https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

அடையாளமாதல் * ஒருங்கிணைந்த முகம் *

 ஶ்ரீ:பதிவு : 603  / 793 / தேதி 16 ஜனவரி  2022


* ஒருங்கிணைந்த முகம்ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 01.

ஆலோசனை கூடுகைக்கு இரண்டு நாட்கள் முன்னர் தெரிவு செய்து வைத்திருந்த அனைத்து தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அழைப்பாக அனுப்பப்படாமல் தகவல் மட்டும் சொல்லப்பட்டது . தூரம் கருதி யேனாம் , மாஹேவிற்கு ஒரு வாரம் முன்பும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தகவலை தொலைபேசியில் சொல்லியிருந்தேன் . தொகுதி தலைவராக தெரிவு செய்து வைத்திருந்தவர்களில் சிரைத் தவிர பிற எவரும் ஒருவருடன் ஒருவர் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர்கள் எனவே அவர்களுக்குள் பேசி ஒட்டு மொத்த வடிவத்தை அளிக்க முடியாது . அந்த ஆலோசனை கூடுகை அணைவரையும் சொல்லில்லாமல் ஒருகிணைக்க கூடியது. இந்த கூட்டமே அவர்களை மனதில் வைத்து திட்டமிடப்பட்டது. எங்கும் தொடர்புறுத்தும் ஓரிருவர் இருப்பார்கள அவர்கள் தங்கள் பெருமைக்காக அல்லது வம்பிற்காக ஒரு தகவலை கொண்டு செல்வார்கள் . இந்த விஷயத்தில் எதிர் நோக்கியதை விட கொஞ்சம் வேகமாக அதை செய்திருந்தார்கள் என்பது அன்று காலை சூர்யநாராயணன் அழைக்கும் வரை அறிந்திருக்கவில்லை. அதுரையிலும் பெரியதாக ஒன்றும் சிக்கலில்லை என்றே நினைத்தேன் . அந்த ஓரிருவர் கூட அமைப்பின் பலத்தையும் அது செல்லும் தூரத்தை அதிலிருந்து தங்களுக்கு உருவாகி வரும் இடம் மற்றும் வாய்ப்பை அறிந்திருந்தாலும் அதை ஒட்டு மொத்தமாக மனதால் அள்ள முடியாதவர்கள் , கண்களுக்கு தெரியும் ஒன்றை பற்றி கொண்டு அதில் லாப நஷ்ட கணக்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். உடன் தெரிவது பிறரின் லாபம் என்பதால் எங்கும் எதிலும் சலம்பிக் கொண்டே இருப்பார்கள். மாநில இளைஞர காங்கிரஸ் நிர்வாகிகளாக இருப்பதால் அவர்களை புறந்தள்ள முடியாது. இதை ஏன் இத்தனை சிக்கலாக்குகிறார்கள் என திகைத்ததுண்டு


கட்சியின் மூத்த மற்றும் முதன்மைத் தலைவர்கள் இதை பெரிது படுத்தவில்லை அல்லது அக்கறையில்லை என்பது போல நடந்து கொண்டாலும் அவர்களின் அனுக்கர்கள் இதை பேசி பேசி நெருப்பிடுவார்கள். அவர்களுக்கு இது ஒன்றுமில்லாதது . ஆனால் தலைவருடன் அமர்ந்து விவாதிக்க அல்லது அவர்களை ஒரு பொருட்டென நினைக்க வைக்கிறதா என தங்கள் இடம் குறித்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள். செயல்படுபவர்கள் ஆற்றங்கரை கல் எந்த விஷயத்திலும் அடிவாங்காமல் வெளிவர முடியாதுசூர்ய நாராயணன் கூப்பிடுவார் என முன்னமே கணித்திருந்தேன் . சூரியநாராயணன்தலைவர் பேசறார்என்றதும் ,சகல புலன்களும் விழித்துக் கொண்டது . “உடனே வந்து பாருகள்என்றார் . மணி காலை 9.00 மணி காரைகால் செல்வமுத்துகுமரன் குரல் போனில் கேட்டது காரைகாலில் யார், யாருக்கும் நிரந்தர ஆதரவாளர் ,எதிரி என எவரையும் இணம்பிறிக்க முடியாது . தனித்தனியாக உதிரிகளாய் தெரிவார்கள். சட்டென ஒரு திரளாக வந்து கடும் குரோதத்தை வெளிப்படுத்தி திகைக்க அடிப்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு ஒன்றுமே நடக்காதது போல முகம்மலர பேசுவார்கள். அனேகமாக ஊர் ஒன்று கூடிவிட்டது என தோன்றியது . அலைபேசி முழு பயன்பாட்டற்கு வந்து கொண்டருந்த காலம் . இருக்கும் இடம் பற்றிய பொய்கள் சகஜமாய் பெருக் கெடுத்தது . அவரிடம் சென்னையில் இருந்து புதுவை வந்து கொண்டிருப்பதாகவும் மதிய உணவிற்கு பிறகு வந்து சந்திக்கிறேன் என்றேன் . “அப்படியா சரிஎன இணைப்பை துண்டித்தார் . மதியம் வரை எங்கும் தலையை காட்டக்கூடாது


நேற்று இரவு விஜயகுமாரிடம் நான் ஊரில் இல்லை என்கிற தகவல் காலையிலேயே அவருக்கு சொல்லப்பட்டது குரலில் புரிந்து கொள்ள இருந்தது . வழக்கமாக காலை சந்திக்கும் நண்பர்கள் சிலரை அழைத்து சென்னையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக சொன்ன பொய்யை மீண்டும் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன் , சிலரை சென்று தலைவரை சந்திக்க சொன்னேன் . அங்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ன சிக்கல் ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்பினேன். தலைவரை சந்திக்க போகும் முன் தெளிவான பதிலுடன் அவரை அனுக வேண்டும் . கோபமோ பதட்டத்தையோ வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது . அவரிடம் உள்ள சிக்கல் யார் அவர் முன்னால் குரல் உயர்த்தி பதட்டத்தில் வாதிடுகிறர்களோ எப்போதும் அவர்களுக்கு எதிரான முடிவையே எடுப்பார் . ஆரம்பத்தில் சமாதானம் போல ஒன்றுமில்லாதது போலத் துவங்கி இறுதியில் அது சென்று அமரும் இடம் என்ன எனறு எனக்கு தெரியும். மற்றவர்கள் தங்கள் தரப்பை முழுவதுமாக வைத்து முடித்த பிறகு அழைத்துக் கேட்கும் போது குழப்பில்லாத நிலைபாடுகளை தெளிவாக வைக்க வேண்டும் . அதை வைத்து அவர்ளை ஆவேசமாக எதிர்க்கும்படி செய்துவிட்டால் போதும் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார் அது வரை மிக நிதானமாக நகர்த்த வேண்டும் . எதிர்பார்த்தபடி எனது அனுக்கர்கள் அவரை சந்தித்த போது நான் புதுவையில் இல்லை என்பதை அவர்களிடமும் மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டார். முன்பே ஊகித்ததுதான் .


மாலை தலைவர் வீட்டிற்கு அலைபேசியில் ரவியை அழைத்த போது மாலை வரை அவரை உதிரி உதிரியாக பலர் வந்து அவரை சந்தித்துக் கொண்டே இருந்ததாக சொன்னான் . உங்கள் தலைதான் உருளுது என சொல்லிச் சிரித்தான் தலைவர் எப்படி இருக்கிறார் என்றதற்கு தினசரி மந்தமாக இருப்பவர் காலை முதல் உற்சாகமாக இருக்கிறார் ,அவருக்கும் இது போல ஏதாவது ஒன்று தேவையாய் இருகிறது என்றான் . நான் சிரித்துக் கொண்டேன். சண்முகம் எளிதில்  பரபரப்பாக ஒன்றை சொல்ல முடியாது உரத்த குரலில் சொல்வதெல்லாம் செய்தியல்ல . அதற்கென பிறிதொரு குரல் இருக்கிறது . அது எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஹோட்டல் சற்குரு அரங்கை உறுதி செய்யவில்லை . அதன் உரிமையாளர் எனக்கு வேண்டியவர் என்பதால் கடைசியில் உறுதி செய்வதாக சொன்னேன் . அவர் அதற்கு ஒப்புதல் தந்த்திருந்தார் .சில விஷயங்களில் சண்முகத்தை நம்ப முடியாது . அனைத்தையும் முன்னறே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் உஷராகி விடுவார் . ஏதோ சிக்கல் மாற்று யோசனை தேவை என்றெல்லாம் அவருக்கு தோன்றிவிடும் அலட்சியமான ஏற்பாடுகள் தற்செயலானவைகள் என்கிற கோட்பாடுடையவர் . தெளிவான திட்மிடல் சிக்கலின் இருப்பிடமாக நினைப்பார்


தெரிவு செய்து வைத்திருக்கும் தொகுதி தலைவர்களை அழைத்து அந்த கூட்டம் ஒருங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை நோக்கம் . அது ஒரு தொடக்கம் அங்கிருந்து பயணிக்க வேண்டிய இலக்கு வெகு தூரத்திற்கு அப்பால் இருந்தது . அரசியல் நிர்வாகம் என்பது ஒரு திரளில் இருந்து உருவாகி வருவது . தனி நபர் அதை ஒருகிணைக் முடியும். எனக்கு அடுத்தடுத்து செய்ய வேண்டியது மனதில் ஒடியபடி இருந்தது . அதிக காலமில்லை . சண்முகம் நாராயணசாமியுடன் முரண்படுவதை வெளிப்படுத்த நீண்ட காலமெடுக்கும் . அதுவரை நாராயணசாமி காத்திருக்க மாட்டார் என்றே கணித்திருந்தேன் . அதற்குள் தெளிவான அமைப்பை உருவாக்கி விட வேண்டும் என்கிற பதட்டம் இருந்தது . முழு அளவிலான பயிற்சி முகாமின் போது தொண்டர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி இருக்கும். அங்கு கூடும் புது அமைப்பு எல்லோருக்கும் நான் சொல்ல நினைக்கும் செய்தியை தெளிவாக அறிவித்து விடும் . அதற்கு முன்பாக அதன் தலைவர்களை நிரையில் கொண்டு வைத்துவிட வேண்டும். இல்லையென்றால் பின் எதுவும் சரியாகவும் வராதுமாநில நிர்வாகிகள் மற்றும் முடிவு செய்து வைத்திருந்த தொகுதித் தலைவர்கள் என எப்படி பார்த்தலும் 50 பேருக்கு குறைவில்லாமல் கலந்து கொள்வார்கள் . அது மாநில காங்கிரஸ் கமிட்டியை விட எல்லா தொகுதியையும் மிகச் சரியாக பிரதிநிதிப்படுத்துவது . ஆகவே அதைவிட பலங் கொண்டது . சரியாக நிகழுமானால்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...