https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 ஜனவரி, 2022

அடையாளமாதல் * உடல் மொழி *

 



ஶ்ரீ:



பதிவு : 605  / 795 / தேதி 29 ஜனவரி  2022


* உடல் மொழி



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 03.




ஆலோசனை கூட்டதிற்கு ஒரு நாள் முன்பாக தெரிவு செய்து வைத்திருந்த  தொகுதி் தலைவர்களை நான் அந்த ஆலோசனக் கூட்டத்திற்கு அழைத்திருப்பது வெளியாகி பூதாகரமாக ஊதி  உருக்கொண்டு சண்முகம் முன்பாக நிறுத்தப்பட்டது . இதில் வேடிக்கை என்னவென்றால் தெரிவு செய்து வைத்திருந்தவர்கள்  தொகுதி தலைவர்களாக நியமிக்க நான் நினைத்திருப்பதைப் பற்றி அவர்களுக்கு தெரியாது . இன்று இது மூன்றாவது பஞ்சாயத்து எனக்குள் கடும் கொந்தளிப்பை கொடுத்த நிகழ்வு . ஏறக்குறைய அன்று இரவு 9:00 மணிக்கு முடிவுற்ற பஞ்சாயத்து எனக்கு சாதகமான பிறகும் உள்ளம் அமைதி கொள்ளவில்லை . தனித்து கடற்கறையில் அமர்ந்து அதை வெறித்த கொண்டிருந்த போது என்னுள் உள்ள அத்தனைப் பொறுமையை இழந்துஅவர்களுக்கு இணையாக அரசியலில் அடித்து ஆடு” “இல்லை வேண்டாம் இயல்பை இழக்காதேஎன கொந்தளிக்கும் மன ஊசலில் இருந்தேன் . எப்போதெல்லாம் நிலையழிவு கொள்கிறேனோ அப்போதெல்லாம் நான் இங்கு  வந்து அமர்வது  வழக்கம் . காரணம் என முன்னால் இருக்கும் என்னைவிட கொந்தளிக்கும் அந்த பேரியற்கை என்னை எப்போதும் ஆற்றுப்படுத்தி இருக்கிறது .


சண்முகம் குறுகல் மனோநிலைக் கொண்ட அணித் தலைவர் போல நடந்து நான் பார்த்ததில்லை அனைவருக்குமான தலைவராகவே தன்னை எப்போதும் முன்நிறுத்துவார். தனிப்பட்ட ஆதரவு என ஒன்றை வெளிப்படையாக செய்யமாட்டார் அதுவே அவரது பலம் அதுவே அவரை சார்ந்து இயங்குபவரின் பலவீனமும் கூட . பலர் வெறுப்புற்று அவரை விட்டு விலகிச் செல்லும் முதன்மை காரணமும் . எதுவும் அவரது அனுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை . சண்முகத்தின் அணியை சேர்ந்தவர்களுக்கு கட்சியில் தனி மரியாதை இருப்பது அவரின் அந்த ஜனநாயகப் பண்பினால் . அதை நம்பித்தான் அவரை விமர்சிப்பவர்கள் கூட  அவரிடம் நேரில் சென்று முறையிடுகிறார்கள் . அவரிடம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறார்கள் பல சமயம் அவர்களை அவர் ஏமாற்றுவதில்லை . இந்த சிக்கல் முதல்முறை எழுப்பப்பட்டபோதே அதை சரி செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் தகுந்த காரணம் அல்லது என்தரப்பு நியாயங்களை வைத்தே முன்நகர்ந்தேன் அதே சமயம் எனக்கு எதிரான கருத்துக்களை அவர் செவி கொள்ளவே கூடாது என நான் எதிர்பார்க்கவில்லை . அவரின் இந்த நிலைப்பாடு பல தலைமை கொண்ட ஒரு கட்சி அமைப்பிற்கு அடிப்படை பலம். இங்கு யாரும் முற்றதிகாரம் கொண்டவர்களாக இருக்க முடியாது . அப்படி தங்களை அதிகாரம் மூலம் இங்கு முன்வைத்தவர்கள் அழிவை உருவாக்கி சென்றதையே பார்த்திருக்கிறேன்


சண்முகத்திடம் இது முதல் அரசியலின் ஆரம்பப்பாடம். இதை பொறுமையாக கடக்க முடியாது போனால் இது போல ஒவ்வொன்றின் முன்னும் முட்டி போதி சிதறி அமைதி இழந்து நிற்க வேண்டி இருக்கும் . பிறரின் செயலில் இல்லாதது அவர்களுக்கான விழுமியம் . அதை முன்வைத்த அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்கிற விழைவோடு சண்முகத்தின் அரசியலுக்குள் வந்தேன் . பாலனின் பொருளற்ற உதாசீனத்தால் வெறுப்புற்று வெளியேறினேன் . பின் அவரின் தொடர் சீண்டலால் அவருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசியலில் என்னால் என்ன நிகழ்த்த முடியும் என செய்து காட்டினாலும் . என்னுடன் பாலன் மீது நம்பிக்கையின்மை வெளிப்படுத்து அவரை பதவியில் இருந்த இறக்க தீர்மானம் கொண்டுவந்தவர்கள் அதன் பின்னர் பாலனுடன் உள்பேரங்களில் ஈடுபட்டுகிறார்கள் என்கிற செய்தி கிடைத்த பிறகு அவர்களின் பேரம் வெற்றிகராமாக முடியும் வரை காத்திருந்து பின் யாரும் எதிர்நோக்காத நேரத்தில் அதிலிருந்து விலகி அந்த பேரம் என் பொருட்டு வைக்கப்பட்டதல்ல என எல்லோருக்கும் உணர்த்த நான் மேற் கொண்ட செயல் மிக நிதானமாக வெளிப்பட்ட ஒன்று . இப்போது அதை இழந்திருக்கிறேன் . எது எனக்கு பதற்றத்தை கொடுக்கிறது . அமைப்பை ஒட்டி உருவாக்கி வைத்துள்ள அரசியல் கனவு கலைந்து போகும் என்பது . இல்லை அது இன்னும் வெளிப்படவில்லை . அதற்கான நேரம் இன்னும் இருக்கிறது. பின் மெல்லத் தனிந்து எனது இயல்பில் அதை  என முடிவெடுத்த பின்னர் அடுத்த நிகழ்வை நோக்கி நகர்ந்தேன்.



சண்முகம் முன்பாக கூடியிருந்த அந்த கூட்டம் குரலை உயர்த்தி அவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தது . அவர் தன் பாணியில் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் . அன்று இரவு 7:30 மணிக்கு நான் அவரது  அறைக்குள் நுழைவதை  பார்த்த பிறகு  அனைவரின் குரலும் உச்சத்தை அடைந்தது . நான் ஒன்றும் பேசாமல் அவருக்கு அருகே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டேன் நின்று கொண்டிருந்தவர்கள் கிடைத்த நாற்காலிகளில் அங்காங்கே அமர்ந்து கொண்டனர். குரல்களின் அடர்த்தி குறைந்தாலும் மீண்டும் அவரவர் தங்களின் நிலைபாடுகளை சொல்லிக் கொண்டே இருந்தனர் . நான் என்னை தொகுத்துக் கொள்ள துவங்கினேன. சுமார் 6 ஆண்டுகாலம் உழைப்பு விண்டிக்கபட இருப்பது தெரியவரும் போது ஏற்படும் பதைப்பு கட்டுபாடில்லாதது கையாள்வது சிக்கல். கொஞ்சம் ஏமாந்தால் அனைத்தும் கெட்டுவிடும் . அவர்கள் சொல்லி ஓயும் வரை அல்லது என்னை தலைவர் பேச சொல்லும் வரை அமைதிகாப்பது என முடிவு செய்தேன். அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எனக்குள் அடுக்க ஆரம்பித்தேன்.


தொகுதிக்கு தெரிவு செயது வைத்திருந்தவர்களைஅனாமதேயங்கள்அவர்களை எப்படி நிர்வாக குழு கூட்டத்திற்கு கூப்பிடலாம் என்பது மிக தெளிவான குற்றச்சாட்டு . சண்முகம் என் பக்கம் திரும்பிஅப்படியாஎன்றார் . அவர் கண்களை பார்த்தால் அதில் விஷமம் தெரிவாதக தோன்றியது என் உளமயக்காக இருக்கலாம் . அது கொடுத்த ஊக்கத்தினால் எனது வாதத்தை அடுக்க ஆரம்பித்தேன் ஆனால் மிக ஜாக்கிரதையாக . “நடக்கவிருப்பது நிர்வாக கூட்டமில்லை . இது ஆலோசன கூட்டம் தான் . இது அறுதியான கூட்டம் என்றால் அதில் அலோசிக்க என்ன இருக்கிறது . மாநிலம் முழுவதும் இருந்து அதற்கு உறுப்பினர் வரவில்லை என்றால் யாருக்கானது இந்த பயிற்சி முகாம்? . மேலும் அதில் உள்ளவர்கள்அனாமதேயம்என்கிற சொல்லை உபயோகித்தனர் யாருக்கு கொடுத்திருக்கிறேன் அவர்கள் பெயர்களை சொல்லச் சொன்னதற்கு நகரப் பகுதியில் இருந்து சில பெயர்களைச் சொன்னார்கள் அவர்கள் அனைவரும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் அனுக்கர்கள் நான்  சண்முகத்திடம் நீங்கள்தான் சொல்ல வேண்டும் அவர்களை அழைப்பாத வேண்டாமா என்று யார் யாருக்கு அழைப்பு அனுப்பபட்டிருக்கிறது என்கிற பட்டியலை கேட்டார் அதை விஜயகுமாரிடமிருந்து வாங்கிக் கொடுத்தேன்.


அவர் வழக்கமான தனது கிராம பஞ்சாயத்து பாணியில் நாற்காலியில் வலது காலை மடக்கி குத்திட்டுக் உட்கார்ந்து கொண்டு  வலது கால் கட்டை விரலை தடவிக் கொண்டிருந்தார். அது அவரது வழக்கம் கால் கட்டைவிரல் நகம் பலப்பலப்தை பார்த்திருக்கிறேன் . நான் கொடுத்த பட்டியலில் யார் யாரை அழைத்திருந்தேன் எந்தத் தொகுதி யார் சிபாரிசு என அதில் குறிப்பிட்டிருந்தது . விரல் நகத்தை தடவிக் கொண்டிருந்தார் என்றால் அங்கு பேசுவது எதுவும் உள்ளே சென்று சேரவில்லை என்று அர்த்தம் . அவரது மனநிலை எனக்கு ஆறுதளித்தது . காலை நீட்டி இடது கால் வலது முழங்கால் மேல் பகுதியை மெல்ல உரசியபடி இருந்தால் எதிர்மறையான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என அவரது நீண்ட நாள் அனுக்கர்கள் சொல்லுவதை பார்த்திருக்கிறேன். ஒரு வித வழிபாட்டு மனம் போல என நினைத்துக் கொள்வதுண்டு . சில சமயங்களில் அந்த சந்தர்பப முடிவுகள் அவர்கள் சொன்னதை ஒட்டி இருப்பதை பார்த்திருக்கிறேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக