https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 28 அக்டோபர், 2023

புதுவை வெண்முரசு கூடுகை 65 நிகழ்வுத் துளிகள்

 











வெள்ளிமலை முகாம். திவ்ய பிரபந்தம் வகுப்பு





 அன்பிற்கினிய ஜெ,


வணக்கம்,நலம் நலனை விழைகிறேன்.


திவ்ய பிரபந்த பயிற்சி முகாம் வெள்ளிமலையில் ஒருங்கிய உங்களுக்கும் அதை வெற்றிகரமாக நிகழ்த்தி கொடுத்த நண்பர் ராஜகோபாலன் மற்றும் நண்பர்மாலோலன் அவர்களுக்கும் என் உளம் நிறைந்த நன்றிகள்ஒரு நீண்டநாள் கனவு மெய்பட்டது போன்ற உணர்வுகடந்த இருபதாண்டுகளாக நீடித்த ஒன்றுபல முறை முயன்று முடியமால் போனதுஉபண்யாசம் மற்றும் காலஷேபம் போன்றவை நிகழ்த்து கலைக்கு ஈடானவை அவர்களால் அதன் ஓட்டத்தில் இருந்துபிரிந்து புதிதாக ஒன்றை செய்ய இயலுவதில்லைமுயற்சித்த சிலர் பாதியில் தொடர்பு சரடு அறுந்தவர்கள் போலாவதை பார்த்து திகைத்திருக்கிறேன்பிரபந்தபாசுரங்கள் எளிய தமிழின் சொல்லழகும் கவித்துவமும் மிளிர அதன் உச்சத்தை அடைவது மரபில் சாத்தியமில்லை எனப் புரிந்து கொண்டேன்ஆனால் நவீனஇலக்கியம் வாசித்தவர் ஒருவர் அந்த உச்சங்களை அனாயாசமாக சென்றடைய முடியும் என்பதை இந்த முகாமில் அனுபவிக்க முடிந்ததுநண்பர் ராஜகோபால்அதை தனது அனுபவத்தால் நிகழ்த்தி காட்டிய போது ஒவ்வொரு முறையும் உள்ளம் விம்மியது .


இன்றைய நவீன இலக்ககிய வாசகர்களுக்கு பக்தி மரபிலக்கியம் நோக்கிய தேவை இது போன்ற ஒரு நிகழ்வு பெரிய அளவில் உதவும் . இன்றுசாமான்யர்களுக்கு தமிழ் இன்னும் தூரத்தில் உள்ளது . துரதிஷ்டவசமாக மரபான உபண்யாச முறைகளில் பிரபந்தம் மற்றும் கம்ப ராமாயணமே கூட மொழியில்அழகும் அதன் அறிதலும் நிகழ்வதில்லைதத்துவ விளக்கம் வியாக்கியாணம் என பெரிய சொற்காடுகள் உருவாக்கும் போது தமிழின் சொல்லழகும் உச்சக்கவித்துவமும் பிரித்தெடுத்து ரசிக்க முடியாமல் போய்விடுவதுடன் பகத்தியில் அதன் உள் பொதிவு தேவையற்றது என்பது போன்ற தோற்றத்தைஉருவாக்கிவிடுகிறது


உபண்யாசம் கேட்பதாலேயே “கதி மோட்டசம்” போன்ற எண்ணத்தை உருவாக்கி விடுவதால் அங்கு அமர்ந்து கேட்பவர்களுக்கு அதைக் கடந்து பிறிதொருஎண்ணமில்லாமல் அந்த சொற் பெருக்குகளை செவியளவில் உள்வாங்கி புண்ணியத்தை சேர்த்து பின்னர் தங்கள் அன்றாடங்களுக்கு திரும்பிவிடுகிற்றார்கள்அங்கு கற்றல் ஒருபோதும் நிகழப்போவதில்லையகாலஷேப முறை வகுப்பு போல எடுக்கப்பட்டாலும் சம்ஸ்கிரத சொல் உபயோகம் கேட்பவரைஅன்னியப்படுத்தி விடுவதுடன் கவனத்தை சிதறடித்துவிடுவதை பார்த்திருக்கிறேன்


மரபு இலக்கியத்தில் நவீன வாசிப்பின் வழியாக நிகழக் கூடியது என்ன என்பதை முதலில் அறிந்து கொண்டது எழுத்தாளர் சுஜாதாவின் மரண தருணத்தில்நீங்கள் நம்மாழ்வார் பாசுரங்கள் சிலவற்றை அன்றைய இரவு முழுவதும் வாசித்துக் கொண்டிருந்ததைப் பற்றிய கட்டுரை  கொடுத்திருந்ததுஇரண்டாவதுநீங்கள் புதுவை வெண்முரசு கூடுகைக்கு முதல் முறையாக வந்திருந்த போது நண்பர்கள் அலவலாவல் மத்தியில் பெரியாழ்வாரின் “புறம் புல்குதல்” பற்றியபத்து பாசுரத்தில் இருந்து சிலவற்றை சொன்ன போது அந்த சிலிப்பை அடைந்தேன்பின்னர் பல சந்தர்பங்களில் அது போன்ற நிகழ்வை நான் நடத்துவதுபற்றி உங்களிடம் உரையாடி இருக்கிறேன் . அதுவே பின்னர் புதுவை வெண்முரசு கூடுகையாக உருவெடுத்தது


சமயம் கிடை்க்கும் போதெல்லாம் கடலூர் சீனு,மணிமாறன்தாமரைக்கண்ணனுடன் இது பற்றி பேசி இருக்கிறேன்கடந்த மாத வெண்முரசு கூடுகையின்இறுதியில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்களை நவீன பாணி கவிதைகளாக மாற்றி பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்


சில நாள் கழித்து நண்பர் தாமரைக்கண்ணன் “கிளப்ஹவுஸ்” செயலி அதில் நண்பர் ராஜகோபால் அவர்களின் உரையாடல் குறித்து சொன்னது பின்னர்வியப்புடன் அதை முழுவதுமாக கேட்ட கொண்டிருந்த சந்தர்பத்தில் நீங்கள் வெள்ளிமலை திவ்ய்பிரபந்த வகுப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டிருந்தீர்கள் . நான்தற்செயல் வாதத்தை நம்பாதவன்இதை ஒரு நல்லூழாக எடுத்துக் கொண்டேன்அதே செயலியில் “இம்பர்வாரி” என கம்பராமாயணத்தை வாசிக்கிறார்கள்கேட்க மிக அற்புதமான அனுபவமாக இருந்தது 



இன்றைய மரபிலக்கியம் ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு சொல்ல ஓன்றுமில்லை அது இளநிலை மாணவர்களுக்கு முதுகலை கற்பிப்பது போன்ற பாவனையுடன்சொல்லப்படுகிறது  எனது தந்தை வருத்தமாக சொல்வதுண்டு


முகாமை துவக்கி நடத்திய கணம் முதல் இறுதிவரை நண்பர் மாலோனின் அருகமர்வு வழியாக முகாமை நடத்திச் சென்றது மிக சிறந்த அணுகுமுறை.தயக்கமில்லாமல் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் தங்களை இணைத்துக் கொண்டது நிகழ்வை உயிர்புள்ளதாக்கியதுபலர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் அது உருவாக்கியது.நண்பர் ராஜகோபால் அவற்றை உள்வாங்கி  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை வேறொரு உச்சத்திற்கு அவர்கொண்டு சென்றதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்ஒவ்வொரு உரையாடலுக்கும் இறுதியில் அவர் சென்றடையும் உச்சம் மேடையில்உருவாகி அது நிகழும் கணம் அதில் திளைத்தல் என அவை அவரது மேடை அனுபவத்தை காட்டியது .

ஆழ்வார்களின் பாடலில் உள்ள தமிழ் கவிச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்த அதே சமயம் தத்துவம் குறித்த மிகையற்ற “சிறு கிள்ளல்” உப்பு அதன் சுவையைமிகப் பெரிய அளவில் கூட்டியது.


நண்பர் மாலோலன் அருகமர்வு வகுப்பை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது.மிக சிறப்பான ஏற்பாடுபாடல்களை மரபான சந்தையில் வாசிக்கப்படும்போது உருவாகும் உணர்வு நிலை கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டது . பிரமாதமான ஏற்பாடு.எனது நீண்ட நாள் கனவு இது போன்ற ஒருநிகழ்வு.நிகழ்வு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்ததுஒவ்வொரு பாசுர கவித்உவமான விளக்கம் பின்னர் அதன் இறுதியில் தத்தும் பற்றிய சிறியஅறிமுகம் மிக சரியாக கோர்கப்பட்டிருந்ததுமுதல் நாள் துவக்கத்தில் வைணவ தத்துவ கட்டுமானத்தை வைக்காமல் அன்று இரவு அதை செய்திருந்ததுமற்றைய இரண்டு நாள் கற்றலுக்கு உதவியாக இருந்தது.   


மரபான வியாக்கியான முறைகளின் படி சொல்பவர்களை அதில் திளைக்கச் செய்துவிடுகறது அத்தகைய உரைகளில் பார்வையாளர்கள் சில உச்சங்களை மட்டும்சேகரித்துச் செல்கிறார்கள்அது அவர்களுக்குள் விதையாக விழுவதில்லை


கடந்த சில வருடங்களாக அலோபதி மருந்துகளால் உருவான தொடர் உடல் உபாதைகளுக்கு அஞ்சி பயணத்தை தவிற்த்து வந்தேன்ஒவ்வொருவெள்ளிமலை முகாம் பற்றிய அறிவிப்பு வரும் போதெல்லாம் கலந்து கொள்ள இயலாமை குறித்து மனம் குழைந்து வருந்தியதுண்டுஇம்முறை வாய்ப்பைதவறவிடுவதாக இல்லை சென்றேயாக வேண்டும் என கிளம்பினேன்வியாழக்கிழமை இரவு 11:30 மணிக்கு புதுவையில் இருந்து தனியாக கிளம்பி அதிகாலை6:00 வெள்ளிமலை சென்றடைந்தேன்இடையில் அந்தியூரில் நண்பர் பெங்களூர் ஹரீஷ் வந்து இணைந்து கொண்டார் அந்தியூரல் இருந்து மலை ஏற்றம்துவங்கியுடன்

உங்களின் முதல் தத்துவ முகாமிற்கு புதுவையில் இருந்து அங்கு விட்டு வந்து எனது ஓட்டுனர் அங்கு நடந்ததாக சொன்ன கதைநண்பர் அந்தியூர் மணிவிளக்கமாக எழுதிய மின்னஞ்சல் போன்றவை ஏற்படுத்தி பீதி காரணமாக இருள் விலகா காலையின் இடையில் மலையேற்றத்தில் சில மணிநேரம் வெளிச்சம்வரும்வரை காத்திருந்தது ஒரு வகை திகில் அனுபவம்வழியில் சற்று முன்னர் யானை கடந்து சென்றதற்கான சான்று போன்றவை அந்த இருள் விலகாகாலையை திகிலுடன் அழகாக்கியது



நன்றி 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

புதுவை


புதன், 25 அக்டோபர், 2023

வெள்ளிமலை முகாம் - ஜாஜா கடிதம்

 



அன்பிற்கினிய ஜாஜா,


வணக்கம்,

திவ்வியப்பிரபந்த வகுப்பு மிக வெற்றிகரமாக நிறைவுற்றது. எனது நீண்ட நாள் கனவு இது போன்ற ஒரு நிகழ்வு.அதை அளித்தமைக்கு என் நன்றிகள்

வைணவம் பற்றிய உங்கள் ஞானம் சிறிது குறைவுபட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டது மிக சிறந்த அணுகுமுறை .அனைவரும் அதை இட்டு நிரப்ப முனைந்த முயற்சி நிகழ்வை உயிர்புள்ளதாக்கியது. பலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் அது உருவாக்கியது. அவற்றை உள்வாங்கி  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை வேறொரு உச்சத்திற்கு நீங்கள் கொண்டு சென்றதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு உரையாடலுக்கும் இறுதியில் நீங்கள் சென்றடையும் உச்சம் மேடையில் உருவாகி அது நிகழும் கணம் அதில் திளைத்தல் என அவை உங்கள் மேடை அனுபவத்தை காட்டியது .

ஆழ்வார்களின் பாடலில் உள்ள தமிழ் கவிச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்த அதே சமயம் தத்துவம் குறித்த மிகையற்ற “சிறு கிள்ளல்” உப்பு அதன் சுவையை மிகப் பெரிய அளவில் கூட்டியது.

நண்பர் மாலோலன் அருகமர்வு வகுப்பை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது.மிக சிறப்பான ஏற்பாடு. பாடல்களை மரபான சந்தையில் வாசிக்ப்படும் போது உருவாகும் உணர்வு நிலை கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டது . பிரமாதமான ஏற்பாடு.

புதுவை வந்து உடன் மற்றொரு ஊர் பயணம். தாமதப் பதிவிற்கு மன்னிக்கவும்.



நன்றி 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

புதுவை


ஏற்கனவே கற்று துறைபோகிய பிரபந்த வைணவ அறிஞர்கள் இருக்கும்போது சற்று கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அறிமுக வகுப்பு என்றபடியாலும், அதீத தத்துவப்படுத்தல் விலக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதாலும் நிதான அணுகுமுறை. உங்கள் அனுபவத்திற்கு நீங்கள் கலந்து கொண்டதே பெரிது. நன்றியும் அன்பும்...


ஜா.ராஜகோபால் 


வெள்ளி, 20 அக்டோபர், 2023

கீபோர்டு

 கீபோர்டு


குடும்பங்களுக்குள் ஏன் என்று புரிந்து கொள்ள முடியாத மனக் கசப்புகள் நிரந்தர பிறவுகளை உருவாக்கி விடுகின்றன. “ஐந்து வயதில் அண்ணன் நம்பி பத்து வயதில் பங்காளிஎன்பது கிரமத்து சவல்லாட்சி. அது எப்போதும் அப்படித்தான். அப்பாவின் சகோதர் அப்பாவுடன் முரண்பட்டதற்கான சரியான காரணம் எனக்குத் தெரியாது என்றாலும் அது முழுமையாக வெளிப்பட சில பத்தாண்டுகளானது. அம்மா அதன் பின்னணி காரணமாக இருந்திருக்கலாம். அண்ணன் தம்பி உறவு மனைவி வந்தவுடன் பெரும் மாற்றத்தை அடைந்து விடுகிறது. அம்மா எதையும் வெளிப்படையாக பேசுகிறேன் என கிளம்பி அனைத்தையும் கொதிநிலைக்கு கொண்டு சென்று விடுவார். அப்பா அதிர்ந்து பேசாத ரகம் என்றாலும் அம்மா மிகவும் அஞ்சிய ஆளுமை அவர்.

இந்தப் பதிவு அந்த உறவு சிக்கலை சொல்லவந்ததல்ல. என் பெரியப்பா மகன் ஜனார்தனனின் சென்னை கல்யாணம் பல நிகழ்வுகள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. இந்த புகைப்படம் அவரது ஆல்பத்தில் இருந்து அன்னி எனக்கு அனுப்பித் தந்தார்கள். தாத்தா கோவிந்தசாமிபிள்ளை பாட்டி ஆதிலக்ஷ்மி இருவரும் இருந்தார்கள். அவர்களை இந்த மங்களான படத்தில் பார்க்கும் போது மிகுந்த மனநிறைவை அடைகிறேன்

அனைவரும் இணைந்திருந்த குடும்பத்தில் முதல் திருமணம். எனக்கு பத்து வயதிற்குள் இருக்கும். முதலில் நினைவிற்கு வருது தாத்தா வைத்திருந்த கருப்பு நிற வண்டு போன்ற பியூக் ரக காரும் அது முதலில் நிகழ்த்திய விபத்தும் எனக்கு நினைவிருக்கிறது. திருமணத்தில் முதன்மையாக நினைவிருந்தது இசை நிகழ்ச்சி பாடல் வாணி ஜெயராம் பாடியமல்லிகை என் மண்ணன் மயங்கும்பாடல். என்னை முழுமயாக வசீகரித்தது அந்தப் பாடலில் உபயோகப்படுத்திய இசை கருவிஆர்கன்என சொல்லப்படுகிற கீ போர்டு. அதன் பல வித இசை வெளிப்பாடுகள் என்னை ஈர்த்தது. அதன் பிறகு அப்பாவுடன் திருச்சி சென்ற போது அங்கு வெளிநாட்டு பொருள் விற்கும் அங்காடியில் கீ போர்டை பார்த்த உடன் அதை வாங்கித் தரச் சொல்லி அழுது ஆர்பாட்டம் செய்தது நினைவிருக்கிறது. அப்பா உறுதியாக மறுத்துவிட்டார். அன்று முழுவதும் அவர் மீது வண்மத்துடன் இருந்தேன். பின்னாளில் சொந்த தொழில் தொடங்கி சப்பாதிக்க ஆரம்பித்த பிறகு வாங்கிய முதல் பொருள்கீபோர்டு”.













புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...