ஶ்ரீ:
இந்து ஞானமரபு
பரகாலனின் பின்னாலிருந்து அமைப்ப உருவகித்திருந்தவர் அதை மிக எளிமையானதாக செய்திருந்தார் . ஆனால் விதி முகூர்த்தம் , அது என்னை நோக்கி வரும் என அவர் நினைத்திருக்கவில்லை . நானும் கூடத்தான் . வழமைபோல புது முயற்சியும் அதை ஒட்டிய புதிய முரண்களும் எழுந்தன. அவர்கள் வடிவமைத்திருந்த அழைப்பிதழில் வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசத்தை கடந்து பெரிதாக ஏதுமில்லை . அந்த அமைப்பிற்கு அவர்கள் தேர்ந்திருந்த சிரை நான் அறிவேன். அவர்கள் எதையும் மிகை உணர்ச்சியுடன் விவாதிக்க தயங்காதவர்களாக , புதிதாக முயற்சிக்கும் எதையும் புரிதலற்று தடுக்கும் போக்கு கொண்டவர்களாக இருந்தார்கள் . அவர்களால் சங்கடமே விளையும். குடிமைச் சமூகத்தின் இன்றைய தேவை என நான் நினைப்பதை ஒருகாலும் அவர்களுக்கு என்னால் புரிய வைத்துவிட முடியாது . குறுகிய பார்வையும் மூர்க்கமாக இயக்கத்தை பழைய பாணியில் செலுத்த முயற்சிப்பார்கள் என்கிற அச்சம் எனக்கிருந்தது .
இரண்டாவது நான் நினைவில் நிறுத்தியிருப்பது ஒரு பிரம்மாண்டமான மேடை, அதனுள் சமூக அந்தஸ்தும், பொறுப்பும் , நுட்பமும் உள்ள சிலர் உள்நுழைய வேண்டும் . எல்லாவற்றிலும் முக்கியமானதும் ஒரு மாற்று அமைப்பை உருவாக்குவதை பற்றிய எனது எண்ணம் இவர்களில் பெரும்பாலானோரை எதிர்த்தே என்பதால் , நான் அவசரப்படவில்லை . வேளுக்குடி சுவாமியிடம் தேதி குறித்து பேசுவதற்கு முன்னாள் அடிப்படை அமைப்பு ஒன்றை உருவாக்கி பின் இந்த ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவை அமைப்பதுதான் சரியாக இருக்கும் என நான் சொன்னதை ஏற்று , வந்திருந்தவர்கள் அரைமனத்தினராக எழுந்து சென்றனர் .
நான் இன்னும் “திறந்த அரங்கம்” குறித்த கருத்துப்பொதுமை உள்ளவர்களை கண்டடையும் முயற்சியில் இருந்ததால் எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது . அந்த சூழலில் “வேதவிஞ்ஞானம்” என்கிற கருதுகோளை நோக்கியே எனது பயணம் இருந்தது. அதை நடைமுறை படுத்த, திட்டமிட அனுபவம் வாய்ந்தவர்களை தொகுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரே வாரத்தில் முதல் கூட்டம் ஒருங்கப்பட்டு, எனது வீட்டில் கூடியது ,ஒரு வாரம் முழுவதுமாக முக்கியஸ்தர்களை தொடர்புகொண்டபடி இருந்தேன் . முதல் கூட்டத்திற்கு கணிசமானவர்கள் கலந்து கொண்டது அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் ,அதில் தாங்கள் நீடிக்க வேண்டும் என்கிற ஆவலும் எழுந்ததும் . ஒரு அடிப்படை கட்டுமானம் உருவாகி வந்தது . நான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டேன்
இயக்கத்தின் அடைப்படை செயல்பாடுகள் குறித்து பேசப்படாது இருந்து கொண்டிருந்தது . என்னுடன் இயல்பாக செயல்படும் ஒரு குழுவை அன்று அமைத்துக் கொண்டேன் . அவர்கள் அனைவரும் துவக்க விழாவைத் தாண்டி வேறு எண்ணமில்லாதவர்கள் . எனக்கு அது ஒரு சுதந்திரத்தைக் கவடுத்திருந்தது . நான் எனது இலக்கையும் பாதையையும் நடைமுறை சாத்தியத்தைக் எண்ணத் தெளிவிறகு , ஒத்த கருத்துள்ளவர்களை அடையாளம் காண முயற்சித்தபடி இருந்தேன் . அந்த ஒரு மாத காலம் “விழாக்குழுவின்” அடைப்படை கட்டுமானத்தை செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது .
எண்ணியிருந்தபடி சிலரை உள்ளே கொண்டுவர முடிந்தது . துவக்கவிழா பிரம்மாண்டமாக நடந்து . அடுத்தடுத்த நிகழ்வை நோக்கிய பயணத்தில் இருந்தேன் . முக்கிய நிர்வாகிகளுக்கு எனது திட்டம் பற்றிய “கோட்டிவியம்” மட்டுமே தெரியும் , தேடல் நிலைபெற அனைத்து வழிகளையும் முயற்சித்தபடி இருந்தேன் .எனது தந்தை இதுபற்றி தனது எண்ணத்தை என்னிடம் பலமுறை பேசி இருக்கிறார் . விசிஷ்டாத்வைத சித்தாந்தம் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு ஆறாம் வகுப்பு மாணவன் கற்பிப்பதைப் போன்றது . அடிப்படை கல்வியை அது ஒரு போதும் சொல்லித்தருவதில்லை. அதற்கான பாடதிட்டம் அதனிடம் இல்லை என்கிற குறைபாடு அவருக்குள் எப்போதும் இருந்தது .சொல்லிவைப்பவர் ,சொல்லிக்கொள்பரின் அடிப்படையை , ஆழ்மன நம்பிக்கையை கணிசியாத முயற்சியாக அதை பார்த்தேன்.
“வேதவிஞ்ஞானம்” என்கிற கருதுகோள் நோக்கிய பயணம் எனக்கு கற்றுக்கொடுத்தது அளப்பரியது . அறிஞர்கள் என நாம் நினைக்கும் பலர் தங்களது துறையைத் தாண்டி எளிய பாமரர்களின் பார்வையை தவிர உலகியலை அறிந்தவர்கள் அல்லர்கள் என்பதும் , எதையும் முயற்சிக்கும் மனநிலை அற்றவர்களாக அவர்களை பார்த்த போது அதிர்ச்சியையும் பெரும் உளச்சோர்வையும் அடைந்தேன். ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுப்புகள் மாற்று பாதையை நோக்கி என்ன செலுத்திக் கொண்டிருந்தது . இந்த காலகட்டத்தில் என்னை தொகுத்துக்கொள்ள , அந்த முயற்சிகள் அடையும் மாற்றம் எனக்கு சொல்ல வருவது என்ன ? என்பதைப் பற்றிய அவதானிப்பில் எப்போதும் இருந்தேன் .
புரிதல்களை காலத்திடம் இருந்து பெற்றுக் கொண்டேன் . வாழ்கை முழுவதுமாக எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதினூடாக , அடையாளம் , வெற்றி தோல்வி, தனிமை, நிறைவுவினமை போன்றவற்றை அடைந்தேன் . இவற்றை ஒருங்கிணைத்தால் கிடைப்பது நிறைவு . அதை இன்னும் அனுகி அறிந்துகொள்ளும் ஆர்வமே என்னை இத்தனைக்காலம் அனைத்தினுள்ளும் செலுத்தி வெளியேற்றியது .
முயறசிகளுக்கு என்னிடம் முன்முடிவுகள் இருந்ததில்லை . ஒரு “கருதுகோளை” தவிற . என்னிடம் எந்த திட்டமிடலும் இல்லை . நான் மிக அடிப்படையை நோக்கிய அறிதலுக்காக அவற்றை முயற்சித்தபடி இருந்தேன் . அது ஒரு தேடலைப்போல . சந்தர்ப்பம் அவற்றை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்துக்கொண்டே இருந்தது. அதை செய்வதனூடாக நான் கற்றுக்கொண்டே இருந்தேன் . கற்றலும் , அதை நோக்கிய விழைவுமே எனது விடியலை அர்த்தமுள்ளதாக மாற்றுவதை அறிந்திருக்கிறேன் .
எனது முயற்சிகளுக்கு அனுபவங்களை தாண்டி வேறு பயனை விழைந்ததில்லை . காலம் பல ஆளுமைகளுடன் அணுக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தது . அவர்களின் அனுக்கத்தால் அங்கு நிலவும் சூழலில் இருந்து நான் எனக்கான பாதையை தேருகிறேன் . அவை என்ன காரணத்தினாலோ பிறர் அவற்றை கடக்க முயற்சிக்காதவைகள் .அதை முயற்சிக்கையில் நான் எனது வாழ்வை கடந்து இங்கு வைத்து அமைத்துள்ளேன் . “வேதவிஞ்ஞானம்” என்கிற கருதுகோளில் இருந்து “இந்து ஞான மரபை” நோக்கிய எனது பயணம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய தருணமாக உணர்கிறேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக