https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 16 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 56 .விந்தம் எனும் விதி முகூர்த்தம்.


ஶ்ரீ:



விந்தம் எனும் விதி முகூர்த்தம்.




பதிவு :  447 / தேதி :- 16. மார்ச்   2018






2008 எனது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் தாக்குதல்களும் , அதிலிருந்து எனது முடிவுகளும், அதன் வெளிப்பாடு எனது செயல்பாடுகளாகவும்  அந்த வருடம் என்னை கடந்து போனது . இன்று பார்க்கையில் , நான் நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கான பாதை துவங்கியது, அங்கிருந்து என அறிய முடிகிறது . எனது அடிப்படையாக ,பலமாக , கடமையாக நினைத்த பல விழுமியங்கள் அர்த்தமற்றவைகளாக தோன்றி குழப்பியது . மனம் கசப்பை நோக்கி நகர துவங்கி, பின் மீண்டது 2015 ல் . ஜெயமோகனை கண்டடைந்ததும்.

வாழ்வியல் , அதுவெற்றி தோல்விஎன சொல்லப்படும் இரட்டைகளுக்கு உள்ளீடானதல்ல என நினைக்கிறேன் . வாழ்க்கையை பந்தயமாக நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் ,அது இந்த இரண்டின் மத்தியில் எங்கோ நிலைபெற்றிருக்கலாம் , ஆனால்  நான் அதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள போவதில்லைவாழ்க்கை மிஞ்சுவது அனைவருக்கும் அனுபவங்களாக மட்டுமே. அதை பொருளியலில் வைத்து பார்த்து,  “அதுதான் வழக்கைஎன சொல்லுபவர்களுக்கும் ,நம்புபவர்களுக்கும் நான் நினைப்பது ஒரு நாளும் புரிந்துவிடப்போவதில்லை . ஆனால் அனைத்துமேவெற்றி தோல்விஎன்பதை  பொருளியல் குறியீட்டை கொண்டுதான் சமூகத்தால் நிர்ணயிக்க படுகிறதுசமூகத்தின் இந்த ஒற்றை குரலோடு அனைவரும் இயைந்து , அதன் பொருட்டு பிறிதெவரையும்  புறந்தள்ளும் அவர்கள் அனைவரையும்  , வாழ்க்கை ஒரு கட்டத்தில், தங்களுடன் தன என  முரண்பட்டுஉதிரியாகி , பின்னர் தனி ,தனி என அதிலிருந்து வீழ்ந்து போவதை, நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் . அந்த பாதை முழுவதும் எச்சங்களாக அனேகர் வீழ்ந்து கிடப்பதை பார்த்தபடி நான் கடந்துகொண்டே இருக்கிறேன் 

அப்படிப்பட்டவர்களை இணைத்துக் கொண்டு பயணப்படும் சமூகம் என்னும் நதியின் ஒழுக்கு , அதே விஷயத்தை மையமாக வைத்து நகர்கையில், இவர்களை எங்கோ ஓரிடத்தில் உதிர்த்து விட்டு, தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது . ஆகையால்தான் , நான் அவர்களிடம் இருந்தும், அவர்கள் சொல்லும் பிற அனைத்திலிருந்தும் முரண்படுகிறேன். அவர்கள் தங்களது வாயாடித்தனத்தினால் என்னை மௌனமாக்கலாம் . ஆனால் என்னை தோற்கடித்துவிட முடியாது . ஏனென்றால் நான் நினைப்பது உண்மை என்பதால் மட்டுமல்லஅது யதார்த்தம் என்பதாலும்தான்இந்த காலகட்டத்தில் நான் அனைத்திலிருந்தும் முரண்பட்டதினாலேயே , நான் தவறோஎன என்னை  அவதானிக்கும் பொருட்டு , பெரும் தேடலின் பயணமாக இங்குவந்து சேர்ந்திருக்கிறேன் . அதையே இங்கு பதியவும் செய்கிறேன்.

பாட்னா ரயிலடியில் நின்றிருக்கையில் , என்னை  ஜீயர்  ஸ்வாமி அலைபேசியில் அழைத்தார் , அவருக்கு புதுவை அரசியலில் என் இருப்பு தெரியும் . பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக அப்போது இருந்து நாராயணசாமி மூலம் , உயர் அதிகாரியிடம் பேசி வண்டியை சிறிது தாமதப்படுத்த சொல்லுங்கள் என்றார். நான் முழுமையாக எனது அனைத்து கட்சி  தொடர்பையும் துண்டித்து கொண்டுவிட்டது ஸ்வாமிக்கு தெரியாது . சற்று நேரம் ஜீயர் ஸ்வாமி சொன்னதை பற்றி  யோசித்தேன் . ஆனால்  நாராயணசாமியை தொடர்பு கொள்ளும் துர்பாக்கியத்தை எனக்கு "கயா கதாதரப்பெருமாள்" தரவில்லை . ரயில் ஜீயரின் பொருட்டு , அன்று அது மிக தாமதமாக வந்தது .

ஒரு ஞயிற்றுக்கிழமை மாலை 3:30 மணி , தூக்கத்திலிருந்த என்னை எழுப்பிய அலைபேசியில்நல்ல நேரத்தில் நாம் காங்கிரஸ் அலுவலகத்தை புதிய தலைவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் உடனே கிளம்பி வாஎன்றார், வயது முதிர்ந்த எனது அரசியல் குரு தலைவர் சண்முகம். "அவருக்கு எல்லாம் உடனே"  . கடந்த எட்டு ஆண்டுகளாக தனது தொடர் அரசியல் பிறழ்வுகளால் பல பொறுப்புகளை இழந்து , தனது அரசியல் விழுமியங்களில் இருந்து  விலகி , இறுதியில் தனது தலைவர் பதவியை விட்டுக்கொடுத்து ,தில்லியிலிருந்து வீடு திருப்பியிருந்தார். நான் அதிலும் ஒரு நடைமுறை யதார்த்தம் இருப்தை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன் .அன்று கட்சி அலுவலகம் சென்று  , அலுவலக சாவி மற்றும் காரையும்  ஒப்படைத்து விட்டு, நானும் அவருமாக வீடு திரும்பினோம். வீட்டில் எனக்கும் அவருக்குமாகடீசொன்னார். நான் இதன் முதல் கோணல் பற்றிய சிந்தனையில் வருத்தமுற்று இருந்தேன் . “டீஅருந்தும் சமயத்தில் , இன்றைய புதிய சமூகத்தின் மீது தனது நம்மிக்கையன்மை அவர் பதிந்தார்.

அவர் தனக்கு இன்னுமொரு ஆட்டம் இருப்பதை சொல்லி , என்னை பொருத்திருக்க சொன்னார் . அப்போதுதான் நான் வருத்தத்திலிருந்து கொந்தளிப்பின் உச்சத்தை அடைந்தேன் .அவரிடம்இல்லை உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது, தலைவர்என்று சொன்னேன் . முதலில் திகைத்தவர் பின்னர் அதை மறுத்து என்னுடன் கடும் வாதம் நிகழ்த்தினார்  . நான் அவரை விவாதத்தில் வென்ற ஒருவரை அதுவரை பார்த்ததில்லை.

நான் முதல் முறையாக அவரிடம் நேருக்கு நேர், எதிர்நின்றேன் . இரண்டு மணிநேர விவாதத்தின் இறுதியில் நான் சொன்னதை ஒப்புக்கொண்டார். “நீ ஜெயித்தாய் நான் தோற்றேன்என்றார் . விந்தைதான் . நான் பேசிய அனைத்தும் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தது , அதை இப்போது அவரிடம் நான் திருப்பிச்சொல்லி நினைவுறுத்தினேன் அவ்வளவே . ஆனால் உண்மையில் நான் தான் அன்று தோற்றுவிட்டிருந்தேன் . அப்போது முடிவு செய்தேன் ,இனி நான் ஆற்றுவதற்கு ஒன்றில்லை இந்த கட்சியில் என்று . அதன் விரிவான வாதப்  பிரதிவாதங்களை "அடையாளமாதலில்" பதியலாம் என நினைக்கிறேன். இது அதற்கனதல்ல

அவர் எப்போதும் சொல்லுவார்புலி வாலை விடத்தெரிந்தவனே அதை பிடிக்கும் தகுதியுள்ளவன்என்று. ஆனால் அன்று  சொன்னார்இதோ எரிந்து கொண்டிருக்கின்ற இந்த விளக்கின் சாட்சியாக சொல்லுகிறேன் , நீ என் அரசியல் எதிரிகளை வீழ்த்தி , நீ விழையும் இடத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாதுஎன விந்தம்  விதி  முகூர்த்தம் போலே ஆசி அளித்தார் . நான் எந்த வித சலனமுமின்றி அரசியலிலிருந்து முற்றாக வெளியேறினேன் .  அவரது அறுபது வருட அரசியல் அனுபவம் பலரின் கணிப்பை பலமுறை பொய்யாக்கியிருக்கிறது. ஆனால் இப்போது  உணர்கிறேன் , அன்று நான் கணித்ததே அவருக்கு நிகழ்ந்தது .

ஆம் . அரசியலில் இன்னொரு வாய்ப்பு அவருக்கு கிடைக்கவேயில்லை . வெல்ல முடியாத தலைவரை , அன்று அவருடனான விவாதத்தில் நான்தான் வென்றேன் போலும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை இளம் எழுத்தாளருக்கு கௌரவ பரிசு. தாமரை கண்ணன்

  எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியில் நடைபெறுகின்ற...