https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

அடையாளமாதல் * எதற்கும் உத்திரவாதமில்லை *

 ஶ்ரீ:பதிவு : 608  / 798 / தேதி 22 பிப்ரவரி  2022


* எதற்கும் உத்திரவாதமில்லைஆழுள்ளம் ” - 04

மெய்மை- 06.தலைவர் சண்முகம் தனக்கிருக்கும் ஜனநாயக நம்பிக்கையை உறுதியாக எப்போதும் முன்வைப்பவராக பாரத்திருக்கிறேன் . ஆனால் அதில் அவர் மிக ஆழமான சிக்கலான அனுகுமுறையாக அதை வைத்திருந்தார் . அவரது பாணியாக இருக்கலாம் அல்லது நீண்டகாலம் ஒரு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்ததனால் அடைந்த புரிதலினால் இருக்கலாம் , அவர் தனது வெளிபடுத்துதலை அப்படி அமைத்துக் கொண்டிருக்கலாம். அதற்கு பின்னால் இருப்பது  எச்சரிக்கை உணர்வு அல்லது திரும்ப இயலாத சுழலில் சிக்கிக் கொள்ள விரும்பாதவரின் பாதையாகவும் இருக்கலாம். அகில இந்திய காங்கிரஸ் கட்சி அரசியல் நாடு முழுவதிலும் உள்ள பல பண்பாட்டு கலாச்சார மொழி மதம் என பல அலகுகளாக அடுக்குகளாக இணைந்தும் பிறிந்தும் கிடப்பவைகளைகட்சி அரசியல்என்கிற கருதுகோளில் இணைக்கிறது என்பதால் அதன் நம்பிக்கையை அரசியல் செயல்பாட்டை எவரும் ஒற்றைப்படையாக வகுத்துக் கொள்ள இயலாது . அரசியல் செயல்பாட்டிற்குள் வரும் தலைவர்கள் முன்முடிவுடன் அங்கு வந்து அமர்ந்தாலும் முரணியக்கம் வழியாகவே அங்கு முடிவுகள் எட்டப்படுகின்றன . யாரும் யாருக்கும் எந்த உறுதிமொழியும் கொடுக்க இயலாது என்பதே முதன்மை சிக்கல். அது இல்லாமலாகியது முதன்மை பிழை இன்றைய கட்சியின் இழிநிலைக்கு . தலைவர்கள் தங்கள் தரப்பை வைத்தாலும் அன்றைய அரசியல் தலைமையில் நிகழும் அதிகார சமன்பாடு ஊசல் தலைவர்களுக்கு இடையேயான கருத்தியல் வேறுபாடுகள் போன்வை அந்த முடிவை தீர்மானிக்கின்றன. மிகப் பெரும்பாலும் யாரும் எதிர் நோக்காத அறியா புள்ளியில் அவை முடிவாகின்றன என்பதால் காங்கிரஸ் கட்சி அரசியலில் ஒன்றை எண்ணி துவக்கிவிட முடியாது . இங்கு யாரும் யாருக்கும் எக்காலமும் எந்த உத்திரவாதத்தை கொடுப்பதில்லை. தனது சொல்லுக்கும் ஆளுமைக்கு உகக்காதவைகள் நிகழக்கூடும் என அனுபவம் உள்ளவர்கள் , பிறர் எதிர்பார்க்கும் எதையும் முடிவாகும் தருணம் வரை கொடுக்க முடியாது . காமராஜரின் புகழ் பெற்ற வரிஆகட்டும் பார்க்கலாம்என்பது அதிலிருந்து உருவாகி வந்தது . அகில இந்திய தலைவராக அமர்ந்தவர் எங்கோ சிக்குண்டு கட்சியில் இருந்து வெளியேறினார் .கூச்சமுள்ளவர்களின் வழி இது . இடத்திற்கு தக்கவாறு தங்களின் நிலைகளை மாற்றிக்கொள்ள கூச்சமில்லாதவர்கள் அஞ்சுவதில்லை.


சண்முகத்திடம் அனைவரும் விவாதிக்க முறையிட வசைபாட என அனைத்திற்கும் சலைக்காமல் இடம்மளிப்பவராக இருந்தார். வருபவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதே திசையில் அவரும் திரும்பி அமர்ந்து கொள்வார். வந்தவர் புரிந்து மிக சிக்கலான இடமாக அதை மாற்றுவதைக் குறித்து அவர் கவலை கொண்டதில்லை. பலன்  வந்தவர்கள் தங்களின் கருத்தையே அவரும் கொண்டிருப்பதாக பிழையாக நினைத்துக் கொள்ளச் செய்வார் . அது ஒரு விளையாட்டைப் போல மிக தீவிர முகத்துடன் சிரிக்காமல் இருப்பார் . இந்த ஆடலை என்னைப் பற்றிய அனைத்து புகாருக்கும் சலைக்காமல் செய்து வந்தவர்களை குழப்பி எனக்கு மேலும் சிக்லை கொடுப்பார். அவர் தனக்கென உறுதியான நிலைப்பாட்டை தன்னுடன் தர்க்கித்துக் கண்டடைந்த பின் எந்த மாறுபாடையும் செய்து கொண்டதை பார்த்ததில்லை.


முடிவெடுக்கும் முன் நிகழும் ஊசலின் நடுவில் வலுவாக ஒன்றை வைத்தால் அது பல நேரங்களில் அவரிடம் எடுபடுவதை பார்த்த அனுபவம் உண்டு. உரையாட வருபவரிடம் அவருக்கு இரண்டு விதமான அனுகுமுறையை பார்த்திருக்கிறேன் இரண்டும் சிடுக்கானவை . அதில் சிக்கி ஏமார்ந்தவர்பளே அதிகம் . ஒருமுறை முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயகுமார் தமகா வில் மிகவும் மனம் கசந்திருந்த நேரம். ஊசுடு பெருமாள் என்னிடம் தேனீ ஜெயகுமார் தன்னை வந்து சந்திக்க சொன்னதாக என்னிடம் கூறினான். அவர் கட்சியில் இருந்து வெளியேறும் மனநிலையின் இறுதிக் கணத்தில் இருந்தார் . நிறைய பேசினோம் . நான் அவரிடம் இதுவே காங்கிரஸிற்குள் வர மிகச் சரியான நேரம் என்றேன் அவரும் அதே கணக்குடன் இருந்தார் . மிகத் தீவிரமாக இப்போது இணைந்தால் அவரை முன்நிறுத்து நிகழ இருக்கும் மாற்றம் குறித்து விவாக பேசினேன். மிகுந்த தயக்கமுள்ளவராக பல கணக்குகளுக்கு மத்தியில் இழுத்துக் கட்டபட்டவர் எல்லா திசைகளை நோக்கி செலுத்தப்பட்டிருந்தார் . இப்போது தேவை ஒரு சிறிய உந்துதல். நான் அதைத்தான் அங்கு செய்ய வேண்டி இருந்தது


தலைவர் சண்முகத்துடன் ஒரு ரகசிய சந்திப்பு . பின் காங கிரஸில் இணைவது மட்டுமே மீதமுள்ளது . மற்றபடி கட்சி ரீதியிலான அமைப்பை அவருக்காக ஒருங்கிக் கொடுப்பது எனது வேலை . நான் அவரிடம் திரும்ப திரும்பச் சொன்ன ஒரே விஷயம்சண்முகத்துடன் எந்த பேச்சு வார்தையும் வேண்டாம் . அவர் அதை நோக்கித்தான் அழைத்துச் செல்வார் . முற்றிலும் தவிற்க வேண்டிய ஒன்று . நான் நீங்கள் இணைவது பற்றி சொல்லிவிட்டேன் . அவருக்கு முழு சம்மதம் . நீங்கள் இணையும் நாள் குறித்து மட்டும் பேசி வெளியேறிவிடுங்கள் மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” . மறுபடியும்சொன்னேன் உரையாடலுக்கு சந்தர்ப்பமே கொடுக்காதீர்கள் பேச்சு இணைப்பு இணைப்பு என்பதாக மட்டும்என்றேன் அவருக்கு புரிந்தது . தலையசைத்துக் கொண்டார். என்னையும் உடனிருக்கச் சொன்னதற்கு நான் உறுதியாக மறுத்துவிட்டேன் . இது இருவருக்குள் மட்டும் நிகழும் சந்திப்பு . நான் அங்குதான் இருப்பேன் நீங்கள் பேசி வெளியேறும் முன்பாக அங்கு வந்து விடுவேன் என்றேன்.


அவர் நாள் கிழமை எல்லாம் பார்த்து அடுத்த நாள் மதியம் 12:00 மணி என்றார். சொன்னபடி மிகச் சரியாக தலைவர் வீட்டிற்கு வந்து விட்டதாக தலைவருடன் பேசி கொண்டிருப்பதாக சமையற்கார நாராயணன் சொன்னான் . நான் முன்பே தலைவரிடம் அவர் வருவது பற்றி சொல்லியிருந்தேன். அவர் நம்பிக்கையின்மையுடன் உதட்டைப் பிதுக்கினார் . நான் தலைவர் வீட்டிற்று சென்றபோது மணி 12:30 தேனீ ஜெயகுமாரின் கார் தலைவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது . எனக்கு ஏதோ சரியாகப் படவில்லை. 12:45 க்கு தேனீ ஜெயகுமார் வெளியே வந்தார் முகம் பிரகாசமாக இருந்தது . என்னை பார்த்துக் கை குலுக்கி நன்றி சொன்னார். தலைவரிடம் விரிவாக பேசியாதக சொன்னார். தலைவர் இது சரியான நேரமில்லை சிறிது காலம் காத்திருக்க சொன்னார் என்றார் . தனக்கும் அதே குழப்பம் இருந்ததாகவும் இப்போது தீர்ந்து விட்டது . நீ தான்  வேகப்படுத்தி விட்டாய் இருந்தாலும் தலைவரிடம் பேசியது மனதிற்கு தெம்பாக இருந்தது என் கூறி விடைபெற்றுச் சென்றார் . நான் மனதிற்குள் நொந்து கொண்டேன் அரை சிரிப்புடன் அவரை வழியனுப்பி வைத்தேன் . சிறிது நேரம் கழித்து தலைவரை பார்த்த போது அட்டகாசமாக சிரித்து கொண்டுநான் அப்பவே சொல்லல்ல இவர் ஸ்திரமில்லாதவர்என்றார் . நான் தலையில் அடித்துக் கொண்டேன் . சில காலம் கழித்து தேர்தல் சமையத்தில் பலர் இணைந்த போது அவரும் எந்த ஆரவாரமும் இன்றி இணைந்தார் . அவர் என்ன இழந்து போனார் என்பது அவருக்கு இன்றுவரை தெரியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 68 அழைப்பிதழ்

 காண்டீபன்