https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

அடையாளமாதல் * இயங்குவிசை *

 


ஶ்ரீ:



பதிவு : 601  / 791 / தேதி 02 ஜனவரி  2022


* இயங்குவிசை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 73.






அழைப்பிதழ் அனைவருக்கும் சென்று சேர்ந்து விட்டதென்றும் ஐந்து பொதுச் செயலாளர்களின் ஒருவர் வையத்தரசு அழைப்பிதழை வாங்க மறுத்தது கடுமையாக பேசியதைப் பற்றி இரவு 9:00 மணிக்கு இணைச் செயலாளர் விஜயகுமார் என்னை தொடர்பு கொண்டு சொன்னபோது நான் அந்த அழைப்பிதழில் செய்த சிறு விஷமத்தை நினைத்துக் கொண்டேன் . ஆனால் உளம் பதறவில்லை . இன்னும் உக்கிரமாக எதிர்பார்த்தேன் அல்லது விஜயகுமார் முழுமையாக நாளை நேரில் சந்திக்கும்போது சொல்லாமல் என விட்டிருக்கலாம் . “நான் நாளை ஊரில் இல்லை எப்படியும் மதியம் வந்துவிடுவேன் மாலை தலைவர் வீட்டில் சந்திக்கலாம்என்றேன் . அதுவரை அவன் பொறுக்க மாட்டான், தினசரி அதிகாலை தலைவரை சந்தித்து ஒரு வணக்கம் போடுவது வழக்கம் . பிள்ளையார் கோயில் கும்பிடு போல . அவருடன் பேச்சென ஏதும் இருக்காது . ஆனால் நாளை விஷயமுள்ளது அவனாக வலிந்து அவரிடம் முழுவதும் சொல்லுவதுடன் அவரிடம் நியாயம் கேட்பான். எப்படியோ சிக்கலும் , நான் ஊரில் இல்லை என்கிற தகவலும் அவருக்கு சென்று சேர்ந்துவிடும்.நான் ஊரில்தான் இருந்தேன். என்னால் ஒரு சிக்கலை முன் வைத்து முதல் தகவல் அறிக்கை போல ஒன்றை கொடுக்க முடியாது . சிக்கல் குறித்து பேசினால் அதற்கு சரியாக வாதத்தை முன் வைக்க முயல்வேன். இப்போது இந்த சிக்கல் எப்படி பத்திவிரித்து எழுந்து நிற்கிறது என்கிற முழு தகவலுடன் அதை எப்படி எதிர் கொள்வது என கண்க்கிட்ட பிறகே தலைவரை சந்திப்பது நல்லது . அதை அப்படி செய்திருக்க வேண்டாமோ


பயிற்சி முகாம் நிகழ்வுதான் முக்கியம் அங்கிருந்தே எனக்கான பாதை துவங்குகிறது அதற்கு முன்பு இந்த சில்லறை அரசியல் ஏன் ? என தோன்றியது . இல்லை அதுபற்றி பலநூறு முறை மனம் நடித்து பார்த்தாயிற்று . அதை செய்யாமல் எனக்கு விடுதலையில்லை. ஒரு போராட்டத்திற்கு பிறகே அந்த கூட்டம் துவங்கப்பட வேண்டும் . ஆலோசனை கூட்டத்தில் பேசு பொருள் குறித்து உரையாடக்கூட யாரும் எழுந்திருக்கக் கூடாது . தலைவரை அழைக்க இருப்பதால் அவர் முன் எழுப்ப வேண்டிய கேள்விகளை இங்கேயே கேட்டு அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அலோசனை கூட்டம் வரை அழைத்து செல்வதில்லை என்றிருந்தேன். இது எனது இருப்பை அழுத்தமாக சொல்வது . அரசியலின் இயங்கு விசையும் அதற்கான அறங்களும் வேறு விதமானவைகள் என்பதை கற்றுக் கொள்ளும் காலம் . நான்கு ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்த முதல் செயற்குழுக் கூட்டத்தில் அனைவரும் சூழ்ந்து நான் முன்வைத்த திட்டத்தை வல்சராஜை வைத்து மெல்ல மெல்ல நிராகரிக்க செய்த போது நான் கால் தடுக்கி அவர்கள் உலகில் சென்று  விழுந்தேன் . அங்கு காட்டு விலங்கு நியதி மட்டுமே . கொல் அல்லது கொல்லப்படு. மிகுந்த மன வருத்தமடைந்து ஆறுதலுக்கு யாரையாவது சந்திக்கலாம் என நினைத்த போது 


மாநில காங்கிரஸ் நிர்வாகி ஜோதி நாராயணசாமி நினைவிற்கு வந்தார் . அவர் நினைவு எழுந்தவுடன் வேண்டாம் என அழுத்தமாக நினைக்க வைத்தது , அவர் அறுதலாக தடவிக் கொடுப்பவர் அல்ல . சமயத்தில் புண்னில் புளி வைப்பார். நான் சண்முகத்தை முதலில் சந்தித்த போது அங்கிருந்த சிலரில் ஜோதிநாராயணசாமியும் ஒருவர். அதன்பிறகு கட்சி அலுவலகத்தில் சந்திக்கும் போது நட்பார்ந்த புண்ணகை. ஒரு முறை தலைவருக்காக கீழ்தளத்தில் சூரியநாராயணன் அலுவலகத்தில் காத்திருந்த போது அவர்தான் அறிமுகம் செய்து வைத்தார். அவர் முன்னாள் வணிகவரி அலுவலர் என் தந்தையை அறிந்தவர். அதைச் சொல்லித்தான் ஜோதிநாராயணசாமிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.அவரும் என் தந்தையின் அறிமுகம் உள்ளவர். தகவல் தெரிந்ததும் ஆச்சர்யம் என் தந்தை அதிர்ந்து பேசாதவர். வியாபாரம் , இலக்கிய வாசிப்பு தவிர வேறு எதிலும் ஆர்வமில்லாதவர். அந்த குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு என்பதால் அந்த வியப்பு வந்திருக்கலாம். அதன் பின்னர் சந்திக்கும் போதெல்லாம் அரசியல் நிகழ்வுகளை பேசிக் கொண்டிருப்போம் . அவர் தொழில் முறை வக்கீல். வக்கீல்களுக்கே உரிய பேச்சின் கறார்தன்மை அவர் மீது விலக்கத்தை கொடுத்தாலும் காந்திராஜ் முன்வைக்கும் அரசியல் கோணத்திற்கு முற்றாக பிறிதொரு கோணம் சொல்லுவார். அதுவே என்னை அவரிடம் மீள மீள செலுத்தியது . அது கற்றலுக்கு உரியது 


அவர் அரசியலில் உள்ள வனநீதி பற்றி சொன்ன போது அது ஒன்றும் புது செய்தியல்ல முன்பே தெரிந்தது தான் . ஆனல் அதன் தொடு வீச்சிற்குள் சென்று அடைபட்டு நிற்பதை ஏற்கும் மனம் வருவதுதான் மிக கடினமானது . அவரின் அந்த நேரடித்தன்மை ஒரு சீண்டல் . அடிபடும் போது உடைவதல்ல அப்போது நிகழவேண்டியது . ஆவருடன் உரையாடும் ஒவ்வொரு முறையும் உள்ளே ஏதாவது உடைபட்டுப் போகும்  . மனம் இந்த ஆளை இனி ஒருபோதும் சந்திக்க கூடாது என கூப்பாடு போடும் மனத்துடன் அங்கிருந்து வெளியேறுவேன் சில காலம் சந்திப்பதை தவிற்திருக்கிறேன் . ஆனால் எங்காவது சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு எழுவதை தடுக்க முடியாது .முன்பு நான் புழங்கிய உலகும் எனக்கு சொல்லிக் கொடுத்ததும்இளைஞர் காங்கிரஸில் வெற்றி என்பது எதிர்பவரை விட சிறப்பாக ஒன்றை செய்து அடைவது  . ஆனால் இன்று நடைமுறையில் அது இல்லாமலாகி பிறரை செயல்படாது செய்வது . தடைகளை நகர்த்தி நகர்த்தி செயல்படுபவரை வெறி கொள்ளச் செய்வது , முட்டுச்சந்தில் கொண்டு நிறுத்துவது . உளச் சோர்வை கொடுப்பது , எடுத்த முயற்சியை கைவிடும் படி செய்வது என்கிற எதிர் வினையாக செயல்படுத்தப்பட்ட போது . “அதே மாதிரியான ஆட்டத்தை எதிரீடாக வைக்க கற்பது அல்ல அரசியல் பழகுதல்என்பதை  சொன்னவர் சண்முகம். இதை ஒருபோதும் நேரடியாக சொன்னதில்லை அவரது அனுக்கர்கள் வழியாக நான் சென்றடைந்து இடம் . சரியான நேரம் வரும்வரை காத்திருப்பது . காத்திருப்பது இயல்பை மீறி பிறிதொருவராக மாறுவதல்ல இயல்பில் இருந்து காட்டி அதில் வெற்றி பெற முயற்சிப்பது . அரசியலில் வெற்றி எப்போதுமே அடையப்படுவதில்லை அது பல நேரங்களில் கிடைக்காமல் போவது. அதை நோக்கிய பயணமும் அது கொடுக்கும் புரிதலுமே அதன் பலன் . என்னுடைய தனித்தன்மை மனிதர்களை தொடர்புறுத்துவது. என்னை அவர்களை ஏற்கவைப்பது . அதற்கு தேர்மறையான அனுகுமுறையும் செயல்பாடுகளுமே உகந்தது. அதை நடிக்க முடியாது. அது ஒருவரின் அடிப்படை குணமாக இருக்க வேண்டியது என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...