கை உணர்வு அல்லது திரும்ப இயலாத சுழலில் சிக்கிக் கொள்ள விரும்பாதவரின் பாதையாகவும் இருக்கலாம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி அரசியல் நாடு முழுவதிலும் உள்ள பல பண்பாட்டு கலாச்சார மொழி மதம் என பல அலகுகளாக அடுக்குகளாக இணைந்தும் பிறிந்தும் கிடப்பவைகளைகட்சி அரசியல்என்கிற கருதுகோளில் இணைக்கிறது என்பதால் அதன் நம்பிக்கையை அரசியல் செயல்பாட்டை எவரும் ஒற்றைப்படையாக வகுத்துக் கொள்ள இயலாது . அரசியல் செயல்பாட்டிற்குள் வரும் தலைவர்கள் முன்முடிவுடன் அங்கு வந்து அமர்ந்தாலும் முரணியக்கம் வழியாகவே அங்கு முடிவுகள் எட்டப்படுகின்றன . யாரும் யாருக்கும் எந்த உறுதிமொழியும் கொடுக்க இயலாது என்பதே முதன்மை சிக்கல். அது இல்லாமலாகியது முதன்மை பிழை இன்றைய கட்சியின் இழிநிலைக்கு . தலைவர்கள் தங்கள் தரப்பை வைத்தாலும் அன்றைய அரசியல் தலைமையில் நிகழும் அதிகார சமன்பாடு ஊசல் தலைவர்களுக்கு இடையேயான கருத்தியல் வேறுபாடுகள் போன்வை அந்த முடிவை தீர்மானிக்கின்றன. மிகப் பெரும்பாலும் யாரும் எதிர் நோக்காத அறியா புள்ளியில் அவை முடிவாகின்றன என்பதால் காங்கிரஸ் கட்சி அரசியலில் ஒன்றை எண்ணி துவக்கிவிட முடியாது . இங்கு யாரும் யாருக்கும் எக்காலமும் எந்த உத்திரவாதத்தை கொடுப்பதில்லை. தனது சொல்லுக்கும் ஆளுமைக்கு உகக்காதவைகள் நிகழக்கூடும் என அனுபவம் உள்ளவர்கள் , பிறர் எதிர்பார்க்கும் எதையும் முடிவாகும் தருணம் வரை கொடுக்க முடியாது . காமராஜரின் புகழ் பெற்ற வரிஆகட்டும் பார்க்கலாம்என்பது அதிலிருந்து உருவாகி வந்தது . அகில இந்திய தலைவராக அமர்ந்தவர் எங்கோ சிக்குண்டு கட்சியில் இருந்து வெளியேறினார் .கூச்சமுள்ளவர்களின் வழி இது . இடத்திற்கு தக்கவாறு தங்களின் நிலைகளை மாற்றிக்கொள்ள கூச்சமில்லாதவர்கள் அஞ்சுவதில்லை.


சண்முகத்திடம் அனைவரும் விவாதிக்க முறையிட வசைபாட என அனைத்திற்கும் சலைக்காமல் இடம்மளிப்பவராக இருந்தார். வருபவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதே திசையில் அவரும் திரும்பி அமர்ந்து கொள்வார். வந்தவர் புரிந்து மிக சிக்கலான இடமாக அதை மாற்றுவதைக் குறித்து அவர் கவலை கொண்டதில்லை. பலன்  வந்தவர்கள் தங்களின் கருத்தையே அவரும் கொண்டிருப்பதாக பிழையாக நினைத்துக் கொள்ளச் செய்வார் . அது ஒரு விளையாட்டைப் போல மிக தீவிர முகத்துடன் சிரிக்காமல் இருப்பார் . இந்த ஆடலை என்னைப் பற்றிய அனைத்து புகாருக்கும் சலைக்காமல் செய்து வந்தவர்களை குழப்பி எனக்கு மேலும் சிக்லை கொடுப்பார். அவர் தனக்கென உறுதியான நிலைப்பாட்டை தன்னுடன் தர்க்கித்துக் கண்டடைந்த பின் எந்த மாறுபாடையும் செய்து கொண்டதை பார்த்ததில்லை.


முடிவெடுக்கும் முன் நிகழும் ஊசலின் நடுவில் வலுவாக ஒன்றை வைத்தால் அது பல நேரங்களில் அவரிடம் எடுபடுவதை பார்த்த அனுபவம் உண்டு. உரையாட வருபவரிடம் அவருக்கு இரண்டு விதமான அனுகுமுறையை பார்த்திருக்கிறேன் இரண்டும் சிடுக்கானவை . அதில் சிக்கி ஏமார்ந்தவர்பளே அதிகம் . ஒருமுறை முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயகுமார் தமகா வில் மிகவும் மனம் கசந்திருந்த நேரம். ஊசுடு பெருமாள் என்னிடம் தேனீ ஜெயகுமார் தன்னை வந்து சந்திக்க சொன்னதாக என்னிடம் கூறினான். அவர் கட்சியில் இருந்து வெளியேறும் மனநிலையின் இறுதிக் கணத்தில் இருந்தார் . நிறைய பேசினோம் . நான் அவரிடம் இதுவே காங்கிரஸிற்குள் வர மிகச் சரியான நேரம் என்றேன் அவரும் அதே கணக்குடன் இருந்தார் . மிகத் தீவிரமாக இப்போது இணைந்தால் அவரை முன்நிறுத்து நிகழ இருக்கும் மாற்றம் குறித்து விவாக பேசினேன். மிகுந்த தயக்கமுள்ளவராக பல கணக்குகளுக்கு மத்தியில் இழுத்துக் கட்டபட்டவர் எல்லா திசைகளை நோக்கி செலுத்தப்பட்டிருந்தார் . இப்போது தேவை ஒரு சிறிய உந்துதல். நான் அதைத்தான் அங்கு செய்ய வேண்டி இருந்தது


தலைவர் சண்முகத்துடன் ஒரு ரகசிய சந்திப்பு . பின் காங கிரஸில் இணைவது மட்டுமே மீதமுள்ளது . மற்றபடி கட்சி ரீதியிலான அமைப்பை அவருக்காக ஒருங்கிக் கொடுப்பது எனது வேலை . நான் அவரிடம் திரும்ப திரும்பச் சொன்ன ஒரே விஷயம்சண்முகத்துடன் எந்த பேச்சு வார்தையும் வேண்டாம் . அவர் அதை நோக்கித்தான் அழைத்துச் செல்வார் . முற்றிலும் தவிற்க வேண்டிய ஒன்று . நான் நீங்கள் இணைவது பற்றி சொல்லிவிட்டேன் . அவருக்கு முழு சம்மதம் . நீங்கள் இணையும் நாள் குறித்து மட்டும் பேசி வெளியேறிவிடுங்கள் மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” . மறுபடியும்சொன்னேன் உரையாடலுக்கு சந்தர்ப்பமே கொடுக்காதீர்கள் பேச்சு இணைப்பு இணைப்பு என்பதாக மட்டும்என்றேன் அவருக்கு புரிந்தது . தலையசைத்துக் கொண்டார். என்னையும் உடனிருக்கச் சொன்னதற்கு நான் உறுதியாக மறுத்துவிட்டேன் . இது இருவருக்குள் மட்டும் நிகழும் சந்திப்பு . நான் அங்குதான் இருப்பேன் நீங்கள் பேசி வெளியேறும் முன்பாக அங்கு வந்து விடுவேன் என்றேன்.


அவர் நாள் கிழமை எல்லாம் பார்த்து அடுத்த நாள் மதியம் 12:00 மணி என்றார். சொன்னபடி மிகச் சரியாக தலைவர் வீட்டிற்கு வந்து விட்டதாக தலைவருடன் பேசி கொண்டிருப்பதாக சமையற்கார நாராயணன் சொன்னான் . நான் முன்பே தலைவரிடம் அவர் வருவது பற்றி சொல்லியிருந்தேன். அவர் நம்பிக்கையின்மையுடன் உதட்டைப் பிதுக்கினார் . நான் தலைவர் வீட்டிற்று சென்றபோது மணி 12:30 தேனீ ஜெயகுமாரின் கார் தலைவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது . எனக்கு ஏதோ சரியாகப் படவில்லை. 12:45 க்கு தேனீ ஜெயகுமார் வெளியே வந்தார் முகம் பிரகாசமாக இருந்தது . என்னை பார்த்துக் கை குலுக்கி நன்றி சொன்னார். தலைவரிடம் விரிவாக பேசியாதக சொன்னார். தலைவர் இது சரியான நேரமில்லை சிறிது காலம் காத்திருக்க சொன்னார் என்றார் . தனக்கும் அதே குழப்பம் இருந்ததாகவும் இப்போது தீர்ந்து விட்டது . நீ தான்  வேகப்படுத்தி விட்டாய் இருந்தாலும் தலைவரிடம் பேசியது மனதிற்கு தெம்பாக இருந்தது என் கூறி விடைபெற்றுச் சென்றார் . நான் மனதிற்குள் நொந்து கொண்டேன் அரை சிரிப்புடன் அவரை வழியனுப்பி வைத்தேன் . சிறிது நேரம் கழித்து தலைவரை பார்த்த போது அட்டகாசமாக சிரித்து கொண்டுநான் அப்பவே சொல்லல்ல இவர் ஸ்திரமில்லாதவர்என்றார் . நான் தலையில் அடித்துக் கொண்டேன் . சில காலம் கழித்து தேர்தல் சமையத்தில் பலர் இணைந்த போது அவரும் எந்த ஆரவாரமும் இன்றி இணைந்தார் . அவர் என்ன இழந்து போனார் என்பது அவருக்கு இன்றுவரை தெரியாது .

புதன், 16 பிப்ரவரி, 2022

அடையாளமாதல் * மாயவெளி *

  


ஶ்ரீ:



பதிவு : 607  / 797 / தேதி 16 பிப்ரவரி  2022


* மாயவெளி



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 05.





ஓவியரான வல்சராஜ் அழகியல் பார்வையைக் கொண்ட நவீன மனம் கொண்டவர் . தனது அனைத்து செயல்பாடுகளில் அந்த அழகியலை எப்போதும் முன்வைக்க தயங்கியதில்லை . அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது காவல் நிலையம் கட்டிங்கள் குருதி வடிவ மூர்கக் கட்டுமானத்தில் இருந்து மாற்றமைடந்தது, மறுவடிவமைப்பில் அவரின் பங்கு மிக அதிகம் . மரபும் நவீனமும் கலந்து கலவை , சற்றே கேரள பாணி ஓடும் மரத்த தூண்களுமான அமைப்பை கொண்டவையாக அவை உருமாறின . சண்முகத்திடமும் அழகியல் பார்வை இருப்பதை பார்த்திருக்கிறேன் அவை ரசனை சார்ந்ததாக சற்று மரபை நோக்கிய மனச்சாய்வை கொண்டதாக அறியமுடியும். வல்சராஜ் அவரின் வேறொரு வடிவம். கேரளப் புகுதியை ஒட்டி உள்ள மஹே அரசியல் களத்தில் தேர்தல் சுவர் ஓவியங்கள் வரைபவராக சண்முகத்திற்கு அறிமுகமானார் . அவரின் அரசியல் ஆர்வம் சண்முகத்தால் அவர் அரசியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் . ஒருவகையில் சண்முகத்தால் கண்டெடுக்கப்பட்டவர் . குருசிஷ்ய மரபிற்குள் வந்த அவரிடம் சண்முகத்தின் பாதிப்புகள் அதிகம். எல்லோரையும் தனது ஆளுமையால் பாதிப்பவராக சண்முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. நாரயணசாமியில் சண்முகம் சிறிதும் இல்லை என்பதால் இயல்பில் ஒத்த போக்குள்ளவர்களை மட்டும் பாதிப்பவராக அவரை வரையறை செய்து கொள்கிறேன் .


வல்சராஜில் சணழமுகத்திற்கு இணையாக சிலவற்றையும் பார்த்திருக்கிறேன். அதுவே என்னை பல அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் அவருடன் தொடர்ந்து இருக்க வைத்தது . கட்சியின் ஒருவரின் இடம் பிறிதொருவரை விளித்தலில் துவங்குகிறது . நான் சண்முகத்தை தவிற பிற எவரையும் என் வாழ்நாளில்தலைவரெனஅழைத்ததில்லை . ஒரு குழுவிற்கு தலைமை பொறுப்பை ஏற்பவர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் தன்மதிப்பால் தன்னை சூழ்ந்திருக்கும் நிர்வாகிகளிடம் அதை எதிர்பார்ப்பார்கள். அதுவே அந்த சபையில் அவர்கள் தருக்கி அமரும் இடத்தை அவருக்கு உருவாக்கி அளிக்கிறது . இதற்கு யாரும் விலக்கல்ல . தமிழக முதல்வராக அசுர பலத்துடன் MGR ஆட்சிக்கு வந்தபோதும் அண்ணதுரை அமைச்சரவையில் இருந்த அத்தனை பேரும் தனது மந்திரிசபையில் இடம் பெற வேண்டும் என விரும்பினார் . அத்தகைய மந்திரிசபையே தனக்கான  தகுதியை உருவாக்கிக் கொடுக்கும் வெளிப்படுத்தவும் செய்யும் என நம்பினார் . வல்சராஜிற்கு தனது நிர்வாகிகள் குழுவில் இடம் பெறுபவர்களை பற்றிய ஒரு தர வரிசை அவரது மன உருவகத்தில் இருந்திருக்க வேண்டும் . பாலன் தவறவிட்டது அந்த தன்நம்பிக்கையை . அதன் அடிப்படையில் வல்சராஜால் ஒரு முதிரா சிறுவனின் தோற்றத்தில் இருந்தவைத்யதரசைதனது அடுத்த இடத்திற்கான தேர்வாக ஏற்க மறுத்ததை புரிந்து கொள்ள முடிகிறது . அல்லது தனது குழு, தனது தேர்வு என. தலைவருக்குறிய மிடுக்கை வெளிப்படுத்த நினைத்திருக்கலாம் . அல்லது சண்முகத்துடன் அந்த நாள் தொடங்கி  தனது எதிர்ப்பை உபயோகப்படுத்த அப்படி செய்திருக்காலம் .


நான் முதன்மை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதை முயற்சித்து பாதியில் நின்று போன ஒன்றை மறுபடியும் துவங்கும் சந்தர்ப்பமாக பார்த்தேன். அதில் உள்ள முரண்களை முழுவதுமாக அறிந்திருந்தமையால் காலம் என்னை வெளிப்படுத்தும் வரைக் காத்திருந்தேன் . அதில் என் பாணி விழுமிய அரசியல் இருந்தது . கட்சி அரசியலின் உள்ளூழல்களுக்கும் சிண்டு முடிக்க முட்டு கொடுக்கும் சில்லறை அரசியலை நான் விரும்பியதில்லை . அங்கு உருவான சிக்கலே யார் செயல்படுவது என்பதில் இல்லை . காரணம் அது மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்களை திரட்டி எடுக்கும் கணத்தில் மட்டுமே துவங்குகிறது . வெவ்வேறு காரணத்தினால் அனைத்து அணிகளும் சிறு சிறு குழுவாக சிதறியிருந்தது . அவர்கள் அனைவரும் கட்சி தங்களின் இடத்தை வெளிப்படையான அறிவித்தால் மட்டுமே செயல்பட முடியும் என கட்சித் தலைவருக்கு சொல்ல முயற்சித்தார்கள் . சண்முகம் இளைஞர் அமைப்பை பற்றி எந்த கவலையும் இல்லாதிருந்தார். அதற்கான தடையாக என்னை பிழையாக புரிந்து கொண்டார்கள். சண்முகம் தனது கட்சி செயல்பாட்டிற்கு இளைஞர்களை கொண்ட ஒரு திரளை அளிக்கும் வழியாக மட்டும் அதை வைத்திருந்தார் . நான் அதை செய்யக்கூடியவன் என்பது அதில் எனக்கான இடம் . ஆனால் அதன் வடிவத்தை முழுமை செய்யும் எந்த நோக்கமும் அவரிடமில்லை . இதை வெளிப்படையாக என்னால் முன்வைக்க முடியாது . பல சந்தர்ப்பங்களில் அதை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகக் கூட்டங்கள் குறிப்பால் உணர்த்தி இருக்கறேன் அதன் வழியாக அனைத்தையும் கட்டமைக்கவும் முயன்றேன் . என் சொல்லுக்கு செவி கொடுத்து அமைப்பை உருவாக்க சண்முகம் விரும்பினார் என்றால் அதை நிர்வாக கூட்டத்தின் வழியாக நான் ஏன் செய்ய முயல்கிறேன்? என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத மொண்னைகள்.நான் எனது பழைய இளைஞர் காங்கிரஸ் தொடர்புகளை உள்ளே கொண்டுவர முயற்சிப்தாக நினைத்தனர்


பாலன் ஆதரவாளர்கள உள்நுழைந்நால் எனது இடம் உறுதிப்பட்டுவிடும் என அஞ்சியிருக்கலாம் . இதில் வேடிக்கை பாலன் தலைமையின் கீழ்செயல்பட்ட அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் என அவரது காலத்திலேயே இரண்டாக பிறிந்து கிடந்தது அதை ஒன்றிணைக்க பாலன் முயற்சிக்கவோ விரும்பவோ இல்லை . அல்லது தனது அரசியலுக்கு அவை அப்படியே தொடரட்டும் என நினைத்திருக்கலாம். அவர்களை சிறு குழுக்களாக ஒரு தலைமையின் பின்னால் கொண்டு நிறுத்தினார். அவர்களது தேவைகளை அந்த குழுத் தலைவர் மட்டுமே பாலனை அனுகி கேட்கும் படி அது இருந்தது. சிலமுறை அவரால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்ட பின்னர் அவை திரும்பவும் எழுவதில்லை. அதையே அவர்களின் தேவையை செய்து கொடுப்பதற்கான தடையாக உருவாக்கிக் கொண்டார் . அரசிடமிருந்து எதையும் கேட்கும் இடத்தில் தான் இல்லை என தவறாக தன்னை வைத்துக் கொண்டிருக்கலாம் . உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் யார் வந்து என்ன உதவி கேட்டாலும் அழைத்து சென்று நிறுத்துவது அவருக்கு அந்த பதவியால் என நினைத்திருந்தால அது முற்றும் தவறான புரிதல் . நான் அந்தக் குழுக்களைத் தொடர்பு கொண்டபோதே அவற்றை ஒன்றிணைக்க முடியாமல் போனாலும் எங்களுக்குள் தனிப்பட்ட நல்லுறவு உருவானது ஆனால் அதிலிருந்து அரசியல் இயக்கத்தின் செயல்பாட்டிற்குள் முழுமையாக அவர்களை இணைவே முடிநவில்லை .


1994 களில் பாலனுடன் முரண்பட்டு அவரை வெறுத்த அமைப்புகளை ஒருங்கிணைத்து அவருக்கு எதிராக தீர்மாணம் கொண்டுவந்த போது பாலன் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி முழு மாநில அமைப்பே கலைக்கப்பட்டது . அதன் பின்னர் என்னுடன் வெளியேறிய நிர்வாகிகளில் சிலர் பாலனுடன் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் நான் எதிலும் கலந்து கொள்ள வில்லை,விஷயம் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டேன் .முதல்வர் வைத்திலிங்கத்தின் முன்னிலையில் நடந்த சமாதனத்தின்  போது இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தத்தனை விதிக்கப்பட்டது . பொது நிர்வாகிகள் என்னிடம் பேச்சு வார்த்தை தொடர்ந்து நிகழ ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டதால் இறுதி பேச்சு வார்த்தையில கலந்து கொண்டு அவர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டேன் . பின்னர் நடந்த எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன் . பொது நிர்வாகிகள் என்னிடம் அந்த உடன்படிக்கைப்படி நான் செயல்படவில்லை என சொன்ன போது அது நான் அமைப்பில் இருந்து வெளியேறுவதை கட்டுப்படுத்தாது என கூறிவிட்டேன் . பாலனுடன் சமரசம் செய்து சென்றவர்கள் மிக விரைவில் பாலனால் அவமானப்படுத்தப்பட்டு வெகுண்டு வெளியியேறினார்மீண்டும் அமைப்பு ரீதியில் இணைந்து செயல்படலாம் என கேட்டபோது மறுத்துவிட்டேன் இது நடக்கும் என்பதை முன்னமே ஊகித்து இருந்தேன்  பாலனின் மனநிலை அப்படிப்பட்டது . 1996 பாலனுக்கு தேர்தல் சீட்டு மறுக்கப்பட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேறினார் . முழுஅமைப்பும் விலாசமில்லாமல் சிதறிப்போனது . சண்முகத்துடன் இணைந்த பிறகு நான் உருவாக்கிய புது தொண்டர்கள் அமைப்பு சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு பின்னால் முகம் தெரியாமல் நின்றிந்தவர்கள் . தலைவர்கள் என வருபவர்கள் அனைவரும் பாலனின் மனோபாவம் கொண்டவர்கள் போல . அது ஒருவேளை காங்கிரஸ் கலாச்சாரமாக கூட இருக்கலாம் . நான் முகமில்லாத இருந்தவர்களையும் புதியவர்களை வெளிக்கொண்டு வரவே முயற்சித்துக் கொண்டிருந்தேன் .அதற்கு அணைத்து தரப்பின் எதிர்ப்பு இருந்தது புரிந்து கொள்ள கூடியதே