https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 8 ஜனவரி, 2022

அடையாளமாதல் * கனவு *

 



ஶ்ரீ:



பதிவு : 602  / 792 / தேதி 08 ஜனவரி  2022


* கனவு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 74.





இளைஞர் காங்கிரஸில் இருந்து கற்று வெளிவந்தது பல அடுக்குகளைக் கொண்ட சாமான்யனை தொடர்புறுத்துவது அதன் வழியாக அவர்களின் வாழ்கையில் நுழைவது. நல்லது கெட்டது அனைத்திலும். நடிப்பில்லாமல் செய்வது. அது எளிதான ஒன்றல்ல அவர்களின் நம்பிக்கையை பெறுவது நிஜமாக சவால் . மிக மெல்லத்தான் அது நிகழ்ந்தது . எனது குடும்ப பின்னணியும் பாலனின் தேரடியான ஆதரவிருந்ததால் அதை தடையில்லாமல் செய்ய இயன்றது . அதை செய்து முடிக்க வேண்டுமானால் சின்ன சின்ன நாரெடுத்துக் கட்டும் தூக்கனாங்குறுவி கூடு போல. ஒரு நாள் ஒரு இரவில் அது நடக்கிற காரியமல்ல . அலுவலக ரீதியில் நான் செய்ய முயன்றது அனைவருக்குமான ஒரு இயக்கம் . எங்களின் அடிப்படை சக்தியாக திரண்டெழுந்த விளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் ஆதரவு . அவர்களுக்கு எதிரான உள்ளூர் நிலமுடை சமூகம் , அவர்களை எதிர்க்கும் வல்லமையை அரசியலால் இயலும் என முன்வைத்து வெற்றி பெற்றார் கண்ணன் என்பதால் அதுவே எங்கள் வழியானது என சொல்லுவதைவிட . அவர்களில் இருந்து மேலெழுந்து வந்தவர்கள் தலைவர்களென உருபெற்று கண்ணனுடன் சென்றமர்ந்தார்கள் . கண்ணன் அரசியலில் உயர்ந்த போது நிலமுடை சமூகம் அவருக்கு நேரடியாக உதவியது. கண்ணனின் அனுக்கர்கள் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள நேர்ந்ததால் அவர்கள் தங்களை கைவிட்டார்கள் என கொந்தளித்த விளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பாலனை நாடியபோது அவர் கண்ணன் சென்ற அதே பாதையில் பயணிக்கும்படி ஆனது .


நிலவுடமை சமூகத்தை எதிர்ப்பது எங்கள் செயல்பாடானது . நிலவுடைமை சமூகம் சண்முகத்தின் பின்னால் நிற்பதாக எங்கள் புரிதல் இருந்தது . அகவே அவர்கள் சண்முகத்திற்கும் எதிரானவர்களானார்கள். ஆனால் எதார்த்த உலகில் அதன் பொருள் வேறுவிதமாக இருந்ததை பார்க்க முடிந்தது . காரைக்காலில் சண்முகம் அப்படி பார்க்கப் படவில்லை . குபேரை எதிர்த்த போது விளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் குரலாக அவர் ஒலித்தார் என்பது முரண்நகை. எந்த செயல்பாட்டிற்குள்ளும் வருவதில்லை என சண்முகத்தடன் இணைந்த போது இருந்த உள நிலையில் அடைந்த மாற்றம் . வல்சராஜ் யாரையும் ஆதரிக்கவில்லை. அவர் இளைஞர் காங்கிரஸ் எப்பக்கமும் நகராமல் இருக்கு அதன் மேல் வைக்கப்பட்ட எடை. அது சண்முகம் செய்தது. இதுவரை அதன் தலைவர்கள் தங்களுக்கு எது உகந்ததோ அதைச் செய்தார்கள் . வென்றாவர்கள் தோற்றவர்கள் என பிரித்துப்பார்கப்பட்டனர் . இறுதியில் அமைப்பு சென்று அமர்ந்த இடமென்ன என்பது கேள்வி. இதோ இப்போது அதை இயக்கத்தின் பொருட்டு செய்யும் முயற்சி . அதில் எனக்கென்று அரசியல் லாபமில்லையா? என்றால் ஆம் இருக்கு ஆனால் அது உணவில் ஒரு துளி உப்புபோல எனக்கான இடத்தை உருவாக்கிக் கொடுப்பது . கண்களால் பார்க்க இயலாதது . ஆனால் நுண்ணுரவினால் அறியப்படுவது . எந்த நிகழ்வலும் நான, என்னை முன்நிறுத்தவில்லை . கேட்டது அனைவரின் ஒத்துழைப்பை மட்டும். எதுவும் தனிப்பட்ட ஒருவரின. ஆளுமையில் இருந்து உருவாவதில்லை . அனுபவம் அந்த ஆளுமையை அலங்கரிக்கிறது


எனக்கு மறுக்கப்பட்ட இடம் அது. மறுக்கப்பட்ட போது ஏன் ? என ஒருவரும் கேட்கவில்லை. நான் பார்த்த வேலைக்கு இணையாக எதாவது செய்து என்னை கீழே தள்ளியிருந்தால் கூட எனக்கு ஒன்றுமில்லை . ஆனால் அந்த வேலை செய்ய இயலாதவர்கள் என்னை செயல்பட விடாமல் செய்தபோது ஆற்றாமை பெறுக செய்தது . ஆனால் அதிலிருந்து மெல்ல மீண்டிருக்கிறேன் இதைவிட பல நூறு முறை அடிப்பட்டு இதோ அமர்ந்திருக்கும் சண்முகம அரசியலை நேர்மறையாக செய்ய மிகுந்த  நம்பிக்கை அளிக்கிறார் . மனதை பதறவிடாமல் உரிய இடத்தை நோக்கி நகரும் வித்தையை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன் என நினைக்கிறேன் . இதுபற்றி வாய் மொழியாக அவர் எனக்கு வருபோதும் சொன்னதில்லை . குரு என கொண்டவரின் அருகிருப்பு அதை அளித்து விடும் போல .


அதுவரை பெற்ற உதாசனத்திற்கும் கேலிக்குமாக அத்தனைக்கும் சேர்த்து மிக மிக சிறியதாக ஒன்றை செய்திருந்தேன் ஆனால் அதை மையப்படுத்தி சிக்கலை துவக்க முடியாது . அது இலக்கணப்பிழை போல அதை ஆரம்பித்தால் ஏக குழப்பம் வரும் எனவே பிடித்து இழுக்க வேறு தளர்வான முணை ஏதாவது அவர்களுக்கு வேண்டும். பளீச்சென தெரிவது என் கையெழுத்து . அதை கண்டதும் பொங்கி பெருகும் காழ்ப்பை யாராலும் தவிற்க இயலாது . சுற்றறிக்கையில் வழக்கமாக தலைவர் கையெழுத்திடுவார் . அவர் கையெழுத்திடுவது பற்றி முன்பொரு முறை சபாபதி வைத்த விமர்சனத்தை நீண்ட நாள் அவர் நினவில் கொண்டிருந்தார். காந்திராஜ் அதை சொன்னபோது சண்முகம் கடும் கோபமடைந்தார் . இப்போது என்னை குறித்து அதை எழுப்பினால் அவரது பழைய நினைவுகள் கிளர்ந்தெழும் . நல்லதுதான் என நினைத்துக் கொண்டேன்.


வல்சராஜ் ஊரிலில்லாத போது நடைபெறும் அழைப்பை சுற்றறிக்கை வடிவத்தில் அனுப்பி இருந்தேன். அதில் கையொப்பமிடமால் வெற்றாக அனுப்ப முடியாது . ஆனால்சுற்றறிக்கைஎன்பதற்கு பதில்அழைப்பிதழ்என போட்டிருந்தேன் . அதை முன்வைத்து பேசுவது அரசியாகும் என்பதால் அவரை சந்தித்த அனைவரும அழைப்பிதழில் நான் எப்படி கையொப்பமிடலாம் என்பதை வைத்து முதல் சிக்கல் உருவாக்கி கொண்டு சென்றார்கள் . முழுவதும் அமைதியாய் கேட்ட சண்முகம்  “வல்சராஜிடம் பேசிக் கொள்ளுங்கள்என சொல்லிவிட்டார் . அவர் மாஹி பயணப்பட்டப் பிறகு தான் அழைப்பிதழை வெளியிட்டேன் என்பதால் வல்சராஜிடம் கூட்டமாக சென்று குழப்ப இந்த முறை வாய்ப்பளிக்கவில்லை. சிலர் மெனக்கெட்டு அவரிடம் தொலைபேசியில் பேசிய போது அவரது ஆர்வின்மை அவர்களை வடியச்செய்து விட்டது . நிகழும் இடம் குறித்து அடுத்த சிக்கல்எதற்கு ஹோட்டல்”. ஒரு நடசத்திர ஓட்டல் அரங்கின் சூழல் , பல விஷயங்களை சொல்லில்லாமல் உணர்த்திவிடும் . கட்சி அலுவலகத்தில் சட்டென எழுந்து எதையும் முரணாக முன்வைக்கத் தரும் துணிவை அந்த அரங்கு முதலில் இழக்க வைத்துவிடும் . ஏற்பாட்டின் விரிவும் நுட்பமும் மனதை செயலோடு ஒத்திசைய வைக்க கொள்ளும் முதல் தயக்கமே . அடுத்த வெற்றியை தீர்மாணிக்கும் . புதிய அதீத ஒளியூட்டப்பட்ட இடம் துல்லியமான ஒலிபெருக்கி போன்றவை தயக்கத்தை உருவாக்கிவிடும் . அதே சமயம் அமைப்பிற்குள் புதிதாக நுழையும் எவரையும் அது தருக்கி நிமிரச்செய்யும். அன்று முதல் முதலாக கலந்து கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட தொகுதி தலைவர்களுக்கு இனி யாரை பின் தொடர வேண்டும் என தெளிவாக காட்டிவிடும்.


சண்முகம்கூடஏன் ஹோட்டல் யாராவது தேவையற்ற செலவு என குறை சொல்லுவார்கள்என்றார் . குறைந்தது 50 பேராவது கலந்து கொள்வார்கள் வழக்கம் போல சிலர் பேச பலர் கேட்க்கும் முறையில் அதை நிகழ்த்த முடியாது அனைவரும் பங்கெடுக்க வேண்டும் அரங்கு அமைப்பு எப்படி ஒழுங்க வேண்டும் என நீண்ட விளக்கம் கவடுத்தபிறகு வழக்கம் போலஒழிஎன்கிற அனுமதி. யார் ஐம்பது பேர் என கேட்டிருந்தால் அடுத்த சிக்கல் எழுந்தருக்கும் . அவர் மாநில கமிட்டி 50 பேர் கொண்டது என நினைத்திருந்தார் . அழைப்பு அனுப்ப்பட்ட பிறகு இன்னொமொரு பஞ்சாயத்து காத்திருந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக