https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 16 பிப்ரவரி, 2022

அடையாளமாதல் * மாயவெளி *

  


ஶ்ரீ:பதிவு : 607  / 797 / தேதி 16 பிப்ரவரி  2022


* மாயவெளிஆழுள்ளம் ” - 04

மெய்மை- 05.

ஓவியரான வல்சராஜ் அழகியல் பார்வையைக் கொண்ட நவீன மனம் கொண்டவர் . தனது அனைத்து செயல்பாடுகளில் அந்த அழகியலை எப்போதும் முன்வைக்க தயங்கியதில்லை . அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது காவல் நிலையம் கட்டிங்கள் குருதி வடிவ மூர்கக் கட்டுமானத்தில் இருந்து மாற்றமைடந்தது, மறுவடிவமைப்பில் அவரின் பங்கு மிக அதிகம் . மரபும் நவீனமும் கலந்து கலவை , சற்றே கேரள பாணி ஓடும் மரத்த தூண்களுமான அமைப்பை கொண்டவையாக அவை உருமாறின . சண்முகத்திடமும் அழகியல் பார்வை இருப்பதை பார்த்திருக்கிறேன் அவை ரசனை சார்ந்ததாக சற்று மரபை நோக்கிய மனச்சாய்வை கொண்டதாக அறியமுடியும். வல்சராஜ் அவரின் வேறொரு வடிவம். கேரளப் புகுதியை ஒட்டி உள்ள மஹே அரசியல் களத்தில் தேர்தல் சுவர் ஓவியங்கள் வரைபவராக சண்முகத்திற்கு அறிமுகமானார் . அவரின் அரசியல் ஆர்வம் சண்முகத்தால் அவர் அரசியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் . ஒருவகையில் சண்முகத்தால் கண்டெடுக்கப்பட்டவர் . குருசிஷ்ய மரபிற்குள் வந்த அவரிடம் சண்முகத்தின் பாதிப்புகள் அதிகம். எல்லோரையும் தனது ஆளுமையால் பாதிப்பவராக சண்முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. நாரயணசாமியில் சண்முகம் சிறிதும் இல்லை என்பதால் இயல்பில் ஒத்த போக்குள்ளவர்களை மட்டும் பாதிப்பவராக அவரை வரையறை செய்து கொள்கிறேன் .


வல்சராஜில் சணழமுகத்திற்கு இணையாக சிலவற்றையும் பார்த்திருக்கிறேன். அதுவே என்னை பல அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் அவருடன் தொடர்ந்து இருக்க வைத்தது . கட்சியின் ஒருவரின் இடம் பிறிதொருவரை விளித்தலில் துவங்குகிறது . நான் சண்முகத்தை தவிற பிற எவரையும் என் வாழ்நாளில்தலைவரெனஅழைத்ததில்லை . ஒரு குழுவிற்கு தலைமை பொறுப்பை ஏற்பவர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் தன்மதிப்பால் தன்னை சூழ்ந்திருக்கும் நிர்வாகிகளிடம் அதை எதிர்பார்ப்பார்கள். அதுவே அந்த சபையில் அவர்கள் தருக்கி அமரும் இடத்தை அவருக்கு உருவாக்கி அளிக்கிறது . இதற்கு யாரும் விலக்கல்ல . தமிழக முதல்வராக அசுர பலத்துடன் MGR ஆட்சிக்கு வந்தபோதும் அண்ணதுரை அமைச்சரவையில் இருந்த அத்தனை பேரும் தனது மந்திரிசபையில் இடம் பெற வேண்டும் என விரும்பினார் . அத்தகைய மந்திரிசபையே தனக்கான  தகுதியை உருவாக்கிக் கொடுக்கும் வெளிப்படுத்தவும் செய்யும் என நம்பினார் . வல்சராஜிற்கு தனது நிர்வாகிகள் குழுவில் இடம் பெறுபவர்களை பற்றிய ஒரு தர வரிசை அவரது மன உருவகத்தில் இருந்திருக்க வேண்டும் . பாலன் தவறவிட்டது அந்த தன்நம்பிக்கையை . அதன் அடிப்படையில் வல்சராஜால் ஒரு முதிரா சிறுவனின் தோற்றத்தில் இருந்தவைத்யதரசைதனது அடுத்த இடத்திற்கான தேர்வாக ஏற்க மறுத்ததை புரிந்து கொள்ள முடிகிறது . அல்லது தனது குழு, தனது தேர்வு என. தலைவருக்குறிய மிடுக்கை வெளிப்படுத்த நினைத்திருக்கலாம் . அல்லது சண்முகத்துடன் அந்த நாள் தொடங்கி  தனது எதிர்ப்பை உபயோகப்படுத்த அப்படி செய்திருக்காலம் .


நான் முதன்மை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதை முயற்சித்து பாதியில் நின்று போன ஒன்றை மறுபடியும் துவங்கும் சந்தர்ப்பமாக பார்த்தேன். அதில் உள்ள முரண்களை முழுவதுமாக அறிந்திருந்தமையால் காலம் என்னை வெளிப்படுத்தும் வரைக் காத்திருந்தேன் . அதில் என் பாணி விழுமிய அரசியல் இருந்தது . கட்சி அரசியலின் உள்ளூழல்களுக்கும் சிண்டு முடிக்க முட்டு கொடுக்கும் சில்லறை அரசியலை நான் விரும்பியதில்லை . அங்கு உருவான சிக்கலே யார் செயல்படுவது என்பதில் இல்லை . காரணம் அது மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்களை திரட்டி எடுக்கும் கணத்தில் மட்டுமே துவங்குகிறது . வெவ்வேறு காரணத்தினால் அனைத்து அணிகளும் சிறு சிறு குழுவாக சிதறியிருந்தது . அவர்கள் அனைவரும் கட்சி தங்களின் இடத்தை வெளிப்படையான அறிவித்தால் மட்டுமே செயல்பட முடியும் என கட்சித் தலைவருக்கு சொல்ல முயற்சித்தார்கள் . சண்முகம் இளைஞர் அமைப்பை பற்றி எந்த கவலையும் இல்லாதிருந்தார். அதற்கான தடையாக என்னை பிழையாக புரிந்து கொண்டார்கள். சண்முகம் தனது கட்சி செயல்பாட்டிற்கு இளைஞர்களை கொண்ட ஒரு திரளை அளிக்கும் வழியாக மட்டும் அதை வைத்திருந்தார் . நான் அதை செய்யக்கூடியவன் என்பது அதில் எனக்கான இடம் . ஆனால் அதன் வடிவத்தை முழுமை செய்யும் எந்த நோக்கமும் அவரிடமில்லை . இதை வெளிப்படையாக என்னால் முன்வைக்க முடியாது . பல சந்தர்ப்பங்களில் அதை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகக் கூட்டங்கள் குறிப்பால் உணர்த்தி இருக்கறேன் அதன் வழியாக அனைத்தையும் கட்டமைக்கவும் முயன்றேன் . என் சொல்லுக்கு செவி கொடுத்து அமைப்பை உருவாக்க சண்முகம் விரும்பினார் என்றால் அதை நிர்வாக கூட்டத்தின் வழியாக நான் ஏன் செய்ய முயல்கிறேன்? என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத மொண்னைகள்.நான் எனது பழைய இளைஞர் காங்கிரஸ் தொடர்புகளை உள்ளே கொண்டுவர முயற்சிப்தாக நினைத்தனர்


பாலன் ஆதரவாளர்கள உள்நுழைந்நால் எனது இடம் உறுதிப்பட்டுவிடும் என அஞ்சியிருக்கலாம் . இதில் வேடிக்கை பாலன் தலைமையின் கீழ்செயல்பட்ட அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் என அவரது காலத்திலேயே இரண்டாக பிறிந்து கிடந்தது அதை ஒன்றிணைக்க பாலன் முயற்சிக்கவோ விரும்பவோ இல்லை . அல்லது தனது அரசியலுக்கு அவை அப்படியே தொடரட்டும் என நினைத்திருக்கலாம். அவர்களை சிறு குழுக்களாக ஒரு தலைமையின் பின்னால் கொண்டு நிறுத்தினார். அவர்களது தேவைகளை அந்த குழுத் தலைவர் மட்டுமே பாலனை அனுகி கேட்கும் படி அது இருந்தது. சிலமுறை அவரால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்ட பின்னர் அவை திரும்பவும் எழுவதில்லை. அதையே அவர்களின் தேவையை செய்து கொடுப்பதற்கான தடையாக உருவாக்கிக் கொண்டார் . அரசிடமிருந்து எதையும் கேட்கும் இடத்தில் தான் இல்லை என தவறாக தன்னை வைத்துக் கொண்டிருக்கலாம் . உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் யார் வந்து என்ன உதவி கேட்டாலும் அழைத்து சென்று நிறுத்துவது அவருக்கு அந்த பதவியால் என நினைத்திருந்தால அது முற்றும் தவறான புரிதல் . நான் அந்தக் குழுக்களைத் தொடர்பு கொண்டபோதே அவற்றை ஒன்றிணைக்க முடியாமல் போனாலும் எங்களுக்குள் தனிப்பட்ட நல்லுறவு உருவானது ஆனால் அதிலிருந்து அரசியல் இயக்கத்தின் செயல்பாட்டிற்குள் முழுமையாக அவர்களை இணைவே முடிநவில்லை .


1994 களில் பாலனுடன் முரண்பட்டு அவரை வெறுத்த அமைப்புகளை ஒருங்கிணைத்து அவருக்கு எதிராக தீர்மாணம் கொண்டுவந்த போது பாலன் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி முழு மாநில அமைப்பே கலைக்கப்பட்டது . அதன் பின்னர் என்னுடன் வெளியேறிய நிர்வாகிகளில் சிலர் பாலனுடன் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் நான் எதிலும் கலந்து கொள்ள வில்லை,விஷயம் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டேன் .முதல்வர் வைத்திலிங்கத்தின் முன்னிலையில் நடந்த சமாதனத்தின்  போது இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தத்தனை விதிக்கப்பட்டது . பொது நிர்வாகிகள் என்னிடம் பேச்சு வார்த்தை தொடர்ந்து நிகழ ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொண்டதால் இறுதி பேச்சு வார்த்தையில கலந்து கொண்டு அவர்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டேன் . பின்னர் நடந்த எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன் . பொது நிர்வாகிகள் என்னிடம் அந்த உடன்படிக்கைப்படி நான் செயல்படவில்லை என சொன்ன போது அது நான் அமைப்பில் இருந்து வெளியேறுவதை கட்டுப்படுத்தாது என கூறிவிட்டேன் . பாலனுடன் சமரசம் செய்து சென்றவர்கள் மிக விரைவில் பாலனால் அவமானப்படுத்தப்பட்டு வெகுண்டு வெளியியேறினார்மீண்டும் அமைப்பு ரீதியில் இணைந்து செயல்படலாம் என கேட்டபோது மறுத்துவிட்டேன் இது நடக்கும் என்பதை முன்னமே ஊகித்து இருந்தேன்  பாலனின் மனநிலை அப்படிப்பட்டது . 1996 பாலனுக்கு தேர்தல் சீட்டு மறுக்கப்பட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேறினார் . முழுஅமைப்பும் விலாசமில்லாமல் சிதறிப்போனது . சண்முகத்துடன் இணைந்த பிறகு நான் உருவாக்கிய புது தொண்டர்கள் அமைப்பு சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு பின்னால் முகம் தெரியாமல் நின்றிந்தவர்கள் . தலைவர்கள் என வருபவர்கள் அனைவரும் பாலனின் மனோபாவம் கொண்டவர்கள் போல . அது ஒருவேளை காங்கிரஸ் கலாச்சாரமாக கூட இருக்கலாம் . நான் முகமில்லாத இருந்தவர்களையும் புதியவர்களை வெளிக்கொண்டு வரவே முயற்சித்துக் கொண்டிருந்தேன் .அதற்கு அணைத்து தரப்பின் எதிர்ப்பு இருந்தது புரிந்து கொள்ள கூடியதே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக