https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 ஜனவரி, 2022

அடையாளமாதல் * உடல் மொழி *

 ஶ்ரீ:பதிவு : 605  / 795 / தேதி 29 ஜனவரி  2022


* உடல் மொழிஆழுள்ளம் ” - 04

மெய்மை- 03.
ஆலோசனை கூட்டதிற்கு ஒரு நாள் முன்பாக தெரிவு செய்து வைத்திருந்த  தொகுதி் தலைவர்களை நான் அந்த ஆலோசனக் கூட்டத்திற்கு அழைத்திருப்பது வெளியாகி பூதாகரமாக ஊதி  உருக்கொண்டு சண்முகம் முன்பாக நிறுத்தப்பட்டது . இதில் வேடிக்கை என்னவென்றால் தெரிவு செய்து வைத்திருந்தவர்கள்  தொகுதி தலைவர்களாக நியமிக்க நான் நினைத்திருப்பதைப் பற்றி அவர்களுக்கு தெரியாது . இன்று இது மூன்றாவது பஞ்சாயத்து எனக்குள் கடும் கொந்தளிப்பை கொடுத்த நிகழ்வு . ஏறக்குறைய அன்று இரவு 9:00 மணிக்கு முடிவுற்ற பஞ்சாயத்து எனக்கு சாதகமான பிறகும் உள்ளம் அமைதி கொள்ளவில்லை . தனித்து கடற்கறையில் அமர்ந்து அதை வெறித்த கொண்டிருந்த போது என்னுள் உள்ள அத்தனைப் பொறுமையை இழந்துஅவர்களுக்கு இணையாக அரசியலில் அடித்து ஆடு” “இல்லை வேண்டாம் இயல்பை இழக்காதேஎன கொந்தளிக்கும் மன ஊசலில் இருந்தேன் . எப்போதெல்லாம் நிலையழிவு கொள்கிறேனோ அப்போதெல்லாம் நான் இங்கு  வந்து அமர்வது  வழக்கம் . காரணம் என முன்னால் இருக்கும் என்னைவிட கொந்தளிக்கும் அந்த பேரியற்கை என்னை எப்போதும் ஆற்றுப்படுத்தி இருக்கிறது .


சண்முகம் குறுகல் மனோநிலைக் கொண்ட அணித் தலைவர் போல நடந்து நான் பார்த்ததில்லை அனைவருக்குமான தலைவராகவே தன்னை எப்போதும் முன்நிறுத்துவார். தனிப்பட்ட ஆதரவு என ஒன்றை வெளிப்படையாக செய்யமாட்டார் அதுவே அவரது பலம் அதுவே அவரை சார்ந்து இயங்குபவரின் பலவீனமும் கூட . பலர் வெறுப்புற்று அவரை விட்டு விலகிச் செல்லும் முதன்மை காரணமும் . எதுவும் அவரது அனுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை . சண்முகத்தின் அணியை சேர்ந்தவர்களுக்கு கட்சியில் தனி மரியாதை இருப்பது அவரின் அந்த ஜனநாயகப் பண்பினால் . அதை நம்பித்தான் அவரை விமர்சிப்பவர்கள் கூட  அவரிடம் நேரில் சென்று முறையிடுகிறார்கள் . அவரிடம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறார்கள் பல சமயம் அவர்களை அவர் ஏமாற்றுவதில்லை . இந்த சிக்கல் முதல்முறை எழுப்பப்பட்டபோதே அதை சரி செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் தகுந்த காரணம் அல்லது என்தரப்பு நியாயங்களை வைத்தே முன்நகர்ந்தேன் அதே சமயம் எனக்கு எதிரான கருத்துக்களை அவர் செவி கொள்ளவே கூடாது என நான் எதிர்பார்க்கவில்லை . அவரின் இந்த நிலைப்பாடு பல தலைமை கொண்ட ஒரு கட்சி அமைப்பிற்கு அடிப்படை பலம். இங்கு யாரும் முற்றதிகாரம் கொண்டவர்களாக இருக்க முடியாது . அப்படி தங்களை அதிகாரம் மூலம் இங்கு முன்வைத்தவர்கள் அழிவை உருவாக்கி சென்றதையே பார்த்திருக்கிறேன்


சண்முகத்திடம் இது முதல் அரசியலின் ஆரம்பப்பாடம். இதை பொறுமையாக கடக்க முடியாது போனால் இது போல ஒவ்வொன்றின் முன்னும் முட்டி போதி சிதறி அமைதி இழந்து நிற்க வேண்டி இருக்கும் . பிறரின் செயலில் இல்லாதது அவர்களுக்கான விழுமியம் . அதை முன்வைத்த அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்கிற விழைவோடு சண்முகத்தின் அரசியலுக்குள் வந்தேன் . பாலனின் பொருளற்ற உதாசீனத்தால் வெறுப்புற்று வெளியேறினேன் . பின் அவரின் தொடர் சீண்டலால் அவருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசியலில் என்னால் என்ன நிகழ்த்த முடியும் என செய்து காட்டினாலும் . என்னுடன் பாலன் மீது நம்பிக்கையின்மை வெளிப்படுத்து அவரை பதவியில் இருந்த இறக்க தீர்மானம் கொண்டுவந்தவர்கள் அதன் பின்னர் பாலனுடன் உள்பேரங்களில் ஈடுபட்டுகிறார்கள் என்கிற செய்தி கிடைத்த பிறகு அவர்களின் பேரம் வெற்றிகராமாக முடியும் வரை காத்திருந்து பின் யாரும் எதிர்நோக்காத நேரத்தில் அதிலிருந்து விலகி அந்த பேரம் என் பொருட்டு வைக்கப்பட்டதல்ல என எல்லோருக்கும் உணர்த்த நான் மேற் கொண்ட செயல் மிக நிதானமாக வெளிப்பட்ட ஒன்று . இப்போது அதை இழந்திருக்கிறேன் . எது எனக்கு பதற்றத்தை கொடுக்கிறது . அமைப்பை ஒட்டி உருவாக்கி வைத்துள்ள அரசியல் கனவு கலைந்து போகும் என்பது . இல்லை அது இன்னும் வெளிப்படவில்லை . அதற்கான நேரம் இன்னும் இருக்கிறது. பின் மெல்லத் தனிந்து எனது இயல்பில் அதை  என முடிவெடுத்த பின்னர் அடுத்த நிகழ்வை நோக்கி நகர்ந்தேன்.சண்முகம் முன்பாக கூடியிருந்த அந்த கூட்டம் குரலை உயர்த்தி அவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தது . அவர் தன் பாணியில் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் . அன்று இரவு 7:30 மணிக்கு நான் அவரது  அறைக்குள் நுழைவதை  பார்த்த பிறகு  அனைவரின் குரலும் உச்சத்தை அடைந்தது . நான் ஒன்றும் பேசாமல் அவருக்கு அருகே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டேன் நின்று கொண்டிருந்தவர்கள் கிடைத்த நாற்காலிகளில் அங்காங்கே அமர்ந்து கொண்டனர். குரல்களின் அடர்த்தி குறைந்தாலும் மீண்டும் அவரவர் தங்களின் நிலைபாடுகளை சொல்லிக் கொண்டே இருந்தனர் . நான் என்னை தொகுத்துக் கொள்ள துவங்கினேன. சுமார் 6 ஆண்டுகாலம் உழைப்பு விண்டிக்கபட இருப்பது தெரியவரும் போது ஏற்படும் பதைப்பு கட்டுபாடில்லாதது கையாள்வது சிக்கல். கொஞ்சம் ஏமாந்தால் அனைத்தும் கெட்டுவிடும் . அவர்கள் சொல்லி ஓயும் வரை அல்லது என்னை தலைவர் பேச சொல்லும் வரை அமைதிகாப்பது என முடிவு செய்தேன். அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எனக்குள் அடுக்க ஆரம்பித்தேன்.


தொகுதிக்கு தெரிவு செயது வைத்திருந்தவர்களைஅனாமதேயங்கள்அவர்களை எப்படி நிர்வாக குழு கூட்டத்திற்கு கூப்பிடலாம் என்பது மிக தெளிவான குற்றச்சாட்டு . சண்முகம் என் பக்கம் திரும்பிஅப்படியாஎன்றார் . அவர் கண்களை பார்த்தால் அதில் விஷமம் தெரிவாதக தோன்றியது என் உளமயக்காக இருக்கலாம் . அது கொடுத்த ஊக்கத்தினால் எனது வாதத்தை அடுக்க ஆரம்பித்தேன் ஆனால் மிக ஜாக்கிரதையாக . “நடக்கவிருப்பது நிர்வாக கூட்டமில்லை . இது ஆலோசன கூட்டம் தான் . இது அறுதியான கூட்டம் என்றால் அதில் அலோசிக்க என்ன இருக்கிறது . மாநிலம் முழுவதும் இருந்து அதற்கு உறுப்பினர் வரவில்லை என்றால் யாருக்கானது இந்த பயிற்சி முகாம்? . மேலும் அதில் உள்ளவர்கள்அனாமதேயம்என்கிற சொல்லை உபயோகித்தனர் யாருக்கு கொடுத்திருக்கிறேன் அவர்கள் பெயர்களை சொல்லச் சொன்னதற்கு நகரப் பகுதியில் இருந்து சில பெயர்களைச் சொன்னார்கள் அவர்கள் அனைவரும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் அனுக்கர்கள் நான்  சண்முகத்திடம் நீங்கள்தான் சொல்ல வேண்டும் அவர்களை அழைப்பாத வேண்டாமா என்று யார் யாருக்கு அழைப்பு அனுப்பபட்டிருக்கிறது என்கிற பட்டியலை கேட்டார் அதை விஜயகுமாரிடமிருந்து வாங்கிக் கொடுத்தேன்.


அவர் வழக்கமான தனது கிராம பஞ்சாயத்து பாணியில் நாற்காலியில் வலது காலை மடக்கி குத்திட்டுக் உட்கார்ந்து கொண்டு  வலது கால் கட்டை விரலை தடவிக் கொண்டிருந்தார். அது அவரது வழக்கம் கால் கட்டைவிரல் நகம் பலப்பலப்தை பார்த்திருக்கிறேன் . நான் கொடுத்த பட்டியலில் யார் யாரை அழைத்திருந்தேன் எந்தத் தொகுதி யார் சிபாரிசு என அதில் குறிப்பிட்டிருந்தது . விரல் நகத்தை தடவிக் கொண்டிருந்தார் என்றால் அங்கு பேசுவது எதுவும் உள்ளே சென்று சேரவில்லை என்று அர்த்தம் . அவரது மனநிலை எனக்கு ஆறுதளித்தது . காலை நீட்டி இடது கால் வலது முழங்கால் மேல் பகுதியை மெல்ல உரசியபடி இருந்தால் எதிர்மறையான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என அவரது நீண்ட நாள் அனுக்கர்கள் சொல்லுவதை பார்த்திருக்கிறேன். ஒரு வித வழிபாட்டு மனம் போல என நினைத்துக் கொள்வதுண்டு . சில சமயங்களில் அந்த சந்தர்பப முடிவுகள் அவர்கள் சொன்னதை ஒட்டி இருப்பதை பார்த்திருக்கிறேன் 

வெண்முரசு 46 வது கூடுகை

 

சனி, 22 ஜனவரி, 2022

அடையாளமாதல். * நகரும் காய்கள் *

 


ஶ்ரீ:பதிவு : 604  / 794 / தேதி 22 ஜனவரி  2022


* நகரும் காய்கள்ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 02.

அன்று மாலை கட்சி அலுவலகத்திற்கு தலைவர் சண்முகத்தை சந்திக்கும் போது மாலை 6:00 மணி ஒரு மாதிரி அனைத்து தகவல்களையும் திரட்டிவிட்டேன் . இம்முறை காரைக்கால் நிர்வாகிகள் சிக்கலை துவங்கி இருந்தார்கள் அதில பழைய இளைஞர் காங்கிரஸார் சிலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். யார் என்ன பேசினார்கள் இவர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை, உள்ளூரில் சண்முகம் அணியில் இருக்கும் முதலியார்பேட்டை சபாபதி ஆதரவாளர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் வைத்தரசு அவரது அறையில் அமர்ந்திருந்தார்கள். இந்த கூடுகை நிகழவிருப்பதை விட அதை செய்யும் முறை அல்லது அதை நான் முன்னெடுக்கிறேன் என எதுவோ ஒன்று அவர்களை சீண்டிக் கொண்டே இருக்கிறது . இது இளைஞர் காங்கிரஸ் தலைவர் சண்முகத்தின் கீழ் நடைபெறும் முதல் பெரிய நிகழ்வு என்பது அவர்களுக்குள் எதோ ஒன்றை அமையவிடாமல் செய்து கொண்டிருந்தது .தலைவர் அறையில் சபாபதியை பார்த்ததும் மீண்டும் அந்தக் கசப்பு எழுந்தது . அடக்கிக் கொண்டேன் . அது மாறாதது . ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தால் இதை போன்றதொரு அறிவுரை வழங்கும் படலத்தை நிரந்தரமாக நீக்கிக் கொள்ள முடியும் அது வரை பொறுமையாக இருக்க மீள மீள எனக்குள் சொல்லிக் கவண்டேன் . வையத்தரசு வித்தியசமான கதாபாத்திரம் . எதையும் தானாக செய்யமாட்டான் உடன் சபாபதியை அழைத்து வந்து விடுவான் . இரட்டைகள் என எனக்குள் சிரித்துக் கொண்டேன் . இதை எப்படி கடக்க வேண்டும என சட்டென புரிந்து போனது


நான் சபாபதியின் வணக்கம் சொல்லி சென்று அவருக்கு பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவருக்கு கை நீட்டினேன் அவரும் நட்பார்ந்த சிரிப்புடன் கை குலுக்கினார்  .சண்முகம் கண்களில் ஒரு சிறு மாற்றம் வந்து சென்றது கவனிக்க முடிந்தது . நான் பக்கத்தில் அமர்ந்ததும் . சபாபதி நேரடியாக என்னிடம் அந்த கூட்டம் நடத்துவது முறையில்லை . கட்சி கட்டுப்பாடு என்றெல்லாம் பேசிக் கவண்டே சென்றார் . நான் எதிற்கும் வாயை திறக்கக் கூடாது என உறுதியாக இருந்தேன் சற்று நேரம் கழித்து சண்முகம்என்ன அவர் அவ்வளவு சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ ஒன்றும் சொல்லவில்லேயேஎன ஊக்கினார் . அது ஆபத்தானது என்றாலும் இப்போது அடித்து ஆடியாக வேண்டும் ஆனால் வார்த்தைகளில் நிதானம் ஏற்படுத்திக் கொண்டேன். நேற்று அழைப்பிதழை கொடுக்க வையத்தரசு வீட்டிற்கு சென்ற போது அதை வாங்கமாட்டேன் என சொல்லி விஜயகுமாரடம் ஏதோ பேசி இருக்கிறான் . இப்போது விஜயகுமார் வருகிற நேரம் இப்போது வந்தால் இருவரும் தலைவர் முன்பாக சரியாக கோர்த்துக் கொள்வார்கள் சபாபதிக்கு அவனை பார்த்தாலே ஆகாது . நான் மௌனம் காத்தது அதற்காகத்தான் . ஆபத்திற்கு உதவுபவன் மிகச் சரியாக உள் நுழைந்தான் . சபாபதி கண்களில் எரிச்சலை பார்க்க முடிந்தது . நேற்று ஆரம்பித்த சண்டையை மிக தீவிரமாக இருவரும் தொடங்கினர் . நான் எழுந்த விஜயகுமாரை அமைதியாக இருக்கும்படி சொன்னேன் எனக்கு எந்த தகவலும் இல்லை என்பது எனது நிலைப்பாடு . நான் நீண்ட விலக்கத்தை தர தயாராக இல்லை . இப்போது சிக்கல் ஒன்று தான் தலைவர் இருக்க பொதுச் செயலாளர் எப்படி  கையெழுத்திடுவது . இரண்டு ஐந்து பொதுச் செயலாளர் இருக்கையில் எனக்கு மட்டும் என்ன தனி அதிகாரம் . நான் இரண்டாஙது கேள்விக்கு பதில் சொல்ல விரும்பினேன் . முதல் கேளவிக்கு பதில் சொல்ல வேண்டியவர் வல்சராஜ் , அவரிடம் சொல்லிய பிறகே நான் கையெழுத்திட்டேன் . பொதுச் செயலாளர்களின் நிரையில் முதலில் உள்ளவர்கள் அதை செய்யும் அதிகாரமுடையவர் மேலும் இது கூட்டறிக்கை இல்லை எல்லோரும் கையொப்பம் போட


அதன் பின் சண்முகம் நான் வல்சராஜிடம் பேசி விட்டேன் பிரச்சனையை இத்துடன விடுங்கள் ஆக வேண்டியதை இணைந்து செய்யுங்கள் என சொல்லிவிட்டார் . அடுத் சிக்கல் இன்னும் இரண்டொரு நாளில் வந்துவிடும்என நினைத்துக் கொண்டிருக்க வெள்ளாழர் தெரு கிருஷ்ணமூர்தி அணியினர் உள்ளே வந்தனர் . முருகேசன்,சுகுமாறன்,வக்கீல் பாலா போன்றவர்கள் பாலனுடன் இருந்தவர்கள். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர் சிங் பிட்டா வந்த பொது கூட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸில் இணைந்தனர். பாலனுடன் முரணபட்டு நான விலகிய பின்னர் பாலன் காங்கிரஸில் இருந்து வெளியேறும் வரையில் அவருடன் பணியாற்றியவரகள் . மரைக்காயரின் ஆதரவாளராக சொல்லப்பட்டாலும் வெள்ளாழர் தெரு கிருஷ்ணமூர்த்திக்கு அனுக்கர்கள். அவர்களே அசல் சிக்கல். மிக ஜாக்கிரதையுடன் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டேன். வெள்ளாழர் தெரு கிருஷ்ணமூர்த்தி மரைக்காயரை விட்டு சண்முகம் அணியில் சேர்ந்ததுப் போல அறியப்பட்டார். 1996 தேர்தல் தோல்வி அனைவரையும் அடக்கி வாசிக்க வைத்துவிட்டது . அவர்களை பார்த்தும் சண்முகமே முடித்து வைத்துவிட்டார்


இப்போது தான் பேசி முடித்தேன் அனைவரும் ஒன்றாக செயல்படுங்கள் என சொல்லி எழுந்துவிட்டார். மூன்று மணி நேர பஞ்சாயத்து முடியும் போது இரவு 9:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . சண்முகம் வீட்டிற்கு கிளம்பி விட்டார் . நான் இரவு அவரை சந்தித்து இடத்தை பற்றிய சிக்கலை முடித்து ஹோட்டல் சற்குருவிற்கு தகவல் சொல்ல வேண்டும் . இப்போது கிளம்பினால் அனைவரும் திரும்பவும் தலைவர் வீட்டில் கூடுவார்கள் . இன்றைக்கு இது போதும் என நினைத்துக் கொண்டேன் . காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து கிளம்பாமல் சூரியநாராயணன் அறையில் சென்று அமர்ந்து கொண்டேன்வெள்ளாழர் தெரு அணி ஆர்வமழிந்துவிட்டது போல காணப்பட்டார்கள். அலுவலகத்தை பூட்டி சற்று நேரம் வெளியில் நின்று கொண்டிருந்த போதுதலைவர் உன்னை 10:00 மணிக்கு மேல் வீட்டிற்கு வரச்சொன்னார்என்றார் சூரியநாராயணன். நான் வீட்டிற்கு சென்று இரவுணவிற்கு பின்னர் தலைவர் வீட்டை அடைந்து அவர் முற்றத்தில் வண்டியை கொண்டு நிறுத்தினேன். இரவு 9:00 மணிக்கு மேல் கடற்கரை சாலை மாலை நடைபோகிறவர்களுக்கானது. கடற்கரை சாலைக்கு சென்று சந்திக்கும் சாலைகள் அனைத்திலும் காவல்துறை வண்டிகள் செல்ல தடை ஏற்படுத்தி இருக்கும்அதனால் சற்று தூரத்தில் வண்டியை நிறுத்து நடந்துதான் அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் . இப்போது இரவு 10:00 மணியை கடந்து கொண்டிருப்பதால் அந்த தடைகள் எடுக்கப்பட்டு விட்டது ஆறுதளித்தது . அகன்ற மூன்று வளைவு வாயில்கைக் கொண்ட முற்றம் மற்றும் கார் நிறுத்துமிடம் இரண்டு வண்டி வந்து செல்லவும் நடு வளைவில் இரு சிறு ஒரு அடு அகலமுள்ள திண்ணை போன்றதடுப்புடன் விந்தையாக இருக்கும் . அப்போதுதான் கவணித்தேன் கார் நிற்கும் முற்றம் மேலே தங்க நிற நட்சத்திரம் உள்ளூ வெளிச்மிட விளைக்க பொருத்தி இருந்து . எப்போதும் இருண்டு காணப்படும் போர்டிகோ வெளிச்சத்தடன் கடற்காற்றுக்கு  நலுங்கி ஆடி கொண்டிருக்க அதன் துளைவழியாக பாய்ந்த ஒளி சில்லறை காசுகளை அந்த முற்றும் முழுவதும் வாரியிறைத்துக் கொண்டிருந்தது . அந்த கார் முற்றம் அவரை வெளியுலகுடன் தொடர்புறுத்தும் இடம் . விநாயகர் சதூர்த்திக்கு பிள்ளையார் சிலை மாலையுடன் . அகில இந்திய தலைவர்களின் பிறந்த இறந்த நாள்களுக்கு அதே மாலை மரியாதையுடன் அங்கு வைத்திருப்பது அவரது வழக்கம் . தனிப்பட்ட குடும்பம் என ஒன்று இல்லாததால். மரபில் உள்ள தனது தொடர்ச்சியை கண்டடைய இது ஒரு குறியீடு போல தோன்றுவதுண்டு


அவரது அறையில் காத்திருந்த போது  இரவுணவிற்கு பிறகு துண்டில் கைதுடைத்தபடி வந்து தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டார் . பக்கத்து நாற்காலியை காட்டியதும் நானும் அமர்ந்து கொண்டேன். “நீ என்னமோ செய்ய முடிவு பண்ணீட்ட போல ,இருக்கு எதாவானாலும் நிதானம் வேண்டும் . ஏன் இவர்கள் இவ்வளவு பதட்டமடைகிறார்கள் என எனக்கு தெரியும். இன்னும் இரண்டு நாள் இருக்கிறதா . நான் நாளை சென்னை சென்று இரவே திரும்பிவிடுவேன் . அது ஞவரை புது சிக்கால் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள் என்றார். நான் அதற்கு ஆமோதித்து தலை அசைத்தேன். ஒன்றும் எழாது என்றே நினைத்துக் கொண்டேன்

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

அடையாளமாதல் * ஒருங்கிணைந்த முகம் *

 ஶ்ரீ:பதிவு : 603  / 793 / தேதி 16 ஜனவரி  2022


* ஒருங்கிணைந்த முகம்ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 01.

ஆலோசனை கூடுகைக்கு இரண்டு நாட்கள் முன்னர் தெரிவு செய்து வைத்திருந்த அனைத்து தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அழைப்பாக அனுப்பப்படாமல் தகவல் மட்டும் சொல்லப்பட்டது . தூரம் கருதி யேனாம் , மாஹேவிற்கு ஒரு வாரம் முன்பும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தகவலை தொலைபேசியில் சொல்லியிருந்தேன் . தொகுதி தலைவராக தெரிவு செய்து வைத்திருந்தவர்களில் சிரைத் தவிர பிற எவரும் ஒருவருடன் ஒருவர் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர்கள் எனவே அவர்களுக்குள் பேசி ஒட்டு மொத்த வடிவத்தை அளிக்க முடியாது . அந்த ஆலோசனை கூடுகை அணைவரையும் சொல்லில்லாமல் ஒருகிணைக்க கூடியது. இந்த கூட்டமே அவர்களை மனதில் வைத்து திட்டமிடப்பட்டது. எங்கும் தொடர்புறுத்தும் ஓரிருவர் இருப்பார்கள அவர்கள் தங்கள் பெருமைக்காக அல்லது வம்பிற்காக ஒரு தகவலை கொண்டு செல்வார்கள் . இந்த விஷயத்தில் எதிர் நோக்கியதை விட கொஞ்சம் வேகமாக அதை செய்திருந்தார்கள் என்பது அன்று காலை சூர்யநாராயணன் அழைக்கும் வரை அறிந்திருக்கவில்லை. அதுரையிலும் பெரியதாக ஒன்றும் சிக்கலில்லை என்றே நினைத்தேன் . அந்த ஓரிருவர் கூட அமைப்பின் பலத்தையும் அது செல்லும் தூரத்தை அதிலிருந்து தங்களுக்கு உருவாகி வரும் இடம் மற்றும் வாய்ப்பை அறிந்திருந்தாலும் அதை ஒட்டு மொத்தமாக மனதால் அள்ள முடியாதவர்கள் , கண்களுக்கு தெரியும் ஒன்றை பற்றி கொண்டு அதில் லாப நஷ்ட கணக்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். உடன் தெரிவது பிறரின் லாபம் என்பதால் எங்கும் எதிலும் சலம்பிக் கொண்டே இருப்பார்கள். மாநில இளைஞர காங்கிரஸ் நிர்வாகிகளாக இருப்பதால் அவர்களை புறந்தள்ள முடியாது. இதை ஏன் இத்தனை சிக்கலாக்குகிறார்கள் என திகைத்ததுண்டு


கட்சியின் மூத்த மற்றும் முதன்மைத் தலைவர்கள் இதை பெரிது படுத்தவில்லை அல்லது அக்கறையில்லை என்பது போல நடந்து கொண்டாலும் அவர்களின் அனுக்கர்கள் இதை பேசி பேசி நெருப்பிடுவார்கள். அவர்களுக்கு இது ஒன்றுமில்லாதது . ஆனால் தலைவருடன் அமர்ந்து விவாதிக்க அல்லது அவர்களை ஒரு பொருட்டென நினைக்க வைக்கிறதா என தங்கள் இடம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள். செயல்படுபவர்கள் ஆற்றங்கரை கல் எந்த விஷயத்திலும் அடிவாங்காமல் வெளிவர முடியாதுசூர்ய நாராயணன் கூப்பிடுவார் என முன்னமே கணித்திருந்தேன் . சூரியநாராயணன்தலைவர் பேசறார்என்றதும் ,சகல புலன்களும் விழித்துக் கொண்டது . “உடனே வந்து பாருகள்என்றார் . மணி காலை 9.00 மணி காரைகால் செல்வமுத்துகுமரன் குரல் போனில் கேட்டது காரைகாலில் யார், யாருக்கும் நிரந்தர ஆதரவாளர் ,எதிரி என எவரையும் இணம்பிறிக்க முடியாது . தனித்தனியாக உதிரிகளாய் தெரிவார்கள். சட்டென ஒரு திரளாக வந்து கடும் குரோதத்தை வெளிப்படுத்தி திகைக்க அடிப்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு ஒன்றுமே நடக்காதது போல முகம்மலர பேசுவார்கள். அனேகமாக ஊர் ஒன்று கூடிவிட்டது என தோன்றியது . அலைபேசி முழு பயன்பாட்டற்கு வந்து கொண்டருந்த காலம் . இருக்கும் இடம் பற்றிய பொய்கள் சகஜமாய் பெருக் கெடுத்தது . அவரிடம் சென்னையில் இருந்து புதுவை வந்து கொண்டிருப்பதாகவும் மதிய உணவிற்கு பிறகு வந்து சந்திக்கிறேன் என்றேன் . “அப்படியா சரிஎன இணைப்பை துண்டித்தார் . மதியம் வரை எங்கும் தலையை காட்டக்கூடாது


நேற்று இரவு விஜயகுமாரிடம் நான் ஊரில் இல்லை என்கிற தகவல் காலையிலேயே அவருக்கு சொல்லப்பட்டது குரலில் புரிந்து கொள்ள இருந்தது . வழக்கமாக காலை சந்திக்கும் நண்பர்கள் சிலரை அழைத்து சென்னையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக சொன்ன பொய்யை மீண்டும் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன் , சிலரை சென்று தலைவரை சந்திக்க சொன்னேன் . அங்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ன சிக்கல் ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்பினேன். தலைவரை சந்திக்க போகும் முன் தெளிவான பதிலுடன் அவரை அனுக வேண்டும் . கோபமோ பதட்டத்தையோ வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது . அவரிடம் உள்ள சிக்கல் யார் அவர் முன்னால் குரல் உயர்த்தி பதட்டத்தில் வாதிடுகிறர்களோ எப்போதும் அவர்களுக்கு எதிரான முடிவையே எடுப்பார் . ஆரம்பத்தில் சமாதானம் போல ஒன்றுமில்லாதது போலத் துவங்கி இறுதியில் அது சென்று அமரும் இடம் என்ன எனறு எனக்கு தெரியும். மற்றவர்கள் தங்கள் தரப்பை முழுவதுமாக வைத்து முடித்த பிறகு அழைத்துக் கேட்கும் போது குழப்பில்லாத நிலைபாடுகளை தெளிவாக வைக்க வேண்டும் . அதை வைத்து அவர்ளை ஆவேசமாக எதிர்க்கும்படி செய்துவிட்டால் போதும் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார் அது வரை மிக நிதானமாக நகர்த்த வேண்டும் . எதிர்பார்த்தபடி எனது அனுக்கர்கள் அவரை சந்தித்த போது நான் புதுவையில் இல்லை என்பதை அவர்களிடமும் மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டார். முன்பே ஊகித்ததுதான் .


மாலை தலைவர் வீட்டிற்கு அலைபேசியில் ரவியை அழைத்த போது மாலை வரை அவரை உதிரி உதிரியாக பலர் வந்து அவரை சந்தித்துக் கொண்டே இருந்ததாக சொன்னான் . உங்கள் தலைதான் உருளுது என சொல்லிச் சிரித்தான் தலைவர் எப்படி இருக்கிறார் என்றதற்கு தினசரி மந்தமாக இருப்பவர் காலை முதல் உற்சாகமாக இருக்கிறார் ,அவருக்கும் இது போல ஏதாவது ஒன்று தேவையாய் இருகிறது என்றான் . நான் சிரித்துக் கொண்டேன். சண்முகம் எளிதில்  பரபரப்பாக ஒன்றை சொல்ல முடியாது உரத்த குரலில் சொல்வதெல்லாம் செய்தியல்ல . அதற்கென பிறிதொரு குரல் இருக்கிறது . அது எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஹோட்டல் சற்குரு அரங்கை உறுதி செய்யவில்லை . அதன் உரிமையாளர் எனக்கு வேண்டியவர் என்பதால் கடைசியில் உறுதி செய்வதாக சொன்னேன் . அவர் அதற்கு ஒப்புதல் தந்த்திருந்தார் .சில விஷயங்களில் சண்முகத்தை நம்ப முடியாது . அனைத்தையும் முன்னறே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் உஷராகி விடுவார் . ஏதோ சிக்கல் மாற்று யோசனை தேவை என்றெல்லாம் அவருக்கு தோன்றிவிடும் அலட்சியமான ஏற்பாடுகள் தற்செயலானவைகள் என்கிற கோட்பாடுடையவர் . தெளிவான திட்மிடல் சிக்கலின் இருப்பிடமாக நினைப்பார்


தெரிவு செய்து வைத்திருக்கும் தொகுதி தலைவர்களை அழைத்து அந்த கூட்டம் ஒருங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை நோக்கம் . அது ஒரு தொடக்கம் அங்கிருந்து பயணிக்க வேண்டிய இலக்கு வெகு தூரத்திற்கு அப்பால் இருந்தது . அரசியல் நிர்வாகம் என்பது ஒரு திரளில் இருந்து உருவாகி வருவது . தனி நபர் அதை ஒருகிணைக் முடியும். எனக்கு அடுத்தடுத்து செய்ய வேண்டியது மனதில் ஒடியபடி இருந்தது . அதிக காலமில்லை . சண்முகம் நாராயணசாமியுடன் முரண்படுவதை வெளிப்படுத்த நீண்ட காலமெடுக்கும் . அதுவரை நாராயணசாமி காத்திருக்க மாட்டார் என்றே கணித்திருந்தேன் . அதற்குள் தெளிவான அமைப்பை உருவாக்கி விட வேண்டும் என்கிற பதட்டம் இருந்தது . முழு அளவிலான பயிற்சி முகாமின் போது தொண்டர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி இருக்கும். அங்கு கூடும் புது அமைப்பு எல்லோருக்கும் நான் சொல்ல நினைக்கும் செய்தியை தெளிவாக அறிவித்து விடும் . அதற்கு முன்பாக அதன் தலைவர்களை நிரையில் கொண்டு வைத்துவிட வேண்டும். இல்லையென்றால் பின் எதுவும் சரியாகவும் வராதுமாநில நிர்வாகிகள் மற்றும் முடிவு செய்து வைத்திருந்த தொகுதித் தலைவர்கள் என எப்படி பார்த்தலும் 50 பேருக்கு குறைவில்லாமல் கலந்து கொள்வார்கள் . அது மாநில காங்கிரஸ் கமிட்டியை விட எல்லா தொகுதியையும் மிகச் சரியாக பிரதிநிதிப்படுத்துவது . ஆகவே அதைவிட பலங் கொண்டது . சரியாக நிகழுமானால்.


புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்