https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 22 ஜனவரி, 2022

அடையாளமாதல். * நகரும் காய்கள் *

 


ஶ்ரீ:



பதிவு : 604  / 794 / தேதி 22 ஜனவரி  2022


* நகரும் காய்கள்



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 02.





அன்று மாலை கட்சி அலுவலகத்திற்கு தலைவர் சண்முகத்தை சந்திக்கும் போது மாலை 6:00 மணி ஒரு மாதிரி அனைத்து தகவல்களையும் திரட்டிவிட்டேன் . இம்முறை காரைக்கால் நிர்வாகிகள் சிக்கலை துவங்கி இருந்தார்கள் அதில பழைய இளைஞர் காங்கிரஸார் சிலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். யார் என்ன பேசினார்கள் இவர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை, உள்ளூரில் சண்முகம் அணியில் இருக்கும் முதலியார்பேட்டை சபாபதி ஆதரவாளர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் வைத்தரசு அவரது அறையில் அமர்ந்திருந்தார்கள். இந்த கூடுகை நிகழவிருப்பதை விட அதை செய்யும் முறை அல்லது அதை நான் முன்னெடுக்கிறேன் என எதுவோ ஒன்று அவர்களை சீண்டிக் கொண்டே இருக்கிறது . இது இளைஞர் காங்கிரஸ் தலைவர் சண்முகத்தின் கீழ் நடைபெறும் முதல் பெரிய நிகழ்வு என்பது அவர்களுக்குள் எதோ ஒன்றை அமையவிடாமல் செய்து கொண்டிருந்தது .தலைவர் அறையில் சபாபதியை பார்த்ததும் மீண்டும் அந்தக் கசப்பு எழுந்தது . அடக்கிக் கொண்டேன் . அது மாறாதது . ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தால் இதை போன்றதொரு அறிவுரை வழங்கும் படலத்தை நிரந்தரமாக நீக்கிக் கொள்ள முடியும் அது வரை பொறுமையாக இருக்க மீள மீள எனக்குள் சொல்லிக் கவண்டேன் . வையத்தரசு வித்தியசமான கதாபாத்திரம் . எதையும் தானாக செய்யமாட்டான் உடன் சபாபதியை அழைத்து வந்து விடுவான் . இரட்டைகள் என எனக்குள் சிரித்துக் கொண்டேன் . இதை எப்படி கடக்க வேண்டும என சட்டென புரிந்து போனது


நான் சபாபதியின் வணக்கம் சொல்லி சென்று அவருக்கு பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவருக்கு கை நீட்டினேன் அவரும் நட்பார்ந்த சிரிப்புடன் கை குலுக்கினார்  .சண்முகம் கண்களில் ஒரு சிறு மாற்றம் வந்து சென்றது கவனிக்க முடிந்தது . நான் பக்கத்தில் அமர்ந்ததும் . சபாபதி நேரடியாக என்னிடம் அந்த கூட்டம் நடத்துவது முறையில்லை . கட்சி கட்டுப்பாடு என்றெல்லாம் பேசிக் கவண்டே சென்றார் . நான் எதிற்கும் வாயை திறக்கக் கூடாது என உறுதியாக இருந்தேன் சற்று நேரம் கழித்து சண்முகம்என்ன அவர் அவ்வளவு சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ ஒன்றும் சொல்லவில்லேயேஎன ஊக்கினார் . அது ஆபத்தானது என்றாலும் இப்போது அடித்து ஆடியாக வேண்டும் ஆனால் வார்த்தைகளில் நிதானம் ஏற்படுத்திக் கொண்டேன். நேற்று அழைப்பிதழை கொடுக்க வையத்தரசு வீட்டிற்கு சென்ற போது அதை வாங்கமாட்டேன் என சொல்லி விஜயகுமாரடம் ஏதோ பேசி இருக்கிறான் . இப்போது விஜயகுமார் வருகிற நேரம் இப்போது வந்தால் இருவரும் தலைவர் முன்பாக சரியாக கோர்த்துக் கொள்வார்கள் சபாபதிக்கு அவனை பார்த்தாலே ஆகாது . நான் மௌனம் காத்தது அதற்காகத்தான் . ஆபத்திற்கு உதவுபவன் மிகச் சரியாக உள் நுழைந்தான் . சபாபதி கண்களில் எரிச்சலை பார்க்க முடிந்தது . நேற்று ஆரம்பித்த சண்டையை மிக தீவிரமாக இருவரும் தொடங்கினர் . நான் எழுந்த விஜயகுமாரை அமைதியாக இருக்கும்படி சொன்னேன் எனக்கு எந்த தகவலும் இல்லை என்பது எனது நிலைப்பாடு . நான் நீண்ட விலக்கத்தை தர தயாராக இல்லை . இப்போது சிக்கல் ஒன்று தான் தலைவர் இருக்க பொதுச் செயலாளர் எப்படி  கையெழுத்திடுவது . இரண்டு ஐந்து பொதுச் செயலாளர் இருக்கையில் எனக்கு மட்டும் என்ன தனி அதிகாரம் . நான் இரண்டாஙது கேள்விக்கு பதில் சொல்ல விரும்பினேன் . முதல் கேளவிக்கு பதில் சொல்ல வேண்டியவர் வல்சராஜ் , அவரிடம் சொல்லிய பிறகே நான் கையெழுத்திட்டேன் . பொதுச் செயலாளர்களின் நிரையில் முதலில் உள்ளவர்கள் அதை செய்யும் அதிகாரமுடையவர் மேலும் இது கூட்டறிக்கை இல்லை எல்லோரும் கையொப்பம் போட


அதன் பின் சண்முகம் நான் வல்சராஜிடம் பேசி விட்டேன் பிரச்சனையை இத்துடன விடுங்கள் ஆக வேண்டியதை இணைந்து செய்யுங்கள் என சொல்லிவிட்டார் . அடுத் சிக்கல் இன்னும் இரண்டொரு நாளில் வந்துவிடும்என நினைத்துக் கொண்டிருக்க வெள்ளாழர் தெரு கிருஷ்ணமூர்தி அணியினர் உள்ளே வந்தனர் . முருகேசன்,சுகுமாறன்,வக்கீல் பாலா போன்றவர்கள் பாலனுடன் இருந்தவர்கள். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர் சிங் பிட்டா வந்த பொது கூட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸில் இணைந்தனர். பாலனுடன் முரணபட்டு நான விலகிய பின்னர் பாலன் காங்கிரஸில் இருந்து வெளியேறும் வரையில் அவருடன் பணியாற்றியவரகள் . மரைக்காயரின் ஆதரவாளராக சொல்லப்பட்டாலும் வெள்ளாழர் தெரு கிருஷ்ணமூர்த்திக்கு அனுக்கர்கள். அவர்களே அசல் சிக்கல். மிக ஜாக்கிரதையுடன் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டேன். வெள்ளாழர் தெரு கிருஷ்ணமூர்த்தி மரைக்காயரை விட்டு சண்முகம் அணியில் சேர்ந்ததுப் போல அறியப்பட்டார். 1996 தேர்தல் தோல்வி அனைவரையும் அடக்கி வாசிக்க வைத்துவிட்டது . அவர்களை பார்த்தும் சண்முகமே முடித்து வைத்துவிட்டார்


இப்போது தான் பேசி முடித்தேன் அனைவரும் ஒன்றாக செயல்படுங்கள் என சொல்லி எழுந்துவிட்டார். மூன்று மணி நேர பஞ்சாயத்து முடியும் போது இரவு 9:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . சண்முகம் வீட்டிற்கு கிளம்பி விட்டார் . நான் இரவு அவரை சந்தித்து இடத்தை பற்றிய சிக்கலை முடித்து ஹோட்டல் சற்குருவிற்கு தகவல் சொல்ல வேண்டும் . இப்போது கிளம்பினால் அனைவரும் திரும்பவும் தலைவர் வீட்டில் கூடுவார்கள் . இன்றைக்கு இது போதும் என நினைத்துக் கொண்டேன் . காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து கிளம்பாமல் சூரியநாராயணன் அறையில் சென்று அமர்ந்து கொண்டேன்வெள்ளாழர் தெரு அணி ஆர்வமழிந்துவிட்டது போல காணப்பட்டார்கள். அலுவலகத்தை பூட்டி சற்று நேரம் வெளியில் நின்று கொண்டிருந்த போதுதலைவர் உன்னை 10:00 மணிக்கு மேல் வீட்டிற்கு வரச்சொன்னார்என்றார் சூரியநாராயணன். நான் வீட்டிற்கு சென்று இரவுணவிற்கு பின்னர் தலைவர் வீட்டை அடைந்து அவர் முற்றத்தில் வண்டியை கொண்டு நிறுத்தினேன். இரவு 9:00 மணிக்கு மேல் கடற்கரை சாலை மாலை நடைபோகிறவர்களுக்கானது. கடற்கரை சாலைக்கு சென்று சந்திக்கும் சாலைகள் அனைத்திலும் காவல்துறை வண்டிகள் செல்ல தடை ஏற்படுத்தி இருக்கும்அதனால் சற்று தூரத்தில் வண்டியை நிறுத்து நடந்துதான் அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் . இப்போது இரவு 10:00 மணியை கடந்து கொண்டிருப்பதால் அந்த தடைகள் எடுக்கப்பட்டு விட்டது ஆறுதளித்தது . அகன்ற மூன்று வளைவு வாயில்கைக் கொண்ட முற்றம் மற்றும் கார் நிறுத்துமிடம் இரண்டு வண்டி வந்து செல்லவும் நடு வளைவில் இரு சிறு ஒரு அடு அகலமுள்ள திண்ணை போன்றதடுப்புடன் விந்தையாக இருக்கும் . அப்போதுதான் கவணித்தேன் கார் நிற்கும் முற்றம் மேலே தங்க நிற நட்சத்திரம் உள்ளூ வெளிச்மிட விளைக்க பொருத்தி இருந்து . எப்போதும் இருண்டு காணப்படும் போர்டிகோ வெளிச்சத்தடன் கடற்காற்றுக்கு  நலுங்கி ஆடி கொண்டிருக்க அதன் துளைவழியாக பாய்ந்த ஒளி சில்லறை காசுகளை அந்த முற்றும் முழுவதும் வாரியிறைத்துக் கொண்டிருந்தது . அந்த கார் முற்றம் அவரை வெளியுலகுடன் தொடர்புறுத்தும் இடம் . விநாயகர் சதூர்த்திக்கு பிள்ளையார் சிலை மாலையுடன் . அகில இந்திய தலைவர்களின் பிறந்த இறந்த நாள்களுக்கு அதே மாலை மரியாதையுடன் அங்கு வைத்திருப்பது அவரது வழக்கம் . தனிப்பட்ட குடும்பம் என ஒன்று இல்லாததால். மரபில் உள்ள தனது தொடர்ச்சியை கண்டடைய இது ஒரு குறியீடு போல தோன்றுவதுண்டு


அவரது அறையில் காத்திருந்த போது  இரவுணவிற்கு பிறகு துண்டில் கைதுடைத்தபடி வந்து தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டார் . பக்கத்து நாற்காலியை காட்டியதும் நானும் அமர்ந்து கொண்டேன். “நீ என்னமோ செய்ய முடிவு பண்ணீட்ட போல ,இருக்கு எதாவானாலும் நிதானம் வேண்டும் . ஏன் இவர்கள் இவ்வளவு பதட்டமடைகிறார்கள் என எனக்கு தெரியும். இன்னும் இரண்டு நாள் இருக்கிறதா . நான் நாளை சென்னை சென்று இரவே திரும்பிவிடுவேன் . அது ஞவரை புது சிக்கால் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள் என்றார். நான் அதற்கு ஆமோதித்து தலை அசைத்தேன். ஒன்றும் எழாது என்றே நினைத்துக் கொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...