https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 10 ஆகஸ்ட், 2016

அழகியலாகும் வாழ்வியல்

வாழ்வெனும் அழகியல்தொகுக்கும் சிந்தையையும் சூழலும் கொடுத்தவனை வணங்குகிறேன். ஆம் அவ்வாறே ஆகுக. அவ்விதமே ஆகுக என் வாழ்கை || ஓம் ஹரி:||




|| வாழ்கை - இன்பியல் மற்றும் துன்பியலான  முரண் கலவைகளை ஊடுபாவுகளாக கொண்டு நெய்யப்பட்டு வாழ்வியலாகிறது, அதன்  முரணியக்கம் மெல்லியாதாக உணரப்படுகையில் அழகியலாகிறது. மனம் தனக்கான உரையாடலை இங்கு தொடங்குகையில் , அது அசையாது நிலைபெற பல முலை குச்சிகளில் கட்டப்படுகிறது. ஒவ்வொரு முலைக்குச்சியும் ஒவ்வொரு காரணிகளாக பரிணமித்தது ஏற்பு கொள்ள சில வாழ்நாள் தீர்மணங்களை அது தன் உள்அடுக்குகளில் நிர்வகித்துக்கொள்கிறது . வாழ்நாள் முழுவதிலும் ஒவ்வொன்றாக உளவியல்சார் சிக்கலை சிடுக்கெடுத்து நிகர்நிலை கொள்ளும் தருணத்தில் அது அழகியலாகிறது .|| என நினைக்கின்றேன் நான்.

நான் அடிக்கடிச் சொல்வதுண்டு, மேற்கோள் அல்லது பொன்மொழி சொல்லும்தகுதி எனக்கில்லை என. சொல்வது ஒரு நிகழ்வின் தொடர் சித்தரிப்பின் பகுதி. அச்சித்தரிப்புவெளியில் வாழ்ந்து அவ்வாழ்க்கையனுபவம்  மூலம் மற்றவர்  அடைவதே உண்மை. நான் சொல்வது அல்ல.எனில் தற்செயலல்ல .

தற்செயலா இது ? இல்லை.இப்புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் ,இலக்கும் இலக்கணமும் உள்ளதென்று உணர்வதே இருத்தலியல். பெருங்கடல்களை ஊதிப் பறக்கவைக்கும் பெறும் விசும்பே,  சிறகின் சிறு தூவலையும் அலைக்கழிக்கின்றது அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை. என்றால் வியப்பு கொள்ளாதிருப்போமா? ஆமென்போம்.

ஆமென்றால் மட்டுமே அதைக் கடக்க முடியும்

முடிவுரும் வாழ்வெனும் பயனம் யாருக்கும் வலி மிகுந்ததே .தேடல் மற்றும்  புரிதல் தன்  பாதையை அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் நம்மால் முடிவுசெய்யப்படுபவையா?எளியவனென்று முற்றிலும் கைவிடப்பட்டவனென்று முன்னரே வகுத்த பாதையில் செல்லும் துளியென்று உணரும் தருணம் ஒன்று ஒவ்வொருவருக்கும் உண்டு. இது அது

இது அது. இன்று இறந்தேன்.

இறந்தேன் என  நான் நினைப்பதுண்டு ஏனெனில் உவகைப்பெருக்கிற்குப் பின் ஏன் உள்ளம் நிறைவிலாது ஏங்குகிறது என்று? ஆனால் துயர் முற்றிக் கனிந்தபின் ஏன் உள்ளம் அடங்கி அலையழிந்ததாகிறது என்று? ஆம் என் மனத்திற்கினிய தொய்வம் உளம் கனிந்து எனை உற்று நோக்கியபடி இருக்க ,பின் எதனின் சூதாட்டக் களம் மானுட மனமும் பின் அதன் வழி வாழ்வும்? இதோ இழப்பும் இழிவும் என் மானுடவாழ்க்கையை நிறைவுகொள்ளச் செய்கின்றன.

செய்கின்ற மற்றும் செய்வதின் பொருட்டு அனைத்தையும் என் உள்ளாழத்தில் நாடியதையே அடைந்தேன். பலகாலமாக எழுந்து என்னால் புறந்தள்ளப்பட்டதை ,என்னை அறியாமல் கோரியதையே பெற்றேன் . துயரும் இழிவும் வந்து சேர்ந்த அந்த தீத்தருணங்களில் எனக்குள் வாழும் நான் அறியாத்தெய்வமொன்று உவகைகொண்டது அல்லவா? இனி இவன் என்னவன் என்று, ஏனெனில் நான்தான் புரியாது நின்றேன் . அது அதன் வழியில் அனைத்தும் நிகழ்ந்தடங்கிய பின்னர் ,நான் அறிந்தது ஆழ்ந்த அமைதியைத்தான்.

அமைதியையும் இன்பங்களையுமே மானுட உள்ளம் கோருகிறது என்றும், நன்மையையே அது விழைகிறது என்றும் எண்ணுவதுபோல் மடமை பிறிதில்லை.ஏனெனில்
ஓர் நிகர்நிலை மனிதன் , தன்னை உலகம் எப்படி நோக்க வேண்டும் என்பதற்கேற்ப தன்னுடைய அடையாளங்களை உருவாக்கிக் கொள் முயல்கிறான் ,உலகம் அவனை எப்படி பார்த்த பொழுதும் - சூழ்நிலைக்கேற்பபுனைந்து கொள்வது என்பது அவனால் இயலாது .

இயல்பானது வாழ்வியலில்  நிகழ்காலமென்பதும் , எதிர்காலமென்பதும் எப்போதுமே  வதைப்பது , அனுபவங்களின் நிகர்நிலை, மற்றும் நிலைப்பாடுகளைக் ஒன்றுமில்லாது செய்வது.  நிகழ்வுகளில் இருந்து கற்றது கைகொடுக்காது,சூழ்நிலைகள்  கடமைகளென்று நம் முன்னே வந்து நிற்கும் போது மனப்போராட்டமும் , சமாதானமும் எல்லா சமயமும் நிகர்நிலை கொள்ளாது , அதற்கு அங்குசம் இடாது அதைக் கடப்பது என்பது நிலையழியச்செய்வது- இதுவே இருத்தலியலின் நுட்பம்.

நுட்பமான வாழ்வியலில் மிக மலினமாக காணக்கிடைக்கும்  எதையும்  ஒப்புக்கொள்ளாது தாண்டுதல் , எந்தையாலும் எனக்கு அவர் அறிமுகப்படுத்திய சம்பிரதாயத்தாலும் நன்கு உரைக்கப்பட்டது. இது புரிதலின் உள்அடுக்குகளில் தொன்மங்களாக படியாது ஒருவருக்கு அனுபவத்தில் வாராது . கற்ற ஏட்டின் அளவே சென்று நிற்கும் .

நிற்கும் நெறியினால் பெண்கள் ஆண்களை ஆள்கிறார்கள், அதை ஆண்கள் வைதிக, சம்பிரதாய , மனொருக்கம் ,காமம் சாராத முதுமையின் எனும் பல வழியின் ஊடாக அவர்களை தங்கள் வாழ்வில் அங்கீகரிகிறார்கள். அதன்பால்பட்டு,  நிகர்நிலை உள்ளவர்கள் அதன் எல்லைகளை வகுக்கின்றார்கள் , அவர்களை அடிமை பட்டிருக்கிறார்கள் என்று, மற்றவர் அவர்களை  அங்ஙனம் நிலைநிருத்த முயல்வதும், அவரவர் கீழ்மையான மனவிகாரங்களின் முழுமை.

முழுமையாக தோற்கடிக்கப்பட்டவனின் அமைதி எவ்வளவு மகத்தானது பரிபூரணமானது அது . அவனுடன் பேச பிரம்மமும் இல்லை விதியும் இல்லை . அவனுடைய தனிமைபோல் பிறிதொன்றில்லை . அவனுடைய சொற்கள் போல ஒலியோ பொருளோ இல்லாமல் வெறும் அலைகளாக ஆழத்துக்கு சென்று படிபவை போல் ஏதுமில்லை .

எது ஆழங்கள் தெய்வம் வாழ்விடம் என்கிறதோ , அது என் நல் ஊழ் அதை அருகில் பரிதொருவனைப் போலானேன். அது என்னை  உலகிலிருந்தும்,சமூகத்திலிருந்தும், என்னிலிருந்தும்,பிரித்து உதிரிகளாக பரப்பிவிட்டது. ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதாலேயே முடிவுகள் ஏற்படுவதற்கான சூழலை ஒதுக்கி அது மறுபடியும் சிந்திக்க ஏதுவாக மற்றொன்றில் கடத்துகிறது .பின் அது முடிவிலி. அவ்வாறில்லாமல் இது என்னை எட்டி இருந்து பார்க்க வைத்தது .

வைத்தது எனக்கான பாதை, அது எங்குமெனப் பரந்து விரிந்திருக்கிறது. என்னை எதிர்பார்பவர் எவருமில்லை, எனவே கடமை என்ற ஒன்றில்லை .யாருக்கும் பதில் சொல்லத்தேவையில்லை . என் வெற்றியை யாருக்கும் நிரூபிக்க அவசியமில்லை. ஏன் ? எந்த ஒவ்வொருவருக்குமே

ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். ஒவ்வொருவம்  வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு என்ற ஒன்று இருப்பதை எப்போதாவது  ஐயமில்லாமல் உணர்வார்கள்.

ஐயமில்லாது உணர்கிறேன் , இறை எனை நன்றாக சமைத்தனை.எனை என்னால் விளங்கிக்கொள்ளவொன்னா கவிதையென.

கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதெனில் பொருள் புரிதல் அவசியமாகிறது. ஆம் பொருளை.

பொருள் - அதை அழகியலால் அன்றி வேறெதனாலும் யாத்தெடுக்க இயலாது . "மதுவித்தை " என்று ஒன்றுண்டு . கடித்தால் இனிக்கும் கரும்பில் கூட வேரும் சோலையும் தித்திப்பதில்லை ,ஆனால் கண்ணனைக்குறித்த" அதரம் மதுரம்" எனத் தொடங்கும் பாடல் அவனில் காண்பதத்தனையையும் தித்திக்கிறதென்கிறது.
வாழ்வியல்,விருப்பு வெறுப்பென தன்சார் இருமைகளின் வழியென எங்கும்,எதிலும் என திறந்து கிடக்கிறது. நான் அத்தனைக்கும் விருப்பு என்கிற பாதையையே தேற முயல்கிறேன். தேறினால் எல்லாம் தித்திக்கலாம்

தித்திப்பதினாலேயே அது அழகியல் - நாவினால் உணருமுன் நாசி முந்திக்கொண்டு விடுகிறது. அதன் நருமணங்களை

நருமணங்கள் -நம்மை வாழ்வியலில் மெல்லிய மணங்களை நுகரும் தருணங்களை உருவாக்கிக் கொள்வற்கு, வாழ்நாள் தீர்மணங்களை, தனிச்  சிக்கலின் அடிப்படையில்
சமரசத்திற்கு விடாது நிற்கையில்-  அழகியலாகிறது .

அழகியல் - எழுதத்தொடங்குமுன்,இது ஏன் அவசியமாகிறது?  காரணம் இதுவும் ஒரு களம்.

இது ஒரு களம் . இதில் புண்படவும் தோற்கவும் ஒரு தரப்பு இருந்தாக வேண்டும் . ஒரு நாள் வரும் என்று என் தரப்பு நியாங்களாக ஆயிரம் முறையாக மனத்தில் நடிக்கப்பட்ட சொற்கள் , சொல்லபடாமையாலே அது நிகழாத காலத்தில் வாழும். அதை கடந்து செல் விதிக்கப்பட்டிருபின், அது ஒரு ஊடகத்தின் வாயிலாக கடந்துசெல்ல இநலும் .நான் சொல்வதை குறிக்கிடாமல் கேட்பதாலும் என் எண்ணங்களை சந்தேகியாத்து என் எழுத்து ,எனவே இது எனக்குறிய ஊடகமானது.

ஊடகம் தன் செயல்விழைவுடன் முனைகொள்ளும் போது உள்ளம் தன்னையே பகடி செய்துகொள்ளும் பொருட்டு இயங்குகிறதோ என்ற ஐயம் எழுகிறது. தன்னிலை உயர்திப்பேசாது ,நிகர்நிலை பேனி எழுதுதல் நிகழும்போது , தெய்வம் எழுகிறது.

எழுகிறது. ஆம் , தெய்வம் எழுவதாக .
என்னில் சன்னதம் கொள்வதாக. அறமென.

அறம்  - அதன் அளவுகோல் நிர்ணயக்கப் படவேண்டும். குடும்ப ஒற்றுமை மற்றும் சம்பிரதாயத்தில் ஊற்றமும் இவை இரண்டும் போதுமானது. அதை கடந்த காலத்தில் நடந்தவற்றிலிருந்து அடுக்கிக் கொள்ளலாம். தர்க்கபூர்வமாக.

தர்க்கபூர்வமாக வகுக்கமுடியாதது ஒன்றுண்டு. அதை மானுட ஆணவம் என்றுரைத்தனர் . அது கணந்தோறும் உருமாறும். தன் விதிகளை தானே உருவாக்கும். சென்றபின் வழி வகுக்கும். நிகழ்ந்தபின் நெறியமைக்கும். ஒருபோதும் நிறையாது. எவ்விளக்கத்தையும் ஏற்காது. இதோ இதோவென .

"இதோவென தொட்டறிவது மனம்.
அறிந்தவற்றை அடுக்குவது புத்தி.
அடுக்கியதை தொகுத்துக்கொள்வது சித்தம்.
அதில் வேண்டியதை குறித்துக்கொள்வது அகங்காரம்.
அதைக்கொண்டு வருவதை வகுப்பது சங்கல்பம்.
அதற்கெனக் கொள்ளும் உறுதியே நிச்சயம்.
அதன்மூலம் எழும் தன்முனைப்பே அபிமானம்.          இவ்வேழு கரணங்களாலும் நம்முள் வந்த உண்மையை நமது உண்மையாக நாம் ஆக்கிக்கொள்வதை அவதாரணம் என்கின்றன நூல்கள்.”

நூல்களென ஊழ் வந்து தொடாமல் உள்ளம் எண்ணம் கொள்வதில்லை .இந்திய மனம் தன்னியல்பில் அசாதாரணமான சில உச்சங்களைச் சென்றடைய முடியும். அதற்கான ஓர் ரகசியப்பாதை நமது பண்பாட்டில் உள்ளது. அதுவே உலகில் ஒருவரை மற்றொருத்தரிடமிருந்து வேறுபடுத்தி காண்கிறது .

வேறுபடுத்தி காண்பதினால் பிற இந்திரியங்களின் ஒத்திசைவு இல்லாமலேயே ஆழமனமானது தன்உள் அடுக்குகளின் செதில்களில்  இதை வரிசைப்படுத்துதல் இயல்பாக நடக்கிறது . வாழ்நாள் தீர்மானங்கள் குலவழியாக படிமாங்ளாக இருப்பின் மனம் தர்மத்தின் பால் நிகர்நிலை கொள்வது இயல்பானது . சரியான மன சமாதானங்களை வென்றெடுக்க அவசியமாகிறது காத்திருத்தல் .

அவசியமாகிறதா ?காத்திருத்தல் . அல்லது தற்செயலானதா?இல்லை.இப்புடவிப் பெருநிகழ்வில் தற்செயல்கள் இல்லை எனும் விதி பொருந்தாது. ஒவ்வொரு கணமும் பெரும்படிவன் சொல்லெண்ணி யாத்த கவிதை போல் அமைப்பும் இலக்கும் இலக்கணமும் உள்ளதென்று உணர்வதே இருத்தலியல்.

இருத்தலியல் - விசும்பின் கரவுகள்  நம்மீது சொல்லொன்னா காதலின் பொழிவென்பது - எழுகிறது நம்முன் காலக் கொந்தளிப்பென.

காலக் கொந்தளிப்பென்பது அதை கடந்துவருதலே வெற்றி என்று அறிந்திருக்கிறேன். உலகியல் துக்காகரமானதல் இருந்து  பிரித்தெடுக்கையில் மானுடவாழ்க்கையை நிறைவுகொள்ளச் செய்கின்ற அழகியலாக பிரிகிறது.அதன்
விழுமியக்கருத்துக்களை நாம் அடையும்போதே அவற்றுடன் ஒட்டிக் கிடக்கும் வேறுபல கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எடுத்துக் கொள்கிறோம்.அப்பொழுது மிகக் குறைவான சொற்களில் சொல்லப்படும் முடிவுகளுக்கு எதிராக சொல்லாடுவது எவராலும் இயலுவதில்லை. அதன் விளைவு - தனிமைஎனப்படுகிறது.

தனிமையில் ஒருங்குகையில் பரிணமிக்கிறது- தனிமை.
வஸ்து இட கால நிர்ணயமின்றி உள்ளத்தால் தனித்திருத்தல் ஒரு தொடக்கமாகிறது . தன்னுடனான உரையாடலுடன் விவாதிக்கிறது .

விவாதம் ,இருபக்கமும் ஒத்திசைவுள்ள விழுமியதில் நிலைநிற்கிறது . அப்படி இல்லாமல் விழுமியம்கள் வேறுபட்டால் அங்கு விவாதத்தினால் எந்த பொருளுமல்ல

அல்லது அதை இப்படி சொல்கிறேன் , ஒரு முறன்பாடு களையப்படுதல் இரு தரப்புக்குமே ஜீவாதார முக்கியமானதாக இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாது போனால் , விவாதம் தங்கள்,தங்கள் தரப்பின் முன்முடிவுகளின் நியாயப்பயன்பாடு குறித்த சர்சையாக முடியும் .இது ஒருநாளும் தீரப்போவதில்லை.


தீரா வரலாற்றின் எந்த தரப்புக்கும் அதற்கான இருத்தல்நியாயம் என ஒன்றிருக்கவேண்டும் அதன் எல்லா தரப்பும் பிற தரப்புகளுடன் போராடித்தான் தன்னை நிறுவிக்கொண்டு முன்னகர முடியும். ஆனால் அப்போராட்டத்தை வன்மம் இல்லாமல் வெறுப்பு இல்லாமல் நிகழ்த்தமுடியும், நீயும் நானும் வரலாற்றின் இரு தரப்புகள் மட்டுமே என்ற புரிதலுடன் அதை முன்னெடுக்க முடியும் .

முடிவதனால் மகத்தானவர்களுக்கு மட்டுமல்ல சாமானியனுக்குமானதுதான் - சரித்திரம்.

சரித்திரம் என்பது ஓர் மாபெரும் தேர் வடம் போல , அதன்      தொடக்கமும் முடிவும் கண்களுக்கு விஷயமாவதில்லை ,அது தேராக எதை அல்லது யாரை வைத்துள்ளது எனபதும் யாருக்கும் தெரிவதில்லை.  அது காலமாக, சமூகமாக, குழுவாக அல்லது உதிரியான தனி ஒருவனாகவும் இருக்கலாம் . இவர்களுடைய தேவை, விருப்பம்,
அர்பணிப்பு, தியாகம் அல்லது துரோகம் . என்கிற ஒரு புள்ளியியல் பல சரடுகள் வடமாக கெட்டிப்பட்டு சரித்திரமாகிறது .

சரித்திரமென்பது அனைவருக்கும் தொன்மங்களாக உள்ளுரையும் ஒருப்புள்ளி நிகழ்கால பதிவுகளில் உள்ள நடைமுறை சாத்தியங்களை விழுமியங்களுடன் ஒப்பிட்டு புதிய மரபாக ,அனுகுமுறையாக உருப்பெறுகிறது . அது அனைத்தையும் ஒற்றை திரளாக உருமாற்றும் இடத்தில் சரித்திரமென்றாகிறது .அது ஒருவரை குறித்து புரிதலை மற்றொருவருக்கு காலமே முன்னெடுத்து கொடுக்கிறது . அதை ஒட்டியே அவர் மீதான அனைத்தும் முடிவாகிறது . நம் அபிப்ராயங்கள் அதற்கு உகப்பாக இருக்க வேண்டும் என எந்த நிர்பந்தம் இல்லை.ஏனெனில் அது வாழ்வியல்

வாழ்வியலில் பிழைத்தல்,இருத்தல், வாழ்தல்,என்பனவற்றை  அழகியலில் உணருதல் நல்லூழ். அவ் உணர்தலையும் கடந்து மனமொருத்து  ஒரு பதிவாக எழுதவேண்டும் என விழைகிறேன் .வஞ்சமோ காழ்ப்போ கொண்டு மறைக்கும் அளவுக்கு எளியதல்ல இவ்வாழ்க்கை. எண்ணி முடிப்பதற்குள் ஆண்டுகள் கடந்துபோகும். முதுமை வந்து மூடுகையில் இழந்தவற்றை எண்ணி ஏங்குவது என்றால் அதுவே வாழ்வின் மிகப்பெரிய துயரமாகும், காரணம் எந்நிலையிலும் உக்கிரம் என்பது நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை என்கிறது ஓர் கவிதை.

கவிதை சொல்வதுபோல் ,நிகழ்வுகள் வெல்லற்கரியது. நிற்றற்கரியது. கடத்தற்கரியது. காலம் தோறும் மானுடர் அதன் முன் நின்று கதறுகிறார்கள். ஓங்கித் தலையுடைத்து மடிகிறார்கள். அது மானுடரை அறிவதே இல்லை.நெடில் ஆண்கள், குறில் பெண்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்கிற பிரசங்கமெல்லாம் சரிதான். உண்மைதான். ஆனால், ஆண்கள் அவ்வளவுதானா? யாரென இருப்பினும், எப்போதும் மிக அணுக்கமாக இருக்கும் ஒன்று இக்கட்டுகளில், சோர்வுகளில் இயல்பாகவே நெஞ்சில் கோயிலென எழுவது. அதனுள் வாழ்ந்த தெய்வம் கல்லென மாறும்போது அதுவும் கற்குவியலென மாறிவிடுகிறது.எப்போதும் முடியுறுதலில்லை

முடிவுறா முரண்பாட்டின் வேர் ,தவாறான புரிதலின் தொடக்கப்புள்ளி .அது தன்விருப்பு ,பிறன்வெறுப்பு எனும் காரணிகளை நிலமெனக் கொண்டு சொல்ல விழையா எண்ணங்களை விதையென கொண்டது . ஒரு நாளும் மலராது கனியாது . நிலத்திலன் ஆழ்இருளில் கிழங்கென பரந்து பரவி முலைவிட்டுக்கொண்டே இருக்கும். விளங்கிக் கொளவதற்குள்,முற்றிலும் புதிய ஒரு தலைமுறை உருவாகி வந்துவிடும், புதியநோக்குகள், புதிய வழிகள். மீள்பவர்கள் அனைவரும் மறந்துபோய்விட்ட ஓர் இறந்தகாலத்தில் இருந்து எழுந்து வருகிறார்கள் என்கிறார்கள்

என் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி முடிந்தது. அப்பகுதியின் உணர்வுகளும் இலக்குகளும் எதுவும் இங்கு ஒரு பொருட்டல்ல. இங்கிருக்கையில் எனக்கு ஒன்றே முதன்மையானது. நான் இருக்கிறேன். இதுவாக, இவ்வாறாக. பீடம் பீடமாக இருப்பதுபோல, அந்த மரம் மரமாக இருப்பதுபோல. ஒரு மனிதன் தன் மனத்தை அவதானிக்கும் தோறும் , அது எந்த அளவிற்கு அவனை மீறிய ஒன்று என்பதை அறிவான்.இப்பதிவை தொடங்குவதற்கு காரணமாக இருந்தது நிகழ்வின் விளைவுகளை அவதானிக்கைக்கு.
விளக்கமுடையதாக இருந்தும் விளக்க சந்தர்ப்பமே இல்லாது தொடர் நிகழ்வினால் கடந்து போகும்போது. அதன் ஒழுக்கை கூர்வது அது சொல்லவருவதை அர்த்தப்படுத்திக் கொள்ள. சொல்ல ஏதுமில்லை எவரிடமும்.

எவரிடமும்  பகிர்வதற்கல்ல ,இது எண்ணத்தின் கொந்தளிப்பை பதிவதில் நடந்ததை கடப்பற்கு ஆனால் விபரீதமாக உடன்பிறதார் அனைவரும் என் நினைவின் பதிவுகளில் இருந்து மறைந்து கொண்டே வருகிறார்கள்.ஆம். இதுவும் ஆகச்சிறந்ததே மறைந்தபின்இறந்தகாலத்திலிருந்து அதன் நினைவு மீட்சியுடன் எழுந்து வராது போனால் அது மறுபிறப்பெனவே கொள்ளப்படும் . எதையும் நினைக்க , விளக்க , வருந்த - ஏனெனில்  பிழைகளோ நோக்க நோக்க பெருகுபவை. ஏனென்றால் நோக்குபவரின் விழைவை அவை புரிந்துகொள்கின்றன.கதைகளுடன் போரிடுவதைப்போல கடினமானது பிறிதொன்றில்லை.

பிறிதொன்றாலும்  ஈடு செய்ய இயலாத  ரிக்வேதம் சொல்கிறது.

‘ஒன்றுசேர்ந்து பயணம்செய்யுங்கள்
சேர்ந்தமர்ந்து விவாதியுங்கள்
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்’
நீ சொல்லும் ஒரு சொல்லையேனும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நீயும் நானும் ஒரே ஞானத்தேடலின் அல்லது தேடலின்  இருபக்கங்கள் என்ற பிரக்ஞை நம்மிடம் இருந்தால் நாம் எதைப்பற்றியும் விவாதிக்க முடியும்.

முடிவில்லா தொடக்கம் நம் முயற்சியை ஒருபோதும் எதிர்பார்பதில்லை, இதை கூர்ந்து பார்த்தால் ஒரு முரண் தெரிகிறது . ஒருவர் மேல் மற்றொருவருக்கான வாஞ்சை என்பது உலகில் சாமான்ய மக்களிடம் காணக் கிடைக்கிறது .ஆனால் பொருளியல்  முன்னேற்றம் என்கிற ஒரு நிலைக்கு அப்பால் இது வற்றி விடுகிறது .உலகியல் ரீதியில் சில உண்மைகளை காலம் கடந்தே நாம் புரிந்து கொள்கிறோம் , காலமும் அதையே விழைகிறது,எதன்பாரபட்டோ

எதன்பார்பட்டு இந்த இயக்கம் தொடர்ந்து இயங்குகிறது வாழும் காலத்தில் தர்மத்தை புரியவைக்கவா ? அல்லது உலகோருக்கா? அல்லது அடுத்த ஜன்மக்கணக்கா? ஆம் எனில் அதுவாவது புனிதமாகுக

புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது அதற்கு நம்பமுடியாத ஆற்றல் உண்டு.மனிதன் கள்ளங்கபடமற்று இருக்கும் போது கடவுள் அவரது இரக்கமற்ற விதிகளையெல்லாம் கொஞ்சம்  தளர்த்திக்கொள்ள வேண்டும் , அவருக்கு வேறு வழியேயில்லை சகலவித பலமிருந்தும

பலமுடையது வாழ்நாள் கேள்வி .ஏன் எதற்காக என்பதாகவே இருக்கிறது .உண்ட உணவு ஜீரணித்து மேலும் அடுத்த வேளைக்கு  வழிவிடுவது; போல் வெற்றி இறக்கம் காணுதல் நல்லூழே.

ஊழின் முழுமை என்பது கூட்டத்தின் அமர்வில் ;தன் பாதுகாப்பு குறித்த மகிழ்வில் அல்ல , யாராலும் தனக்கு உதவமுடியாமை குறித்த தன்னற தெளிவுடைமை. மேலும் உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது என்று. அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்.”

அறிந்திலேனும் ,பொருளில்லாத நிகழ்வோட்டங்களின் உள்ளே மேலும் மேலும் பொருளின்மைகள் ஊடுருவிக்கலக்க இருத்தலும் சுவைத்தலும் அறிதலும் கடத்தலும் ஒன்றேயாகி மண்புழு மண்ணைத் தின்று தின்று சென்றுகொண்டே இருந்தது. முடிவேயில்லாத நெளிதல். நெளிவு மட்டுமேயான உடல். நெளிவுக்குள் நெளிந்து செல்லும் அகம்.

அகதின் பரிசீலனைக்கு ஒரு துளி மெய் கையில் கிடைத்ததும் மானுடர் குதித்துக்கொண்டாட்டமிடுகிறார்கள். அதைக்கொண்டு எஞ்சிய மெய்யை அறிந்துவிடலாமென எண்ணுகிறார்கள். ஆனால் எஞ்சிய மெய் அதற்கு மாற்றானதாகவே எதிரே வருகிறது. எனவே எஞ்சியவற்றை மறுப்பதில் ஈடுபடுகிறார்க்ள். அவர்களின் ஞானம் தேங்கி அகங்காரம் பேருருவம்கொள்ளத் தொடங்குகிறது“மெய்மை என்பது மாற்றிலாததாக, முழுமையானதாக இருக்கும். அதை அறிந்தவனுக்கு விவாதிக்க ஏதுமிருக்காது என்றே எண்ணுகிறேன்.”ஒருவனுக்கு உள்ளே உள்ள நஞ்சு.அதுவல்ல அவன். ஆனால் அதுதான் அவன்  சாரம். நாகம் நஞ்சாலேயே நாகமாகிறது. இல்லையேல் அது புழுதான் .இச்சை தீமையல்ல ! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது.  இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்.

பொருட் செறிவுள்ள நூல்கள் மானுடரை மிகச்சிறியவர்களாகவே காட்டுகின்றன. கற்கும்தோறும் மானுடர் சிறுத்துக்கொண்டேதான் செல்கிறார்கள். மானுடரை இயக்கும் அடிப்படை விசைகள் பேருருவம் கொள்கின்றன. அவ்விசைகளை வைத்து விளையாடும் விசும்பின் கரவுகள் தெரியவருகின்றன. அது நுண்மைகளின் வாயிலற்ற கோட்டை முன் நம்மைக் கொண்டுவிட்டுவிட்டு நூல்கள் திரும்பிவிடுகின்றன. நூலறிந்தவன் அங்கே திகைத்து நின்று அழிகிறான்.”

அழிகின்ற ஓர் உறவு உடையும்போது ஆண்கள் பெரிதும் துயரமடைவது அதை பிறர் எப்படி கொள்வார்கள் என்று எண்ணிக்கொள்வதனால்தான் .விழி சொல்லாததை மொழி சொல்லாது .ஒழுக்கவியலும் தத்துவமும் பிரிக்கமுடியாதபடிக் கலந்தவை அல்ல என்பதே. ஒழுக்கம் காலம்தோறும் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது.

கூடும் ஒழுக்கவியலின் முதல்பாடமே நாம் நம்புவதை பிறர் மேல் திணிக்கவும் நம் நம்பிக்கைக்கு ஏற்ப பிறரை கட்டுப்படுத்தவும் இடைவிடாது முயலாமல் இயல்பாக இருத்தல். உலகவிரிவில் ஒழுக்கமுறைகள் வெவ்வேறானவை என்று உணர்ந்து அந்த வாழ்க்கைமுறைகளை புரிந்துகொள்ள முயல்தலால் ஏற்படுவது தனிமை.

தனித்திருப்பது அத்தனை கடினமா என்ன?
மன்னிப்பது அத்தனை பாரமா என்ன?
எளிமை அத்தனை சங்கடமானதா?
எல்லோருக்கும் என்ற சொல் ஒரு கூரிய வாளா?இந்த எனக்கு நானே எழுதும் கடிதம் என்னை என்னிடம் இருந்தே மறைக்குமா எனத் தெரியவில்லை கறாரான பாதையில் என்னைப் பிளந்து பார்க்க முடியுமா என்கிற முயற்சியே. அது என் சார்பாக பேசுகிறதா அல்லது நடந்த தவறுகளுக்கு தான் பொருப்பல்ல என மாயயைக் காட்டுகிறதா?. ஆனால்,இதற்கு யாரையும் குறை சொல்லப்பட்டுள்ளது போவதில்லை -  என்னையும் உள்பட - இதன் தொடக்கம் புள்ளி எங்கிருக்கிறது எனத் தேடத் தலைப்படுகிறேன், எதற்குமான விடை இப்படித் தொடங்குகிறது - ஏனென்னாலென.

ஏனென்றால் உள்ளம் இருநிலைகளில் ஆடுவது. கீழ்மையின் ஆழங்களுக்கு அதனால்செல்லமுடியும். அதனாலேயே அது உச்சங்களை நோக்கி மறுவிசையும் கொள்ளக்கூடும். அது யோகியின், மெய்மையில் அமர்ந்த ஞானியின் உள்ளம் அல்ல. அலைக்கழிப்புகளும் கொந்தளிப்புகளும் நிறைந்தது. தன்னைத்தானே அடிக்கடி தோற்கடிப்பது. ஆகவே அமைதியற்றது.  நிலைகொள்ளாதது.

நிலைகொள்ளாது என்னிடம் என்றுமில்லாத ஊசலாட்டத்தை பார்க்கிறேன். என் இதுநாள்வரையிலான வாழ்க்கையில் நானறிந்த பட்டறிவு ஒன்றுண்டு, ஊசலாடும் எதுவும் எதிர்நிலையிலேயே சென்று அமையும்”. தன்வினையென.

தன்வினையின் நின்று எழுந்து வரும் எதிர் வினையினை அறிதாதார் அறிவிலிகள் ,ஆகவே அவர்களுக்கு அச்சம் வளர்ந்து பெருகுவதன் பெருவலி இல்லை. கழுவிலேற்றப்படுதல் என்றால்கூட அந்தத் தருணத்தின் விலங்குத்துயரம் மட்டுமே ஏனெனில் அது தன் பிழையென எதையும் உணராததும் எதன்பார்பட்டு இது நிகழ்கிறது எனப் புரியாததும். எனவே முற்றிலும் வெல்லப்படமுடியாதவர்களாக வடிவற்ற அசைவற்ற பாறை என்றே தோன்றுவார்கள்.பலர் இனைந்துள்ள முரண்பாட்டில் ,ஒரே வளையத்தின் மையத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்தாலன்றி . நம்மீதான குற்றச்சாட்டுகள் தீர்ப்பாகாது. எதிர்வினை ஆற்றுவதற்கு எனக்கு நானே இட்டுக்கொண்ட விதி.

விதினை இட்டுக்கொண்ட மனம் விடுதலைக்கு ஏங்கும் . சராசரி மனித வாழ்கை நாளை வரும் என்பது நிகழாத காலத்தில் கனியலாம் . வாழ்வின் மிச்சமிருக்கும் சில நாட்களை இழக்கலாகாது. நிரைவாக வாழ்வின்  ஒரு முறை வாழ்தலே போதுமானது , அதை இழக்க விரும்பவில்லை . ஏனெனில் காலத்திற்கான அழைப்பை எதிர் நோக்கி காத்திருப்பது அம்மா மட்டுமல்ல நாங்கள் இருவரும் கூட. அல்லது அது என்கென விட்டுச்செல்லாம் யாருமற்ற தனிமையை.

யாருமற்ற தனிமையை என் வீட்டில் எதிர்கொள்ளும் தயாரிப்புகளும் அவசியமாகிறது.பாதுகாப்புணர்வு. சிலர் தனியாக இருப்பதைப் பார்த்தபோது ஓர் ஆசை எழுந்தது. வயதான காலத்தில் தனியாக இருக்கவேண்டும் என. எவரிடமும் கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் எக்காரணத்தாலும் பெண்களிடம் உதவி கோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் ,தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது , ஆகவே.

ஆகவே இந்தத் தனிமையைப் பயன்படுத்தி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு குடியை அமைப்பது மூளையை விண் விண் என தெறிக்கச் செய்வது. வாங்கவேண்டிய பொருட்களை கடைக்குச் சென்றதுமே மறந்துவிடலாம், சம்பந்தமே இல்லாத அறவுறனர்வு என்பது ஒருவன் தனிமனிதனாக தன் அந்தரங்கத்தில் உணரக்கூடிய ஒன்று. அவர்கள்  தனிமனிதர்களாக மட்டுமே தங்கள் ஆன்மீக ஆழத்தைக் கண்டடையவும் தங்கள் முழுமையையும் மீட்ட்பையும் அடையமுடியும். கூட்டான மக்கள்திரள் என்பது லௌகீகமான சுயலாபத்தை அடைவதற்கு மட்டுமே உரியது என்றும் சொல்கிறார்கள்.ஆகவே இங்கும் தனிமனிதனாக நிற்பதே தேவையாகிறது. வாழ்வியல்  மௌனங்களுக்கு அதீதமாக என் தனிப்பட்ட நோக்கைக் கொண்டு தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக.


நன்றி
இதன் அத்துனை சொல்லெழுதலுக்கு காரணமான எழுத்தாளர் திரு.ஜெயமோகனை நன்றியுடன் நினைக்கிறேன் , ஏனெனில் இச்சொற்களுக்கு உரிமையாளர் என் எண்ணக்கருவை அவர் சொற்கொண்டு எழுதி என்னை கண்டுகொண்டமைக்கு. கிருபாநிதி அரிக்ருஷ்ணன்