https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 29 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் -65 . விபரீத திரும்புதல் .

ஶ்ரீ:





விபரீத திரும்புதல்  


பதிவு :  459 / தேதி :- 28 . மார்ச்   2018






இன்றைய நவீன இந்து குடிமை சமூகத்தின் ஆழ்மனப்படிமங்கள் விழைவதை கார்ப்பரேட் குருநிலைகள் மிகத்துல்லியமாக புரிந்து வைத்துள்ளன என நினைக்கிறேன்இன்னமும் கூட நவீன குடிமை சமூகம் பெரும் திரளாக குவிவது கோவில்களில்தான் , அங்குதான் முரணின் முதல் விதை விழும் நிலமாகி அங்கு அது பல்கிப் பெருகுகிறது  . அங்குள்ள முரண்களின் அலகு மூன்று . கோவிலை நிர்வகிக்கும் அமைப்பின்  ஆகமம் சார்ந்த கோவில் ஒழுகு  , அறநிலையத்துறை  , அறங்காவலர் குழு  . இந்த மூன்றின் மீதும் குடிமை சமூத்தின் கடும் அதிருப்தி . அதற்கான அடிப்படை காரணம் , மரபை கொஞ்சமேனும் அறிந்தவர்களாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள் , அறியாதவர்கள் . என குடிமை சமூகம் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது

அறிந்ததாக நினைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை மொத்த குடிமை சமூகத்தில் ஒரு சதவிகிதம் இருந்தால் ஆச்சர்யம்  . அவர்களும் ஆயிரம் ஆண்டு பழைமையான சமயச் சண்டைகளின் எச்சத்தை இன்னும் சுமப்பவர்கள் . மிச்சமுள்ளவர்கள் எதைப்பற்றிய குறைந்த பட்ச ஞானமும் இல்லாதவர்கள் . காரணம் அவர்களின் மூதாதையர்கள் அவற்றை அவர்களுக்கு கையளிக்கவில்லை , அல்லது கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக சுழன்று அடிக்கும் பொருளியல் சூழலில் சிக்கி காணாமலானவர்கள் அவர்கள் அனைவரும் கூடுமிடம் கோவில் .

ஆன்மீகத்தில் குடிமை சமூகத்தை ஈடுபடுத்தும் கோவில் நிர்வாகம் கைவிடப்பட்ட கர்மடர்களின் பாதைகளையே தேர்ந்தெடுக்கிறது . வைதிக பிராமணர்கள் பொருளியல் தேடி பிற தொழில்களுக்கு சென்றுவிட்டதாலும் . வைதிக மார்கத்திற்கு திரும்பிய சிலரும் யாக யஞ்ஞாதி கிரியைகளில் கொட்டும் பொருளியலால் , கோவில் கைங்கர்யத்திறகு வரப்போவதில்லை . குடிமை சமூகம் ஆர்வமுடன் பங்கு பெறுகிற அழகியல் சார்ந்த உற்ச்சவங்கள் வெறும் சடங்காக மாற்றப்பட்டு நீர்த்துக் கொண்டிருக்கிறது. மதம் சார்ந்த தத்துவங்கள் முற்றாக விலகிவிட்டது

தத்துவவியலுக்கு விளைநிலமாகவும்உலகளவில் பெரும் கொடை நிகழ்ந்திய தென்னக பகுதிகளில்,அது மீண்டும் உரையாடலாக நிகழவேண்டும் என்கிற விழைவில் ஆயிரமாவது ஆண்டு விழா பல வைதிக , சம்பிரதாய நிகழ்வுக்கு மத்தியில்இந்திய ஞானமரபுகுறித்த ஒரு அரங்கம் முன்னெடுக்கபட வேண்டும் என நினைத்தேன்.   கோவிலை மையப்படுத்தும் வாய்ப்பு முற்றாக இல்லாத சூழலில் அது வெளி அரங்கில் நடத்தபட வேண்டிய சூழல் எழுந்தது.

கோவிலகளிலும் , ஆன்மீக இயக்கங்களிலும் அதன் நடவடிக்கைகள் மிகப்பெரிய வியாபாரம் போல மாற்றமடைந்து விட்ட சூழலில், அதன் நிர்வாகத்திற்கு தேவைப்படுகிற மனிதர்கள் பெருபாலும் வேறெதிலும் அடையாளப்படுத்தப் படாதவர்களாகவும், அவர்களுக்கு இதுவே ஒரு அடையாளமாக மாறிவிடுவதால் , வெகு ஜன உள்மனங்களுக்கு தேவையானவற்றை விடுத்து, அதன் மலினமான  தெளிவில்லாத செயல்பாடுகள் மூர்க்கமான பக்தியை நோக்கி செலுத்துகிறது . அதிலிருந்து குவியும் பொருளியலாலும் தொடர்புகளாலும் வெகு விரைவில் அது உள்ளூழல் நிறைந்த இயக்கமாக உருவாகி விடுவதுடன் சமூகத்திற்கு தவறான பாதைகளை காட்டுகின்றன

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்த பக்தி இயக்கம் கடந்துவந்தது , அன்றைய வறட்டு வைதிக மார்க்கத்தை உடைத்துக்கொண்டு . ஆனால் இன்றைய பக்தியை முன்வைக்கும் பல்வேறு இயக்கங்கள் சங்கரர் ,ராமாநுஜர் போன்றவர்களால் கைவிட பட்ட பழைய மார்கத்தை நோக்கி விபரீதமாக நகர்கின்றன . கடந்த முப்பது ஆண்டுகளுக்கு உள்ளாக அவற்றின் நோக்கமும் சமூக அமைப்பும் பெரிய மற்றம் அடைந்து விட்டன . இன்று அவை எதிர் கொள்ளும் அறைகூவல் யாரை நோக்கியது என்பதுதான்  இப்போதைய கேள்வியாக இருக்க முடியும் . அது இன்னமும் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை

இந்த சூழலில் ஏதாகிலும் முன்னெடுக்கபட வேண்டும் என்கிற சிந்தனையில்   இருந்தபோதுதான்ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பரகாலன் சிலருடன் என்னை சந்திக்கஆயிரமாவது ஆண்டு விழாபற்றிய ஒரு வரைபடத்துடன் வந்திருந்தார் . அது ஏறக்குறைய நான் திட்டமிட்டபடியான ஒரு வடிவத்தை எட்டி இருந்தது . அதை முன்னெடுக்க அந்த இயக்கத்திற்கு என்னை தலைமை ஏற்க சொன்னபோது உறுதியாக மறுத்துவிட்டேன் . அரசியலிலிருந்து விலகிய பிறகு இனி எதற்கும் தலைமை பொறுப்பேற்பதில்லை என முடிவெடுத்து இருந்தது முக்கிய காரணம் . அது வழமை போல சில பகவாதர்களை கொண்ட குழுவாக வடிவமைக்கப் பட்டிருந்தது . எனக்கு இரண்டு காரணங்களினால் அதற்கு  முற்றாக உடன்பட முடியாமல் போனது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்