https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 25 அக்டோபர், 2023

வெள்ளிமலை முகாம் - ஜாஜா கடிதம்

 



அன்பிற்கினிய ஜாஜா,


வணக்கம்,

திவ்வியப்பிரபந்த வகுப்பு மிக வெற்றிகரமாக நிறைவுற்றது. எனது நீண்ட நாள் கனவு இது போன்ற ஒரு நிகழ்வு.அதை அளித்தமைக்கு என் நன்றிகள்

வைணவம் பற்றிய உங்கள் ஞானம் சிறிது குறைவுபட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டது மிக சிறந்த அணுகுமுறை .அனைவரும் அதை இட்டு நிரப்ப முனைந்த முயற்சி நிகழ்வை உயிர்புள்ளதாக்கியது. பலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் அது உருவாக்கியது. அவற்றை உள்வாங்கி  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை வேறொரு உச்சத்திற்கு நீங்கள் கொண்டு சென்றதை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு உரையாடலுக்கும் இறுதியில் நீங்கள் சென்றடையும் உச்சம் மேடையில் உருவாகி அது நிகழும் கணம் அதில் திளைத்தல் என அவை உங்கள் மேடை அனுபவத்தை காட்டியது .

ஆழ்வார்களின் பாடலில் உள்ள தமிழ் கவிச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்த அதே சமயம் தத்துவம் குறித்த மிகையற்ற “சிறு கிள்ளல்” உப்பு அதன் சுவையை மிகப் பெரிய அளவில் கூட்டியது.

நண்பர் மாலோலன் அருகமர்வு வகுப்பை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது.மிக சிறப்பான ஏற்பாடு. பாடல்களை மரபான சந்தையில் வாசிக்ப்படும் போது உருவாகும் உணர்வு நிலை கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டது . பிரமாதமான ஏற்பாடு.

புதுவை வந்து உடன் மற்றொரு ஊர் பயணம். தாமதப் பதிவிற்கு மன்னிக்கவும்.



நன்றி 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

புதுவை


ஏற்கனவே கற்று துறைபோகிய பிரபந்த வைணவ அறிஞர்கள் இருக்கும்போது சற்று கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. அறிமுக வகுப்பு என்றபடியாலும், அதீத தத்துவப்படுத்தல் விலக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதாலும் நிதான அணுகுமுறை. உங்கள் அனுபவத்திற்கு நீங்கள் கலந்து கொண்டதே பெரிது. நன்றியும் அன்பும்...


ஜா.ராஜகோபால் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...