https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 20 அக்டோபர், 2023

கீபோர்டு

 கீபோர்டு


குடும்பங்களுக்குள் ஏன் என்று புரிந்து கொள்ள முடியாத மனக் கசப்புகள் நிரந்தர பிறவுகளை உருவாக்கி விடுகின்றன. “ஐந்து வயதில் அண்ணன் நம்பி பத்து வயதில் பங்காளிஎன்பது கிரமத்து சவல்லாட்சி. அது எப்போதும் அப்படித்தான். அப்பாவின் சகோதர் அப்பாவுடன் முரண்பட்டதற்கான சரியான காரணம் எனக்குத் தெரியாது என்றாலும் அது முழுமையாக வெளிப்பட சில பத்தாண்டுகளானது. அம்மா அதன் பின்னணி காரணமாக இருந்திருக்கலாம். அண்ணன் தம்பி உறவு மனைவி வந்தவுடன் பெரும் மாற்றத்தை அடைந்து விடுகிறது. அம்மா எதையும் வெளிப்படையாக பேசுகிறேன் என கிளம்பி அனைத்தையும் கொதிநிலைக்கு கொண்டு சென்று விடுவார். அப்பா அதிர்ந்து பேசாத ரகம் என்றாலும் அம்மா மிகவும் அஞ்சிய ஆளுமை அவர்.

இந்தப் பதிவு அந்த உறவு சிக்கலை சொல்லவந்ததல்ல. என் பெரியப்பா மகன் ஜனார்தனனின் சென்னை கல்யாணம் பல நிகழ்வுகள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. இந்த புகைப்படம் அவரது ஆல்பத்தில் இருந்து அன்னி எனக்கு அனுப்பித் தந்தார்கள். தாத்தா கோவிந்தசாமிபிள்ளை பாட்டி ஆதிலக்ஷ்மி இருவரும் இருந்தார்கள். அவர்களை இந்த மங்களான படத்தில் பார்க்கும் போது மிகுந்த மனநிறைவை அடைகிறேன்

அனைவரும் இணைந்திருந்த குடும்பத்தில் முதல் திருமணம். எனக்கு பத்து வயதிற்குள் இருக்கும். முதலில் நினைவிற்கு வருது தாத்தா வைத்திருந்த கருப்பு நிற வண்டு போன்ற பியூக் ரக காரும் அது முதலில் நிகழ்த்திய விபத்தும் எனக்கு நினைவிருக்கிறது. திருமணத்தில் முதன்மையாக நினைவிருந்தது இசை நிகழ்ச்சி பாடல் வாணி ஜெயராம் பாடியமல்லிகை என் மண்ணன் மயங்கும்பாடல். என்னை முழுமயாக வசீகரித்தது அந்தப் பாடலில் உபயோகப்படுத்திய இசை கருவிஆர்கன்என சொல்லப்படுகிற கீ போர்டு. அதன் பல வித இசை வெளிப்பாடுகள் என்னை ஈர்த்தது. அதன் பிறகு அப்பாவுடன் திருச்சி சென்ற போது அங்கு வெளிநாட்டு பொருள் விற்கும் அங்காடியில் கீ போர்டை பார்த்த உடன் அதை வாங்கித் தரச் சொல்லி அழுது ஆர்பாட்டம் செய்தது நினைவிருக்கிறது. அப்பா உறுதியாக மறுத்துவிட்டார். அன்று முழுவதும் அவர் மீது வண்மத்துடன் இருந்தேன். பின்னாளில் சொந்த தொழில் தொடங்கி சப்பாதிக்க ஆரம்பித்த பிறகு வாங்கிய முதல் பொருள்கீபோர்டு”.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்